Nov 27, 2008

மீண்டும் கனவு

கருவிழிகள் களவாடப்பட்டது போல்
திடீரென திருடப்பட்டது கனவு......

மௌனச்சூரியனின் கதிர்களால்
கருகிப்போகின்றது
சிலசமயம் மனதிற்குள் முளைக்கும்
சந்தோஷ மொட்டுக்கள்.....

இரவின் சுகத்தில் பிறந்த விடியல்....
ஒரு நாளை வாழ்ந்துவிட்ட சுகத்தோடு
தாய்மடி சேர்கிறது.....
இந்த இரவுக்குப்பின் இன்னொரு விடியல்
பிறக்குமென்ற நம்பிக்கையில்......


2 comments:

வால்பையன் said...

பீர்பாட்டில் திறக்கப்ப்ட்டது போல்
தீடிரென வழிந்தது நுரை!

இரண்டு பொட்டுகடலைகளால்
கரைந்து போகின்றது
இளங்காலை நேர
பனிமொட்டுகள் போல்

பொன்நிறத்தில் வழியும் திரவம்
வாழ்தறிந்த சுகத்தை
காலடியில் சேர்க்கிறது
இந்த பெக்குக்கு பின் இன்னோரு
பெக் இருக்கும் என்ற நம்பிக்கையில்!

**********************


தப்பா நினைச்சிகாதிக தல!

எனக்கு பாலோயர் ஆகிருக்கிங்க!
மறக்காம இருக்க எதாவது கலாய்க்கனுமுல்ல
அதான் ஒரு எதிர்கவுஜ!

Dr. Hariharan said...

ஹாஹா. nice comment.
@erode kathir. tough thinking

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர் ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில் , எனக்கு ...