கேள்விகள் – கேட்டதும் கேட்கப்படாததும்!


நெத்தியில் நீண்ட ஆரஞ்சுப் பொட்டு, பழுத்த வெள்ளை வேட்டி, மடித்துவிடப்பட்ட சட்டை, பறக்கும் முடி, கழுத்தில் சில மாலைகள், தோளில் ஒரு ரெக்ஸின் பேக்... தெலுங்குத் தமிழ் நடை....

சார் கைரேகை பார்க்கலாமா?”

வழக்கமா அப்பப்ப எட்டிப் பார்க்கிற ஆளுகதான்... லாங் லாங் எகோ.... ஸோ லாங் எகோ...... ஒரு ஆளிடம் நூத்தி சொச்ச ரூபாய்  இழந்த வன்மத்தின் நாக்கு என்னை ஈரமாய் வருடியது.

அதப் பார்த்து என்னய்யா பண்ணப்போறே!?”

உங்க முகத்துல ஒரு வெளிச்சம் தெரியுது சார்

யோவ் போய்யா, கரண்ட் இல்லைனா, இருட்டு ரூம்ல,  லேப்டாப்  ஸ்க்ரீன்  வெளிச்சத்துல அப்படித்தான் தெரியும்!”

அப்போதாவது ஆள் உஷாராயிருக்கனும்ல... பாவிப்பய ஆகலையே!

அதில்ல சார், உங்களுக்கு 45 நாள்ல வெள்ளப் பேப்பர்ல ஒரு நல்ல சேதி வரும் சார்!”

ஹி..ஹி.... வாய்யா... ராசா....  எனக்கு வெள்ளப் பேப்பர்ல நல்ல சேதி வர்றது இருக்கட்டும்.... நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா?”




இல்ல சார் உங்களுக்கு நல்லது நடக்கப்போவுது சொல்லுது சார். கை ரேகை பாருங்க. நிறையப் பேர் பார்த்திருக்காங்க

ஆல்பத்தை எடுத்து நீட்டிட முற்பட்டார்....

நான் கேக்குற சந்தேகத்துக்கு பதில் சொல்லுப்பா, அது ஓகேனா அப்புறம் கைரேகை பார்க்கிறதப் பத்தி யோசிக்கிறேன்

ம்ம்ம்.. என்ன சந்தேகம் சார்

கரண்ட் எப்போ வரும்?”

@!#$!@#$@#%$%^*$%*&$%^ 

என்னவோ முனகிக்கொண்டே ஆல்பத்தை மடக்கி பையில் திணித்துக் கொண்டே ஆள் நகரத் துவங்கியது!

என் நல்ல நேரம், “இதே கேள்விய அரசாங்கத்துக்கிட்ட கேக்க தில் இருக்கா சார்!?” அந்த ஆள் என்னைத் திருப்பிக் கேட்கவில்லை

ஒரு வேளை என் முகத்தில் தெரிந்த வெளிச்சம் எனக்கு(ம்) அந்த தில் இல்லை என காட்டிக்கொடுத்திருக்கலாம்!

-0-
 

6 comments:

Unknown said...

Its a timely nice question

அகல்விளக்கு said...

இது ஒரு நல்ல கேள்வி...!!

Unknown said...

உணமையிலேயே இது ஒரு நல்ல கேள்வி...!!?

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - ஒரு நாள் அலுவலகத்தில் அலுவல் நேரத்தில் வந்து ஒருத்தன் உயிரை எடுத்தான் - என்ன என்னவோ சொன்னான் - மார்க்கெட்டீங்க்ல கில்லாடி - 300 ரூபா பிடுங்கிக்கிட்டுப் போய்ட்டான். வீட்ல வாங்கிக் கட்டிக்கிட்டேன் - ம்ம்ம் என்ன செய்வது ...........நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

ஓலை said...

அண்ணே! இந்த மாதிரியெல்லாம் ஜெயா டிவி யில பேட்டி எடுக்கும் போது கேட்டு வைச்சுராதீக!

shammi's blog said...

expertise question to get the way off from him kathir ....