மிச்சமிருக்கிறது

வேகமாய் மனித தலைகள் மறைகின்றன.....
மெல்ல இருள் தழுவுகிறது....
வெளிச்சத்தில் ஆனந்தமாய் இருந்த அலைகள்
தழுவும் இருளில் மிகுந்த மிரட்சியாய்....

அலைகளை விட்டு எதிர்திசையில் பாதம் பதிக்கிறேன்
கனக்கும் மனதைவிட
சற்று அதிகப்படியாகவே பாதம் பதிகிறது
மணல் என்னை உள்வாங்கிக்கொள்கிறது.....

குட்டியாய் ஒரு அலை குதித்தோடி வந்து
பிடனி பிடிப்பது போல் பிரமை....

எங்கோ விடுபட்டு பறந்து வந்த
முனை கிழிந்த வெள்ளை காகிதம்
என்னிடம் படபடக்கிறது
தனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கின்றதென்று......


3 comments:

Anonymous said...

good writings

*இயற்கை ராஜி* said...

kavingare..onnum solrathukku illa..:-)

Durga Karthik. said...

ஒன்று ஆரம்பிக்கும் போதே அது முடிந்துவிடும் என்று யூகிக்கும் நிமிடங்களில் மனம் திளைக்க ஆரம்பித்து விடுகிறது.ஓ என்றிருக்கும் வீடும் இடமும் தனிமை பயத்தை கொடுக்கும்.கனிவுள்ள மனம் தனிமைப்படாது.அதன் முதல் கூட்டாளி அதுவே.