பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி சற்றே நகர்ந்து போ, பிடிக்காததிலிருந்து விடுபடவும், பிடித்தது பிடிக்காதபோது எதிர்கொள்ளவும் உதவும்
-
கசாப் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது # ஏவி விட்ட அமைப்பை, நாட்டை ஒன்னும் புடுங்க முடியலை, இவன் உயிரைப் புடுங்கி என்ன செய்யப்போறோம்
-
ஓணம் வாழ்த்துச் சொல்ற ஒரு பயலும், சேட்டன்களுக்கு சொல்ற மாதிரி தெரியல, பெண் குட்டிகளுக்கு மட்டுமே சொல்ற மாதிரி இருக்கு!
-
பசியோட இருந்தவனுக்கு இலையில தண்ணி தெளிச்ச மாதிரி போனாப்போகுதுனு ஒரு தூறல் மழை
-
ஏரி குளங்களுக்குச் சமாதி கட்டிய ஊரில் ஏன் பெய்யனுமெனக் கண்ணாமூச்சி காட்டுது மழை! :(
-
நாடாளுமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் - ஜெ
# வீட்டிற்கு எந்த நேரமும் கரண்ட் போகலாம் - பொதுமக்கள்
-
தீட்டப்படும் கனவில் கூடுதல் வர்ணங்கள் ஒளிரட்டும்!
-
’எதை’யோ அடைவதற்கான ஓட்டத்தில் ’எதையெதை’யோ இழக்கின்றோம்!
சாமானியனை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதிகள் “புதுப் பணக்காரர்கள்”
-
“நேர்மை முக்கியம், யாரையும் ஏமாற்றக்கூடாது, பொய் கூடாது, உண்மைதான் பேசனும்” குழந்தைகளிடம் பெரும்பாலும் சொல்லும் பொய்!
-
நீ பல நேரங்களில் உன்னோடுதான் போரிடுகிறாய்,
அங்கே வெல்வது நீ எனும் போதே தோற்றும் போகிறாய்!
-
இயற்கையாய் வந்த உடல் மேல் துணியைப் போர்த்திக்கொண்டு அந்தரங்கம் என அலறுகிறோம்.
-
இனிமே ’மழை’யும் அரசு வழங்கும் ”விலையில்லாப் பொருட்கள்” மாதிரிதான் போல, எப்பவாச்சும் வரலாம், வரமாலும் போகலாம்! :((((
-
என் தவறுகளை ஒரு கட்டத்தில் நீங்கள் மறந்துபோகலாம்.
ஒருபோதும் என்னால் மற(று)க்கமுடியாது, காரணம் அது "நான்" அறிந்தே செய்ததாக இருக்கலாம்!
-
”நீ செத்துட்டியாமே”னு யாராச்சும் வதந்தி கிளப்பினாலும்
’அய்யய்யோ அப்படியா’னு நம்புவாங்களோ!
# வதந்திகள் வாரம்
-
”இஞ்சி தின்ன கொரங்கு”எப்படியிருக்கும்னு பார்க்கனும்னா ஈமூ / நாட்டுக் கோழியில பணம் போட்ட ஆளுகளைப் பாருங்க!
-
விரும்பத்தகாத பாடங்களை, விரும்பத்தகாத சூழல்களில், விரும்பத்தகாத யாரோ, விரும்பத்தகாத வகையில் கற்றுக்கொடுக்கிறார்கள்!
-
24 மணி நேரம் இருந்தும் ”சிறப்பு தரிசன” நுழைவைக் கூட தடுக்க முடியாத கடவுளிடம், 2 நிமிடம் கும்புட்டு தன் கவலைகளை போக்கச் சொல்பவனே பக்தன்!
-
குருவிகளை அழிக்கத் தெரிந்த அறிவியலுக்கு ஒரு கூடு அமைக்கும் அறிவு கிடையாது!
-
கடந்த காலம் தந்த நம்பிக்கையைவிட எதிர்காலம் குறித்த நம்பிக்கைதான் இன்னும் நம்மை இயக்குகிறது!
-
இரைச்சல்கள் ஏன் இசையாக உணரப்படுவதில்லை!
-
”உண்மை மட்டுமே பேசுவேன்” எனும் பொய்யைவிட ”பொய்யும் சொல்வேன்” எனும் உண்மை பிடிக்கின்றது!
-
”பாய்” ஃப்ரெண்டின் அருமை இன்னிக்குத்தான் தெரியுது! # ப்ரியாணி :))) ஈகைத் திருநாள்
-
ஊழல் இன்னும் புகாத துறை “செத்தபின் செல்லும் நரகம்”
-
சீயோன் பள்ளி பேருந்து குழந்தை மரணம் Vs பத்ம சேஷாத்ரி பள்ளி சிறுவன் மரணம் = 1.76L கோடி 2ஜி ஊழல் இழப்பு Vs 1.86L கோடி நிலக்கரி ஊழல் இழப்பு
-
ரசிக்கவா, தற்கொலை புரிந்திடவா என்பதை ஒருபோதும் மலைஉச்சி தீர்மானிப்பதில்லை, புறப்படுகையில் இருக்கும் மனோநிலைதான்!
-
கோபத்தின் பசிக்கு 'எதை'த் தீனியாக இடவேண்டும் என்பது புரியாததுதான் பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணம்!
-
இதோ இப்போது கடந்து போகும் நிமிடம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது. அது கொண்டாடிய நிமிடமோ, திண்டாடிய நிமிடமோ!
கலைஞரே உட்கார்ந்து நேரிடையாக கலைஞரின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் தட்டச்சு செய்வார் என நினைப்பதுதான் இணைய விழிப்புணர்வின் உச்சம்! :)
-
ஒவ்வொரு முறையும் புத்தகத்திருவிழாவில் புத்தகம் வாங்கும் முன் 1 வாரத்துக்கும்,
வாங்கிய பின் 1 வாரத்துக்கும் ப(ந)டிக்கிறதே வேலையாப் போச்சு.
-
”இயந்திரத்தனமான போக்கிலிருந்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை வாசிப்பிற்காக பதியனிடவேண்டும். வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக் கொள்ளமுடியும்.”
.... இப்படி எழுதி 1 வருசத்துக்கும் மேலே ஆகுது, ஆனாலும் அடுக்கி வெச்ச புத்தகம் அப்படியேதான் இருக்குது. இதைத்தான் ”அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”னு அப்பவே திருவள்ளுவத் தாத்தா சொல்லிட்டுப் போய்ட்டாரே...!
இன்னும் எத்தனை திருவள்ளுவர் வந்தாலும் உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா #என்னச் சொன்னேன்!
.... இப்படி எழுதி 1 வருசத்துக்கும் மேலே ஆகுது, ஆனாலும் அடுக்கி வெச்ச புத்தகம் அப்படியேதான் இருக்குது. இதைத்தான் ”அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”னு அப்பவே திருவள்ளுவத் தாத்தா சொல்லிட்டுப் போய்ட்டாரே...!
இன்னும் எத்தனை திருவள்ளுவர் வந்தாலும் உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா #என்னச் சொன்னேன்!
-
சில பதிப்பகத்துக்காரங்க மக்கள் தப்பித்தவறிக்கூட புத்தகம் வாங்கிடக்கூடாதுனே ’விலை’ போட்டிருக்காங்க போல. #புத்தகத் திருவிழா :(
-
தெரிந்த பதிலுக்கான கேள்விகளையே தயாரிக்கின்றோம் பல நேரங்களில்!
-
வாரவாரம் சினிமா, ஹோட்டல் என சிலஆயிரங்களைச் செலவிடுவோர்கூட குடும்பத்திற்காக புத்தகத்திருவிழாவில் சில நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்குவதில்லை
-
நம்மீது தவறு இல்லை என்பதே விடுதலையளிக்கிறது பலநேரங்களில்!
-
எல்லோருக்கும் தேவை அன்புதான் என்பது எவருக்கும் புரியாமல் இல்லை!
-
முகப்பு விளக்குகளில் கருப்புப் பொட்டு ஒட்டுறதுதான்,
இந்தியாவின் மிகப் பெரிய ”சாலைப் பாதுகாப்புத் திட்டம்” #’வல்லரசு’ இந்தியா
-
கேமரா கையிலேயே இருந்தாலும், சில கணங்களை, காட்சிகளை, நிகழ்வுகளை மனம் சேமித்துக் கொள்வதே பிடித்தமானதாக இருக்கின்றது.
-
தவறுகளுக்கு மட்டும் தவறாமல் சரியான 'நியாயம்' தேடுகிறோம்!
-
எந்த வகைக் கவிதை எழுதினாலும் பேசாம இருந்துட்டு, காதல் கவிதை எழுதினால் மட்டும் அனுபவமானு கேக்குற ஆராய்ச்சியாளர்கள் வாழ்க! வளர்க!! :)
-
இன்றும் தூரலோடு ஏமாற்றிப் போய்விட்டது, என்றைக்கு வரும் இதயத்தையும் குளிரச்செய்யும் பெருமழையொன்று!
-
சென்னையிலிருந்துகொண்டு கடலில் கால் நனைக்காதவர்களையும், ஈரோட்டிலிருந்துகொண்டு காவிரியில் கால் வைக்காதவர்களையும் ஒருங்கேகொண்டதுதான் உலகம்
-
பொறந்த வீட்டுச்சொந்தம் வர்றன்னிக்கு மட்டும் வித்தியாசமாக சமைக்கிற பெண்கள் இருக்கும் வரை இந்தியா வல்லரசு ஆகவே ஆகாது # உங்க மேல சத்தியம்! :)
-
வட்டத்தின் கோடுகளில் இருக்கும் அடுத்தடுத்த புள்ளிகள் நேர்கோடுதான்.
-
கருவிகளற்ற ரீங்கார இசையமைப்பாளன் ‘கொசு’ #முடியல!
-
இலக்கிய அரசியல் ஏன் ஒரு புற்றுநோய்போல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது? அவதூறுகளோடு சண்டை போடுறவங்கெல்லாம் 200 வருசம் இருந்திடுவாங்களோ:(
-
ஆடி-18க்கு வாழ்த்தாம ரஷ்சாபந்தனுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்றவங்களை புடிச்சு காவிரியில அழுத்தலாம்னு பார்த்தா காவிரியே வறண்டு கெடக்குது! :)
-
நாம் இப்போ வாழ்ந்து கிழிச்சிக்கிட்டிருப்பதற்குப் பெயர் ”வாழ்க்கை”யா?
-
கோவில்களில் பெண்கள் ஆடும் சாமியாட்டம் அல்லது பேயாட்டத்தைப் பார்க்கும்போது, அது ஒரு ’வெடித்துக் கிளம்பும்’ வெளிப்பாடாகவே தோன்றுகிறது
-
பட்டாசுக் கட்டில் பற்றிய தீயாகவும் ’கோபம்’
-
3 comments:
/இரைச்சல்கள் ஏன் இசையாக உணரப்படுவதில்லை/
நுட்பமான சிந்தனை
-அதியன் கௌரி
நல்ல பதிவு
- ருத்ரன்
www.manavaasam.com
எங்கயோ போய்டீங்க சார்
Post a Comment