மீண்டு வா பிரபா – கண்ணீர் அஞ்சலி


வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக, துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன.

நேற்று காலை இனிய நண்பன் வாழ்க்கை வாழ்வதற்கே பிரபாகரோடு வெப் கேம் வழியே சிரிக்கச் சிரிக்க பேசிக்கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வானம்பாடி பாலண்ணா கேட்டார் பிரபா பேசினாரா, தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லையாம், மூளை ரத்தக் கசிவாம், இப்பவே கிளம்பி வர்றாராம்மனசு திக்கென்றது. சற்று முன் சிரிக்கச் சிரிக்கப் பேசிய பிரபா, உடனே சிங்கப்பூரில் கிளம்பி வருவதாகச் சொல்வது, ஏதோ மிகப் பெரிய விபரீதத்தை சொன்னது.

அதேசமயம் ஆத்தூரில் இருக்கும் எனது மாமாவை அழைத்து, பிரபா தம்பிக்கு உடம்பு சரியில்லையாம், எப்படி இருக்கார்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து பாலாண்ணாவோடு நள்ளிரவு வரை தொடர்பிலிருந்தேன். விமானத்தை விட்டு இறங்கி ஆட்டோ மூலம் சென்ட்ரலுக்கு வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார், சற்று நேரம் கழித்து மிக அவசரமாக வரச்சொல்றாங்களாம், அதனால அசோக் நகர்ல இறங்கி சேலம் பஸ் பிடிக்க முயற்சி செய்றாராம்என்றார். குடும்பத்தினர் அவசரமாக வரச்சொல்கிறார்கள் எனக் கேட்டபோது விபரீதம் கனக்கத் தொடங்கியது.

காலை எழுந்து பாலாண்ணாவிற்கு போன் அடிக்க, “பிரபா பஸ் எதுவும் கிடைக்காம, டேக்ஸி பிடிச்சு சென்னையிலிருந்து சேலம் வந்துட்டார், மருத்துவமனையில் காப்பாற்ற முடியாதுனு சொல்லிட்டாங்களாம்னச்சொல்ல, பிரபாவின் எண்ணைப் பெற்று தொடர்பு கொள்ள மறுமுனையில் பிரபாகர் கதறியழ,  ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்று வெறுமையாய் கிடந்தேன்.

பிரபாவின் பெரும்பாலா இடுகைகளில் அவருடை தம்பி நிறைந்திருப்பதை கவனித்திருக்கிறேன். பிரபாவோடு எப்போதும் பேசினாலும், ஊர் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் தம்பி திவாகர் என்பது கட்டாயம் வரும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற நம்பிக்கை பிரபாகரின் மனதில் நிரம்பியிருப்பதை பேசும் ஒவ்வொரு முறையும் இனம் கண்டிருக்கிறேன். பிரபாகரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் சில சிரமங்களுக்கு, தம்பி திவாகர் தனக்கு பெரிதும் துணையாக, ஆறுதலாக இருந்து வருவதையும் அறிந்திருக்கிறேன்.

திவாகர்

கடந்த வாரம் ஊருக்கு வந்துவிட்டு பத்து நாட்கள் குடும்பத்தோடு இருந்து சென்ற பிரபாகருக்கு இந்த இழப்பு மிகக் கொடியது என்பதை முழுதாக உணரமுடிகிறது.
பிரபாகரின் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஈரத்தை, கலங்கித் தவிக்கும் மனதை, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் வேதனையை, திவாகரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் வேதனையை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றட்டும்.

மனம் முழுதும் வேதனையோடு, அமரர். திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், பிரபாகரின் மனது இழப்பிலிருந்து மீண்டு வரவும், மனது முழுதும் தேங்கி நிற்கும் கண்ணீரோடு எனது வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் சமர்பிக்கிறேன்.

பிரபா.... நீ மீண்டு... வா.... நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளுக்காகவேணும்...

வாழ்க்கை வாழ்வதற்கே

_________________________________________________________
56 comments:

ராமலக்ஷ்மி said...

வருத்தங்கள். அமரர் திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் இத்துயரில் இருந்து மீண்டு வரவும் என் பிரார்த்தனைகள்.

vasu balaji said...

ம்ம்

AkashSankar said...

சில சமயம் ஏன் இப்படிலாம் நடக்குதுன்னு தோணும்...கடினமான நிமிடங்கள்...ஆறுதல்களும் கசக்கும்...அவர் குடும்பம் இந்த துயரத்தில் இருந்து சீக்கிரம் மீண்டு வர ஆண்டவனை பிரதிக்கிறேன்...

பத்மா said...

very sorry .manam kanakkirathu .

பழமைபேசி said...

அன்பர் பிரபாவுக்கு அமைதியும், உறுதியும் கிட்டிட இறைவனை இறைஞ்சி, அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்.

Joseph said...

ஆழ்ந்த அனுதாபங்கள். பிரபாகர் - உங்களோடு நாங்கள் இருக்கிறோம். மீண்டு வாருங்கள்.

dheva said...

ஆழ்ந்த அனுதாபங்களோடு.....துக்கத்தை பிரபாகரோடு பகிர்ந்து கொள்கிறேன்!

க ரா said...

ஆழ்ந்த அனுதாபங்கள் பிராபகர் அண்ணா.

நட்புடன் ஜமால் said...

பிரபாகரனும் அவரது குடும்பத்தாரும் சாந்தி பெற வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பு பிரபாகர்!

ஆழ்ந்த வருத்ததைத் தெரிவிக்கிறோம்!துயத்தில் பங்கெடுக்கிறோம்!

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

ஆழ்ந்த அனுதாபங்கள் - துயரத்தில் இருந்து விரைவினில் மீண்டு வர இறைவன் துணை இருக்க பிரார்த்தனைகள். திவாகரின் ஆன்மா சாந்திய்டையவும் பிரார்த்தனைகள்

ரோஸ்விக் said...

அருகில் இருந்து அவர் கதறி அழுவதை தாங்கவும் முடியாமல், அவர் சோகத்தின் சுமையையும் தாங்க முடியாமல் என் மனதும் பேதலிக்கிறது. :-(

தொலைபேசியில் அவரை அழைக்கக்கூட மனம் ஒப்பவில்லை...

தைரியமாக இருங்கள் அண்ணா... பெற்றோருக்கும், தம்பியின் குடும்பத்தாருக்கும் நீங்கள் ஆறுதல் சொல்லுங்கள்.

மீண்டு வாருங்கள் அண்ணா.

ஆழ்ந்த இரங்கல்கள். :-(

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன சோதனை இது... ஓ.. பிரபா மனதை தளரவிடாதீங்க.. எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கு மனஅமைதியையும், உங்க தம்பிக்கு ஒரு நல்ல நிலையையும் தந்தருள்வானாக என்று அனைவரும் பிராத்திப்போமாக...

Kumky said...

ஆழ்ந்த இரங்கல்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

திவாகரின் குடும்பத்துக்கு மனநிம்மதியையும் நல்ல நிலையையும் எல்லாம்வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.. ஆமீன்.

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்

நேசமித்ரன் said...

அஞ்சலிகள்

அகல்விளக்கு said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

திவாகர் அவர்களின் ஆத்மா அமைதியடையட்டும்.

அவரை இழந்து துயரத்திலிருக்கும் குடும்பத்தாருக்கும், அன்பு பிரபாகர் அவர்களுக்கும் மனஉறுதி கிடைக்கட்டும்...

Prathap Kumar S. said...

திவாகருக்கு கண்ணிர் அஞ்சலிகள்

vasan said...

ஆழ்ந்த அனுதாபங்கள் பிராபகர்

ஆ.ஞானசேகரன் said...

ஆழ்ந்த வருத்தங்கள்... பிரபா மீண்டு வர வேண்டுகின்றேன்..

சத்ரியன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள். உறவாக நாங்கள் இருக்கிறோம் பிரபா.

நிகழ்காலத்தில்... said...

மனதில் வலி இருக்கத்தான் செய்யும்,
நடந்ததை ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபா..

மீண்டு அடுத்ததைப் பார்ப்போம், இப்போதைக்கு அதுதான் வழி..

புலவன் புலிகேசி said...

அனுதாபங்கள் அண்ணா.........

ஜெயந்தி said...

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சீமான்கனி said...

//மனம் முழுதும் வேதனையோடு, அமரர். திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், பிரபாகரின் மனது இழப்பிலிருந்து மீண்டு வரவும், மனது முழுதும் தேங்கி நிற்கும் கண்ணீரோடு எனது வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் சமர்பிக்கிறேன்.//

செந்தில் நாதன் Senthil Nathan said...

அஞ்சலிகள்.. :-(

பனித்துளி சங்கர் said...

இதை அறிந்த எனக்கு கண்களில் கண்ணீரைத் தவிர வார்த்தைகள் எதுவும் இல்லை நண்பரே . ஆழ்ந்த அனுதாபங்கள் .

VR said...

என்னத்த சொல்ல கதிர்? கடவுளுக்கு மனித தன்மை இல்லை போல இருக்கு.

butterfly Surya said...

அன்பின் பிரபா,

வார்த்தைகள் வற்றி போய் கிடக்கிறது. உமா & குழந்தைகளுக்காக கதிர் சொல்வது போல் நீ மீண்டு... வா...

கனத்த இதயத்தோடு..

ஹேமா said...

நம்பமுடியாமல் மனம் ...ஐயோ...!

பிரேமா மகள் said...

ஆழ்ந்த வருத்தங்கள்..

Anonymous said...

பிரபாகருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் துயரத்தில் இருந்து மீள துணையிருக்கட்டும்.

தாராபுரத்தான் said...

வருந்துகிறேன்...அஞ்சலி.

அன்புடன் நான் said...

மீண்டு வா பிரபா.

தம்பிக்கு எனது அஞ்சலி.

காமராஜ் said...

இழந்த அன்பை அன்பால் மட்டுமே சரிசெய்யலாம்.

கதிரின் இடுகை படித்த பின்னால் ஒவ்வொரு இடுகையும் நிழலாடுகிறது.

அதில் திவாகரின் முகம் தெளிவாகத்தெரிகிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

priyamudanprabu said...

ithu periya ilappu
varthaikalil solla mudiyaathu
மனம் முழுதும் வேதனையோடு, அமரர். திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், பிரபாகரின் மனது இழப்பிலிருந்து மீண்டு வரவும், மனது முழுதும் தேங்கி நிற்கும் கண்ணீரோடு எனது வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் சமர்பிக்கிறேன்.

*இயற்கை ராஜி* said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்காகவேணும் விரைவில் மீண்டு வாருங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பிரபாகர்,

உங்களுடன் சாட் செய்யும் பொழுதெல்லாம் உங்கள் சகோதரரைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

அவரது குடும்பத்திற்கும், உங்களுக்கும் மன உறுதியைப் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

Paleo God said...

சொல்வது எளிதாய் இருந்தாலும் மீண்டு வரத்தான் வேண்டும். அவருக்காகவும் மற்றவர்களுக்காகவும்!!

Cable சங்கர் said...

அதிர்ச்சியாக இருக்கிறது பிரபா.. எனக்கு தெரியும் உங்களுக்கும் தம்பிக்குமான நெருக்கம்.. மீண்டு வா.. நண்பனே.. கடவுள் துணையிருப்பாராக..

Cable சங்கர் said...

அதிர்ச்சியாக இருக்கிறது பிரபா.. எனக்கு தெரியும் உங்களுக்கும் தம்பிக்குமான நெருக்கம்.. மீண்டு வா.. நண்பனே.. கடவுள் துணையிருப்பாராக..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:(((

KARTHIK said...

ஆழ்ந்த வருத்தங்கள் :-((((

ஆரூரன் விசுவநாதன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்,,,,,

கிரி said...

ஆழ்ந்த அனுதாபங்கள் :-(

க.பாலாசி said...

இன்று காலைதான் இந்நிகழ்வை கேள்விப்படுகிறேன்.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. படிக்கும்பொழுதே கண் கலங்குகிறது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய மனதார பிரார்த்தனை செய்கிறேன். பிரபாகர் அண்ணனை எப்படி ஆறுதல்படுத்துவதென்பது தெரியவில்லை.

குடந்தை அன்புமணி said...

தம்பியை இழந்துவாடும் பிரபாவுக்கு... இழப்பு பெரிதுதான்...கடமைகள், உறவுகளுக்காக நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியிருக்கிறது... மீண்டு வாருங்கள்... தம்பிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்...

மணிஜி said...

என் ஆழ்ந்த இரங்கல்கள் பிரபா..நாங்கள் இருக்கிறோம்.

கலகலப்ரியா said...

எப்டி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல..

VELU.G said...

ஆழ்ந்த வருத்தங்கள்

பிரபாகர் இத்துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்

ராஜ நடராஜன் said...

மௌன அஞ்சலிகள்.

வால்பையன் said...

துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

அன்பரசன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thamira said...

பிரபாகருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இன்னொரு ஸோலாக ஒரு தம்பியை வைத்திருக்கும் எனக்கு இதன் வேதனை அப்பட்டமாக புரிகிறது. உள்ளூர நடுக்கத்தையும் உணர்கிறேன்.

goma said...

இனிக்க இனிக்கப் பேசியவன் இனி இல்லை என்றால்......சோகம் சொல்ல முடியாது..
அமரர் திவாகர் ஆத்மா ஜோதியில் கலந்து விட்டது.
அமைதி பெற பிரார்த்திப்போம்

goma said...

உலகம் பெருமை கொள்வதைப் பாருங்கள்
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை படைத்தது இந்த உலகம்

வேதனையான ஈரடி.