யானையொன்றின் பிளிறலில்
வனம் அதிர்கிறது
கிளை விட்டு
வேகமாய்
இறக்கையடிக்கிறாய்
படபடப்பில்
இறகொன்று
பிரிந்து
மிதக்கிறது
இறங்கி வரும்
இறகைப் பற்றுவதும்
அதிலிருக்கும்
பிரியத்தை
வாசிப்பதும் தவிர்த்து
வேரடியில்
அமர்ந்திருக்கும்
நான்
வேறென்ன
செய்ய!
3 comments:
நச் ...
வேறென்ன செய்யலாம் ?
உணர்வைக் கடத்தும் ரசவாசம் கவிதையில்
ஒன்னும் செய்ய வேண்டாம். ரசித்தலே போதுமானது
அருமை :)
Post a Comment