Jul 12, 2012

கீச்சுகள் - 22


கேட்க ஆரம்பித்தால் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பது கேட்ட பிறகுதான் தெரிகிறது!

*

அவர்களாய் உணராமல் அறிவுரையால் திருந்துவதாக இருந்தால், சிகரெட்டை அருங்காட்சியகத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும்.

*

பெரும்பாலான சண்டைகளில், ஆரம்பம் எதுவெனத் தெரியாமலே, பாதியில் நுழைந்து கருத்து சொல்லி ஆதரிக்கிறார்கள்/எதிர்க்கிறார்கள் #எதாச்சும் பண்ணனும்யா

*

மியான்மரில் ஆங்சான் சூகியை சந்தித்த மன்மோகன், நானும் வீட்டுச்சிறை மாதிரி ஒரு விதிச்சிறையில் இருக்கிறேன்  என்பதை சைகையால் சொல்லியிருப்பாரா?

*

ஒவ்வொரு மனித மனத்திற்குள்ளும் எத்தனையெத்தனை உளச்சிக்கல்கள், போராட்டங்கள். மனித மனம் மீண்டும் மனிதனாக பிறக்க விரும்புமா என்ன?

*

இந்தக் கணம் மனம் செய்ய விரும்புவதை, ’அவசியம்தானா?’ என்று கேள்வி கேட்கத் துணிந்தவன் முன்னேறுவான்!

*

கச்சா எண்ணை ஏறுது, $ ஏறுதுனு பெட்ரோல் விலை ஏத்துற கூட்டுக் களவாணிங்க, ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில வரியையும் கூடவே ஏன் ஏத்துறாங்க?

*

பிரபலம்ங்கிற வார்த்தையைக் கண்டுபிடிச்சவன் ’பிரபலம்’ ஆனானோ இல்லையோ, Problemஆ நினைக்கிற ஆளையெல்லாம் பிரபலம்னே கொல்றாங்கய்யா #இணைய வசை மொழி

*

”நீயா நானா” நிகழ்ச்சியில் கோபிநாத் ’கோட்’ அணிவதும்கூட ஒருவித போலி கௌரத்திற்காகத்தானேனு கோபிநாத் கிட்டே யாராச்சும் கேட்டாங்களா?

*

கறை படுத்தப்பட்டேனே தவிர கறை படியவில்லை - நித்தி
# பெரிய கவிஞரு இவரு, எதுகை மோனையில பேசுறாராம்!

*

நறுமணத்தையும், நாற்றத்தையும் உலகம் முழுக்கச் சுமப்பது ஒரே காற்றுதான்!

*

காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் - கி. வீரமணி # நீங்க முதல்ல உங்க வீடு வாசலை கூட்டுங்க பாஸ்!

*
ஒபாமாவால் அதிபராக முடியுமெனில் என்னால் ஜனாதிபதி ஆக முடியாதா? - சங்மா # அண்ணே அவரு எட்டாங்கிளாஸ் பாஸ், நீங்க பத்தாங்கிளாஸ் ஃபெயில்ண்ணே!

*

திண்ணைகளை ஒழித்துவிட்டு, எங்கே போய் சகமனிதனோடு இணக்கத்தைப் பெற்றுவிடப் போகிறோம்?

*

”தாமதமாகும் திருமணம்” பரிகார பூஜைக்கு அழைத்து செல்கிறது தமிழக சுற்றுலாத்துறை # இதுக்கு பொண்ணு மாப்ளை பார்த்துக்கொடுக்கிற வேலை செய்யலாம்ல!

*

ஆட்கொள்வதைக் கொல்!

*

“குடி குடியைக்கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக்கெடுக்கும்” உலகம் கத்துக்கவேண்டிய ”டாஸ்மாக் பலகையிலேயே எழுதுற சூப்பர் சாணக்கியத்தனம்”

*

எந்திரன் பட மொத்த வசூல் ரூ.179 கோடி. தமிழகத்தில் ஒரு வருடம் மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.194 கோடி என நினைக்கிறேன்.

*

கோட்டக் மகேந்திரா பேங்ல இருந்து வருட வருடம் வருமானம் வர்ற திட்டம், 2 நிமிசம் பேசலாங்ளா? - போனில் #இந்தமாதிரி நல்லவங்களாலதான் மழை பெய்யுது

*

சாலையில் யாரோ ‘டேய்’னு கூப்பிட்டா நம்மையோனு திரும்பிப்பார்க்கிறமாதிரி இணையத்துல யாரோ யாரையோ திட்டுனா நம்மையோனு நிறைப்பேர் நினைக்கிறோம்

*

சுவையாக இருப்பதுதான் திகட்டும்!

*

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மாதிரி, நானும் பைக் நிறுத்திட்டு, வரலாறுல இடம் பிடிச்சுடலாமானு யோசிக்கிறேன் #தேர் பெட்ரோல்ல ஓடியிருக்குமோ?

*

எல்லா நேரங்களிலும் அழுகைக்கான காரணம் வெற்றியோ தோல்வியோ அல்ல... அழுகை ஒருவித தேவை!

*

பெட்ரோல் தான் ஏறிடுச்சுல்ல, பேசாம ஈமுக் கோழி ”டூ லெக்கர்” விற்பனை மையம் ஆரம்பிச்சுடலாம்னு நினைக்கிறேன்

*

மத்திய அரசு மக்கள் காதில் பூ சுற்றுகிறது - கேப்டன் # பூ விக்கிற விலையில, இவரு வேற காமடி பண்றாரு. ஏற்கனவே அவங்க நார் சுத்துறது தெரியாம!

*

ட்ராபிக் ராமசாமியும் ’நித்தி’யை ஆதரிக்கிறாராம். # இந்த பயபுள்ள எதும் வசிய மருந்து வெச்சிருக்கானோ!?

*

நமக்கே இப்படி வேர்க்குதே, பாவம் நம்மைக் கொளுத்துற சூரியனுக்கு எப்படி வேர்க்கும்...!? # வெயில்ல என்னென்னவோ யோசிக்க தோணுது

*

25 வயது அமெரிக்க விலைமாது பெண்ணுக்கு, இந்திய தொழிலதிபர்கள் (1 hr) தரும் காசு ரூ.5 லட்சம் # யாருய்யா இந்தியா ஏழைகள் நிறைந்த நாடுனு சொன்னது

*

”ஏன்டா பெட்ரோல் விலை ஏத்துனே”னு வீதியில எறங்கிச் சண்டை போடாம, பணம் மிச்சம்னு பெட்ரோல் பங்க்ல முட்டி மோதுறவங்களை என்ன சொல்ல? #நாம வல்லரசு :(

*

மின் அரட்டையில், அலைபேசியில், குறுந்தகவல்களில் நாம் புடுங்கும் ஆணிகளில் எத்தனை சதவிகிதம் தேவையான ஆணிகள்?

*

குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப்போய்விடுவாள்

*

டாஸ்மாக்-ல் HOBSONS-XR பிராந்தி குடிப்பது எப்படி என விளக்கம் # வர்ற பள்ளிக்கூட பாடத்திட்டத்திலயும் சேர்த்துட்டா நாடு உடனே உருப்பட்டுடும் :(

*

மாசு படாமல் இருப்பது ”ஊழல்” மட்டுமே!

*

ஒரு பையனோ பொண்ணோ கஷ்டப்பட்டு(!) படிச்சு முதல் மார்க் வாங்குறதால அவங்க குடும்பம் மட்டும் முன்னேறுறதில்ல, அவங்க படிச்ச பள்ளிக்கூடமும்தான்!

*

ரிசல்டு வரும் தினங்களில் கோடீஸ்வரர் ஆவது லாட்டரி வாங்கியோரும், முதலிடங்களைப் பிடிக்கும் பள்ளி நிர்வாகிகளும்தான்!

*

கொதிக்கிற  வெயிலில் வாடி வதங்கி, கருகி, நொந்து புலம்பியோரில், 1% கூட கோடை மழையில் நனைய முன் வருவதில்லை!

*

பாஸ் மார்க் 35-னு தீர்மானித்த புண்ணியவான், 40 மார்க் கூட எடுக்க முடியாத நம்ம இனத்தைச் சார்ந்த ஆளாத்தான் இருந்திருப்பார் # என் இனமடா நீ!

*

அனுமதிக்கப்படும் அளவிற்கான தவறு / குற்றமே ’நெளிவு சுழிவு’ என வகைப் படுத்தப்படுகிறது.

*
பிரதமராக மக்கள் ஆதரவு: மோடி 17%, மன்மோகன் 16%, ராகுல் 13%, சோனியா 9% மட்டுமே # இதையும் 16+13+9 = 38%னு அபிசேக் சிங்வி பேசுவாரே!

*

செல்போனின் மற்றுமொரு சாதனை குபீர் இசை வெறியர்களை உருவாக்கியது # பேருந்து பின் படிக்கட்டருகே 7 பேராச்சும் செல்போன்ல பாட்டு ஒலி பரப்புறாங்க

*

திருச்சி ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை ’துப்பறியும் சாம்பு’தான் வந்து கண்டு பிடிக்கணும் போல் இருக்கு!

*

சோலார் வாட்டர் ஹீட்டர் கண்டுபிடிப்பை ’மிஸ்டர். சூரியன்’ தப்பா புரிஞ்சுட்டார் போல, எந்த பைப் திறந்தாலும் ஹீட்டர் இல்லாமலே தண்ணி கொதிக்குது

*

கிருமிநாசினியான சானம், அனைவர் கையிலும் படவேண்டும் என்று அம்மா மாடு வழங்கியுள்ளார் - அதிமுக MLA # சட்டமன்றத்திலும் மாடு வாங்கிக் கட்டிவைங்க

*

ஞாயிற்றுக்கிழமை காலையில் குளிப்பதற்கும் விடுப்பு விட்டால், நீயும் என் நண்பனே! # அட ச்ச்சே! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு

*

மப்புல போறவன் மானாவாரியாதான் போவான், மாநிலத்துக்கு படியளக்குற  மவராசன்ல, மவனே மானம் போவக்கூடாதுனா மருவாதியா நீ ஒதுங்கிப்போ #எனக்கு நானே

*

எங்களை அதிமுக ஆதரிக்கிறது - நித்தியானந்தா # யோவ், உனக்கு தில் இருந்தா “என் ஆதரவில்தான் அதிமுக இருக்கு’னு சொல்லிப்பாருய்யா! /உசுப்பேத்து/

*
சிக்னல்களில் ஓரிரு நிமிடங்கள் நிற்க தடுமாறும் நம் நிலையைவிட, தகிக்கும் அனலில் தவிக்கும் போக்குவரத்துக் காவலர் நிலமை பலமடங்கு பரிதாபம் :(

*

”ஊட்ல பொண்டாட்டி இல்லனா, அன்னிக்கு ஊறுகாய் கூட அமிர்தம் தாண்டா“ எனக்கு நானே சொன்னது # வேற வழி

*

புரிந்து கொண்டதைவிட புரிந்து கொள்ளாதாது ஏராளம் #பொதுவா

*

நித்தியானந்தாவோடு ரஞ்சிதா இருக்கிறார் - ஜெயேந்திரர் / 1987ல் ஜெயேந்திரர் ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர் - மதுரை ஆதீனம் # சபாஷ் சரியான போட்டி!

*

கசங்கிய காகிதத்தில் ஓராண்டு சாதனைனு 25 கோடிக்கு விளம்பரம் செய்ததுக்கு பதிலா ’ஓராண்டு சாதனை புற்றுநோய் மருத்துவமனை”னு ஒண்ணு கட்டியிருக்கலாம்

*

தாகத்தில் தண்ணீர் குடிக்க நினைக்கையில், தண்ணீர்க் குடுவையை அருகில் வைத்து நகரும் மகள் அளவில்லாத ஆனந்தத்தைப் புகட்டிவிட்டுச் செல்கிறாள்.

*



போட்டி போட்டு மது அருந்தியதில் பவானியில் இருவர் சாவு # அரசுக்கு அதிக வரு’மானத்தை’ ஈந்திட முனைந்த தியாகிகளுக்கு அரசு சிலை வைக்குமா?

*

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார் -கருணாநிதி #ஆதீனம் கனவுல சிவன் வரப்போ, இவரு கனவுல ராஜீவ் வரமாட்டாரா?

*

Jul 6, 2012

நீதி போதனை


நம் கனிணியின் இணைய உலாவிக்கு (browser) மேலே நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளத்தின் பெயருக்குப் பக்கத்தில் ஒரு x தெரியும். அதை அமுக்கினால் அதுவரை நாம் சஞ்சரித்துக்கொண்டிருத உலகத்திலிருந்து வெகு எளிதாக விடுபட்டுப்போவீர்கள். அதன்பிறகு நீங்களாக www.அதன்பெயர்.com கொடுக்காமல், ஒருபோதும் அதுவாக வந்து உங்கள் வீட்டுக் கதவை தட்டாது. 

ஆனாலும், இந்த சமூக வலை தள உலகத்தில்தான், மனதில் இருக்கும் பாரத்தை எழுத்தில் கரைக்கும் வாய்ப்பும், நம்மைச்சுற்றி சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை அடையாளப்படுத்தும் முயற்சியும், உங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களைச் சுட்டும் வாய்ப்பும் எளிதில், மிகமிக எளிதில் கிடைக்கின்றது.

ஊடகங்களுடன் மிக எளிதான தொடர்பு, ஆட்சியாளர்களுடன் கருத்து பரிமாறும் வாய்ப்பு, நம்மைப்போல் புழங்கும் மக்களுக்கான தகவல் தெரிவிப்பு எனும் சன்னல்களும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன.

அதி அற்புதமான நட்புகள், திறமைகளுக்கு அங்கீகாரம், திறன்களை கடைபரப்பும் வெளிகள் என பலப்பல வாய்ப்புகள் எளிதில் கிடைக்கின்றன. அதே சமயம் நம்மையறியாமல் நமக்கு புகட்டப்படும் விஷமாக ஏமாற்றும் தகிடுதத்தங்களும், பணப் பறிப்புகளும், பாலியல் சீண்டல்களும் இருக்கத்தான் செய்கின்றன...

பிடித்தவற்றை கொண்டாடுகிறோம், பிடிக்காதவற்றை மௌனமாகவோ, கள்ள மௌனமாகவோ கடந்துபோகிறோம்..... நமக்குப் பிடிக்காத துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை ஒவ்வொருமுறையும் கடந்து போனவர்கள்தானே நாம்?. செத்த எலியின் வீச்சத்தை மூக்கு பொத்திக் கொண்டு போனவர்கள்தானே நாம்? அதுபோலவே, நானும் ஒவ்வாத விசயங்களை, பிடிக்காத விசயங்களை சமூக வலை தளத்தில் காணும்போது மெல்ல ஒதுங்கிக் கடந்து போய்விடுகிறேன். ஏனெனில், சமூகத்தை என்னை நேரிடையாகப் பாதிக்கும் அவலங்களை, என்னை மூச்சை அடைக்க வைக்கும் சாக்கடைகளைக் கண்டு ஒருபோதும் உணர்ச்சி வயப்பட்டுப் பொங்கியதில்லை, அதை சுத்தம் செய்திடவும் முனைந்ததில்லை, அப்படியில்லாத நான் அப்புறம் இங்கே மட்டும் நான் வாள்/வால் ஆட்ட இருக்கும் முகாந்திரம், இது எளிது என்பதுதானோ!

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் 90 வயதில் இரவு நேரத்தில் இறந்து போனார். இரவு ஒரு மணிக்கு தகனம் செய்யும்போது கட்டையில் உடலை அடுக்கிச் சிதைக்கு தீமூட்டும் முன், உடலில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றியப்போது காது இரண்டிலும் தலா இரண்டு கடுக்கன் போட்டிருந்தது தெரிந்தது. சுமார் 60-70 வருசம் அணிந்திருப்பார் என்று பேசிக்கொண்டார்கள். அதை அகற்ற சடங்குகள் செய்த அந்தத் தொழிலாளி முயன்று தோற்றுப்போக, உறவினர்கள் சிலர் சேர்ந்து, நள்ளிரவு 1 மணிக்கு பிணம் என பயங்கொள்ளும் உடலில் கைவைத்து, காதுகளை அலசி, பலத்த முயற்சிக்குப் பின் கழட்டிக்கொண்டுதான் சிதைக்கு தீ மூட்டினார்கள்.

இணையத்தில் ஆங்காங்கே சிலரால் கட்டிக் காக்கப்படும் ஃபேக் ஐடி, ஜோக் ஐடிகள்... உருவாக்கியவரின் வாழ்நாளுக்குப் பின்பு கூடவே வந்து சிதையிலா எரிந்துவிடப்போகிறது.



இதனால் அறியப்படும் நீதியாதெனில்....

ஏற்கனவே நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், சிலாகிப்புகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான சம்பளமாக பெரும் நேரத்தைப் பிடுங்கி தின்று செரித்துவிட்டு, சிரித்துக்கொண்டே போகிறது இணைய சமூகவலை தளங்கள். அதற்குத் தீனிபோடவே முடியாத நேரத்தில் ஃபேக் ஐடி, ஜோக் ஐடி என உருவாக்குவோரின், உழைப்புக்கு அயர்ச்சியாய் ஆச்சரியப்படத்தான் முடிகிறது தவிர, அதுகுறித்து பெரிதாக புலம்பி, கோபப்பட்டு இரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ள உடலிலும், மனதிலும் தெம்பில்லை...

ஆணிய்யே புடுங்க வேணாம் என்பதின் எளிய வழியாக இப்போதைக்கு logout :)))

-0-

Jul 4, 2012

கீச்சுகள் - 21



தள்ளிப்போடுவதின் (அற்ப) சுகம் வேறெதிலும் இல்லை #சோம்பேறித் தனத்த எப்படி ’ஷோக்கா’ சொல்லுது பாரு பயபுள்ள. (அட, என்னையச் சொன்னேன்)

*

சண்டை போடுறதும் அதே வாய், சமாதானம் பேசுறதும் அதே வாய்.

*

தன் தோல்விகளை விட, மற்றவர்களின் வெற்றிகள் ஏற்படுத்தும் சஞ்சலமே அதிகம்.

*

IRCTC-ல Tatkal பயணச்சீட்டு பதிவு பண்ற நேரத்துல ஆமை மேல உட்கார்ந்து அந்த ஊருக்கே போய்ட்டு வந்துடலாம் போல # இந்தியா வல்லரசு ஆயி......டும்.

*

சாதிவாரி கணக்கெடுப்புல அவிங்கவிங்க சாமிய அதோட குடும்பம் குட்டிகளோட சேத்து எழுதச்சொல்லிட்டீங்ளா, எண்ணிக்கை கொறஞ்சா சாமி குத்தமாயிடும்

*

எல்லா மௌனமும் கோழைத்தனம் அல்ல.

*

ஜனாதிபதி தேர்தலில் நாமும் வாக்களிக்க வகை செய்யனும்னு ஒருத்தர்கூட ’கல்யாண் பிரபு’ மாதிரி போராடலையே. தலைக்கு 500-1000 கிடைக்கும்ல #வடபோச்சே

*

உலகத்தில் எவருக்குமே கிட்டாத அளவு சகிப்புத் தன்மையை தமிழ்நாடு மின்வாரியம் தமிழனுக்கு ’ஊட்டி’யிருக்கிறது / ’கொடை’யளித்திருக்கிறது







அவனை அவனாகவே வெளிப்படுத்த விரும்பாமல், வேறு ஒருவனாக நிறுவிக்கொள்ளத்தான் இத்தனை போராட்டமும்!

*

சமரசம் நிலவும் இடங்கள்: இ/சுடுகாடு, டாஸ்மாக் வரிசையில் இப்போ ”வண்டியோட்டும்போது செல்போன் பேசுறது”

*

’இப்படி இருப்பார்கள்’ என்று நினைக்கும் எவருமே பெரும்பாலும் ’அப்படி இருப்பதில்லை’ # உடல், புத்தி, மனசு! :)

*

உறக்கத்தில் சூழும் மௌனம் ஓர் வரம்.

*

’அன்னையர் தினம்’ என அறியாத அன்னையரே அநேகம் பேர்!

*

’வாழ்த்த வயதில்லை’னு சொல்றவங்களே, வாழ்த்துறதுக்கு வயசைவிட மனசு ரொம்ப ரொம்ப முக்கியம்ப்பா!

*

முன்னால போற டூவீலர் இன்டிக்கேட்டர் போடாம, கை காட்டாம சட்டுனு திரும்புதுனா, அந்த இடத்துல/சந்துல டாஸ்மாக் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு

*

ஆற்றங்கரையில் நாகரிகம் வளர்ந்தது அந்தக்காலம், சாயப்பட்டறைகள் வளர்ப்பது இந்தக்காலம்!

*

”முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்போம் ” - நித்தி & ஆதீனம் # கைப்புள்ளைகளுக்கு கட்டஞ்செரியில்ல!

*

பீகார், தமிழகம், உ.பியில் கொடி நாட்டிய ராகுல் காந்தியை குடியரசுத் தலைவராக்கி கட்சியைக் காப்பாத்தனும்னு காங்கிரஸ்ல ஒருத்தருக்குமே தோணலையா?

*

தாக்கவும், தற்காக்கவும் மௌனத்தைவிடச் சிறந்த ஆயுதமில்லை!

*

முன் முடிவுகளற்ற அணுகுமுறையில், பெரிதும் சிக்கல்கள் உருவாகுவதில்லை!

*

ஈமூக் கோழி யேவாரத்துல(!) காசு கட்டாதவிங்கள, ஊரவுட்டு ஒதுக்கீருவாங்களாட்டருக்குது #கட்டுங்கப்பா கட்டுங்க பாக்கத்தானே போறோம்!

*

கேட்கிறவங்களுக்கு 'உண்மை பிடிக்காது' என்பதனாலேயே சொல்கிறவங்க 'பொய்' சொல்லுறாங்க!

*

கூழாங்கற்கள் பிறப்பதில்லை உருவாகின்றன!

*

உலகத்தில் ”பொழுதைப் போக்க” மெனக்கெடும் ஒரே உயிரினம் மனிதன்! # பொழுதுபோக்கு

*

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி மலரும் - பொன். ராதாகிருஷ்ணன் # கர்நாடகாவுல மலர்ந்ததே ’கப்’ அடிக்குதே! அதுல இங்கே வேற ராமாதாசுக்கு போட்டியாவா?

*

10ம் வகுப்பு மாணவனை கழுத்தை அறுத்துக் கொன்ற சக மாணவன் # ’பிறந்தவுடன் பிரசவ வார்டில் மருத்துவரைக் கொன்ற குழந்தை’ எனும் செய்திதான் பாக்கி :(

*

ராவணனே விடுதலையாகும் போது ராசா ஆகக் கூடாதா? - கருணாநிதி # சசிகலாவே கோர்ட்டுக்கு நடக்கும்போது கனிமொழி நடக்கக்கூடாதா? - கோபாலபுரம் :)))

*

நூறு மரணங்களில் 1 மரணம் எய்ட்ஸ் நோயால் நிகழும்பட்சத்தில், பத்து மரணங்களில் 2 - 3 புற்றுநோயால் நிகழ்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா?!

*

ரஞ்சிதா உறவில் பார்வைகள் குவிய, நித்தியின் விரிவடைந்த சாம்ராஜ்யத்தின் தில்லாலங்கடித்தனங்கள், ஆதீனம் என எதுவுமே பெரிதாக தோன்றவில்லையே!

*

அட அப்ரசண்டிங்களா, ’நித்தி’ எனும் கடலில் ’ரஞ்சிதா’ வெறும் கை அளவு தண்ணிப்பா....

*

அமைச்சரவையை மாற்றமே செய்யாமல், தமிழகத்தில் ஆளுநர் என ஒருவர் இருப்பதையே இருட்டடிப்பு செய்கிறார் ஜெ. # சொன்னாலும் சொல்வாங்க!

*

கரும்பு வெட்டும் எந்திரங்கள் வாங்கியதில் ரூ.6 கோடி ஊழல் # கரும்பு ’விவசாயிகளை வெட்டும்’ இயந்திரம்னு ஒன்னு தயாரிச்சு ஊழல் பண்ணாம போனாங்களே!

*

பொண்ணு வீட்டைவிட்டு ஓடினால் பிடித்து கொன்று விடுங்கள் - உத்திரபிரதேச டிஐஜி #இவனை பெத்தாங்களா சந்தையில தவுட்டுக்கு வாங்கியாந்திருப்பாங்களா?

*

திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும் - மும்பை நீதிமன்றம். #அந்தப் பேனாவைப் புடுங்கி நடுமண்டையில ’நச் நச்’னு குத்தனும் போல இருக்கு!

*

கோபமே ஒரு கோழைத்தனம், இந்த லட்சணத்தில் ஒருவரிடம் இருக்கும் கோபத்தை வேறொருவரிடம் திணிப்பது அயோக்கியத்தனமன்றி வேறேதுமில்லை!

*

கோடிப்பேரிடம் பிடுங்கி, கொஞ்சம் தந்து மிச்சத்தை ஆட்டையைப்போட்ட லாட்டரிக்கு சற்றும் சளைத்ததல்ல கோடிஸ்வரனாக்க துடிக்கும் டிவி நிகழ்ச்சிகள்

*

எப்போதுமே பாராட்டியிராத ஒருவரை குறைமட்டும் சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் அளித்தது!?

*

யாரோ ஒருவர் செய்கையில் தவறாகவும், தான் செய்கையில் தவறு இல்லாததாகவும்படுகிறது. அதை நியாயப்படுத்தவும் மனம் விழைகிறது #மனிதன்

*

”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”னு சொன்னவர், புது tariff-ல கரண்ட் பில் வராத காலத்துல தைரியமா சொல்லிட்டாரு போல!

*

காவிரி டெல்டா பகுதியில் வெள்ள நீரைச் சேமிக்க ரூ.1560 கோடியில் திட்டம் - ஜெ #ஆத்துல மணல் அள்ளி ஆயிரக்கணக்கான கெணறு தோண்டின பிறகு இது ஏன்?

*

பேச்சுவாக்கில் ”எனக்கு ’ஒன்னு’ மட்டும் புரியலைங்க”னு அடிக்கடி சொல்றாங்களே, புரியாத அந்த ’ஒன்னு’ எதுவா இருக்கும்!

*

அவதூறு பரப்பினால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் - நித்யானந்தா # சென்செக்ஸ் ஷேர்ல பட்டியலாகியிருந்த ’மான’த்துக்கு இப்ப நஷ்டம் வேற வந்துடுச்சோ!

*

புன்னகைக்க வேண்டிய இடத்தில் புன்னகைக்க மறுப்பதின் மூலம் என்ன சாதித்துவிடப்போகிறோம்.

*


வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயிக்கிறோம், தோற்கிறோம், கொண்டாடுகிறோம், கூப்பாடு போடுகிறோம், இறுதியாக மரணத்திடம் தோற்றுப்போக!

*

காதலனோடு ஓடிப்போவது குறித்து பேருந்தில் சப்தமாக விவாதிக்கும் பெண், உடன் பயணிக்கும் அம்மாக்களுக்குள் இனம்புரியா பயத்தை திணிக்கிறாள்.

*

கனவின் நீளத்தையும், காட்சிகளையும் நான் தீர்மானிக்க முடிவதில்லை, அது நான் காணும் கனவுதான் என்றபோதிலும்!

*

கர்நாடகாவில் யார் முதல்வர் ஆனாலும் காவிரியில் தண்ணீர் விடுவதில்லை என்பதிலும், தமிழ்நாட்டில் யார் முதல்வர் ஆனாலும் காவிரியில் தண்ணீர் பெறுவதில்லை என்பதிலும் ”உறுதியாக” உள்ளனர்.

*

கடைசி நிமிசத்துல 'திக் திக்'னு ரயிலைப் பிடிக்கிறவங்களுக்காகவேதான் ரயிலு அப்பப்போ லேட்டா வருது போல! :)

*

உலகில் 3% மக்கள் மட்டுமே நாத்திகர்கள் # சாமி கும்பிட 500 / 1000னு டிக்கெட் போட்டு வசூலிக்கிற தைரியம் எப்படி வந்துச்சுன்னு இப்ப புரியுது

*

சில முட்டாள்தனங்களைக் காண கருணையற்ற கோபம் வருகிறது. அதை முட்டாள்தனமாக நினைப்பது, நம் தவறாக இருக்கும் பட்சத்தில் கோபம் முட்டாள்தனமாகிறது.

*

என் தலைமுடியைப் பாராட்டினார் மதுரை ஆதீனம்-நித்தியானந்தா # பாஸ், நீங்க ’எர்வாமாடின்’ பயன்படுத்துற ரகசியம் அந்தப் பெருசுக்கு தெரியலபோல! :)

*

தேர்வு எழுதியவுடன் மறந்துபோகும் மந்திரத்தோடே, வடிவமைக்கப்பட்டுள்ளன நமது பாடத்திட்டங்கள்.

*

ஜனாதிபதி பதவி காங்கிரசுக்கு.... துணை ஜனாதிபதி பதவி பாஜகவுக்கு..... ”டீல்” # கணபதி ஐயர் - வீரபாகு பேக்கரி டீலிங் மாதிரியே இருக்குய்யா!

*

குட்டிக்கரணம் போட்டுகூட யோசித்துப் பார்த்துவிட்டேன், நித்தியானந்தா மேல் எனக்கிருக்கும் கோபத்தில், பொறாமையும் கலந்துதான் இருக்கின்றது.

*

ஒவ்வொன்றிற்கும் 'தயார் படுத்துதலே' வாழ்க்கை எனப்படுகிறது!

*

மன்னிப்பை விட மிகப்பெரிய மருந்து ஏதுமில்லை # கேட்கையில், கொடுக்கையில்!

*

Jul 2, 2012

அம்மாவைப் பற்றிய ஆவணக்குறிப்புகள்!





ற்றங்கரையில்
வெறிக்கும்
அந்தச் சிறுமியிடம்
ஒரு கேள்வியிருக்கிறது…
அமைதியாய் நகரும்
ஆற்றுநீரில்
நேர்த்தியாய் வெடிக்கும்
நீர்க் குமிழிகளில்
ஆற்றோடு போன அம்மாவின்
மூச்சுக்குமிழி எதுவென?

-

டிபட்ட அம்மாவுக்கு
அறுவை சிகிச்சை,
இரத்தம் கேக்குறாங்க எனக்
கை பிசையும்
கிராமத்து நண்பனின்
முகத்திலும் ரத்தம்
ஒரு சொட்டுக்கூட இல்லை

~

பிதுங்கி வழியும் பேருந்தில்
மூச்சுக்காற்றுக்கு ஏங்கித்
தவிக்கும் தருணத்தில்
கடக்கும் நிறுத்தத்தில்
கையேந்திக்கொண்டிருக்கும்
முக்காடிட்ட நூல் புடவைக்கிழவி
அம்மாவைப் பிரித்துவிட்டவனுக்கு
அம்மாவை நினைவுப் பிச்சையிடுகிறாள்

-

கல்கி (08.07.2012) இதழில் வெளிவந்த கவிதை.
நன்றி : கல்கி

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...