சரக்கும் சைடு டிஷ்சும் பின்னே ஆறு டவுட்டும்

ரவுண்ட் 1:
சாமிக்கு(!!!) மாலை போட்டு சரக்கு கடைக்கு முன்னே வரிசை கட்டி நிற்கும் சாமிகளுக்கு தனி டம்ளர்ளே சரக்கு கொடுக்குறாய்களாமே... குடிக்கிறவனயோ, ஊத்தறவனையோ யாரும் கண்ணக் குத்தமாட்டாய்ங்களா!!!???

ரவுண்ட் 2:
தெளிவா இருக்கிறவங்க யாரும் ’போதையில’ இருக்குறோம்னு சொல்லாத போது, போதையில இருக்கும் போது மட்டும் அடிக்கடி ”ன்ன்ன்...ஞான் ஸ்டெடி’னு தெளிவா சொல்றாய்ங்களே.... லாஜிக் படி இது சரியா?

ரவுண்ட் 3:
கொஞ்சம் போதையேறுனதும், எப்போதோ நடந்த ஒன்று நினைவுக்கு வந்து ஈகோவை தூண்டிவிட, எப்பாடுபட்டாவது போனைப் போட்டு சண்டைய இழுக்குறவரு, சரக்கு மீறிப்போயி சாக்கடையோரம் கிடக்கும் போது மட்டும் தெருநாய் வந்து உச்சா போனாக்கூட “ஈகோ” இல்லாம சமத்துவத்தோட கெடக்க முடியுதே அது எப்புடி!!!!???

ரவுண்ட் 4:
சரக்கு மீறுனதுக்கப்புறம் எட்டுக்கட்டையில் பழைய சினிமா பாட்டும், கேள்விப்படாத சில கெட்டவார்த்தைகளும் சரளமா வருதே... அட அதுவரைக்கும் இந்த திறமையையெல்லாம் (!!!) எங்க ஸ்டாக் வச்சிருப்பாய்ங்க?

ரவுண்ட் 5:
சரக்கு வாங்கிகிட்டு மீதி சில்லறையை வாங்காதப்போ, பிளாஸ்டிக் டம்ளர மூனு ரூபா கொடுத்து வாங்குறப்போ, சோடாவ ரெண்டு மடங்கு வெல கொடுத்து வாங்குறப்போ, சைடு டிஷ்க்கு சிக்கனை நாலு மடங்கு கொடுத்து வாங்குறப்போ இருக்கிற தாரள பிரபு கொள்கை, பிறந்ததிலிருந்தே வந்ததா இல்லை தற்செயலா சரக்கு கடைக்கு மட்டுமா!!!???

சைட் டிஷ்....
பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?
__________________________________________

40 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

சரக்கடிக்கறதப் பற்றி உங்களுக்கென்ன தெரியும் கதிர்.........


விடுங்க...விடுங்க....அது ஒரு தனி உலகம்......உங்களால் புரிந்து கொள்ள முடியாது

Unknown said...

சரக்கடிக்கறதப் பற்றி உங்களுக்கென்ன தெரியும் கதிர்.........


விடுங்க...விடுங்க....அது ஒரு தனி உலகம்......உங்களால் புரிந்து கொள்ள முடியாது

Repeateeeeeee..........

அகல்விளக்கு said...

சேம் டவுட் எனக்கும் இருக்கு...

அயாம் ஆல்சோ வெயிட்டிங்க ஃபார் தி ஆன்சர்ஸ்...

தமிழ் அமுதன் said...

///பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?///


பிளைட்ல போறப்போ புடிச்சா நடு வழில எறக்கி விட முடியாதுல்ல அதனால இருக்குமோ??/;)

Kumky said...

:-00

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடேங்கப்பா.. எத்தனை ரவண்டு?? :))

jothi said...

ஆறு ரவுண்டு போயும் இப்படி ஸ்டடியா ஒரு கேள்வி கேக்கிரிங்கனா,.. நீங்க பெரிய ஆளு கதிர். அப்புறம் ஈரோடு பதிவர் சந்திப்பில் சரக்கெல்லாம் உண்டா??

புலவன் புலிகேசி said...

இந்த டவுட்டுக்கெல்லாம் டாஸ்மாக் போய் சரக்கடிச்சாதான் புரியும்...

அத்திரி said...

வெறும் அஞ்சு ரவுண்டுதானா//

க.பாலாசி said...

//ரவுண்ட் 3:
சரக்கு மீறிப்போயி சாக்கடையோரம் கிடக்கும் போது மட்டும் தெருநாய் வந்து உச்சா போனாக்கூட “ஈகோ” இல்லாம சமத்துவத்தோட கெடக்க முடியுதே அது எப்புடி!!!!???//

இத்தன கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்றது.

//ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?//

தரையோட டச்சில இல்லீல்ல.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

நல்ல இடுகை - நல்ல கேள்விகள் - பதில் ?????

ம்ம்ம் நல்வாழ்த்துகள்

THANGA MANI said...

தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!!!
|
|
|
|
|
கோபப்படாதீர்கள்.நகைச்சுவைக்காக சொன்னேன்.பதிவு ரசிக்கத்தக்கதாக உள்ளது.நன்றி.

பிரபாகர் said...

லேசா அனுபவத்துல சொல்ற மாதிரி தெரிஞ்சாலும், கதிர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவருங்கறதால.....

எத்தனை கடையில போயி பார்த்தீரு இந்த இடுகைய எழுத? நல்லாவே ஹோம் வொர்க் பண்ணியிருக்கீர்...

பிரபாகர்.

நவீன் said...

'தெளிவா' கேட்டு இருக்கீங்க... ;)

//தெளிவா இருக்கிறவங்க யாரும் ’போதையில’ இருக்குறோம்னு சொல்லாத போது, போதையில இருக்கும் போது மட்டும் அடிக்கடி ”ன்ன்ன்...ஞான் ஸ்டெடி’னு தெளிவா சொல்றாய்ங்களே.... லாஜிக் படி இது சரியா?//

இது டாப்பு

vasu balaji said...

/”ன்ன்ன்...ஞான் ஸ்டெடி’னு தெளிவா சொல்றாய்ங்களே.... லாஜிக் படி இது சரியா?/

அடங்கப்பா சாமீ.கண்ணுமுன்னாடி வருது சீன். ம்ம்ம்ம்ம்முடியல=))

/தெருநாய் வந்து உச்சா போனாக்கூட “ஈகோ” இல்லாம சமத்துவத்தோட கெடக்க முடியுதே அது எப்புடி!!!!???//

தான் குடிக்கறதில்லன்னு தெருநாய்க்கு அம்புட்டு இளக்காரம்.

/பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?/

அது நடக்கறப்ப பறக்கப்படாது. பறக்கறப்ப பறந்தா தப்பில்லைன்னு குடுக்குறாய்ங்கப்பு.

பூங்குன்றன்.வே said...

//ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே,//

பாஸ்..நான் வர ப்ளைட்ல கொடுக்கறதே ஒரே ரவுண்டுதான்; அதையும் கெடுத்துரீவங்க போல :)

ஜெட்லி... said...

//பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?
///


இதை ரூம் போட்டு
சரக்கு அடிச்சு யோசிச்சு அப்புறம் பதில் சொல்றேன்.

அரசூரான் said...

ஒன்னு நல்லா தெரிஞ்சி போச்சி... உங்களுக்கு ஒரு ரவுண்டுக்கு மேல தாங்காதுன்னு. பின்ன... தெளிவா இருக்குறவங்க "நான் போதைல சொல்லல-ன்னு-ல்ல பதிவியிருக்கனும்", நீங்க உளறிட்டீங்க... அவுட் 2-வது ரவுண்டல அவுட்.

சைட் டிஷுக்கு பதில பழமை ஈரோடு பதிவர் சங்கமத்துல நேரடிய சொல்ரேன்னு என்கிட்ட சொன்னர்... கேட்டு மறக்காம மறுபதிவுல போடுங்க.

Rajan said...

அம்மா ஆட்சில டே நைட் சரக்கு கும்முன்னு இருந்துச்சு இப்போ கண்டதும் வர்றதால உங்குளுக்கு இத்தன பிரச்சன

Ashok D said...

நல்.. நல்லா...யிருக்குங்ங்ங்ங்ங்க... அதாவ்து.. நான்... என்னா சொல்லவர்றென்னாக்கா.......... என்னா...சொல்....வர்றேஏஏஏஏஎ..... நாளைக்கி பேசிக்காலாம்ன்னா......

சங்கர் said...

//குடிக்கிறவனயோ, ஊத்தறவனையோ யாரும் கண்ணக் குத்தமாட்டாய்ங்களா!!!???//

உள்ள போற சரக்கு தான் குடலக் குத்தி புண்ணாக்குதே, கண்ணா வேற தனியா குத்தணுமா

Romeoboy said...

சைடு டிஷ் கண்டிப்பா யோசிக்கவேண்டிய ஒன்று ..

Chitra said...

ரவுண்ட் 3:
கொஞ்சம் போதையேறுனதும், எப்போதோ நடந்த ஒன்று நினைவுக்கு வந்து ஈகோவை தூண்டிவிட, எப்பாடுபட்டாவது போனைப் போட்டு சண்டைய இழுக்குறவரு, சரக்கு மீறிப்போயி சாக்கடையோரம் கிடக்கும் போது மட்டும் தெருநாய் வந்து உச்சா போனாக்கூட “ஈகோ” இல்லாம சமத்துவத்தோட கெடக்க முடியுதே அது எப்புடி!!!!??? ................... applause!

சீமான்கனி said...

அதெல்லாம் ஒரு தனி (தண்ணி) கலைனே...
நல்ல ஆராய்ச்சி அண்ணே...

என்னனே...தீடீர்னு இப்டி கேளம்பிடீங்க????
:))))))))...

பா.ராஜாராம் said...

:-)))
ராஜாராமா,விடு ஜூட்!

கலகலப்ரியா said...

=))..!

தாராபுரத்தான் said...

ரசிக்க பழ கிக்கொள்ளுங்கள்,, வேறு என்ன செய்ய,,,

Anonymous said...

ஆமா ஆழமா யோசிக்க வேண்டிய ஆறு டவுட்...கதிர் வேணாம் போற போக்கே சரியில்லை....

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா,

ரவுண்ட் 2ம் 3ம் கலக்கலோ கலக்கல்.

Cable சங்கர் said...

அட பார்ட்டி பார்ல வந்து சைட் டிஷ் மட்டும் சாப்பிடறவர் போலருக்கே...:)))))

கேபிள் சங்கர்

butterfly Surya said...

Cheers..

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நல்லா யோசிக்கிறீங்க தோழர் நீங்க..!! ஆனா ஆரூரன் சொல்ற மாதிரி அது ஒரு “தனி” தண்ணி உலகம்..!! அந்த மாயைக்குள நுழைஞ்சு பார்த்தாதான் தெரியும்.. அதோட வினோதங்களும் கதைகளும்..!!

அன்பேசிவம் said...

எதாஇருந்தாலும் எங்க அண்ணன்கிட்ட கேட்டுங்க.. எங்க அண்ணன் யாருன்னு கேட்டா.... உங்களுக்கு வால் முளைக்கும்ன்னு சாபம் விடுவேன்.ஜாக்கிரதை.

அன்புடன் நான் said...

நேர்மையான கேள்விதான்... என்னசெய்ய அத அவுங்ககிட்டத்தான் கேட்கனும் கதிரண்ணா.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எல்லா கேள்விக்கும் பதில் நேர்ல வந்து சொல்றேன். ஆமாமா! கட்டிங் போட்டுட்டுதான்.

priyamudanprabu said...

சைட் டிஷ்....
பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?

ha haa

Prasanna said...

//சரக்கு வாங்கிகிட்டு மீதி சில்லறையை வாங்காதப்போ, பிளாஸ்டிக் டம்ளர மூனு ரூபா கொடுத்து வாங்குறப்போ, சோடாவ ரெண்டு மடங்கு வெல கொடுத்து வாங்குறப்போ//


காதலுக்கு மட்டும் இல்லை.. சரக்குக்கும் கண்ணில்லை ;)

Thenammai Lakshmanan said...

கதிர் என்னது இதெல்லாம்...:(((

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆழ்ந்த கருத்துள்ள பதிவு... "குடி" மக்களுக்கு உபயோகமான பதிவு... (கஷ்டம் டா சாமி...)

goma said...

ஆறு டவுட்டும் தீராத டவுட்தான்