சுக்குநூறாக உடைத்தெறி

ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக்கு என ஏதும் இல்லாமல் எழுதியதை சக பதிவர்களும், திரட்டிகளும், எழுத்தையொட்டி வந்த பின்னூட்டங்களும், வாக்குகளும், காரசாரமான விவாதங்களும் தன் போக்கில் எண்ணற்ற வாசகர்களிடம் எடுத்துச் சென்றதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் வலைத்தளம் நம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதும் உண்மை.

படைப்பு குறித்து பேசுபவர்கள், பின்னூட்டமிடுபவர்கள் மற்றும் வாக்கு அளிப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு அடையாளம் தெரிந்தவர்கள். வாக்குகள் போடத் தெரியாமல், பின்னூட்டமிடத் தெரியாமல், எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளத் தெரியாமல், தொடர்பு கொள்ளும் அவசியமில்லாமல் பலதரப்பட்ட, பல்லாயிரக்கணக்கான நமக்கு அடையாளம் தெரியாத வாசகர்கள் ஏதோவொரு நம்பிக்கையின் பேரில் எங்கெங்கிருந்தோ தொடர்ந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

இன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை மிக முக்கியமானது. சுய திருப்திக்காகவா, சக பதிர்வகளுக்காகவா அல்லது நம்மோடு நேரிடையாக எந்த வகையிலும் தொடர்பில்லாமல் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்காகவா? இதில் எதன் பொருட்டு எழுத நினைக்கிறேமோ அதன் பொருட்டு அதற்கான நேர்மையைக் கடை பிடிப்பது அடிப்படையான ஒன்று.

ஆனால் வாசகர்கள் கொடுக்கும் அதீத அங்கீகாரம் சில படைப்பாளிகளுக்கு கர்வத்தை ஊட்டி ஒரு கட்டத்தில் அகந்தையாக மிளிர்கிறது.

அந்த அகந்தை .....

* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.

* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.

* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.

இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார் ....

பலவிதமான எதிர்பார்ப்புகளோடு வாசித்து, மிக நன்றாக எழுதுகிறீர்கள் என்று கொண்டாடிய வாசகர்கள் கூட்டமா.....?

தன்னால் சொற்களை அடுக்கி அழகாக எழுத முடியும் என்ற கர்வத்தில், நேர்மையான எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்குச் செய்யும் துரோகம் இது. படைப்பாளியின் இந்த வக்கிரமும், அகந்தையும் எந்த வடிவில் இருந்தாலும் அது சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அது வாசகர்களால் நிச்சயம் சாத்தியமே.

66 comments:

கலகலப்ரியா said...

வெயிட் ... பெரிய சுத்தியலா கொண்டு வரேன்...

கணேஷ் said...

அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

மொக்கையப்பன் said...

அதானே? பேசாம மொக்க போட்டா பொழுதும் போகும், முதுகுக்கும் இதமா இருக்கும். அதவுட்டு அடுத்தவன் பதிவ என்னாத்துக்கு விமரிசனம் செய்யறது? வெட்டி வேல!

Pradeep said...

Correcthaan sir...

ஊர்சுற்றி said...

//இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார் ....//

யார் இந்த 'இவர்கள்'?!(சரி, யாராயிருந்தா என்ன!)

யாராயிருந்தாலும் //வக்கிரமும், அகந்தையும்// ஒழிக்கப்படவேண்டியவையே!

@கலகலப்ரியா,
பெரிய புல்டோஸரா கொண்டுவாங்க. :)

jothi said...

//படைப்பாளியின் இந்த வக்கிரமும், அகந்தையும் எந்த வடிவில் இருந்தாலும் அது சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும்.//

அருமை. உண்மையில் கடைக்கண்ணை திறந்துவிட்டீர்கள். இனிமேலவது சக பதிவரை கிண்டல் செய்யாமல் எழுத வேண்டும். முயற்சி செய்கிறேன்,..

பா.ராஜாராம் said...

வாவ்..கதிர், இந்தவாரம் நீங்களா..

//தன்னால் சொற்களை அடுக்கி அழகாக எழுத முடியும் என்ற கர்வத்தில், நேர்மையான எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்குச் செய்யும் துரோகம் இது. படைப்பாளியின் இந்த வக்கிரமும், அகந்தையும் எந்த வடிவில் இருந்தாலும் அது சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அது வாசகர்களால் நிச்சயம் சாத்தியமே.//

அருமையான பார்வை.கருத்து.

நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்!

தாராபுரத்தான் said...

இவ்வார நட்சத்திரமாச்சே நச் ன்னு பதிஞ்சிட்டீங்க.

Anonymous said...

காட்டமாத்தான் இருக்கு நட்சத்திரப்பதிவு.
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

உண்மை நிலை - உடைக்கப்பட வேண்டியது தான் - கட்டற்ற சுதந்திரம் - அடுத்தவரின் படைப்புகளை தரம் தாழ விமர்சிப்பது என்பது தவறான செய்லாகும். நல்ல சிந்தனை - நடைபெற நல்வாழ்த்துகள்

Unknown said...

தலைப்பைப் பாத்துட்டு எதை உடைக்கறதுன்னு வந்தாக்க... நல்லாத்தா எழுதியிருக்கறீங்க.
அன்புடன்
சந்துரு

ஆரூரன் விசுவநாதன் said...

எழுத்தாளர்களின் சமூக பொறுப்பு குறித்த இடுகை மிக அவசியமானது.

வாழ்த்துக்கள்

Kumky said...

இன்னமும் ப்ளாகர்ஸ் எல்லாம் நாய்கள் என விமர்சிக்கப்பட்டதை மறக்கவே முடியவில்லை கதிர்...பத்திரிக்கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரும் அதுகுறித்து எதிர்க்க மாட்டார்களென்ற நம்பிக்கை உண்மையாக., இதே நட்சத்திரமாக எழுதினவருக்கு உங்கள் இடுகை ஏதேனும் உரைக்குமா எனத்தெரியவில்லை..

நல்ல விடயம்.

காமராஜ் said...

மலையைக் கல்லை,
கழுத்துத்தொங்கிய பயிரை உடைத்துச்சோர்ந்த ஆயுதங்களுக்கு ஓய்வுதரலாம் காத்திரமான இலக்கியங்கள் மூலம்.
உடைக்கலாம் சுனக்கமில்லாமல்.

na.jothi said...

மௌனம் கசிந்து வெளியேறுவதும்
உள்ளே புகுவதும் சூழ்நிலைகளை
சார்ந்ததே
வலையோட தலைப்பே அருமையா இருக்குங்க

வாழ்த்துக்கள், நட்சத்திரத்துக்கும்

Unknown said...

ரொம்ப காரமா இருக்கு...

கலகலப்ரியா அளவுக்கு இல்லைன்னாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு சுத்தியல் கொண்டு வரேன்.

கண்ணகி said...
This comment has been removed by the author.
Anonymous said...

//இன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை மிக முக்கியமானது. சுய திருப்திக்காகவா, சக பதிர்வகளுக்காகவா அல்லது நம்மோடு நேரிடையாக எந்த வகையிலும் தொடர்பில்லாமல் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்காகவா? இதில் எதன் பொருட்டு எழுத நினைக்கிறேமோ அதன் பொருட்டு அதற்கான நேர்மையைக் கடை பிடிப்பது அடிப்படையான ஒன்று//

யோசிக்க வேண்டிய ஒன்று..யோசிக்கவும் வைத்துவிட்டீர்...அதே நேரம் நம் திருப்திக்காக எழுதுவது தவறில்லை என்றும் நம் மனதில் மிதந்து கொண்டிருக்கும் விசயங்களை எழுதலாம் எனவும் நினைக்கிறேன் சரியா கதிர்...எப்படியும் திட்டப் போறீங்க கொஞ்சம் காதில் விழறமாதிரி திட்டனால் தேவலாம்..ஹிஹிஹி எவ்வளோ அடிச்சாலும் தாங்குவோம்ல......

Jerry Eshananda said...

நட்சத்திர வாழ்த்துகள் கதிர், கலக்குங்க கூடவே வருகிறோம்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். சம்பந்தப்பட்ட அனைவரும் திருந்துவார்களா எனத் தெரியவில்லை. நன்றி கதிர்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

அதிகபட்ச சுதந்திரத்தை உணர்ந்தவன் மிகவும் கட்டுப்பாடானவன்.இணையம் நமக்கு கொடுத்திருக்கும் சுதந்திரத்தை மிகவும் பொறுப்புணர்வோடு கையாளவேண்டிய அசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது.

பதிவுக்கு வாழ்த்துக்கள் கதிர்

சுரேகா.. said...

நல்லெண்ணத்தில் வந்த நல்ல பதிவு!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

Romeoboy said...

\\ஆனால் வாசகர்கள் கொடுக்கும் அதீத அங்கீகாரம் சில படைப்பாளிகளுக்கு கர்வத்தை ஊட்டி ஒரு கட்டத்தில் அகந்தையாக மிளிர்கிறது.//

இது என்னவோ உண்மையான வரிகள். நச்சுன்னு மண்டையில் ஓங்கி அடிச்சா மாதிரி இருக்கு.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கலகலப்ரியா
(வெடிகுண்டு வராம இருந்தா சரி)

நன்றி @@ கணேஷ்

நன்றி @@ மொக்கையப்பன்

நன்றி @@ Pradeep

நன்றி @@ ஊர்சுற்றி

நன்றி @@ jothi
(கிண்டல் என்பதை விட ஏளனம் செய்வதுதான் கொடிது)


நன்றி @@ பா.ராஜாராம்

நன்றி @@ தாராபுரத்தான்

நன்றி @@ சின்ன அம்மிணி

நன்றி @@ cheena (சீனா)

நன்றி @@ தாமோதர் சந்துரு

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ கும்க்கி
(இன்னொருவருக்கு உரைக்கனும் என்று எப்படிங்க எதிர்பார்க்க முடியும். இதை ஏற்பதும், புறந்தள்ளுவதும் அவரவர் விருப்பம்)

நன்றி @@ காமராஜ்
(ஆஹா... அருமை)

நன்றி @@ ஜோதி

நன்றி @@ முகிலன்

நன்றி @@ kannaki

நன்றி @@ தமிழரசி
(ஆஹா... நான் ஏன் திட்டறேன்)

நன்றி @@ ஜெரி ஈசானந்தா

நன்றி @@ பித்தனின் வாக்கு

நன்றி @@ ஜெ.ஜெயமார்த்தாண்டன்
(இணையத்தில் இருக்கும் சுதந்திரம்தான் பல நேரங்களில் அகந்தைக்கு அடிமையாக்குகிறது)

நன்றி @@ சுரேகா

செந்தில் நாதன் Senthil Nathan said...

நானும் ஒரு பெரிய சுத்தியல் கொண்டு வரேன்!!

//அதே நேரம் நம் திருப்திக்காக எழுதுவது தவறில்லை என்றும் நம் மனதில் மிதந்து கொண்டிருக்கும் விசயங்களை எழுதலாம் எனவும் நினைக்கிறேன் சரியா கதிர்...எப்படியும் திட்டப் போறீங்க கொஞ்சம் காதில் விழறமாதிரி திட்டனால் தேவலாம்..ஹிஹிஹி எவ்வளோ அடிச்சாலும் தாங்குவோம்ல.....//

வழிமொழிகிறேன்!!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Romeo

நன்றி @@ செந்தில் நாதன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வரிக்கு வரி வழிமொழிகிறேன்.


//
* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.
//

சாலையின் செல்லும் பெண் தன் சகோதரியாக இருந்தால்.. கேட்டால், "எனக்கு என்ன எழுதனும்னு தெரியும். உன் வேலையப் பாரு" என்பார்கள்.

கதிர், இது வலையுலகம் சம்பந்தப்பட்ட விசயம் என்பதை விட நம் சமூகப் பார்வையாகவே கூறலாம். ஒரு பெண்ணைக் கிண்டலடித்து பிறகு காதல் செய்யும் திரையுலக நட்சத்திரங்களை விசிலடித்து பாராட்டுபவர்கள் தானே நாம். அதே தான் இங்கும் நடக்கிறது.

நல்ல பதிவு.

Gowripriya said...

well said sir..


அருமை..

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் கதிர்.. சுத்தியல் வேணும்னா சொல்லுங்க நானும் எடுத்துட்டுவர்றேன்.:)

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

கொஞ்சம் புகழ்(??) வந்தவுடன் சக படைப்பாளி கால்தூசுக்குச் சமம் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

கட்டற்ற சுதந்திரம் என்றாலும் நமக்கு பொறுப்புணர்ச்சின்னு ஒன்னு இருக்குல்லே?

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

க.பாலாசி said...

நல்ல கருத்து...புரிபவர்களுக்கு புரிந்தால் சரிதான் (எனக்கும்தான்)

CS. Mohan Kumar said...

நல்ல விஷயம் பற்றி எழுதி உள்ளீர்கள் ஆனால் சட்டுன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு

vasu balaji said...

நல்ல கருத்துக்கள் கதிர். நாம இந்த வட்டத்துக்குள்ள இல்லைங்கறதே ஒரு ஆறுதல். மொக்கையோ முதுகு சொறியறதோ யாரும் மனம் புண்பட்டிருக்க முடியாது. அம்புட்டுதான்.:)

அகல்விளக்கு said...

சரியாகச் சொன்னீர்கள் அண்ணா !!

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் கதிர்!!!

‘நச்' பதிவு!

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.. ஆனால் அடிக்க.. உடைக்கன்னு ஒரே வன்முறையா இருக்கே..??

பாருங்க !!! உடனே எல்லோரும் சுத்தியல், புல்டோசரோட வரேன்ன்னு சொல்றாங்க..

சுக்குநூறாக உடைத்தெறிவது என்பது முற்றிலும் புறக்கணிக்க பட வேண்டும் என்பது தானே கதிர்..??

பின்னோக்கி said...

நல்ல, தேவையான கருத்து.

சுந்தரா said...

மிக அவசியமான பதிவு.

நட்சத்திர வாழ்த்துக்கள்!

சீமான்கனி said...

//தன்னால் சொற்களை அடுக்கி அழகாக எழுத முடியும் என்ற கர்வத்தில், நேர்மையான எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்குச் செய்யும் துரோகம் இது. படைப்பாளியின் இந்த வக்கிரமும், அகந்தையும் எந்த வடிவில் இருந்தாலும் அது சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அது வாசகர்களால் நிச்சயம் சாத்தியமே.//

சத்திய வார்த்தைகள் அண்ணே....சபாஷ்...சூப்பர் பகிர்வு...

நிகழ்காலத்தில்... said...

கதிர் மாப்பு.,

எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு
பெரிதாக இருப்பதால் தனி இடுகையாக என் வலைப்பதிவில் இட்டிருக்கிறேன்

http://arivhedeivam.blogspot.com/2010/01/blog-post_19.html

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான பதிவு கதிர் அண்ணா.

S.A. நவாஸுதீன் said...

அப்டி ஓ.....ரமா நின்னு படிச்சிட்டு புடிச்சா கமெண்ட் இல்லேன்னா ஒன்னுமே சொல்லாம போயிடனும். அத விட்டுட்டு பின்னூட்டத்துல திட்டுறதும், பதிவு போட்டு திட்டுறதும் தேவையில்லாத வேலை. பப்ளிசிட்டி ஸ்டண்ட் கதிர் இதெல்லாம். தலைப்பைப் பார்த்து என்னமோ ஏதோன்னு வாசகர்கள் படிக்க வருவாங்கள்ள அதான் இந்த மாதிரி (சிலர்) பன்றாங்க. உங்க ஆதங்கம் புரியுது.

கண்மணி/kanmani said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.
யாருக்காக எதற்காக எழுதப் பட்டது என்றாலும் கூட இந்தப் பதிவின் கருத்துக்கள் 100%உண்மை.
பதிவர் வட்டமும் பின்னூட்டமும் சினிமா நடிகைகளின் சீசன் போலத்தான்..
அன்று நதியா
அப்புறம் குஷ்பு
இப்ப நயந்தாரா
நாளை??
யாராகவும் இருக்கலாம்.
பதிவர்களின் நிலையும் அதே.
துணிச்சலாக கசிந்த மௌனம் குமுறலாக வெளிப்பட்டு நிஜங்களைக் கக்கியிருக்கிறது.
மீண்டும் வாழ்த்துக்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வரிக்கு வரி உண்மை.ஒரு படைப்பாளியின் படைப்புகளை ஆரோக்கியமாக விமர்சிக்கும் போது படைப்பின் தரம் உயரும்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்

கண்ணா.. said...

//இன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை மிக முக்கியமானது//

அருமையான கருத்து.

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் தரமான பதிவு.

இது குறித்து இன்னும் விரிவாகவே நீங்கள் எழுதலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச்

குசும்பன் said...

தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்!

பதிவு மிக அருமை.

priyamudanprabu said...

சரியாகச் சொன்னீர்கள் அண்ணா

பழமைபேசி said...

உணர்ச்சி வசப்படாமல், பணிவான சிந்தனையோடு கட்டிய இடுகை! சபாசு!!

உங்களுடைய ஆத்மார்த்தமான கவிதைகளை எதிர்பார்க்கிறேன்!

KARTHIK said...

நட்சத்திர வாழ்துக்கள் தல

டிரீட் குடுக்க மறந்துடாதிங்க

மாஸ் ஓக்கேதான்

// @கலகலப்ரியா,
பெரிய புல்டோஸரா கொண்டுவாங்க. :)//

பத்தலைனா சொல்லுங்க

RDX ரெடி பண்ணிருவோம் :-))

புலவன் புலிகேசி said...

உண்மை..நானும் சுத்தியலோடு ரெடியா இருக்கேன். சொல்லுங்க உடைச்சிடலாம்.

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர். நீங்கள் சொல்வது உண்மைதான். பல நிஜமான சாதனைகளைச் செய்தவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். ஆனால் சமீபத்திய கசப்பு அனுபவம் கூட இதன் நீட்சியே.

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்..கலக்கிட்டீங்க..அணுகுண்டு கொண்டுவரவா?

ரோஸ்விக் said...

கதிர் அண்ணே நம்ம முதுகு சொறியப் போகவேண்டாம். பாலா அண்ணே சொல்லுவது போல நம்ம அந்த கூட்டத்துல இல்லைங்கிற மகிழ்ச்சி எனக்கும் உண்டு. சக பதிவர்களைப் பற்றிய கீழ் தரமான விமர்சனங்கள், கூட்டு சேர்ந்து கூத்தடிக்கிறது இதெல்லாம் எதுக்கு இந்த வலைத்தளத்துலன்னு புரியல. இதுல வியாபார நோக்கத்தோட செயல்பட என்ன இருக்கு. பல பேர் நம்ம எழுதுனத வந்து படிச்சிருக்கலாம். ஆனா எத்தனை பேருக்கு அது உபயோகமா இருந்துச்சுன்னு தெரியுமா?

அவங்களா ஒரு நாள் அடங்குவாங்க. நல்ல சிந்தனைகளை விதைக்க இந்த இடம் பயன்படட்டும்.

என்ன பன்றது உலகமும் அப்படித் தான் இருக்குது... நல்ல சிந்திக்க வைக்கும் பாட்டுக்கு கூட்டம் சேருரத விட... ஒரு நடிகையோட குலுக்கல் ஆட்டுக்கு சேருது.

நீங்க நட்சத்திரமானதுக்கு வாழ்த்து தெரிவிக்கிரத விட, இந்த பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நல் உலகு கட்ட முயலுவோம். அது சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் சாத்தியமான விஷயம்.

தொடருங்கள்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ச.செந்தில்வேலன்

நன்றி @@ Gowripriya

நன்றி @@ Cable Sankar

நன்றி @@ துளசி கோபால்

நன்றி @@ க.பாலாசி

நன்றி @@ மோகன் குமார்

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ அகல்விளக்கு

நன்றி @@ வெயிலான்

நன்றி @@ butterfly Surya

நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ சுந்தரா

நன்றி @@ seemangani

நன்றி @@ நிகழ்காலத்தில்

நன்றி @@ செ.சரவணக்குமார்

நன்றி @@ S.A. நவாஸுதீன்

நன்றி @@ கண்மணி

நன்றி @@ க.நா.சாந்தி லெட்சுமணன்

நன்றி @@ கண்ணா

நன்றி @@ T.V.Radhakrishnan

நன்றி @@ குசும்பன்

நன்றி @@ பிரியமுடன் பிரபு

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ கார்த்திக்

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ அமர பாரதி

ஈரோடு கதிர் said...

நன்றி @@ இய‌ற்கை
(அய்யோ அணுகுண்டா!!)

நன்றி @@ ரோஸ்விக்
//நல் உலகு கட்ட முயலுவோம். அது சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் சாத்தியமான விஷயம்.//

ஆஹா அருமைங்க ரோஸ்விக

Radhakrishnan said...

:) இப்படி அழகாக எழுதும் இந்த உரிமையை உங்களுக்கு எவர் கொடுத்தது?

நல்லதொரு பதிவு.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

உண்மையான கருத்து .குறி கவிதையை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது...

அரசூரான் said...

வாழ்த்துக்கள் கதிர்.

எவ்வளவு உடைச்சாலும் மாவு கட்டு போட்டு முருங்கை மரம் வேதாளங்கள் ஏராளம். அவர்கள் மனதில் அந்த எண்ணத்தை "துடைத்தெறி" என்று சேர்த்து சொல்லுங்கள்.

வால்பையன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

எவ்வளவு தான் பாராட்டினாலும், அதை மண்டையில் போட்டுகனுமான்னு நாம தான் முடிவு பண்ணனும்!
நீங்கள் குறிப்பிட்டிருப்பது அந்த விசயத்தில் பக்குவமடையாதவர்கள் என நினைக்கிறேன்!

நசரேயன் said...

என்னைய மாதிரி மொக்கைக்கு எல்லாம் இந்த பிரச்சனையே இல்லையே

V.N.Thangamani said...

நட்சத்திர பதிவர சொல்லவே இல்லே .
வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் எழுத்துக்கு சூரிய பதிவர் பட்டமே கொடுக்கலாம்.
வாழ்க வளமுடன்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வெ.இராதாகிருஷ்ணன்

நன்றி @@ தமிழ் வெங்கட்

நன்றி @@ அரசூரான்

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ நசரேயன்

நன்றி @@ வி.என்.தங்கமணி

Paleo God said...

நல்லா சொன்னீர்கள் கதிர்..:) பொறுப்புணர்வும், அன்பும் எல்லா இடங்களிலும் காக்கும்.

வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

கதிர் மிக அருமை நல்லா சொல்லி இருக்கீங்க

ராமலக்ஷ்மி said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கதிர். வாழ்த்துக்கள்!