அறுவெருக்கும் பார்வை வீச்சால்
சிதைக்கப்படும் திருநங்கை...
தன் கையால் நம் மலத்தை அள்ளும்
நாசியறுந்த சகமனிதன்...
நாம் வாங்காத ஊதுபத்தியை விற்கும்
குருட்டு தன்னம்பிக்கையாளன்...
பச்சிளம் குழந்தையின் பாலை
வாடிக்கையாளனிடம் களவு கொடுத்த வேசி....
..... இது நமக்கான உலகம் அல்ல என்ற
கொஞ்சம் குழப்பத்துடன் கூடிய தெளிவான மனநிலை...
சுயநலம் சுகமாய் மனிதம் தின்கிறது...
மனிதத்தை விற்ற சில்லரையின்
மிச்ச பாக்கிக்காக மனது
கலங்கிக் கொண்டேயிருக்கிறது
Apr 11, 2009
Feb 14, 2009
நிரப்பமுடியாத வெற்றிடமும், நிவர்த்திக்க முடியாத வலியும்
தோன்றிய எந்த ஒரு உயிருமே ஒரு நாள் மரணத்தை சந்தித்தே தீர வேண்டும்.... இது நியதி.....
இந்த வசனம் பேசுவதற்கு எளிதாகத் தான் இருக்கிறது.
ஆனால் மரணம் என்ற உண்மையை சந்திக்கும் போது எழும் வலியும், வெறுமையும் நிவர்த்திக்க முடியாதது, நிரப்ப முடியாதது.
27 வயதில், பார்த்துக் கொண்டிருக்கும் போதே, துடித்து இறந்து போன உடன் பிறந்த அண்ணனின் கடைசி உயிர்த்துளி, மிகப்பெரிய பலமாக இருந்த நண்பன் திடீரென நீரில் மூழ்கிப்போனதாய் தகவல் வந்த நிமிடம், இன்னொரு உரிமை மிக்க நண்பன் நோயின் கொடுமையில் சொட்டு சொட்டாய் உயிரை வழிய விட்ட கடைசி தருணங்கள்....என் வாழ்விலும் மரணம் ஏற்படுத்திய அதிர்வுகள் நிவர்த்தியாகாத வலியோடும், நிரப்ப முடியாத வெறுமையோடும் நின்று கொண்டேயிருக்கிறது....
அதன் பின் எத்தனையோ மரணங்களை நெருங்கிய வட்டத்தில் பார்த்தாகிவிட்டது. நிறைய கேள்விப்பட்டாகி விட்டது. கும்பகோணம் குழந்தைகள், சுனாமி அழிவு போன்ற பல .....கேட்ட, பார்த்த தருணத்தில் மனதை சுழற்றி, பிசைந்து....... பின் காலம் கொஞ்சம் கொஞ்சமாய் வேறு வேறு விசயங்களை மனதின் முன் கொண்டு வந்து.... இவற்றை பின்னுக்கு தள்ளி விட்டன.
ஆனால் மிக சமீபத்தில் கண்ணுற்ற இரண்டு மரணங்களை ஒட்டிய இரண்டு எழுத்தாக்கம் மிகப்பெரிய கீரலை மனதிலும், அதைவிடப் பெரிய சிந்தனைப் புகையை புத்தியிலும் கொண்டுவந்துள்ளது.
1. தீக்குளித்து இறந்துபோன முத்துக்குமாரின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் நீண்ட கடிதம்
2. இலங்கையில் கொலை செய்யப்பட்ட தி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மொழிபெயர்ப்பு கடிதம். http://www.kalachuvadu.com/issue-110/page26.asp
ஒரு கடிதம் தான் ஏற்படுத்திக்கொள்ளவிருக்கும் மரணத்திற்கு (தற்கொலைக்கு) முன் அந்த மரணத்திற்கு நியாயம் கற்பித்து, வலிமையான முடிவை, குறிக்கோளை முன்னிருத்தி கிட்டத் தட்ட 10 பக்கங்களுக்கு மேல் தன் கருத்துக்களை பதிந்து வைத்த சாசனம்....
இன்னொன்று தன் சுயத்தை இழக்க மறுப்பதற்காக, தனக்கு சில நாட்களில் ஏற்படவிருக்கும் மரணத்தை (கொலையை) கடுமையாக எதிர் நோக்கி எழுதப்பட்ட கடிதம்....”பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்...” லசந்த விக்ரமதுங்க (கடிதம் எழுதிய அடுத்த நாள் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்)
மரணம் தன்னை அறியாமல் வந்து தழுவிக்கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாமல் ஏற்றுக்கொள்வதுதான் பெரும்பாலும். சில நேரங்களில் உறுதி செய்யப்பட்ட மரணம், நெருங்கிவரும் போது, கையறு நிலையில் எதிர்கொள்வது...
நெருக்கமானவர்களின் மரணத்தில் ஏற்படும் வெற்றிடத்தை எதிர்கொள்வதே நமக்கு இயலாத அயர்ச்சியை தரும்போது...
எப்படி தங்கள் மரணத்தை தாங்களாகவே தீர்மானிக்க முடிகிறது, அல்லது எதிர் நோக்கி காத்திருக்க முடிகிறது. பிறருக்கு நிகழ்த்துவது (கொலை) அல்லது தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்ளும் மரணம் பல நேரங்களில் உணர்ச்சி பூர்வமாக மட்டுமே கணநேரத்தில் உருவாவது.
எந்த ஒரு செயல் முத்துக்குமாரை தன் மரணம் நோக்கி தூண்டியிருக்கும், எந்த ஒரு நம்பிக்கை லசந்த விக்ரமதுங்கவை தனக்கான மரணத்தை நோக்கி காத்திருக்க வைத்திருக்கும்.....
எந்த நம்பிக்கை முத்துக்குமாரையும், லசந்த விக்ரமதுங்கவையும் கடிதம் எழுத தூண்டியிருக்கும், கிடைக்காத வார்த்தைகளுக்காக, பூர்த்தியடையாத வரிகளுக்காக தங்களின் சிந்திக்கும் திறன் மேல் சற்றே கோபம் கூட வந்திருக்கும் தானே.... எழுதும் போதே வலிமையான வார்த்தைகளை, முழுமையான வரிகளை கண்டபொழுது மனம் புன்முறுவல் பூத்திருக்கும் தானே, எழுதிய முதல் முறையிலேயே திருப்தி அடைந்திருப்பார்களா? எழுதும் போது மரணிக்கும் விநாடியை நினைத்து ஒரு கணம் மனம் குலைந்திருக்காதா? எழுதிய பின் பிழைத்திருத்தம் செய்யும் போது, சில வார்த்தைகளை மாற்றிக்கொண்டிருப்பார்களா?
இவர்களின் மரணம் காலப்போக்கில் நம்மால் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய ஒன்றாகிப் போய்விடுமா?
இவர்களின் மரணம் நோக்கிய குறிக்கோள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை சிதைத்துக்கொள்ளுமா?
விடை தேட வேண்டிய வினாக்களை இந்த மரணங்கள் நம்முன் அழுத்தமாக விதைத்துவிட்டுத் தான் போயிருக்கின்றன.....
இந்த மரணங்களுக்கும் நம் மனதின் மையப் புள்ளியில் நிரப்பமுடியாத வெற்றிடமும், நிவர்த்திக்க முடியாத வலியும் இருந்தால்... அதுவே இப்போதைக்கு போதும்!!!!

Dec 24, 2008
உடையாத பேனாவோடு.... உடைந்த மூக்கோடு....
டிரெய்ன் பிடிக்க அவசர அவசரமாய் காலையில் வீட்டிலிருந்து கிளம்பினேன். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது திருப்பம் தாண்டி முக்கிய சாலையில் இணையும் நான்கு சாலையில் அவசரமாக திரும்பும் போது கவனித்தேன்.... சரியாக திருப்பத்தில் ஒரு இளைஞன் பைக்கில் குறுக்கே நின்று கொண்டிருப்பதை.... சட்டென என் கண்ணில் ஒரு துளி கோபம் கொப்பளித்தது... சட்டென அந்த இளைஞனின் முகத்தை முறைத்து பார்த்தேன்.... அவன் தாடையில் காயத்திற்கு பிளாஸ்டர் ஒட்டியிருந்தது... நான் முறைத்ததை அவன் கவனிக்கவில்லை.... இப்படி நடு ரோட்டில் நின்னா தாடை ஒடையாம என்ன பண்ணும் என மனதில் நினைத்துக் கொண்டே வேகத்தை கூட்டினேன்... திடீரென என்னிடமிருந்து ஏதோ விழுவது போல உணர்ந்தேன்... வேகத்தை சற்றே குறைத்து என்னவாக இருக்கும் என்று திரும்பிப்பார்த்தேன்... தொடர்ந்து தொடர்ந்து தொலைத்து இந்த மாதத்தில் ஏழாவதாக வாங்கிய பேனா கிடந்தது.... திரும்பி எடுக்கலாமா அல்லது பின்னால் வரும் வாகனம் ஏறி நொறுங்கி விடுமா? என்று நினைத்துக்கொண்டே பைக்கை ஓரம் கட்டினேன்.... திரும்பி பார்க்கும் போது கீழே கிடந்த பேனாவை ஒரு கார் கடந்து போனது... ஐயோ என் பேனா ...... ஆஹா பேனா தப்பித்தது.... பைக்கை நிறுத்தி விட்டு திரும்பி நடக்க முற்பட்டேன்.... ஒரு இளைஞன் தன் பைக்கில் இருந்துகொண்டே குனிந்து அந்த பேனாவை எடுத்துக் கொண்டிருந்தான்.... மெதுவாக என்னை நோக்கி நகர்ந்து வந்தான்.... பேனாவை என்னிடம் நீட்டினான்... லேசாக வழிந்து கொண்டே தேங்க்ஸ் சொல்லி பேனாவை வாங்கி கொண்டு அந்த இளைஞன் முகத்தை பார்த்தேன்.... ஆமாம் சில வினாடிகளுக்கு முன் நான் முறைத்த, மனதில் திட்டிய அதே இளைஞ(ர்).... பைக்கை ஸ்டார்ட செய்தேன்.... உடையாத பேனாவோடு.... உடைந்த மூக்கோடு....
Dec 9, 2008
மிச்சமிருக்கிறது
வேகமாய் மனித தலைகள் மறைகின்றன.....
மெல்ல இருள் தழுவுகிறது....
வெளிச்சத்தில் ஆனந்தமாய் இருந்த அலைகள்
தழுவும் இருளில் மிகுந்த மிரட்சியாய்....
அலைகளை விட்டு எதிர்திசையில் பாதம் பதிக்கிறேன்
கனக்கும் மனதைவிட
சற்று அதிகப்படியாகவே பாதம் பதிகிறது
மணல் என்னை உள்வாங்கிக்கொள்கிறது.....
குட்டியாய் ஒரு அலை குதித்தோடி வந்து
பிடனி பிடிப்பது போல் பிரமை....
எங்கோ விடுபட்டு பறந்து வந்த
முனை கிழிந்த வெள்ளை காகிதம்
என்னிடம் படபடக்கிறது
தனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கின்றதென்று......

Nov 27, 2008
மீண்டும் கனவு
கருவிழிகள் களவாடப்பட்டது போல்
திடீரென திருடப்பட்டது கனவு......
மௌனச்சூரியனின் கதிர்களால்
கருகிப்போகின்றது
சிலசமயம் மனதிற்குள் முளைக்கும்
சந்தோஷ மொட்டுக்கள்.....
இரவின் சுகத்தில் பிறந்த விடியல்....
ஒரு நாளை வாழ்ந்துவிட்ட சுகத்தோடு
தாய்மடி சேர்கிறது.....
இந்த இரவுக்குப்பின் இன்னொரு விடியல்
பிறக்குமென்ற நம்பிக்கையில்......
திடீரென திருடப்பட்டது கனவு......
மௌனச்சூரியனின் கதிர்களால்
கருகிப்போகின்றது
சிலசமயம் மனதிற்குள் முளைக்கும்
சந்தோஷ மொட்டுக்கள்.....
இரவின் சுகத்தில் பிறந்த விடியல்....
ஒரு நாளை வாழ்ந்துவிட்ட சுகத்தோடு
தாய்மடி சேர்கிறது.....
இந்த இரவுக்குப்பின் இன்னொரு விடியல்
பிறக்குமென்ற நம்பிக்கையில்......
பிறந்த நாள்
வருடந்தோறும் வந்து
கொண்டுதான் இருக்கிறது........
இனிப்பாய் பல நேரம்,
இனிப்பை மறந்து சில நேரம்.
காலையில் கிளர்ச்சியாய்.....
வாழ்த்துகளை வாங்கி வாங்கி
அயர்ச்சியாய்......
ஆண்டுகள் கடந்து விட்டன ....
ஆனாலும் என்ன சாதித்தோம்
என்ற மலைப்பு.....
மனிதனுக்கு மனிதன் மேல்
நம்பிக்கை இருப்பதில்லை......
தவறிப்போய் நாமும்
மனிதனாகத்தானே இங்கே....
கொண்டுதான் இருக்கிறது........
இனிப்பாய் பல நேரம்,
இனிப்பை மறந்து சில நேரம்.
காலையில் கிளர்ச்சியாய்.....
வாழ்த்துகளை வாங்கி வாங்கி
அயர்ச்சியாய்......
ஆண்டுகள் கடந்து விட்டன ....
ஆனாலும் என்ன சாதித்தோம்
என்ற மலைப்பு.....
மனிதனுக்கு மனிதன் மேல்
நம்பிக்கை இருப்பதில்லை......
தவறிப்போய் நாமும்
மனிதனாகத்தானே இங்கே....
Nov 25, 2008
தொலைந்த மௌனம்

மேசையின் மீது உள்ள அலைபேசி ஒலி எழுப்பும்போதெல்லாம் மனது லேசாக திடுக்கிடும். காதும், வாயும் கூடவே சில சமயம் மனதும் பேசிப்பேசியே வலிக்கின்றன. வெறும் பத்து வருடங்களில் அலைபேசி நம்மை வெறித்தனமாக அடிமைப்படுத்தியதை மறுக்கவே முடியாது. காலை கண் விழிக்கும்போதே அழைப்பு வருகிறது, பல் துலக்கி காபி குடிக்கும்போதும் பல நேரம் பேசுகிறோம். நானெல்லாம் குளிக்கும் போதும் கூடவே எடுத்து செல்லுபவன். தட்டில் விழும் உணவின் நிறமும்அளவும் கூட சில நேரம் பேசும் (அ) சுவாரசியத்தில் தெரிவதில்லை. இதில் நல்ல வேலையாக சுவை குறித்து குறை கொள்ள நேரம் இல்லை. பார்த்த இடமெல்லாம் கை காதோடு அணைந்து கொண்டேயிருக்கிறது. யாரைப்பார்த்தாலும் பேச்சு பேச்சு என எல்லா நேரமும் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. ஏன் இப்படி பேசுகிறோம், எதை அடைய இப்படி பேசுகிறோம். சரி பேசிப்பேசி எதைத்தான் அடைந்துவிட்டோம்? பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன் நினைத்து பார்த்தால் நாம் இப்போது பேசுவதில் நூறில் ஒரு பங்குதான் பேசி இருப்போம். அப்பொழுதெல்லாம் தொலைபேசி அலுவலகத்தில் இருக்கும் அல்லது வீட்டில் இருக்கும். வீட்டில் இருக்கும் தொலைபேசில் பேசுவது சுகமான அனுபவம். பெரும்பாலும் உறவினர்கள்தான் வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பது வழக்கம். குடும்பத்தில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி பேசி மகிழ்வார்கள். ஆனால் இன்று அலைபேசி ஆறாவது விரலாக நம்முடன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பேசுகிறோம். ஆனால் எதை அடைய இத்தனை பேசுகிறோம்?. தொடர்ந்து பேசி மனதிற்குள் இருந்த அழகிய மௌனத்தை கொன்று விட்டதை ஒரு போதேனும் உணர்ந்திருக்கிறோமா?. தனிமை என்பதே மறந்துவிட்டது. தொலைந்து போன மௌனத்தை கொஞ்சம் தேடித்தாருங்களேன், அதற்குள் படபடக்கும் அலைபேசிக்கு பதில் சொல்லி விட்டு வருகிறேன்...........
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
க ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில ச...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...