உடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....

டிரெய்ன் பிடிக்க அவசர அவசரமாய் காலையில் வீட்டிலிருந்து கிளம்பினேன். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது திருப்பம் தாண்டி முக்கிய சாலையில் இணையும் நான்கு சாலையில் அவசரமாக திரும்பும் போது கவனித்தேன்.... சரியாக திருப்பத்தில் ஒரு இளைஞன் பைக்கில் குறுக்கே நின்று கொண்டிருப்பதை.... சட்டென என் கண்ணில் ஒரு துளி கோபம் கொப்பளித்தது... சட்டென அந்த இளைஞனின் முகத்தை முறைத்து பார்த்தேன்.... அவன் தாடையில் காயத்திற்கு பிளாஸ்டர் ஒட்டியிருந்தது... நான் முறைத்ததை அவன் கவனிக்கவில்லை.... இப்படி நடு ரோட்டில் நின்னா தாடை ஒடையாம என்ன பண்ணும் என மனதில் நினைத்துக் கொண்டே வேகத்தை கூட்டினேன்... திடீரென என்னிடமிருந்து ஏதோ விழுவது போல உணர்ந்தேன்... வேகத்தை சற்றே குறைத்து என்னவாக இருக்கும் என்று திரும்பிப்பார்த்தேன்... தொடர்ந்து தொடர்ந்து தொலைத்து இந்த மாதத்தில் ஏழாவதாக வாங்கிய பேனா கிடந்தது.... திரும்பி எடுக்கலாமா அல்லது பின்னால் வரும் வாகனம் ஏறி நொறுங்கி விடுமா? என்று நினைத்துக்கொண்டே பைக்கை ஓரம் கட்டினேன்.... திரும்பி பார்க்கும் போது கீழே கிடந்த பேனாவை ஒரு கார் கடந்து போனது... ஐயோ என் பேனா ...... ஆஹா பேனா தப்பித்தது.... பைக்கை நிறுத்தி விட்டு திரும்பி நடக்க முற்பட்டேன்.... ஒரு இளைஞன் தன் பைக்கில் இருந்துகொண்டே குனிந்து அந்த பேனாவை எடுத்துக் கொண்டிருந்தான்.... மெதுவாக என்னை நோக்கி ந‌க‌ர்ந்து வ‌ந்தான்.... பேனாவை என்னிட‌ம் நீட்டினான்... லேசாக‌ வ‌ழிந்து கொண்டே தேங்க்ஸ் சொல்லி பேனாவை வாங்கி கொண்டு அந்த‌ இளைஞன் முக‌த்தை பார்த்தேன்.... ஆமாம் சில‌ வினாடிக‌ளுக்கு முன் நான் முறைத்த‌, ம‌ன‌தில் திட்டிய‌ அதே இளைஞ(ர்).... பைக்கை ஸ்டார்ட‌ செய்தேன்.... உடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....

3 comments:

SPIDEY said...

//ஆமாம் சில‌ வினாடிக‌ளுக்கு முன் நான் முறைத்த‌, ம‌ன‌தில் திட்டிய‌ அதே இளைஞ(ர்).... பைக்கை ஸ்டார்ட‌ செய்தேன்.... //

தொப்பி...... தொப்பி.......

//settings>comments> போய் word verificationஐ எடுத்துடுங்க//

தேவன் மாயம் said...

உடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு..///

நல்ல அனுபவம்

தேவா.....

winner krishna said...

யாரிடமும் பழகினால் தான் அவா நல்லவரா ெகட்டவரா என ெதாியும் முகத்ைதப் பாாத்தால் ெதாியாது,