கீச்சுகள் - 25


பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி சற்றே நகர்ந்து போ, பிடிக்காததிலிருந்து விடுபடவும், பிடித்தது பிடிக்காதபோது எதிர்கொள்ளவும் உதவும்

-

கசாப் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது # ஏவி விட்ட அமைப்பை, நாட்டை ஒன்னும் புடுங்க முடியலை, இவன் உயிரைப் புடுங்கி என்ன செய்யப்போறோம்

-

ஓணம் வாழ்த்துச் சொல்ற ஒரு பயலும், சேட்டன்களுக்கு சொல்ற மாதிரி தெரியல, பெண் குட்டிகளுக்கு மட்டுமே சொல்ற மாதிரி இருக்கு!

-

பசியோட இருந்தவனுக்கு இலையில தண்ணி தெளிச்ச மாதிரி போனாப்போகுதுனு ஒரு தூறல் மழை

-

ஏரி குளங்களுக்குச் சமாதி கட்டிய ஊரில் ஏன் பெய்யனுமெனக் கண்ணாமூச்சி காட்டுது மழை! :(

-

நாடாளுமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் - ஜெ
# வீட்டிற்கு எந்த நேரமும் கரண்ட் போகலாம் - பொதுமக்கள்

-

தீட்டப்படும் கனவில் கூடுதல் வர்ணங்கள் ஒளிரட்டும்!

-

எதையோ அடைவதற்கான ஓட்டத்தில்எதையெதையோ இழக்கின்றோம்!





சாமானியனை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதிகள்புதுப் பணக்காரர்கள்

-

நேர்மை முக்கியம், யாரையும் ஏமாற்றக்கூடாது, பொய் கூடாது, உண்மைதான் பேசனும்குழந்தைகளிடம் பெரும்பாலும் சொல்லும் பொய்!

-

நீ பல நேரங்களில் உன்னோடுதான் போரிடுகிறாய், அங்கே வெல்வது நீ எனும் போதே தோற்றும் போகிறாய்!

-
இயற்கையாய் வந்த உடல் மேல் துணியைப் போர்த்திக்கொண்டு அந்தரங்கம் என அலறுகிறோம்.

-

இனிமேமழையும் அரசு வழங்கும்விலையில்லாப் பொருட்கள்மாதிரிதான் போல, எப்பவாச்சும் வரலாம், வரமாலும் போகலாம்! :((((

-

என் தவறுகளை ஒரு கட்டத்தில் நீங்கள் மறந்துபோகலாம். ஒருபோதும் என்னால் மற(று)க்கமுடியாது, காரணம் அது "நான்" அறிந்தே செய்ததாக இருக்கலாம்!

-

நீ செத்துட்டியாமேனு யாராச்சும் வதந்தி கிளப்பினாலும்அய்யய்யோ அப்படியானு நம்புவாங்களோ!
# வதந்திகள் வாரம்

-

இஞ்சி தின்ன கொரங்குஎப்படியிருக்கும்னு பார்க்கனும்னா ஈமூ / நாட்டுக் கோழியில பணம் போட்ட ஆளுகளைப் பாருங்க!

-

விரும்பத்தகாத பாடங்களை, விரும்பத்தகாத சூழல்களில், விரும்பத்தகாத யாரோ, விரும்பத்தகாத வகையில் கற்றுக்கொடுக்கிறார்கள்!

-

24 மணி நேரம் இருந்தும்சிறப்பு தரிசனநுழைவைக் கூட தடுக்க முடியாத கடவுளிடம், 2 நிமிடம் கும்புட்டு தன் கவலைகளை போக்கச் சொல்பவனே பக்தன்!

-

குருவிகளை அழிக்கத் தெரிந்த அறிவியலுக்கு ஒரு கூடு அமைக்கும் அறிவு கிடையாது

-

கடந்த காலம் தந்த நம்பிக்கையைவிட எதிர்காலம் குறித்த நம்பிக்கைதான் இன்னும் நம்மை இயக்குகிறது!

-

இரைச்சல்கள் ஏன் இசையாக உணரப்படுவதில்லை!

-

உண்மை மட்டுமே பேசுவேன்எனும் பொய்யைவிடபொய்யும் சொல்வேன்எனும் உண்மை பிடிக்கின்றது!

-

பாய்ஃப்ரெண்டின் அருமை இன்னிக்குத்தான் தெரியுது! # ப்ரியாணி :))) ஈகைத் திருநாள்

-

ஊழல் இன்னும் புகாத துறைசெத்தபின் செல்லும் நரகம்

-

சீயோன் பள்ளி பேருந்து குழந்தை மரணம் Vs பத்ம சேஷாத்ரி பள்ளி சிறுவன் மரணம் = 1.76L கோடி 2ஜி ஊழல் இழப்பு Vs 1.86L கோடி நிலக்கரி ஊழல் இழப்பு

-

ரசிக்கவா, தற்கொலை புரிந்திடவா என்பதை ஒருபோதும் மலைஉச்சி தீர்மானிப்பதில்லை, புறப்படுகையில் இருக்கும் மனோநிலைதான்!

-

கோபத்தின் பசிக்கு 'எதை'த் தீனியாக இடவேண்டும் என்பது புரியாததுதான் பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணம்

-

இதோ இப்போது கடந்து போகும் நிமிடம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது. அது கொண்டாடிய நிமிடமோ, திண்டாடிய நிமிடமோ






கலைஞரே உட்கார்ந்து நேரிடையாக கலைஞரின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் தட்டச்சு செய்வார் என நினைப்பதுதான் இணைய விழிப்புணர்வின் உச்சம்! :)

-

ஒவ்வொரு முறையும் புத்தகத்திருவிழாவில் புத்தகம் வாங்கும் முன் 1 வாரத்துக்கும், வாங்கிய பின் 1 வாரத்துக்கும் ()டிக்கிறதே வேலையாப் போச்சு.

-

இயந்திரத்தனமான போக்கிலிருந்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை வாசிப்பிற்காக பதியனிடவேண்டும். வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக் கொள்ளமுடியும்.”

.... இப்படி எழுதி 1 வருசத்துக்கும் மேலே ஆகுது, ஆனாலும் அடுக்கி வெச்ச புத்தகம் அப்படியேதான் இருக்குது. இதைத்தான்அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்னு அப்பவே திருவள்ளுவத் தாத்தா சொல்லிட்டுப் போய்ட்டாரே...!


இன்னும் எத்தனை திருவள்ளுவர் வந்தாலும் உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா #என்னச் சொன்னேன்!

-

சில பதிப்பகத்துக்காரங்க மக்கள் தப்பித்தவறிக்கூட புத்தகம் வாங்கிடக்கூடாதுனேவிலைபோட்டிருக்காங்க போல. #புத்தகத் திருவிழா :(

-

தெரிந்த பதிலுக்கான கேள்விகளையே தயாரிக்கின்றோம் பல நேரங்களில்!

-

வாரவாரம் சினிமா, ஹோட்டல் என சிலஆயிரங்களைச் செலவிடுவோர்கூட குடும்பத்திற்காக புத்தகத்திருவிழாவில் சில நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்குவதில்லை

-

நம்மீது தவறு இல்லை என்பதே விடுதலையளிக்கிறது பலநேரங்களில்!

-

எல்லோருக்கும் தேவை அன்புதான் என்பது எவருக்கும் புரியாமல் இல்லை!

-

முகப்பு விளக்குகளில் கருப்புப் பொட்டு ஒட்டுறதுதான், இந்தியாவின் மிகப் பெரியசாலைப் பாதுகாப்புத் திட்டம்” #’வல்லரசுஇந்தியா

-

கேமரா கையிலேயே இருந்தாலும், சில கணங்களை, காட்சிகளை, நிகழ்வுகளை மனம் சேமித்துக் கொள்வதே பிடித்தமானதாக இருக்கின்றது.

-

தவறுகளுக்கு மட்டும் தவறாமல் சரியான 'நியாயம்' தேடுகிறோம்!

-

எந்த வகைக் கவிதை எழுதினாலும் பேசாம இருந்துட்டு, காதல் கவிதை எழுதினால் மட்டும் அனுபவமானு கேக்குற ஆராய்ச்சியாளர்கள் வாழ்க! வளர்க!! :)

-

இன்றும் தூரலோடு ஏமாற்றிப் போய்விட்டது, என்றைக்கு வரும் இதயத்தையும் குளிரச்செய்யும் பெருமழையொன்று!


-

சென்னையிலிருந்துகொண்டு கடலில் கால் நனைக்காதவர்களையும், ஈரோட்டிலிருந்துகொண்டு காவிரியில் கால் வைக்காதவர்களையும் ஒருங்கேகொண்டதுதான் உலகம்

-

பொறந்த வீட்டுச்சொந்தம் வர்றன்னிக்கு மட்டும் வித்தியாசமாக சமைக்கிற பெண்கள் இருக்கும் வரை இந்தியா வல்லரசு ஆகவே ஆகாது # உங்க மேல சத்தியம்! :)

-

வட்டத்தின் கோடுகளில் இருக்கும் அடுத்தடுத்த புள்ளிகள் நேர்கோடுதான்.

-

கருவிகளற்ற ரீங்கார இசையமைப்பாளன்கொசு’ #முடியல!

-

இலக்கிய அரசியல் ஏன் ஒரு புற்றுநோய்போல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது? அவதூறுகளோடு சண்டை போடுறவங்கெல்லாம் 200 வருசம் இருந்திடுவாங்களோ:(

-

ஆடி-18க்கு வாழ்த்தாம ரஷ்சாபந்தனுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்றவங்களை புடிச்சு காவிரியில அழுத்தலாம்னு பார்த்தா காவிரியே வறண்டு கெடக்குது! :)

-

நாம் இப்போ வாழ்ந்து கிழிச்சிக்கிட்டிருப்பதற்குப் பெயர்வாழ்க்கையா?

-

கோவில்களில் பெண்கள் ஆடும் சாமியாட்டம் அல்லது பேயாட்டத்தைப் பார்க்கும்போது, அது ஒருவெடித்துக் கிளம்பும்வெளிப்பாடாகவே தோன்றுகிறது

-

பட்டாசுக் கட்டில் பற்றிய தீயாகவும்கோபம்

-

3 comments:

அதியா வீரக்குமார் said...

/இரைச்சல்கள் ஏன் இசையாக உணரப்படுவதில்லை/

நுட்பமான சிந்தனை
-அதியன் கௌரி

Unknown said...

நல்ல பதிவு
- ருத்ரன்
www.manavaasam.com

Unknown said...

எங்கயோ போய்டீங்க சார்