பதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - ஈரோடு

ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில சமயம் பேச்சிலும், மின் உரையாடலிலும் மட்டுமே சந்திக்க முடிகிறது

இதோ...
ஒரு வாய்ப்பு கைகூடி வருகிறது... ஒருவருக்கொருவர் கரம் குலுக்கி, விழிகளை உற்று நோக்கி, “அட நீங்களா அவரு” என ஆச்சரியங்களைச் சுமக்க...

நீண்ட நாளாய் மனதில் மிதந்த கனவு. பல தளங்களில் மிக அற்புதமாக தங்கள் எண்ணங்களைப் படைத்து வரும் படைப்பாளிகளைச் சந்தித்து உரையாட...

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்ற எண்ணத்தை போன பகிர்தலில் வெளிப்படுத்தியதையொட்டி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் பதிவர்கள் தங்கள் விடுமுறையை இதற்கு ஏற்ப மாற்றியமைத்து கலந்து கொள்வதாக மின் உரையாடலில் கூறியது பெருமகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

சந்திப்பு நடைபெறும் இடம் :

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)

லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

பெருந்துறை சாலை,ஈரோடு - 11

தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே எங்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540

ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

இந்த சங்கமத்தில்
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு


அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்


எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
சங்கமம் குறித்த வால்பையனின் இடுகை
சங்கமம் குறித்த ஆரூரனின் இடுகை
சங்கமம் குறித்த பாலாஜி இடுகை
சங்கமம் குறித்த அகல்விளக்கு இடுகை
சங்கமம் குறித்த வசந்த்குமார் இடுகை
சங்கமம் குறித்த தங்கமணி இடுகை

என்னுடைய மின்னஞ்சல் முகவரி: kathir7@gmail.com

_______________________________________________________

50 comments:

செ.சரவணக்குமார் said...

மிகச்சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள் தல.

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் கதிர்..

jothi said...

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

சங்கமம் வெற்றி பெற நல்வாழ்த்துகள்

பிரபாகர் said...

பதிவரை
படித்து பதிப்போரை
பண்போடும்
பாசத்தோடும்

அழைத்து
அசத்தும்
அன்பு கதிர்
அசத்துவீர்....

வர இயலா நாங்கள்
வாட்டம் தீர
வாசிக்க உம்
வார்த்தை ஜாலம் கொண்டு

ஆர்ப்பரித்த
அடுத்தநாள்
அழகிய தொகுப்பாய்
அளித்திடுவீர்.... எம்மை களிப்பில் ஆழ்த்திடுவீர்!

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

கலக்கிடுவோம் கதிர்

பழமைபேசி said...

சங்கமம் ஆர்ப்பரிக்க வாழ்த்துகள்!


"வானொலி நிலையத்தில் சரோஜ் நாராயணசாமி ஒரு செய்தி வாசிப்பாளர்!
தொலைக்காட்சி நிலையத்தில் சோபனா இரவி ஒரு செய்தி வாசிப்பாளர்!

இப்படியாக, தற்போது பதிவர்கள் இடும் இடுகைகளை வாசித்து மின்னலைகளைகளில் தவழவிடுகிறார்களா? அவர்களில் யாரெல்லாம் பிரபலம்??"

"எதுக்கு இந்த வியாக்கியானம்.... சொல்ல வந்ததை நேர்ல சொல்லுமைய்யா!"


"ஓ அப்பிடி வர்றீரா நீரு? அப்ப வாசகர்கள்னு தலைப்பை மாத்தும் ஓய்!"

மணிஜி said...

/* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு//


அவ்வளவுதானா?

மணிஜி said...

நாங்க சர்ப்ரைசா வந்தாலும் வருவோம்

மணிஜி said...

/ பிரபாகர் said...
பதிவரை
படித்து பதிப்போரை
பண்போடும்
பாசத்தோடும்

அழைத்து
அசத்தும்
அன்பு கதிர்
அசத்துவீர்....

வர இயலா நாங்கள்
வாட்டம் தீர
வாசிக்க உம்
வார்த்தை ஜாலம் கொண்டு

ஆர்ப்பரித்த
அடுத்தநாள்
அழகிய தொகுப்பாய்
அளித்திடுவீர்.... எம்மை களிப்பில் ஆழ்த்திடுவீர்!

பிரபாகர்//

பிரபா.. ஊர்லதான் இருக்கியா?

Jerry Eshananda said...

வந்திருவோம்ல..

butterfly Surya said...

அண்ணன் தண்டோரோ சொன்னதை வழி மொழிகிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

கதிரண்ணே பதிவர் சந்திப்பு சிறப்பாக நடை பெற என் வாழ்த்துக்கள்...

பழமைபேசி said...

//மின்னலைகளைகளில் //

உணர்ச்சி வயப்பட்டதுல பிழையாப் போச்சே? சரி, வானலைகளில்னு மாத்திப் படிச்சுகுங்க.... அய்ய், தலைப்பு மாறிடுச்சி....இஃகிஃகி!

க.பாலாசி said...

சங்கமிப்போம்...

vasu balaji said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கதிர். வர முயல்கிறேன். நல்ல முயற்சி.

வால்பையன் said...

அனைவருக்கும் போண்டா டீ உண்டு!

(சரியா படிங்க மக்களே)

Kumky said...

சிறப்பாக நடை பெற வாழ்த்துகிறேன் கதிர்..

சந்திப்புக்கு முன் உற்சாக பானத்திற்கு தடை விதித்தால் மொத்த முத்த ஆபத்துக்களிலும் தப்பிக்கும் வாய்ப்புண்டு...கவனிக்க.

Rekha raghavan said...

நல்ல முயற்சி. கலந்துகொள்ள முயற்ச்சிக்கிறேன்.

ரேகா ராகவன்.

THANGAMANI said...

மிகச்சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள்.....

பெருசு said...

கதிரு

நாம 26ஆம் தேதிதான் இந்தியா வந்து சேருகிறோம்.

என்ன செய்ய..

ஆனாலும் பிறகு ஒரு கூட்டம் போடுவோமுல்ல

நாடோடி இலக்கியன் said...

நல்ல விஷயம் கதிர்.

பதிவர் சங்கமம் சிறக்க வாழ்த்துகள்.

vasu balaji said...

வால்பையன் said...

/அனைவருக்கும் போண்டா டீ உண்டு!

(சரியா படிங்க மக்களே)/

வாலூஊஊஊஊ=))

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

வணக்கம் ,

நான் தற்சமயம் அமீரகத்தில் உள்ளேன் . என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் . விழா சிறப்பாக அமையா எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

அன்புடன் சங்கர்
shankarp071@gmail.com
http://wwwrasigancom.blogspot.com

அகல்விளக்கு said...

சங்கமிக்க வரும் நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்...

குறும்பன் said...

வாழ்த்துகள்.
இயற்கை எழில் சூழ்ந்த இடத்துல வைக்கனும்னா நான் ஒரு யோசனை சொல்றேன். சென்னிமலை போற வழியில் இருக்குற வடமங்கலம் வெள்ளோடு பறவைகள் காப்பகத்தில் வைக்கலாம். ஈரோட்டிலிருந்து 12 கிமீ தொலைவு தான். ஆனா அங்க காடை, கவுதாரின்னு விருந்து போடமுடியாது.:-))

நேசமித்ரன் said...

சிறப்பான முயற்சி

வாழ்த்துகள் நண்பர்களே

சந்திப்பின் சாரத்துடன் வரும் இடுகைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

நிலாமதி said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக் அமைய வாழ்த்துகள்.

Thamira said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துகள். புத்தாண்டு தினத்தில் நான் ஈரோடில் இருக்கக்கூடும். அந்த முடிவு இருப்பதால் முந்தைய 20ல் கலந்துகொள்ள முடியாத சூழல். அனைவரையும் மிஸ் செய்கிறேன். வாழ்த்துகள். வாய்ப்பிருப்பின் 31 இராவில் சந்திப்போம்.

சீமான்கனி said...

சங்கமம் சக்கைபோடு போட வாழ்த்துகள்...அண்ணே...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள். 19ம் தேதி ஊருக்கு வருகிறேன். கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்

கலகலப்ரியா said...

logo nannaaarkku..!

கலகலப்ரியா said...

பதிவர் கூட்டத் தலைவி அன்னைக்கு வர மாட்டாங்க..! எதுக்கும் ப்ரியான்னு பேரு போட்டு ஒரு நாற்காலி போட்டு வைங்க..! ஒரு பயம் இருக்கணுமில்ல..!

தாராபுரத்தான் said...

தம்பி என்ைனயும் சேத்திக்ங்கோ,,

ஆ.ஞானசேகரன் said...

சங்கமம் சிறக்க வாழ்த்துகள் கதிர்....

Chitra said...

கருத்தரங்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

வருவம்முள்ள..........
வந்தது எல்லாரையும் பாப்பமுள்ள.........

Chellamuthu Kuppusamy said...

முயற்சிக்கு பாராட்டும், நன்றியும். நான் வருவேன். எனது எண் 9941924240

அத்திரி said...

மிகச்சிறப்பான முயற்சி
வாழ்த்துக்கள் கதிர்

singamla366 said...

NALLATHE NADAKUM VAZHDHUKKAL

SUMAZLA/சுமஜ்லா said...

90% நான் வர முயற்சி செய்கிறேன்!

சிவாஜி said...

பதிவர் சந்திப்பு போஸ்டர் நல்லா இருக்குங்க.

//இந்த சங்கமத்தில்
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு//

உண்மையிலேயே நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்! ரொம்ப சந்தோசம்! கண்டிப்பா கலந்துக்குவோம்.

KARTHIK said...

// அவ்வளவுதானா?//

வேறா என்ன வேணும் சொல்லுங்க ஏற்ப்பாடு பண்ணிருவோம் :-))

Rajkumar said...

நல்ல முயற்சி, நானும் ஈரோட்டைச் சேர்ந்தவன், தான் முடிந்தால் நானும் கலந்துகொள்கிறேன்,

நசரேயன் said...

சந்திப்பு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

V.N.Thangamani said...

நன்றி கதிர்.
கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் தள முகவரியை வரிசையாக வெளியிடுங்கள். அப்போதுதான் கலந்து கொள்பவர்களைப் பற்றி கலந்து கொள்பவர்கள் அனைவரும் முன்கூட்டியே கொஞ்சம் தெரிந்து கொண்டால் கூட்டம் இன்னும் கொஞ்சம் சிறப்பு பெரும். இது குறித்து எனது தளத்தில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளேன். கொஞ்சம் பாருங்களேன் . நன்றி வாழ்க வளமுடன்.

இரா. வசந்த குமார். said...

http://kaalapayani.blogspot.com/2009/12/2009.html

எழுதியாச்சு சார்....:)

Kasi Arumugam said...

சந்திப்புக்கு வாழ்த்துகள். நானும் கலந்துகொள்ள முயற்சிப்பேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

மகிழ்ச்சி அன்பரே..

கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்..