கீச்சுகள் - 24


செத்துவிடக் காரணம் தேடுபவனுக்கு, வாழ்ந்துவிடக் காரணமா கிடைக்காது # தேடு.. அம்புட்டுதான்

~

சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம்கடந்து போதல்” :)

~

உண்மைகள் கடினம்தான், மறப்பதில்லை. பொய்கள் எளிதுதான், மறக்காமல் சுமக்க வேண்டியிருக்கிறது.
சட்டம் தன் கடமையைச் செய்யகாவுகேட்கிறது, ஒவ்வொரு முறையும்!

~

ஸ்கூல்ல கொடுக்கிறஹோம்ஒர்க்களைப் பார்த்தால், அது பெற்றோர்களைச் சோதிப்பதற்கானதாகவே தெரிகிறது. இணையம் இல்லாட்டி நானெல்லாம் டக் அவுட்.

~

குடிப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் சுருக்கப்பட்டால், இப்போது குடிப்பவர்களின் எண்ணிக்கையில் குறைந்தது 30~40% குறையுமென நினைக்கின்றேன்

~

மழை பெய்யாத வருடங்களில் மட்டும் வருத்தப்பட பழகியிருக்கின்றோம், அமைக்காதமழை நீர் சேகரிப்புத் தொட்டிகளுக்காக!

~

குற்றங்கள் பழையதுதான்... செயல்படுத்தும் விதம் மட்டும் புதியதாய்! #வளர்ச்சி!

~

நாளை காலையிலிருந்து டாஸ்மாக் தெறக்கலைனா அவங்க நிலமையையும், ட்விட்டர் / ஃபேஸ்புக் இயங்கலைனா நம்ம நிலமையையும் கொஞ்சம் நினைச்சுப்பாருங்க!

~

ஸ்கூல் வேன் ஓட்டுற நம்மூரு ட்ரைவர்களை, நாம ஏன் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பாம இருக்கோம்? # என்னமோ போங்க! :)

~

தேயும் இரவில் உறக்கம் நிரம்புகிறது!

~

சின்ன வயசுல வீட்டுக்குப் போறேன் என்பதை, ”என் பொண்டாட்டி மாமியார் வீட்டுக்குஎனச் சொல்வதில் ஒரு தெனாவெட்டு(!) இருக்கும். இப்ப பொண்டாட்டி / மாமியார் / வீடு என்பதை தனித்தனியாக உச்சரிக்கவே பயபுள்ளை பயப்படுதுக. #மாறிட்டாங்களாம்! :))))

~

நமக்குப் பிறகு பிறந்ததுதானே "பிரச்சினைகள்"

~

தடுமாறித் தவித்து ஒருவர் உங்கள் கையை தேடுகையில், அவருக்குத் தேவை உங்கள் கை மட்டுமே, அதில் உங்களுக்கிருக்கும் தன்னம்பிக்கை, திறன், தகுதி அல்ல!

~

தினந்தோறும் நிகழும் சம்பவங்களில் முறையற்ற உறவுகளில் நிகழும் கொலைகளை மட்டுமே அதீத கவனம் கொடுத்து ஊடகங்கள் வெளிச்சமிடுவதாகத் தோன்றுகிறது

~
அலுப்பை அணிந்திருப்பதைவிட, செயற்கையான உற்சாகத்தைச் சுமப்பதே மேல்!

~

எதிர்காலத்தில் இது போன்று நிகழா வண்ணம்....” காலம்காலமாய் தமிழக முதல்வர்கள் பிரதமருக்கு எழுதும் கடிதங்களில் இருக்கும் ஒருஅதி ரகசியவரி!

~

ஆடிஅதிரடி “1சிம் வாங்கினால் ஒரு 1சிம் இலவசம்” #நல்லவேளை, ஆடிமாசம் கல்யாணத்துக்கு ஆவாதுனு சொன்னதால பலபேரு தப்பிச்சாங்க

~

கடுமையான மின் கட்டண உயர்வின் காரணமாக....” பல நிறுவனங்களில் இப்படிப்பட்ட வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு புதிதாக முளைக்கத் துவங்கியுள்ளன.

~

தன்னிடமிருப்பதைக் கொண்டு தனக்குத் தேவையானதை வடிவமைத்துக் கொள்பவனிடம் புலம்பலை விட படைப்புத்திறன் மிகுந்திருக்கும்

~

வியர்வையில் உப்பு இருக்கும் போது! உப்பில் வியர்வை இருக்குமா!? #சின்னக்கவுண்டர் செந்திலுக்கு சமர்ப்பணம்

~

உன்னை உன்னைவிட யாரும் நல்லா வெச்சுக்கமுடியாது!

~

உனக்கு நீ என்னவோ செய்துகொள், இன்னொருவன் மேல் வஞ்சகமாய், வன்முறையாய் ஒன்றைத் திணிப்பதுதான் சகிக்க முடியாத குற்றம்.

~

முடிதுறப்போருக்கு ஊர்ப்பக்கம் அடிக்கடி சொல்லும் ஊட்டச்சத்து வார்த்தைகள்மனுசனால் ஆகாதது, மசுருனாலையா ஆகப்போவுது

~

அமெரிக்காவின் 61% விளைநிலங்களில் வறட்சி #அய்யோ, மன்மோகன் பாகிஸ்தானுக்கு மின்சாரம் தந்ததுபோல அமெரிக்காவுக்கு தண்ணியை கொடுக்காம இருக்கனுமே

~

சம்பிரதாயங்களுக்கு எனச்செய்பவைகளில் என்ன உயிர்ப்பு இருந்துவிடப்போகிறது?

~

தப்பு பண்ணினாசாமிகண்ணைக் குத்தும் என்பது அந்தக்காலம். தப்பு பண்ணினாசெல்போன்காட்டிக்கொடுக்கும் என்பது இந்தக்காலம்!

நம்மைக் கடிச்சு இரத்தம் உறியும் கொசுவை படீர்னு அடிச்சுத் தேய்ச்சு, அந்த இரத்தத்தை தெனாவெட்டா ரசிச்சாநீயும் என் போன்றே வீரன்தான்!’

~

சில்லறையில்லனு முதல்ல நாலணாக்கு, பிறகு எட்டணாக்கு சாக்லெட் குடுத்தீங்க, இப்ப 1 ரூபாய்க்குமா # டேய் சாக்லெட்ன்ற பேர்லஅல்வாகுடுக்றீங்கடா!

~~

காவிரியில் இக்கரை முதல் அக்கரை வரை நீண்டிருக்கிறது பச்சை வேதாளம் #ஆகாயத்தாமரை!

~

வெளிநாட்டுக்காரன் நம் ஆறுகளில் போட்ட ஆகாயத் தாமரையையே நம்மால புடுங்கமுடியல! இதுல அவனுங்க கட்டுற அணு உலைகளில் என்ன புடுங்கப்போறோமோ தெரியல!


~

குழந்தைகளைவிட அதிகம் அறிந்தவர்களென நம்மை நினைக்கும்போதே, பெற்றோர்களை விட அதிகம் தெரிந்தவர்களாவும் நினைக்கின்றோம் # வாழ்க்கை = வட்டம் = முரண்

~
தப்பித்தவறி சீரியஸா எழுதினா மொக்கையா பின்னூட்டம் போடுறாங்க. மொக்கையா எழுதினா சீரியஸா பின்னூட்டம் போடுறாங்க # விசித்திரமானது FaceBook

~
ரகசியம் என்றாலே கசியலாம் என்ற அர்த்தத்தில் தான் கசிய"ம்னு பெயர் வெச்சாங்களோ? :)

~

தயிர் சோறு ~ வெண்டைக்காய் பொறியல் கூட்டணியைக் கண்டறிந்த சங்ககாலப் பெண்மணிக்கு, வூட்டுக்காரர்கூட அன்னிக்கு சண்டையாகவும் இருந்திருக்கலாம் :)

~

கோபத்தைக் காட்டுவது, கிண்டல் செய்வது, அவமானப் படுத்துவது மூன்றும் வெவ்வேறானவை! –

~

பல கைகள் மாறினசால்வையை பொன்னாடை எனப்போர்த்தும் மக்களே, இனிமே ஒரு ஈரிழைத் துண்டையாச்சும் போர்த்துங்கப்பா, துவட்டறதுக்கு பயன்படும்

~

காலங்காலமா புழங்கின நெடுஞ்சாலையை அகலப்படுத்தி கந்துவட்டி போல் வசூல் பண்ற அரசு, அணை எதும் கட்டியிருந்தா, சொட்டு தண்ணிக்கும்டப்புதான்!

~

வெகு கொண்டாட்டங்களாய், புதிதாய் குடிக்குஅடிமையாகின்றவர்களின் எண்ணிக்கை, நானறிந்த வட்டத்தில் வெகு வேகமாய்க்  கூடிக்கொண்டிருக்கின்றது.

~

புதிதாய் பூத்துச்சிதறும் மழை தரும் பரவசத்தை, அந்தப் புது மழையைத் தவிர வேறு எதனாலும் தந்துவிட முடியாது!

~

ஒரு பொய்க்காக யோசிக்கும் நேரத்தில் உண்மையையே சொல்லிவிட்டு கடந்துவிடலாம். அதிகபட்சம் கேட்பவருக்கு அது பிடித்தமானதாக இருக்காது, அவ்வளவுதானே

~

பெருமதிப்பு வைத்திருக்கும் காமராசர் மீது, காங்கிரஸ்காரர்களும், சாதிக்காரர்களும் ஒவ்வாமையைக்கொண்டு வந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது:(

~

கூடுதல் வயது எதற்காக மதிக்கப்படுகிறது, கூடுதல் அனுபவம் இருக்கும் என்பதற்காகவா?

~

தேடுவதில் தொலைகிறோம்!

~

அழைப்பது யாரெனத் தெரியாமலே, போனை எடுத்த அந்தக்கால தைரியம், அழைப்பது யார் எனத்தெரியும் இந்த நவீன காலத்தில் இருப்பதில்லை #வீக்கம்=வளர்ச்சி!?

~

பல தருணங்களில் நாம் நம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, மற்றவர்கள் நம்மேல் வைக்கும் நம்பிக்கைதான் சிறப்பாக செயல்பட வைக்கின்றது!

~

வரமாகக் கிடைத்ததை சாபமாக மாற்றும் விசித்திர வரம் பெற்றவன் மனிதன்!

~

கட்~அவுட், சிலைக்கு பால் ஊத்துற மகராசனுங்களை 2 நாளைக்கு எருமை, மாடு மேய்ங்கனு சொல்லனும். இவங்க மூஞ்சியில எருமை சாணி போட்டு மிதிக்கும்!

~

சினிமா தியேட்டர் வாசலில் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் அலறித் துடிப்பது நம்ம நாட்டுல மட்டும்தான் சாத்தியம்னு நினைக்கிறேன் :(

~

டைம் பத்திரிகைக்கு பதிலாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை கொளுத்திய இளைஞர் காங்கிரஸ் # நல்லவேளைகடிகாரத்தைகொளுத்தாம இருந்தாங்களே!

~

நெல்விலை வரலாறு காணாத உச்சத்திற்குப் போனதால் கரும்பு~மஞ்சள் என பணப்பயிருக்கு தாவியவர்கள் கவனம் மீண்டும்நெல்மீது. #காலம் மாறுது!

~

காமராஜர் மேலும், திருவள்ளுவர் மேலும் அளப்பரிய பிரியமும், மரியாதையும் வருகின்றது!

~

இழுத்த மூச்சை விடவோ, விட்ட மூச்சை இழுக்கவோ மறந்துபோகும் கணம் வரைதான் எல்லா ஆட்டமும்!

~

அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? ~ சிதம்பரம் # பாலிடால் விலையையும் ஏத்திப்புட்டீங்க யுவர் ஆனர்! :(

~

அய்யோ ஆண்டவா...! புள்ளைங்களுக்குஹோம் வொர்க்ங்கிற பேர்ல பெத்தவங்களை மீண்டும்(!) படிக்க வைக்கிறாங்களே, இந்தக்கொடுமையை நீ கேக்கமாட்டியா?

~

பகல் ஊட்டிய அத்தனை களைப்பையும், இரவு தின்று பசியாறுகிறது.

~
வாய் சுண்ணாம்பினால் மட்டும் வெந்து விடுவதில்லை, சில சொற்களாலும் தான்.

~
மிதக்கும் இறகுபோலே கடந்துபோவோம் சில கணங்களை!

~

Twitter தொறந்தா What's happening?ங்குறான், Facebook தொறந்தா What's on your mind?ங்குறான். நல்லா நொப்பமா நாயம் கேக்குறதுக்னே இருப்பாங்களோ

~

எனக்கான வேலையை யாரோ தாமதிக்கையில் புரிகிறது யாரோ ஒருவரின் வேலையை நான் தாமதித்தது.

~
5 வருசம் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அரசியல்வாதிகள்தான் ஆட்சிக்கு வந்ததும், அதிகாரிகளைக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கின்றனர்

~

சொல்பவருக்கு வெகு எளிதாகவும், கேட்பவருக்கு வெகு கடுப்பாகவும் இருக்கும் அறிவுரைஅட்ஜஸ்ட் பண்ணி போ

~

சரியாக மொழி பெயர்க்கப்படாத காதல் வெறும் காமம் என்றே அழைக்கப்படுகிறது.

~

வறண்டு தவிக்கத் தொடங்கும் கிராமம், காதுகளில் வேதனையாய் தேங்கும் கிராமத்தினர் குரல். ஒரு பெரும் மழைக்காக யாரை நோக்கி என்னவென்று வேண்டிட? :(

~

சினிமால அடியாளுக சிந்துற ரத்தத்தை தானம் பண்ணவெச்சிருந்தா, பல நோயாளிகளின இரத்தத்தேவை பூர்த்தியாயிருந்திருக்கும் #கதாநாயகர்கள் கவனத்திற்கு

~

புது மணத் தம்பதிகளுக்கிடையே சிதறும் வெட்கத் துளிகள் ஒவ்வொன்றும், ஒரு கவிதை!

~

பெய்ய வேண்டிய தருணத்தில், மழை பெய்யாத பெரும் பாவம் சூழ்ந்த நிலத்தில் வாழ்கிறோமோ? :(

~

அரை சாண் நீளம்கூட இல்லா சிகரெட்தான் எண் சாண் உடல் மனிதனை அடிமைப்படுத்துகிறது.

~


ஏதாவது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தினத்தில் மட்டுமே சந்திக்கும் அனைவரிடமும் சிறு பிணக்கோ, சங்கடமோ இல்லாமல் நட்பாக இணக்கமாக கடக்க முடிகிறது!

~

எல்லோருக்கும் புரிந்தது எனக்கும் புரிந்ததாக இருக்க வேண்டுமா? எனக்குப் புரிந்தது எல்லோருக்கும் புரிந்திருக்க வேண்டுமா? #புரியுதா?

~

குடிச்சுட்டு வந்து பம்ம வேண்டியது, ’என்ன சரக்கானு கேட்டா, ’அய்யோ எப்படிக் கண்டுபிடிச்சேனு அதிர்ச்சியாகுறது. #புதுகுடி மகன்ரவுசு செம!

~

காலையில 5.45 மணிக்குபைக் பறந்துகிட்டே செல்போன்ல பேசுற அளவுக்குமா மக்கள் பிஸி ஆயிட்டாங்க! #ஒருநாளைக்கு 25 மணி நேரமா மாத்த என்ன செய்யனும்

~

அலைபேசியில் அரை மணி, ஒரு மணி என அரட்டை (பஞ்சாயத்து) அடிக்கும் விசயம், பேசும் இருவருக்கும் அப்பாற்பட்ட ஒரு அரசியலாகத்தான் இருக்கின்றது!

~

உறங்குவதற்கு மிக அவசியம் படுக்கையல்ல, உறக்கம்தான்! # தத்துபித்து!

~

எந்த ஒரு விலங்கும் சக விலங்கு / மனிதனின் குணத்தை தன் குணமாக காட்டுவதில்லை. மனிதன் மட்டும் விலங்குகளின் சில குணங்களை தன் குணமாக காட்டுகிறான்.

~

பனங்கிழங்கு மென்ற வாய்கள்பபிள்கம்மென்று கொண்டிருக்கின்றன!

~

பெண்கள்பல்லிக்கு பயப்படுவதைக் காணும்போது, பல்லியாவே பொறந்திருக்கலாமோனு தோணினால் நீயும் என் நண்பனே

-


7 comments:

ILA (a) இளா said...

பத்தா பத்தா போடுங்க. ஒட்டுமொத்தமாய் தத்துவம் படிக்கமுடியாது. பாதியிலையே ஓடி வந்துட்டேன். #ஓவர்டோஸ்

Paleo God said...

ண்ணா.. உத மேல உங்களுக்கென்ன கோவம்? :))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நவரசங்களின் படையல்...

இரண்டு மூன்று பதிவாகயிட்டிருக்கலாம்...சில தன்னம்பிக்கை வரிகள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்...

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அத்தனையும் பொக்கிஷங்கள் - பொறுமையாகப் படித்தேன் - இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பழூர் கார்த்தி said...

நல்ல தொகுப்பு, வாழ்த்துகள்!

முழுமையாக படிக்க வில்லை, நீளம் அதிகம்!

//
சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் ”கடந்து போதல்” :) //

ரொம்ப ரசித்தது!!

பழமைபேசி said...

பிரசினை/பிரசினம்/பிரச்சினை
அதனால உங்களுக்கு இப்ப ஒரு பிரச்சினை.

“பிரச்சனைகள்”னு எழுதி இருக்கிறது எனக்கு பிரச்சினையாப் படுது.

அதியா வீரக்குமார் said...

அண்ணா...அருமையாக இருந்தது....வாழ்த்துக்கள்.