குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...
ஊன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...
திரும்பிச்சென்ற அலைகள் விட்டுப்போன
பிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை
இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை...
குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...
ஊன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...
திரும்பிச்சென்ற அலைகள் விட்டுப்போன
பிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை
இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை...
குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?
_________________________________________________
43 comments:
//குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது//
நிச்சயமாய் ஏதுமில்லை..
ஒரு கவிஞர் உதயமாயிட்டார்.. எல்லாரும் ஓடுங்கோ:-))
அருமையான கவிதை.. குழந்தை உலகிலேயே எல்லோரும் கரைந்திருந்தால் உலகமே சொர்க்கமாய்த்தானிருக்கும்
/இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்../
நம்பிக்கைத் துளிர்கள்..க்ளாஸ்
/பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்/
ம்ம். அபாரம்.
/இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை.../
அட!
/அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது? /
அழகு.
சிங்கம் களமிறங்கிருச்சேய். எவ்ளோ நாளாச்சி இப்படி கவிதை வந்து..
தெந்தூரு பீச்சுங்ணா! மணிரத்தனம் சூட்டிங்க் புடிச்சாருங்ளா. யூத்து மூஞ்சி தெரியாம சூப்பரா எடுத்துருக்காரு.
புத்தாண்டு வாழ்த்துக்கள் கதிர்..(அழகிய அந்த நதிக்கும்)
//ஊன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...//
அழகான அனுபவம்.
எந்த ஊரு கடற்கரைக்கு போனீங்க.?? ரொம்ப அனுபவச்சி எழுதியிருக்கீங்களே.
//வானம்பாடிகள்//
//தெந்தூரு பீச்சுங்ணா! மணிரத்தனம் சூட்டிங்க் புடிச்சாருங்ளா. யூத்து மூஞ்சி தெரியாம சூப்பரா எடுத்துருக்காரு.//
யூத் படந்தாங்ணா, இருவது வருச முன்னடி புடிச்சதுங்க இந்த படம்
/குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?/....
super..
கவிதையும் யூத் அப்பா எழுதுதானுங்கோ......
தண்டோரா ...... said...
/புத்தாண்டு வாழ்த்துக்கள் கதிர்..(அழகிய அந்த நதிக்கும்)//
அண்ணே! என்னதான் புதுவருஷ கொண்டாட்டம்னாலும் கடல நதின்னு சொல்றது கொஞ்சம் ‘ஓவரா’ தெரியல:))
புத்தாண்டு வாழ்த்துக்கள் கதிர்..,
குழந்தைகளின் உலகம் ஒரு மாய உலகம்...அவர்களின் உயரங்களுக்கு தக்க நம்மை சுருக்கிக்கொண்டால் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கும்..
அப்புறம்...அப்புறமென்ன...அப்புறம்தான்தெரியும் யார் குழந்தைகளென..
அருமை கதிர்..!
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...
//ஊன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...//
சுபெர்ர்......வரிகள் ரசித்தேன் அண்ணே...அழகான கவிதை....வாழ்த்துகள்
கடைசி வரிகள் அழகு கதிர்..:-)))
அண்ணே! என்னதான் புதுவருஷ கொண்டாட்டம்னாலும் கடல நதின்னு சொல்றது கொஞ்சம் ‘ஓவரா’ தெரியல:))////////////
ஈரோட்ல கடல் இல்லைன்னு அப்படி சொல்லியிருப்பார். இல்லே வேற எதுவும் அர்த்தம் இருக்குமோ..?? கேபிளுக்கு தெரியும்..
குழந்தைகளின் உலகமும் மனமும் ஒரு அலாதி..
இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை "
என்ற அமெரிக்காவின் மிகப்பெரும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க் ட்வைனின் வரிகள் நினைவுக்கு வந்தது.
அருமை கதிர்.
குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்//
உண்மை :)
கதிர்,
உங்களின் மௌனக்கசிவு அலைகள் மனதைக்கழுவி மலர்ச்சியை ஏற்படுத்துகிறது. உங்களின் மிகப்பிடித்தவைகளில் கசியும் மௌனமில்லாத இதுவும் ஒன்று.
பிரபாகர்.
நன்றி @@ இயற்கை(ராஜி)
நன்றி @@ வானம்பாடிகள்
(அட உங்க ஊரு பீச்சுதானுங்க)
நன்றி @@ தண்டோரா
நன்றி @@ க.பாலாசி
நன்றி @@ ஆரூரன்
நன்றி @@ ஜீவன்
நன்றி @@ கும்க்கி
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ அப்பன்
நன்றி @@ seemangani
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி @@ butterfly Surya
(அண்ணே... நதி என் பொண்ணோட பேரு)
நன்றி @@ மயில்
நன்றி @@ பிரபாகர்
நல்லாருக்கு ஜி... பெசண்ட் நகர் பீச்சுக்கு போனாக்கூட கவிதை கிடைக்குதே.. :))
அருமை...
//குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...//
//
குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?//
அருமை
வாழ்த்துகள்
/குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது//
அதற்கு நிகர் அது மட்டும் தான்
வாழ்த்துக்கள் கதிர்
உங்கள் மகளின் பெயர் அழகா இருக்கு
//குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...//
நம்பிக்கையான ரசனை...நன்றி கதிர்
ஆரம்பமே அமர்க்களமா!
அருமை
{{{{{{{{{{{ குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...}}}}}}}}}}}}}}}}}}
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
//
குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...
//
இரண்டு கைகளில் மிகச்சிறந்த கை நம்பிக்கைதானே கதிர்!
//
ஊன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...
//
சட்டென்று மனதில் சிறகடிக்கும் உற்சாகத்தை படம் பிடித்துக் காட்டும் வரிகளின் ஆளுமை!
//
திரும்பிச்சென்ற அலைகள் விட்டுப்போன
பிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை
இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை...
//
ஆர்ப்பரிக்கும் ஆனந்த மன அலைகளின் மகிழ்ச்சி!
//
குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?
//
இரெண்டுமே சரிவிகத உணர்வுகள்தான்!
முதல் ரெண்டு வரிகளில் உயிருடன் கலந்த ஆனந்தம்!
அடுத்த ரெண்டு வரிகளில் ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் ஓர் ஆனந்தம்!
அருமை அண்ணா...
படம் அழகு...
அருமை.
அருமையான வர்ணிப்பு. கடல் அலையில் குழந்தைகளுடன் கால் நனைத்த உணர்வு. அழகான வார்த்தைகள். சூப்பர்.
நன்றி @@ Cable Sankar
(அண்ணே.... மெரினா. நம்ம கேமரா பவுரு அம்புட்டுதான்)
நன்றி @@ Gowripriya
நன்றி @@ திகழ்
நன்றி @@ ஜோதி
நன்றி @@ புலவன் புலிகேசி
நன்றி @@ ஜெரி ஈசானந்தா
நன்றி @@ T.V.Radhakrishnan
நன்றி @@ சங்கர்
நன்றி @@ RAMYA
(ரம்யா.... வாழ்க.... (நாலு பின்னூட்டம்ல))
நன்றி @@ அகல்விளக்கு
(படத்துல இருக்குற நானு!!!)
நன்றி @@ ஸ்ரீ
நன்றி @@ பின்னோக்கி
அழகான ஆழமான வரிகள்
மகிழ்ச்சிக்கு குழந்தை
அமைதிக்கு கடல்
இவற்றை மிஞ்ச வேறேதும் இல்லை
அன்பின் கதிர்
அருமையான கவிதை - மகிழ்வான சூழ்நிலையில் சிந்தியில் உதித்த கவிதை. குழ்ந்தைகளுடன் கடற்கரை சென்று - அலையில் - கரையில் நிற்பது ஆனந்தம்.
இறுகப்பற்றும் கைகளை இறுக்கிப் பிடிக்கும் போது நம்ம்பிக்கை துளிர் விடும்
பின்வாங்கும் அலைகல் திருடும் மணல் ஏற்படுத்தும் குறுகுறுப்பு - நிச்சயம் சோர்வு கரையும்
சென்ற அலைகள் புதிய அலைகளாக, பிசுபிசுப்பைக் கழுவி மனத்தில் அப்பும்
குழந்தைகளின் உலகத்தில் கரையும் சுகம் - அலைகளுக்கு கால்களைக் கொடுத்து மனத்தை இழக்கும் இதம் - இவைகளுக்கு ஈடு இணையே இல்லை
நல்ல கவிதை - ரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள்
நிகரில்லாத விசயங்களே நீங்கள் சொன்னவை
அருமையாகக் கசிந்த மெளனம்...உரக்கவே விழுந்தது எல்லோருடைய செவிகளிலும்
Nice!
ஒரு நாய்குட்டி போல நம் காலைதழுவி செல்லும் அலைகளின் அழகில் மயங்காதவர் யாரேனும் இருக்கமுடியுமா?
Post a Comment