தொடரும் எதுவுமே ஒரு கட்டத்தில் தனக்குள் ஒரு போதையை அல்லது சலிப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.
-
அன்பு என்பது கிடப்பில் இருந்து அள்ளுவதல்ல, பால் போன்று சொட்டுச் சொட்டாய் சுரப்பது!
-
எல்லாவற்றிற்கும் பதில்கள் தேவையா!?
-
பாறைகளின்றி அருவி ஏது...! எனினும்... நீரில்லா அருவியில் பாறைகளை ரசிப்போர் யார்!?
-
வெறுப்பின் திரி முனைப் பசிக்கு நெருப்பையா பரிசளிக்கப் போகிறீர்கள்...!?
-
மீதி விரல்கள் வழக்கம்போல் நம்மையே சுட்டுவதை மறந்து, யாராவது செய்வார்கள்,
செய்யவேண்டும் எனும் விரல் சுட்டல் வழக்கம்போல் தொடர்கிறது!
-
உலகப் பேரதிசயங்களில் மகத்தானது "மனம்"
-
ஒரு இரவென்பது வெளிச்சமின்மையும்,
இருள் படர்தலும் மட்டுமல்ல அல்ல. இன்னொரு நாளை எதிர்கொள்ளத் தயார்படுத்துவதற்கான ஆசுவாசம்.
-
கேள்விக்கு தேவையான அளவிற்கும் கூடுதலாக பதில் தருகையில், அந்த காரணத்திற்காகவே புதிய கேள்விகள் வருகின்றன.
-
இதழின் வழி உயிரில் புகும் முத்த மது!
-
நேசிப்பு ஒரு மொழியாக...
-
சில தாமதங்கள் நல்லதுக்குத்தான்.
-
அலை கடலில் இரையெடுக்க தாழப்பறக்கும் பறவையின் சிறகுகளில் படியும் உப்புக்காற்றின் ஈரமாய் தாழிடப்பட்ட மௌனம்!
-
தன்னை நேசிக்கின்றவர்கள் ஒருபோதும் 'தன்னைக் குதூகலப்படுத்திக் கொள்ளும்'
வாய்ப்பினைத் தவற விடுவதேயில்லை.
-
முற்றுப்புள்ளியில் முத்தம் பதிக்கிறாள் ஈரத்தில் புள்ளி கரைகிறது கடைசி வரி நீள்கிறது!
-
'இதெல்லாம் சமாளிக்கக் கூடியது’
என்பது சமாளித்துவிட்ட பிறகே தெரிய வருகிறது!
-
பல நேரங்களில் அணிந்திருக்கும் கண்ணாடியும்,
அதில் பூசப்பட்டிருக்கும் வண்ணங்களும்தான் நம் பிரச்சனையே!
-
நதியின் நகர்வில் நிலவு குளிக்கின்றது நினைவுகள் நனைகின்றன! :)
-
ஊழலுக்கும் கருப்பு பணத்திற்கும் என்ன வித்தியாசம்? உடலுறவுக்கும் கர்ப்பத்துக்கும் இருக்கும் வித்தியாசம் தான்! ;)
-
வாழ்தல்
காலம் பேசும் வரலாறு
-
மற்றவர்களால் கெட்டுப்போனவர்களை விட, தன்னைத்தானே கெடுத்துக் கொண்டவர்கள்தான் உலகில் அதிகம்!
-
திசையெங்கும் தேடித்தேடி வணங்கும் இந்த தேவதையின் வேண்டுதல் என்னவாய் இருக்கும்!
-
மரம் பொழியும் இரவு நிழலை என் செய்ய?
-
வாழ்க்கை எனும் மொழி!
-
முள் நுனி கொண்டா அன்பை எழுதுவீர்!?
-
மேகத்தைத் துளைத்துவிட்டு நனைய மறுக்கலாமோ!?
-
புரிதல் என்பது 'உண்மையை,
உண்மையாகவே உணர முற்படுதல்’
-
இன்றைய மோகம் ஏங்கித்தவித்திருந்த இப்பெருமழையோடு!
-
வேர்களெங்கும் மகரந்தம்!
-
எவ்வளவுதான் புசிப்பதாம் எழுத்தை!
-
மகிழ்ந்திருக்கும் தருணங்களில் புகார்களுக்கும் குறைகளுக்கும்,
நெகிழ்ந்திருக்கும் தருணங்களில் வருத்தங்களுக்கும் வலிகளுக்கும் இடமேது.
-
கண்ணில் படும், காதில் விழும் எல்லாவற்றையும் மனதிற்குக் கொண்டு செல்வது மற்றும் சேமித்து வைப்பது கட்டாயமில்லை.
-
அன்பும் பிரியமும் தழுவும்போது,
முன்பு போட்ட சண்டையின் உக்கிரத்தை நினைத்துப் பாருங்கள். உலகின் அதி அபத்தம் எதுவெனக் குழம்பித் தெளிவோம்!
-
நம் குழந்தைகளுக்கும் நமக்கும் இடையே இப்போது இருக்கும் நெருக்கத்தை,
நாமும் நம் பெற்றோர்களும் அனுபவித்ததில்லை!
-
விரல்தொட்டு அழிப்பதன் மூலம் மட்டுமே சிலந்தி வலைகளின் உருவாக்கத்தை நிறுத்திவிட முடியாது
No comments:
Post a Comment