கீச்சுகள் - 18அடிமையாகிவிட்ட ஒன்றை மற்றவர்கள்அதற்கு நீ அடிமையாகி விட்டாய்என்று பரிகசிப்பதைத் தவிர்க்கவே, அதை அதீதமாய் சிலாகிக்கிறோம்!

~

டீசல் விலை ஏறினப்போ பஸ்நிலைய கழிவறையில சிறுநீர் கழிக்க 1 ரூவா ஏத்தின சமூகத்துல, மின் கட்டண உயர்வுக்கு எங்கெங்கு விலை உயரப்போகுதோ தெரியல!?

~
அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களைத் தண்டிக்க துடிப்பதிலும், விடுவிக்க முயல்வதிலும் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது! #அரசியல்ல சாதாரணமப்பா!

~

காலப்போக்கில் தொலைந்து போனவை, தீர்ந்து போனவை, மீட்க முடியாதவைமறக்க முடியாதவைபட்டியலில் தானே சேர்ந்துகொள்கின்றன!

~

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைச்ச பிறகு ஒழுங்கா சோறு போட மாட்டாங்களா!? ரொம்ப இளைச்சு, குண்டர் சட்டம் ஒவ்வொன்னா ரத்தாகுதே?

~

ராமஜெயம் கொலைக்காக தினத்தந்தி செய்தித்தாளோடு தேநீர் கடையில் ஒருவர் பொங்கிக்கொண்டிருந்தார் தேநீரைவிட சூடாக #தேநீர்கடை அரசியல் சுவாரசியம்

~

நீ சுறுசுறுப்பாய் இயங்குகையில் எனக்குள் கிறுகிறுப்பு நிரம்புகிறது, நீ சோம்பல் முறிக்கையில் என்னுள் அசதி கரைகிறது.

~

விசுவாசம்என்பதைவிசு வாசம்னு தப்பா எழுதுறவங்களை என்ன பண்றது!

~

தீனி போட்டா சமத்தா ஓடுது, பட்டினி போட்டா தறிகெட்டு ஓடுது ..... கற்பனைக் குதிரை

~

மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டது - பாஜக # அங்கே மட்டுமா, மத்திய அரசுக்கும் மக்களுக்குமே பெரிய இடைவெளிதானே!

~

ஐசிஐசியை ப்ரடன்சியலில்அப்பா ஆகறதுக்கு லைசென்ஸ்தர்றாங்களாமே! - அமிதாப் சொல்றாரு # லைசென்ஸ் கூடவே ஸ்கூல் ஃபீஸும் கொடுத்துட்டா பரவாயில்ல

~

சரியான நேரத்தில் தவறவிட்டுட்டு, தவறான நேரத்தில் தவிப்பது ரயில் மட்டுமல்ல, திருமணமும்தான்.

~

மரணம் குறித்து ஒரு முறையேனும் பயம் கொள்ளாதவன், இன்னும் பிறக்காதவன் மட்டுமே!

~

கிழக்கே மீனவர்கள் தாக்குதல், மேற்கே முல்லைப்பெரியாறு, தெற்கே கூடங்குளம், வடக்கே காவிரி # இந்தியன் என்பதில் பெருமிதம் கொல்

~

சினிமாவில் நடிக்க பிரதமரிடம் அனுமதி பெற்றேன் - நெப்போலியன்
#
உங்களுக்கு அனுமதி கொடுக்க அவரு சோனியாகிட்டே அனுமதி வாங்கினாரா?

~

மின் வெட்டு குறித்து அதிகமாக, மிக அதிகமாக, மிகமிக அதிகமாக தமிழன் கோவப்படும் இடம், டாஸ்மாக்கில்கூலிங் பீர்கிடைக்காத மதிய நேரத்தில்தான்!

~

கிடைக்காத பொழுது தேடப்படுவதாகவும், கிடைக்கும் பொழுதில் அவசியமற்றதாகவும் இருக்கின்றன. # நிறைய!

~

கோடைக்கு நீர்மோர், குடிநீர் பந்தல் - கட்சியினருக்கு ஜெ. வேண்டுகோள்
#”
விலையில்லா நீர்,மோர்காசுக்கு கரண்ட் தராம, எதெதையோ இலவசமா தர்றீங்க

~

ஒருவனை அடித்து துவைப்பதைவிட, அவதூறினைப் பரப்புவதே கொடும் வன்முறை

~

பேச நிறைய இருப்பதும், பேச ஒன்றுமே இல்லாததும் காதல்

~

மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு……” - .பன்னீர்செல்வம் #‘தமிழக அரசுஎன்பதையும்மாண்புமிகு அம்மாவின் அரசுனு மாத்திடுவாங்களோ!?

~

இவ்ளோ தூரத்துல இருக்கிற நமக்கே இப்படி சுடுதே! அங்கேயே இருக்கிற சூரியனுக்கு எவ்ளோ சுடும்! # வெயில் ஜாஸ்திப்பா! :))))

~

கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை # இன்னும் கொஞ்சநாள்ல வீட்டோட மொத்த விலையையே ஒரு மாச வாடகைனு கேட்டாலும் கேப்பாங்க போல!

~

ஆயுதம் ஏற்படுத்தும் கண்ணீரை விட அன்பு ஏற்படுத்தும் கண்ணீர் பெருவெள்ளமாகப் பாயக்கூடியது.

~

டாஸ்மாக் பார் வாசல் சுவரில் சாய்ந்தவாறு தேநீர் அருந்துபவன் ஒரு ஹைகூ கவிதையாய்த் தென்படுகிறான்!

~

19 வயது நண்பனுக்கு மது கொடுத்து, மப்பில் போதை ஊசி போட்டு, கழுத்தை நெரித்து கொலை. செய்தவர்கள் வயது 20-21
# என்னமோ நடக்குது இந்தியாவில் :(

~

”Sorry” எனும் வார்த்தை எப்போதும் உதட்டிலிருந்து, எப்போதாவது உள்ளத்திலிருந்து!

~
வறுமைக்கோடு எவ்ளோனு கணக்குப் போடத்தெரியாத கபோதிகதான் வறுமையை ஒழிக்க திட்டமும் போடுமோ! :(

~
நகர்புறத்தில் வறுமைக்கோடு 28 ரூபாய்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானிகிட்டே 1 ரூபா கூட போட்டுக்கொடுத்து ஒரு நாளைக்கு பொழப்பு நடத்துனு சொல்லனும்!

~

பணப் போராட்டத்தையே பல நேரங்களில் மனப் போராட்டம் எனக்கொள்கிறோம்!

~

6ஜி, 7ஜி, 8ஜி வர்ற வரைக்கும் 2ஜி வழக்கை நடத்துவாங்களோ!? #டவுட்டு!

~
பலநேரங்களில் துன்பங்களை ஆற்றுப்படுத்துபவை மற்றவர்களின் பெருந்துன்பங்களே

~
இரண்டாவது இடம் யாருக்கு எனும்ஈகோவிற்காகவே நடத்தப் பட்டிருக்கிறது சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! :)

~

இந்தியாவில் ஏழைகள் 9% குறைந்துள்ளனர். வறுமைக்கோடுக்கான வருமானம் ரூ 5-10னு சொல்லியிருந்தா இன்னும் குறைஞ்சிருப்பாங்களே.

~

பள்ளி கல்லூரி புரிய வைக்காதகெமிஸ்ட்ரியைபருவம் புரிய வைக்கின்றது!

~

காலையில் வீதி முனைகளில், பிள்ளைகளை பள்ளி வாகனத்தில் திணித்துவிட்டு, வீடு திரும்பும் பெண்களின் முகத்தில் ஒரு விடுதலை உணர்வு தெரிகிறது #நகரம்

~

சூதும் வாதும் நிரம்பி வழிகிறது அரசாங்கத்திடம், கேட்டால் சாணக்கியத்தனம் எனச் சமாதானம் சொல்லப்படுகிறது. #பாவம் சாணக்கியன்!

~

படைப்பாளியை முன்னிறுத்தியே படைப்புகளை அணுகுகிறோம்!

~

தான் செய்யவேண்டிய வேலைக்கு கூலித்தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதை ஊதியம் பெறும் ஆதரவற்றோரிடம் கறக்கும் கையூட்டு மலம் தின்பதற்கு ஒப்பானது

~

யாருமற்று, நீண்டு கிடக்கும் மாலை நேரத்து தேசிய நெடுஞ்சாலை போல், ஞாயிறு காலை பரபரப்பற்று அமைதியாக இருக்கின்றது!

~

மின்சாரமற்ற முன்இரவுகளில் நகரத்து குடியிருப்புப் பகுதி நிசப்தம் கவிதையாய் தெரிகிறது. கவிதை எல்லோருக்குமா புரிந்து (பிடித்து) விடப்போகிறது!

~

அதிமுக என் தலைவர் MGR-ன் கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறேன் - விஜயகாந்த் #அப்படியே திமுக-வும் MGR இருந்த கட்சி தானேனு விட்டுடு தலைவா!

~