கேட்க ஆரம்பித்தால்
கொடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பது கேட்ட பிறகுதான் தெரிகிறது!
*
அவர்களாய் உணராமல்
அறிவுரையால் திருந்துவதாக இருந்தால், சிகரெட்டை அருங்காட்சியகத்தில்தான் பார்க்க
வேண்டியிருக்கும்.
*
பெரும்பாலான
சண்டைகளில், ஆரம்பம் எதுவெனத் தெரியாமலே, பாதியில் நுழைந்து கருத்து சொல்லி
ஆதரிக்கிறார்கள்/எதிர்க்கிறார்கள் #எதாச்சும் பண்ணனும்யா
*
மியான்மரில் ஆங்சான்
சூகியை சந்தித்த மன்மோகன், நானும் வீட்டுச்சிறை மாதிரி ஒரு விதிச்சிறையில்
இருக்கிறேன் என்பதை சைகையால்
சொல்லியிருப்பாரா?
*
ஒவ்வொரு மனித
மனத்திற்குள்ளும் எத்தனையெத்தனை உளச்சிக்கல்கள், போராட்டங்கள். மனித மனம் மீண்டும்
மனிதனாக பிறக்க விரும்புமா என்ன?
*
இந்தக் கணம் மனம்
செய்ய விரும்புவதை, ’அவசியம்தானா?’ என்று கேள்வி கேட்கத் துணிந்தவன் முன்னேறுவான்!
*
கச்சா எண்ணை ஏறுது, $
ஏறுதுனு பெட்ரோல் விலை ஏத்துற கூட்டுக் களவாணிங்க, ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில
வரியையும் கூடவே ஏன் ஏத்துறாங்க?
*
பிரபலம்ங்கிற
வார்த்தையைக் கண்டுபிடிச்சவன் ’பிரபலம்’ ஆனானோ இல்லையோ, Problemஆ நினைக்கிற
ஆளையெல்லாம் பிரபலம்னே கொல்றாங்கய்யா #இணைய வசை மொழி
*
”நீயா நானா”
நிகழ்ச்சியில் கோபிநாத் ’கோட்’ அணிவதும்கூட ஒருவித போலி கௌரத்திற்காகத்தானேனு
கோபிநாத் கிட்டே யாராச்சும் கேட்டாங்களா?
*
கறை படுத்தப்பட்டேனே
தவிர கறை படியவில்லை - நித்தி
# பெரிய கவிஞரு இவரு,
எதுகை மோனையில பேசுறாராம்!
*
நறுமணத்தையும்,
நாற்றத்தையும் உலகம் முழுக்கச் சுமப்பது ஒரே காற்றுதான்!
*
காவிரி ஆணையத்தை உடனே
கூட்ட வேண்டும் - கி. வீரமணி # நீங்க முதல்ல உங்க வீடு வாசலை கூட்டுங்க பாஸ்!
*
ஒபாமாவால்
அதிபராக முடியுமெனில் என்னால் ஜனாதிபதி ஆக முடியாதா? - சங்மா # அண்ணே அவரு எட்டாங்கிளாஸ்
பாஸ், நீங்க பத்தாங்கிளாஸ் ஃபெயில்ண்ணே!
*
திண்ணைகளை ஒழித்துவிட்டு,
எங்கே போய் சகமனிதனோடு இணக்கத்தைப் பெற்றுவிடப் போகிறோம்?
*
”தாமதமாகும் திருமணம்”
பரிகார பூஜைக்கு அழைத்து செல்கிறது தமிழக சுற்றுலாத்துறை # இதுக்கு பொண்ணு மாப்ளை
பார்த்துக்கொடுக்கிற வேலை செய்யலாம்ல!
*
ஆட்கொள்வதைக் கொல்!
*
“குடி
குடியைக்கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக்கெடுக்கும்” உலகம்
கத்துக்கவேண்டிய ”டாஸ்மாக் பலகையிலேயே எழுதுற சூப்பர் சாணக்கியத்தனம்”
*
எந்திரன் பட மொத்த
வசூல் ரூ.179 கோடி. தமிழகத்தில் ஒரு வருடம் மணல் விற்பனை மூலம் அரசுக்கு
கிடைக்கும் லாபம் ரூ.194 கோடி என நினைக்கிறேன்.
*
கோட்டக் மகேந்திரா
பேங்ல இருந்து வருட வருடம் வருமானம் வர்ற திட்டம், 2 நிமிசம் பேசலாங்ளா? - போனில்
#இந்தமாதிரி நல்லவங்களாலதான் மழை பெய்யுது
*
சாலையில் யாரோ
‘டேய்’னு கூப்பிட்டா நம்மையோனு திரும்பிப்பார்க்கிறமாதிரி இணையத்துல யாரோ யாரையோ
திட்டுனா நம்மையோனு நிறைப்பேர் நினைக்கிறோம்
*
சுவையாக இருப்பதுதான்
திகட்டும்!
*
முல்லைக்கு தேர்
கொடுத்த பாரி மாதிரி, நானும் பைக் நிறுத்திட்டு, வரலாறுல இடம் பிடிச்சுடலாமானு
யோசிக்கிறேன் #தேர் பெட்ரோல்ல ஓடியிருக்குமோ?
*
எல்லா நேரங்களிலும்
அழுகைக்கான காரணம் வெற்றியோ தோல்வியோ அல்ல... அழுகை ஒருவித தேவை!
*
பெட்ரோல் தான்
ஏறிடுச்சுல்ல, பேசாம ஈமுக் கோழி ”டூ லெக்கர்” விற்பனை மையம் ஆரம்பிச்சுடலாம்னு
நினைக்கிறேன்
*
மத்திய அரசு மக்கள்
காதில் பூ சுற்றுகிறது - கேப்டன் # பூ விக்கிற விலையில, இவரு வேற காமடி பண்றாரு.
ஏற்கனவே அவங்க நார் சுத்துறது தெரியாம!
*
ட்ராபிக் ராமசாமியும்
’நித்தி’யை ஆதரிக்கிறாராம். # இந்த பயபுள்ள எதும் வசிய மருந்து வெச்சிருக்கானோ!?
*
நமக்கே இப்படி
வேர்க்குதே, பாவம் நம்மைக் கொளுத்துற சூரியனுக்கு எப்படி வேர்க்கும்...!? #
வெயில்ல என்னென்னவோ யோசிக்க தோணுது
*
25 வயது அமெரிக்க
விலைமாது பெண்ணுக்கு, இந்திய தொழிலதிபர்கள் (1 hr) தரும் காசு ரூ.5 லட்சம் #
யாருய்யா இந்தியா ஏழைகள் நிறைந்த நாடுனு சொன்னது
*
”ஏன்டா பெட்ரோல் விலை ஏத்துனே”னு
வீதியில எறங்கிச் சண்டை போடாம, பணம் மிச்சம்னு பெட்ரோல் பங்க்ல முட்டி மோதுறவங்களை
என்ன சொல்ல? #நாம வல்லரசு :(
*
மின் அரட்டையில்,
அலைபேசியில், குறுந்தகவல்களில் நாம் புடுங்கும் ஆணிகளில் எத்தனை சதவிகிதம் தேவையான
ஆணிகள்?
*
குழந்தைகள்
குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில்
தோற்றுப்போய்விடுவாள்
*
டாஸ்மாக்-ல்
HOBSONS-XR பிராந்தி குடிப்பது எப்படி என விளக்கம் # வர்ற பள்ளிக்கூட
பாடத்திட்டத்திலயும் சேர்த்துட்டா நாடு உடனே உருப்பட்டுடும் :(
*
மாசு படாமல் இருப்பது
”ஊழல்” மட்டுமே!
*
ஒரு பையனோ பொண்ணோ
கஷ்டப்பட்டு(!) படிச்சு முதல் மார்க் வாங்குறதால அவங்க குடும்பம் மட்டும்
முன்னேறுறதில்ல, அவங்க படிச்ச பள்ளிக்கூடமும்தான்!
*
ரிசல்டு வரும்
தினங்களில் கோடீஸ்வரர் ஆவது லாட்டரி வாங்கியோரும், முதலிடங்களைப் பிடிக்கும் பள்ளி
நிர்வாகிகளும்தான்!
*
கொதிக்கிற வெயிலில் வாடி வதங்கி, கருகி, நொந்து
புலம்பியோரில், 1% கூட கோடை மழையில் நனைய முன் வருவதில்லை!
*
பாஸ் மார்க் 35-னு தீர்மானித்த
புண்ணியவான், 40 மார்க் கூட எடுக்க முடியாத நம்ம இனத்தைச் சார்ந்த ஆளாத்தான்
இருந்திருப்பார் # என் இனமடா நீ!
*
அனுமதிக்கப்படும்
அளவிற்கான தவறு / குற்றமே ’நெளிவு சுழிவு’ என வகைப் படுத்தப்படுகிறது.
*
பிரதமராக மக்கள்
ஆதரவு: மோடி 17%, மன்மோகன் 16%, ராகுல் 13%, சோனியா 9% மட்டுமே # இதையும்
16+13+9 = 38%னு அபிசேக் சிங்வி பேசுவாரே!
*
செல்போனின் மற்றுமொரு
சாதனை குபீர் இசை வெறியர்களை உருவாக்கியது # பேருந்து பின் படிக்கட்டருகே 7
பேராச்சும் செல்போன்ல பாட்டு ஒலி பரப்புறாங்க
*
திருச்சி ராமஜெயம்
கொலைக் குற்றவாளிகளை ’துப்பறியும் சாம்பு’தான் வந்து கண்டு பிடிக்கணும் போல்
இருக்கு!
*
சோலார் வாட்டர்
ஹீட்டர் கண்டுபிடிப்பை ’மிஸ்டர். சூரியன்’ தப்பா புரிஞ்சுட்டார் போல, எந்த பைப்
திறந்தாலும் ஹீட்டர் இல்லாமலே தண்ணி கொதிக்குது
*
கிருமிநாசினியான
சானம், அனைவர் கையிலும் படவேண்டும் என்று அம்மா மாடு வழங்கியுள்ளார் - அதிமுக MLA
# சட்டமன்றத்திலும் மாடு வாங்கிக் கட்டிவைங்க
*
ஞாயிற்றுக்கிழமை
காலையில் குளிப்பதற்கும் விடுப்பு விட்டால், நீயும் என் நண்பனே! # அட ச்ச்சே!
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு
*
மப்புல போறவன்
மானாவாரியாதான் போவான், மாநிலத்துக்கு படியளக்குற மவராசன்ல, மவனே மானம் போவக்கூடாதுனா மருவாதியா
நீ ஒதுங்கிப்போ #எனக்கு நானே
*
எங்களை அதிமுக
ஆதரிக்கிறது - நித்தியானந்தா # யோவ், உனக்கு தில் இருந்தா “என் ஆதரவில்தான் அதிமுக
இருக்கு’னு சொல்லிப்பாருய்யா! /உசுப்பேத்து/
*
சிக்னல்களில் ஓரிரு
நிமிடங்கள் நிற்க தடுமாறும் நம் நிலையைவிட, தகிக்கும் அனலில் தவிக்கும்
போக்குவரத்துக் காவலர் நிலமை பலமடங்கு பரிதாபம் :(
*
”ஊட்ல பொண்டாட்டி
இல்லனா, அன்னிக்கு ஊறுகாய் கூட அமிர்தம் தாண்டா“ எனக்கு நானே சொன்னது # வேற வழி
*
புரிந்து கொண்டதைவிட
புரிந்து கொள்ளாதாது ஏராளம் #பொதுவா
*
நித்தியானந்தாவோடு
ரஞ்சிதா இருக்கிறார் - ஜெயேந்திரர் / 1987ல் ஜெயேந்திரர் ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர்
- மதுரை ஆதீனம் # சபாஷ் சரியான போட்டி!
*
கசங்கிய காகிதத்தில்
ஓராண்டு சாதனைனு 25 கோடிக்கு விளம்பரம் செய்ததுக்கு பதிலா ’ஓராண்டு சாதனை
புற்றுநோய் மருத்துவமனை”னு ஒண்ணு கட்டியிருக்கலாம்
*
தாகத்தில் தண்ணீர்
குடிக்க நினைக்கையில், தண்ணீர்க் குடுவையை அருகில் வைத்து நகரும் மகள் அளவில்லாத
ஆனந்தத்தைப் புகட்டிவிட்டுச் செல்கிறாள்.
*
போட்டி போட்டு மது
அருந்தியதில் பவானியில் இருவர் சாவு # அரசுக்கு அதிக வரு’மானத்தை’ ஈந்திட முனைந்த
தியாகிகளுக்கு அரசு சிலை வைக்குமா?
*
பிரபாகரன் தலைமையில்
தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார் -கருணாநிதி #ஆதீனம் கனவுல சிவன்
வரப்போ, இவரு கனவுல ராஜீவ் வரமாட்டாரா?
*
5 comments:
அண்ணே பின்னுருறீங்க
டாப் கிளாஸ்..!
குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப்போய்விடுவாள்
superb and its true
கலக்குங்க கதிர் - சூப்பர்
எல்லாமே - நட்புடன் சீனா
arumai anna niraya repeat pola theriyuthe
Post a Comment