போதை கனக்கும் டாஸ்மாக் குடுவைமாயப்போதை தேடும் மூளையோடும்
எச்சிலூறும் நாவோடும்
சில்லறைகளைப் பொறுக்கி
போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை
கையகப்படுத்துகிறான் குடிமகன்.

அழுக்கடைந்த குடிப்பக மூலையில்
ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில்
கோணலாய் நிற்கும் மேசையில்
காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.

முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல்
குறுகுறுப்பாய் குடுவையைக் கையாள
அடைபட்டுக்கிடந்த அவனுக்கான அமிர்தம்
விடுபட்டு மெல்லச் சிரிக்கிறது

நடுங்கும் விரல்களோடு குவளையில் சரித்து
இனிப்பூட்டிய குளிர்பானத்தையோ
வாயு நிரம்பிய சோடாவையோ
பிளாஸ்டிக் பை தண்ணீரையோ பீய்சிக்கலந்து
ஒரு புணர்ச்சியின் தொடக்கம் போல்
தன் அனுபவத்துக்கேற்றார்போல் அருந்துகிறான்.

நாவு கடக்கும் மதுவின் கடுமையை
காரக்கடலையிலோ ஊறுகாயிலோ,
திட்டிய மனைவியின் வார்த்தைகளிலோ,
தன்னை ஒதுக்கிய சகமனித நினைப்பிலோ
தொட்டும்தொடாமலும் நீவிவிடுகிறான்

துளைத்தூடுருவும் கள்ள போதை
மெல்ல மெல்ல அவனை மேதையாக்கி
வன்மப் போர்வையை உதறிப்போட்டு
அன்புக் குடுவையின் மூடியை திறந்துவைத்து
வார்த்தைகளுக்கு பிரசவம் பார்க்கிறது

வெற்றிடத்தைக் குடித்த குடுவை சிரிக்க
போதையை ஊட்டிய திரவம் சிரிக்க
போதை தளும்பும் அக்கம்பக்கமும் சிரிக்க
ஓங்காரமாய் அவனும் சிரிக்கின்றான்
உலகமும் அவனைப் பார்த்து சிரிக்கின்றது!

போதையின் கனம் தாங்காத
பிறிதொரு குடுவை தன்னை
எவர் விடுவிப்பதென ஏக்கமாயிருக்கிறது
ஆனாலும் அது அறியும்,
இன்றோ, நாளையோ
இவனோ, இன்னொருவரோ
விடுவித்துவிடுவார்களென்று

-0-

நன்றி திண்ணை

கீச்சுகள் - 9

அரைத் தூக்கத்தில் கிறங்கியிருக்கும் ஒரு குழந்தைபோல், எப்போதாவதுதான் அமைகின்றன அழகான சில தருணங்கள்!

*

இணைய அரட்டைப் பெட்டிகளில்வணக்கம்பதிலுக்குவணக்கம்என்பதோடு மட்டும் நின்றுகொள்ளும் நட்புகளில் பெரும்பாலும் வம்புதும்புகள் வருவதில்லை.

*

சிக்னல்ல இடது பக்கம் நிக்கிறவங்கமேல உரசி வளை(நெளி)ந்து முடிந்தவரை முன்னாடி போறாங்களே, அவசரமா எதும் ரயிலுக்கு தலை குடுக்கப்போவாங்களோ!?

*

ஒரு நதிபோல், அதன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

*

மடித்து எழுதும் வரிகளை, பலநேரங்களில் கவிதை எனச் சமாதானப்படுத்திக் கொள்கிறோம்

*

அன்பும் ஒரு வதைதான். யாரிடமாவது திணித்து, யாரிடமாவது கறந்துகொண்டே இருக்கின்றோம். ஒருபோதும் சும்மா இருக்கமுடிவதில்லை!

*

ஒருவரை அவரின் இயல்போடு அப்படியே ஏற்றுக்கொள்ள இருக்கும் இறுக்கமும், ஏற்றுக்கொண்டபின் ஏற்படும் நெகிழ்வும் வித்தியாசமான முரண். ”அவர்என்பவர் அப்படியேதான் இருந்துகொண்டிருக்கிறார்

*

கைபேசியில் தோழியை அழைப்பதற்குப் பதில், தவறுதலாக மனைவியை அழைக்கும் கணவர்கள் அப்போதைக்கு கூடுதல் அன்பைப் பொழிகிறார்கள்.

*

பகை கொல் மனமே! :)

*

நாளை குறித்த அச்சம் நீர்த்துப்போகும் நேரங்களில், மனது மிக நேர்த்தியாக நடனமாடுகிறது

*

பால் நாலணா ஏறுனதுக்கு டீக்கு ரெண்டு ரூவா ஏத்துற டீக்கடைக்காரங்களை கண்டிச்சு யாரும் உண்ணாவிரதம் இருக்கமாட்டாங்களா!?

*

சரத்பவாரை அடிச்சாலும் பரபரப்பு, சச்சின் 100 அடிக்கலைன்னாலும் பரபரப்பு
#
பரபரப்புக்கு அடி உதவறமாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க போல

*

சரத்பவாரை அடிக்கிறதும் ஒரு சிங்! அணைக்கிறதும் ஒரு சிங்!
#
சிங் இன் (கி)ரைம்.... ஆம் சிங் இன்த (கி)ரைம்

*

எனக்கென்னமோ 100 செஞ்சுரி அடிக்கிறதுக்கு முன்னாடி 90 ரன்னுக்கு மேல அவுட் ஆனதில் செஞ்சுரி போட்டுருவார்ன்னு தோணுது #SachinTendulkar

*

சரத்பவாருக்குஒரே ஒரு அடிதான்விழுந்ததா!? - அன்னா ஹசாரே
#
இந்த பெருசுக்குள்ளேயும் என்னவோ ஒன்னு இருக்குய்யா :))))

*

சந்திக்காதவர்களுக்கான சொற்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன.

*

தேநீர்கடை பெஞ்சுகளில் அலசப்படும் அரசியலும், ஜனநாயகமும் எப்போதுமே அதி சுவாரசியமானவை. பல நேரங்களில் தேநீரைவிடச் சூடானவையும்கூட! :)

*

சமூக இணைய தளங்களில்எதுக்கும் இருக்கட்டுமே, காசா பணமா?” என்றே பெரும்பாலும் பலரைத் தொடர்கிறார்கள் () நட்பில் இணைத்துக் கொள்கிறார்கள்!

*

அதீதமாய் நேசித்து கொண்டாடி, சட்டெனத் தூக்கி எறியும், தூர தள்ளிவைக்கும் அல்லது தொலைக்கும் பொருட்களில் முதலிடத்தில் இருப்பது செல்போன்!

*

குடிக்க அழைக்கும் நண்பர்களிடம் மறுப்புச் சொல்லும்போது, எங்கிருந்தோ ஒருபீத்த கர்வம்பறந்து வந்து அமர்ந்துகொள்கிறது

*

இழந்ததைவிட தவறவிட்டதற்குத்தான் ரொம்பவும் அலட்டிக்கொல்கிறோம்

*

அணு மூலப்பொருள் வழங்கும் அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்-மன்மோகன்சிங்.
#
ஆனா, இந்திய மக்களின் அச்சத்தை மட்டும் நீக்கிடாதீங்க :(

*

மதியம் 2 மணிக்கு சஃபாரி உடையோடு உயர்தரநாயை வைத்துக்கொண்டு ஒருவர் நின்றால், ஊர் முன்னேறிடுச்சுனு சொல்றதா? கொடுத்துவெச்ச நாய்னு சொல்றதா?

*

இணையத்தில் ஆற்றும் சூடான வெற்றுப் பெருங்கடமைகளால்தான், பல வேளைகளின் உணவு சூடு ஆறிப்போகிறது
#
பசிக்குதுனா சோத்த தின்னு மச்சி!

*

பாடப் புத்தகத்துல வெச்சு பசங்கள படின்னு கொடுமைப்படுத்தி, கடைசியா ஒரு பயலும் மதிக்கமாட்டானுதான் இங்கயிருந்த போதிதர்மர் சீனாவுக்கு ஓடினாரோ?

*

பிரச்சனைகள் அதுவாக வருவதில்லை, பெரும்பாலும் நாமாகத்தான் இழுத்து அருகில் அமர்த்திக்கொல்கிறோம்!

*

குறும்படங்கள் (shortflim) 10 நிமிடங்களுக்குள் இருந்தால்தான் பார்க்கத் தோன்றுகிறது
#
கூறுகெட்ட மனோபாவம்! :(

*

ஆடம்பர திருமணங்களையொட்டி மண்டப முன்பக்க சாலை நெரிசலில் சிக்கி கடப்பவர்கள் மண்டபத்தை முறைப்பதோடு மனதிற்குள் திட்டிக்கொண்டும் கடக்கிறார்கள்

அன்பு*
*நிபந்தனைக்குட்பட்டது


*

சிலபல நேரங்களில் நமக்குப் பிடித்தது என்பதைவிட மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக கிறுக்குகிறோம்! :)

*

உலக அளவில் தமிழர்களை தலைநிமிரச்செய்யும் சினிமானு சொல்றாங்களே, அது.. தமிழே தெரியாத பெண்ணை கதாநாயகியாக்கி போஸ்டரை மட்டும் உயரமா ஒட்டுறதோ?

*

உடல் மொழியைவிட அதிகமாக அன்பையும், வன்மத்தையும் வார்த்தைகளின் மூலமே கடத்துகிறோம்.

*

பெருநகரங்களின் முன்னிரவு நெரிசல், நரகத்தின் ஒரு முன்மாதிரி!

*

சிலரை எப்படி சமாளிக்கிறதுன்னெ தெரியல! அந்தசிலர்லநாம இல்லாம இருக்கனும் :)

*

ஊர்ல 11.11.11க்கு இப்படி அலட்டிக்கிறாங்களே,11.11.1111க்கு என்னமா பந்தாவிட்டிருப்பாங்க. பாவம் பயபுள்ளைக அதுல ஒருத்தர்கூட இப்ப உயிரோட இல்ல:)

*

கோபியில் நேனோ காரில் வந்து பெண் கழுத்தில் இருந்த 7 பவுன் கொடியை பறித்த திருடன்.
#
கார் விலையையே கழுத்துல போட்டிருந்து பொறுக்கலை போல

*

காய்ச்சி  விக்கிறவன் யோக்கியனாகவும், காசு கொடுத்து குடிச்சிப்புட்டு மட்டையாகிறவன் அயோக்கியனாகவும்
#
டாஸ்மாக் திருப்பங்களில் :(

*

"I know what i am doing" அபியும் நானும்ல திரிஷா பிரகாஷ்ராஜ் கிட்டே சொல்லியாச்சு.
#
என் பொண்ணு எப்பச் சொல்லப்போகுதோ? :)

*

பெட்ரோல் விலை உயர்வு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை - பிரணாப்
#
நாங்களே யாரு கட்டுப்பாட்டில் இருக்கோம்னு தெரியல - பிரணாப் (மனதுக்குள்)

*

இந்தியாவுக்கு நட்புநாடு அந்தஸ்து இல்லை - பாகிஸ்தான்
#
அட வெண்ண வெட்டிகளா, இந்தியர்களுக்கே இந்தியா நட்பு நாடு இல்லைடா.

*
பெட்ரோல் விலை உயர்வு நமது சுமையைக் குறைக்க உதவும் - மான்டேக் சிங் அலுவாலியா..
இந்த ஆளை இவங்க அப்பா-அம்மா பெத்து எடுத்தாங்களா அல்லது அம்பானி வீட்டு கழிவறையில் இருந்து கண்டெடுத்துட்டு வந்தாங்களா?. :(

*

சில பலவீனங்களை நாமாகவே சிலாகித்து அதுதான் பலம் என்பதுபோல் ஒரு மாயையை கட்டமைத்துக் கொல்கிறோம்!

*

ஊழலுக்கு எதிரான போர்ங்கிறாரு அத்வானி, ஊழலை ஒழிக்க இதுதான் சரியான தருணம்ங்கிறாரு மன்மோகன்
#
செவ்வாய் கிரகத்துல எதும் ஊழல் நடக்குதோ!?

*

"ஒருசில கருத்துகளைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்என பேச்சாளார் சொன்னால் மனுசன் இப்போதைக்கு முடிக்க மாட்டார் என்று அர்த்தம் 

*

பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது.


*