உருகுதே..ல்லாயிரம் பட்டாம்பூச்சி
பறந்து வந்து என்னை அள்ளிச்
அணைத்து மிதக்கச் செய்கிறது
நீ அலைபேசியில் மின்னும் போது

ரம்புகளில் சில சொட்டு
மது ஊடுருவுகிறது நடு நிசியில்
சிணுங்கும் குறுந்தகவலில்
உன் பெயர் சிரிக்கும் போது

ட்டிப் பறித்த எருக்கம் பூவின்
இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்
ஒரு துளி தேனாய் சுவைக்கிறது
மின்னஞ்சல் வார்த்தைகளாய் தழுவுகையில்

றக்கி வைத்த இட்லியில்
கசிந்து வரும் ஆவியாய்
மிதந்து கரைகிறது மனம்
நீ என் பெயர் அழைக்கும் போது

பூந்தோட்டம் கடக்கையில் வீசும்
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பேரெழுதிய பேனா முனை நுகர்கையில்

________________________________________________________

33 comments:

கலகலப்ரியா said...

/உருகுதே..//
global warming..+ warning!

//பல்லாயிரம் பட்டாம்பூச்சி
பறந்து வந்து என்னை அள்ளிச்
அணைத்து மிதக்கச் செய்கிறது
நீ அலைபேசியில் மின்னும் போது//

அட அட... அலைபேசி அணைக்கிறப்போ தொப்புன்னு விழுந்துடுவீங்களோ..

கலகலப்ரியா said...

//எட்டிப் பறித்த எருக்கம் பூவின்
இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்
ஒரு துளி தேனாய் சுவைக்கிறது
நீ வார்த்தைகளாய் மின்மடலில் வரும் போது//

எருக்கம்பூவ இப்டிக் கையாண்ட ஒரே கவிஞர் நீர்தான் ஐயா..!

கலகலப்ரியா said...

//நரம்புகளில் சில சொட்டு
மது ஊடுருவுகிறது நடு நிசியில்
சிணுங்கும் குறுந்தகவலில்
உன் பெயர் சிரிக்கும் போது//

கவுஜ கவுஜ...

கலகலப்ரியா said...

//இறக்கி வைத்த இட்லியில்
கசிந்து வரும் ஆவியாய்
மிதந்து கரைகிறது மனம்
நீ என் பெயர் அழைக்கும் போது//

அம்மா... அப்பா பேரு வைக்கிறப்போ... புள்ள மனம் இட்லி ஆவியாகும்னு நினைச்சிருப்பாங்களா..

vasu balaji said...

அலை பேசில பட்டாம்பூச்சி,
குறுந்தகவல்ல மது
மின்மடல்ல தேனு
பேனாவில் பூந்தோட்டம்

இட்டிலி ஆவியில உங்க பேரு.

பிரமாதம். ஆமா! நம்மளயெல்லாம் போய் பெருசுன்னு சொல்லுறாய்ங்களே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

கலகலப்ரியா said...

//பூந்தோட்டம் கடக்கும் போது
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது//

கொன்னுட்டீங்க...! பிரம்மாதம்..!

தேவன் மாயம் said...

பூந்தோட்டம் கடக்கும் போது
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது//

படித்தவுடன் ஒரு மாதிரி மயக்கமா இருக்கே!

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

கவிதை அருமை - புது விதமான சிந்தனை - கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது

எருக்கம்பூ - தேன்
இட்லி - ஆவி

புதுமை புதுமை
நல்வாழ்த்துகள் கதிர்

தேவன் said...

/// வானம்பாடிகள் said

பிரமாதம். ஆமா! நம்மளயெல்லாம் போய் பெருசுன்னு சொல்லுறாய்ங்களே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ///

இருந்தாலும் இம்புட்டு ஆகதுங்கைய்யா !!

கதிர் ஐயா, கவிதைகள் நன்றாக இருக்கிறது !

நிலாமதி said...

உங்கள் மனதை ....உருக வைத்த பதிவு .....அருமை

அத்திரி said...

//எட்டிப் பறித்த எருக்கம் பூவின்
இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்
ஒரு துளி தேனாய் சுவைக்கிறது
நீ வார்த்தைகளாய் மின்மடலில் வரும் போது//

அழகான அனுபவமான வரிகள்

அகல்விளக்கு said...

//பூந்தோட்டம் கடக்கும் போது
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது//

வரிகள் ரசிக்க வைக்கின்றன...

அருமை
அருமை...

மணிஜி said...

நல்லாயிருக்கு கதிர்

பா.ராஜாராம் said...

வாவ்!

ரொம்ப பிடிச்சிருக்கு கதிர்.உரை நடை கவிதை போட்டிக்கான கவிதை எப்போ?

நாடோடி இலக்கியன் said...

வானம்பாடி அய்யாவை வழிமொழிந்து கொள்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பல்லாயிரம் பட்டாம்பூச்சி
பறந்து வந்து என்னை அள்ளிச்
அணைத்து மிதக்கச் செய்கிறது
நீ அலைபேசியில் மின்னும் போது//

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகிறதே அதை சுற்றி சுற்றி ஆசை நெஞ்சம்....

//நரம்புகளில் சில சொட்டு
மது ஊடுருவுகிறது நடு நிசியில்
சிணுங்கும் குறுந்தகவலில்
உன் பெயர் சிரிக்கும் போது//

உன் பேர் சிரிக்க ஆசைதான்

வால்பையன் said...

//இறக்கி வைத்த இட்லியில்//

நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது!

சீமான்கனி said...

ரசித்தேன்....
//பூந்தோட்டம் கடக்கும் போது
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது//

மிகவும் அருமை அண்ணே...மாற்றம் நல்ல இருக்கு....

Unknown said...

அட.. அட..
சும்மா கசிந்து உருகிட்டிங்க போங்க..

நசரேயன் said...

கசியும் மௌனமா ? இல்லை வெடிக்கும் மௌனமா?

தாராபுரத்தான் said...

அனுபவித்து ஏழுதியதோ,,,,

ஆரூரன் விசுவநாதன் said...

கதிர்.....


என்னாதிது.......

சூப்பர்

ஆ.ஞானசேகரன் said...

கர்பனை கரு நல்லாயிருக்கு நண்பா

V.N.Thangamani said...

கவிதை அருமை கதிர்.
வாழ்க வளமுடன்
பதிவர் சந்திப்பு குறித்து. உங்கள் தளத்தில் விபரம் வெளியிட வில்லையா.

வெண்ணிற இரவுகள்....! said...

இறக்கி வைத்த இட்லியில்
கசிந்து வரும் ஆவியாய்
மிதந்து கரைகிறது மனம்
நீ என் பெயர் அழைக்கும் போது

//
மற்ற கற்பனையை விட இது கொஞ்சம் புதியதாய் இருந்தது கதிர்

Anonymous said...

சத்தமில்லாமல் கரையுது மனம் உருகும் இந்த கவிதையை உணரும் போது....
//
எட்டிப் பறித்த எருக்கம் பூவின்
இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்
ஒரு துளி தேனாய் சுவைக்கிறது

பூந்தோட்டம் கடக்கும் போது
கோடிப் பூக்களின் வாசனை
கனத்துக் கலந்து நாசி நிரடுகிறது
உன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது //

ரசித்தேன் அத்தனையும் தேன்...
_____________________________

Chitra said...

கவிதையில் இட்லியில் இருந்து செல் போன் வரை கரைந்து இருக்கிறது. அருமை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நம்ம பெட்டி தட்டிக் காதலர்களுக்கு அழகான வரிகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், உருகி உருகி எழுதியிருக்கீங்க. அழகு.

புது டெம்பளேட்டும் நல்லா இருக்கு :)

பிரபாகர் said...

பட்டம் பூச்சிய பறக்க விட்டு மௌனமாய் ஆவியை கசியவிட்டு, எருக்கம்பூவில தேன் சாப்புடுறத சொல்லி, பேனா முனையில வாசம் புடிச்சி... கலக்குறீங்க கதிர்... எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிச்சு நம்ம நினைவலைகள கிரறுரீங்க?

பிரபாகர்.

கமலேஷ் said...

இறக்கி வைத்த இட்லியில்
கசிந்து வரும் ஆவியாய்
மிதந்து கரைகிறது மனம்
நீ என் பெயர் அழைக்கும் போது

கவிதை ரொம்ப
நல்லா இருக்குங்க...

Anonymous said...

woww... superb feelings....wordings too...

Unknown said...

ரொம்ப நல்லாயிருக்கு...ஒவ்வொரு வார்த்தையிலும் காதல்ரசம் சொட்டுகிறதே...