”அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க” காலையிலிருந்தே யாரைப் பார்த்தாலும் இதே கேள்விதான். ”ஒன்னுமில்லைங்க”னு சொல்லிச் சொல்லி சோர்ந்து போயி ஒரு கட்டத்தில, அவங்க கேட்குமுன்னே நான் யாரைப் பார்த்தாலும் “அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க”னு கேட்க ஆரம்பிச்சுட்டேன்...
கிட்டத்தட்ட எல்லோரும் இன்று இரவுக்கான நிகழ்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றனர். பதின்ம வயதுகளில் புது வருடப் பிறப்பு என்பது ஒரு சந்தோச நிகழ்வாக இருந்தது போல் ஓர் உணர்வு....
இருபது வயதுகளில் இயக்கம், சங்கம் என்று தினவெடுத்து திரிந்த போது ஒவ்வொரு ஆண்டும் சங்கத்திற்கு நிதி சேகரிக்க (சேராதது வேறு சோகம்) புத்தாண்டு இரவுக்கு நிகழ்ச்சி நடத்தி, அடுத்த நாள் முதல்நாள் இரவு நடந்த சில அட்வென்சர் விசயங்களை பேசிச் சிரித்துத் திளைத்து இரண்டு மூன்று நாட்கள் களைப்பாய் திரிவதுண்டு...
அதற்கு பின்னான காலகட்டத்தில் அலைபேசி வந்தபின் குறுந்தகவல்களை அனுப்புவதும் பெறுவதும் புதுவருடக் கொண்டாட்டத்தின் முக்கிய கடமையாக மாறிப்போனது. 364 நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்தவர்கள்கூட இந்த நாளில் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பி உள்ளேன் அய்யா போட்டுவிடுவது சுவாரசியமானது. சில புத்தாண்டுகளுக்கு அதுபோலவே நானும் அனுப்புவதுண்டு.
இப்போது வருடப்பிறப்பு என்பது மற்றுமொரு முதல் தேதி என்ற நிலைக்கு வந்தது போல் உணர்கிறேன், ஒரே வித்தியாசம் தினமும் தேதிக் காகிதத்தை கிழிப்போம், முதல் தேதி மாதம் காட்டும் காகிதத்தைக் கிழிப்போம், ஆனால் இந்த முதல் தேதிக்கு காலண்டரையே மாற்றுகிறோம்.....
அதுக்குப்போயி இத்தனை கொண்டாட்டம் என புத்திசாலித்தனமாக (!!!! ஹ்க்கும்) நினைக்கும் போது, இந்த தினமும் ஒரு முக்கிய வியாபார தினமாக மாறியதில் ஆச்சரியம் இல்லை, இலவசமாக இருக்கும் குறுந்தகவலுக்கு கட்டணம் நிர்ணயிப்பது முதல், சரக்குக்கு கொடுக்கப்படாத சில்லறையை கண்டு கொள்ளாமல் விடுவது வரை எல்லாமே வியாபாரத்தின் முக்கிய தந்திரமாகத் தெரிகிறது.
அதுவும் புதுவருடக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாய் குடித்துத் தீர்க்கப்படும் சரக்குக்கு இதுதான் கணக்கு என்று இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக வருடம் பிறக்கும் பனிரெண்டு மணிக்கு சற்று முன்பும், பின்பும் சீறும் வாகங்களை கட்டுப்படுத்த கஷ்டப்படும் காவல்துறையினரைப் பார்க்க பரிதாபமாகவும் இருக்கும்.
2002 புதுவருடம் என்று நினைக்கிறேன்... வழக்கம்போல் ஈரோட்டில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம் கலகலத்துக் கொண்டிருந்தது, அப்போதெல்லாம் காவல்துறை இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கவில்லை. நள்ளிரவு தாண்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் அடிக்கடி அலற ஆரம்பித்தது. விடிந்ததும்தான் தெரிந்தது, இரவில் குடித்துவிட்டு வேகமாக போய் விழுந்து நொறுங்கியதில், அரசு மருத்துவமனையில் எட்டு பிணங்கள் விழுந்து கிடந்தது. அதுவும் நாலைந்து சாலைகள் மட்டுமே இருக்கும் ஈரோடு மாதிரி சின்ன நகரத்துக்குள் ஒரே இரவில் எட்டு மரணம் என்பது அதிர்ச்சியின் உச்சம். இறந்த அத்தனை பேரும் இருபதுகளில், அந்தந்த குடும்பத்தின் வருங்காலக் நம்பிக்கையா இருந்தவர்கள். உடனே காவல்துறைக் கண்காணிப்பாளர் இரவுகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை மிகக்கடுமையாக ஒடுக்க ஆரம்பித்தார். காலப்போக்கில் கடுமையும் மாறிப்போனது.
அதன்பின் ஒவ்வொரு புத்தாண்டு இரவிலும் சாலைகளின் ஓரத்தில் பத்திரமாக (தள்ளாடாமல் !!!) நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் போது இளசுகளின் ஆட்டமும், சீறிப்பாயும் வாகனங்களும், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து காவல்துறை துரத்தி பிடித்து அடிப்பதும், விபத்தில் சிக்கி ரத்தக்காவு கொடுப்பதும் சலனமில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.
இந்த ஆண்டாவது புத்தாண்டு குடியின் பொருட்டு விபத்தோ, பிரச்சனையோ நடக்காமல் இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி கொள்வோம். குடியை சிலாகித்து கொண்டாடுபவர்களிடம் சொல்ல விரும்பது... கொஞ்சம் கவனமாக இருங்கள், குடும்பம் வீட்ல காத்துக்கிட்டிருக்கு...
மற்றபடி புதிய 2010 காலண்டரை சுவற்றில் மாட்டிட காத்திருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
_______________________________________________
33 comments:
அருமையான் பதிவு.
நானும் எல்லோரையும் பத்திரமாக கொண்டாட வேண்டுகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆமாங்க. புதுவருஷம் காலைல பேப்பர் பார்க்கவே கலக்கமா இருக்கும். எத்தனை ஆயிரம் போலீஸ் வேற இவங்கள காபந்து பண்ண. முட்ட முட்ட அடிச்சிட்டு, பாட்டில ரோட்டுல ஓங்கி சிதறுகாய் அடிச்சி அதுமேலயே நடந்து எவண்டா ரோட்ல கண்ணாடிய ஒடச்சவன்னு கத்துவானுங்ணா:)).
/மற்றபடி புதிய 2010 காலண்டரை சுவற்றில் மாட்டிட காத்திருக்கும் /
நானு காசு குடுத்து வாங்கறதில்லிங்க. மெதுவா மிஞ்சினது, கிழ்ஞ்சதுன்னு யார்னா குடுக்கறப்ப மாட்றது. அதான் பொழுதன்னிக்கும் பொட்டி தட்றமா. வலக்கை மூலைல இருக்குற காலண்டர்தான்.இஃகி இஃகி.
வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//மற்றுமொரு முதல் தேதி என்ற நிலைக்கு வந்தது போல் உணர்கிறேன்//
ஆஹா..எங்க அண்ணாக்கு வயசாகிப்போச்சே:)))))))))))
மிகத் தேவையான பதிவு அண்ணா.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தல புத்தாண்டு வாழ்த்துக்கள்
உண்மைதான் கதிர். புத்தாண்டு வாழ்த்துக்கள். குடித்தால் வண்டியைத் தொடுவதில்லை என்ற ஒரு முடிவே போதும். வாகனம் ஓட்டுபவரின் குடும்ப போட்டோவை கண்ணுக்குத் தெரியும் படி மாட்டலாம்.
சரியா சொன்னீங்க அண்ணா !!!
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அருமையான அவசியமான பதிவு அண்ணே...சிகப்பு நிற கை சட்டை நல்லா இருக்கு சிலாகித்து எழுதியது போல் ஒரு உணர்வு...
/மற்றபடி புதிய 2010 காலண்டரை சுவற்றில் மாட்டிட காத்திருக்கும் /
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தேவையான பதிவு கதிர். எல்லாரும் மனதில் வைக்க வேண்டிய விசயத்தைக் கூறியுள்ளீர்கள்!!
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..
Well said Kathir.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
விஷ் யூ அ ஹேப்பி நியூ இயர்.
பிரபாகர்.
நல்ல மெஸேஜ் - வாழ்த்துகள்.
தக்க தருணத்தில் தரமான பதிவு ..
புது வருட வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010.
அருமையான,அனுபவம் வாய்ந்த அறிவுரை!
அருமையான,அனுபவம் வாய்ந்த அறிவுரை! அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010!!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கதிர்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்களை மட்டுமே பரிமாறிக் கொண்டிருக்கும் வேளையில், அறிவுரையையும், அனுபவபூர்வமாக
அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அவசியமான பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முக்கியமான விஷயத்தைச் சொல்லும் இடுகை கதிர்.
உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் புது வருட வாழ்த்துகள்.
அனுஜன்யா
Wish you happy new year.
//இப்போது வருடப்பிறப்பு என்பது மற்றுமொரு முதல் தேதி என்ற நிலைக்கு வந்தது போல் உணர்கிறேன்,
//
Having the same feeling since many years.
அருமையான பதிவு.. ஹேப்பி நியூ இயர்.. சரி நேத்து உங்க ப்ரோக்ராம்தான் என்ன?
:)))
அன்பின் கதிர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இடுகையில் சிந்தனை அருமை - என்ன செய்வது - புத்தாண்டு எனில் குடித்தே தீர வேண்டும் எனத் தீர்மானம் எடுக்கிறார்களே
//அதுவும் புதுவருடக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாய் குடித்துத் தீர்க்கப்படும் சரக்குக்கு இதுதான் கணக்கு என்று இல்லாமல் இருக்கிறது. //
நேத்து ராத்திரி பக்கத்து பார்ல வெறும் பாட்டில் சத்தம்தான் (வேறென்ன பார்ல பல்லாங்குழி ஆடுற சத்தமா வரும்??) டாஸ்மாக்கோட வருமானமே இதுபோல விசேச நாட்கள்லதான் மும்மடங்கு அதிகமா இருக்காம். வாழ்க ‘எம்குடி’ மக்கள்.
பதிவு அருமை
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்.
வணக்கம் கதிர்.
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும்,அமைப்புக்கும்,குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும்.
எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.
ம்ம்....அந்த ஒருநாள் கொண்டாட்டத்திற்க்கு தான் எத்தனை உயிர் பலி? அடுத்தநாள் பேப்பர் திறக்கும் போதே ஒரு பயம் வரும்.
Post a Comment