Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Jun 2, 2016

மீனும் கொக்கும் பின்னே ஒரு தவளையும்





நீர் வற்றும் அந்த குளத்தில்
சேற்றில் புரளும் மீனையும்
காய்ந்த மரத்திலிருக்கும் கொக்கையும்
பார்த்தபடியே போன மீனுக்குட்டி
நீர் தளும்பும் குளமொன்றில்
மீனைத் துள்ளி விளையாடவிட்டு
மழைத்தோரணத்தில் நனைந்து
பறக்கும் கொக்கின் வாயில்
ஒரு தவளையை வைத்து
ஓவியத்தை முடிக்கிறாள்
அவள் காலோரம் தவளையொன்று
தாவிக்குதிக்கிறது



*

அந்த நீர் இருந்த குளத்தில்
காத்திருக்கும் கொக்கு ஏரியொன்றையும்
சேற்றுக்குள் புதையும் மீன்
அலையடிக்கும் கடலொன்றையும்
கற்பனை செய்த கணத்தில்
பறந்துவந்த கவண் கல்லொன்று
கொக்கின் தலையைக் கொய்து
மீனருகே படையலிடுகிறது

-

நன்றி : கல்கி

Jun 24, 2014

மின்னற் பொழுது - கல்கி கவிதை







சொல்லொன்று
உயிர் தைக்கையில்

அந்தப் பார்வை
விழி தீண்டுகையில்

மூச்சுக் காற்று
நா உலர்த்துகையில்

நாண இறகு
மெல்ல உதிர்கையில்

விரற் தீண்டல்
குளிராய்ச் சூடேற்றுகையில்

உணர்வின் கதவு
தாழிடப்படுகையில்

நம்பிக்கையின்
மூடி திறக்கப்படுகையில்

ஒரு காதல்தான்
பகிரப்பட்டிருக்க
வேண்டுமென்பதில்லை

மழலையொன்று குளறியபடி
பிள்ளைப் பேறற்றவள்
தனம் பற்றியும் இருக்கலாம்

-

Jan 23, 2014

நகரத்துக் காக்கை







நகரத்தின் மையப்பரபரப்பில்
நாட்கள் பல கழித்து
கண்டேன் ஒரு காகத்தை
கசகசக்கும் மதியத்தில்!

சலசலப்புகளைப் புறந்தள்ளி
செத்துப்போன ஒரு எலியின்
உப்பிய வயிற்றை குறிவைத்து
கூர்அலகு பாய்ச்சிக் கொண்டிருந்தது!

உணவு கிடைத்தால்
உடனே கரைந்தழைக்கும் காக்கை
என எப்போதோ படித்தது
நினைவுக்குள் கொத்தியது

ஒற்றைக் காகமாய்
உண்டு கொண்டிருந்தது
கரையவுமில்லை
கத்தவுமில்லை

கரைந்தழைக்க நகரத்தில்
காக்கைகள் இல்லாமலுமிருக்கலாம்
கரைந்தழைக்கும் குணம்
நகரத்தில் கரைந்தும் போயிருக்கலாம்!

_

கல்கி (26.01.14) இதழில் வெளியான கவிதை.

நன்றி : கல்கி
 

Feb 7, 2013

நாம் எனப்படும் நானும் நீங்களும்




ன்
ஒரு படம்
பிடிக்கவில்லை
என்கிறீர்கள்,
ஒரு படம்
பிடித்துள்ளது
என்கிறீர்கள்,
இரண்டிலும்
இருப்பது
நானே என்கிறேன்!


***


த்தியின்
கூரிய முனைகொண்டு
அழகு எனச்சொல்லி
அவசியம் எனச்சொல்லி
என்னில் மிச்சமிருந்த
குழந்தைத்தனத்தை
மெல்ல மெல்ல
உரித்தெடுத்தெடுத்து
நாகரிகம் எனப்
பெயரிடுகிறீகள்

உதிர்ந்து கிடக்கும்
குழந்தைத் தனத்திற்கு
நான் என்ன பெயரிட!

***

வ்வொரு முறையும்
என்னை மௌனிக்கச்
சொல்கிறீர்கள்

நான்…
சொற்களைக் கொன்று
புதைத்துக் கொண்டிருப்பதை
ஒருபோதும்
அறிய விரும்பாமலே!



-

ன்றி :ல்கி

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...