பகிர்தல்... (01.12.09)

சாதனை : (‘சா’விற்கு பதிலாக ‘சோ’ (அ) ‘வே’ போட்டுக்கொள்ளலாம்)
மக்களவையில் இருபது உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டிய கேள்வி நேரத்தில் வெறும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மக்களவையில் கேள்வி கேட்க உறுப்பினர்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

கேள்வி நேரத்தில் அவையில் இருப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு என்ன வேலை? இவர்கள் செய்வது நியாயமா? ............... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்ன கிழிக்க முடியும்.

தகுதி, தரம் பார்த்தா வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்? நம் மதம் அல்லது ஜாதியைச் சார்ந்தவர், அந்த கட்சியின் வேட்பாளர், வாக்குக்கு பணம் கொடுத்தார் என்ற அடிப்படையில் தானே தேர்ந்தெடுத்தோம்... சரி அனுபவிப்போம்!!!

%%%%

ஆச்சரியம்:
சமீபத்தில் அடிக்கடி எங்கள் பகுதியில் சில வீடுகளுக்கான மின்சாரம் ஏதோ காரணத்தால் அடிக்கடி தடை படுகிறது. அது குறித்து மின்சார அலுலகத்தில் தொலைபேசியில் அழைத்தால் ஆச்சரியமாக அவர்களிடமிருந்து இணக்கமான பதில் வருகிறது, அதோடு புகார் செய்ததற்கான புகார் எண் கொடுக்கிறார்கள்... மகிழ்ச்சியான விசயம் சில மணி நேரத்தில் சரி செய்தும் விடுகிறார்கள்.

%%%%

அலட்சியம்:
தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு பதிமூன்று பேர் விபத்தில் பலியாகிறார்கள். பல சமயம் இது வெறும் செய்தியாகவே நம் மனதில் படுகிறது. அதுவே நம் நெருங்கிய உறவில் அல்லது நட்பில் நிகழும் போது மிகப் பெரிய இழப்பாக அதிர்ச்சியாக, வருத்தமாக, இருக்கிறது. விபத்திற்கான மிக முக்கியக் காரணம் விநாடி நேர கவனக்குறைவும், அலட்சியமுமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

%%%%

மகிழ்ச்சி:
முதலில் லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். லவ்டேல் மேடியின் திருமணத்தை ஒட்டி ஈரோட்டில் நிறைய பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு பதிவர்கள் வர வால்பையனின் உற்சாகமான அழைப்பு முக்கியக் காரணம். வால்பையன் பதிர்வர்களின் பலம் பொருந்திய நட்பு பாலம்.

இளவல் பாலாசி அழைத்ததால் பதிவர்கள் தங்கியிருந்த சுப்ரீம் லாட்ஜ்குச் சென்றேன். அகல்விளக்கு ராஜாசிங்கை ஈரோட்டில் இருந்துகொண்டே முதல் முறை சந்திக்கிறேன். மதுரை ஸ்ரீதர் மற்றும் கார்த்திகை பாண்டியன் ஆகியோரை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறேன், வற்றாத அதே மகிழ்ச்சி, அதே புன்னகை இருவரிடமும்.

முதல் முறை சந்தித்தாலும் கும்க்கியுன் நீண்......ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று, அவருடைய வாசிப்புத்தன்மை மிகப் பெரிய அளவில் இருக்கிறது. எழுத்தாளர் வாமு.கோமு வந்திருந்தார். கும்க்கி வாமு.கோமு எழுத்து பற்றி நிறைய பகிர்ந்தார், நான் இன்னும் வாமு.கோமு எழுத்துக்களை வாசித்ததில்லை. வாமு.கோமுவுடன் வந்திருந்த தோழர் பெரியசாமியின் கொங்குத் தமிழ் கேட்க காது குளிர்ந்தது. நானும் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் என்றாலும், அவர் பேசியதில் பெரும்பாலான வார்த்தைகள் என்னிடம் உயிரோடு இல்லையென்பது வெட்ககரமான ஒன்று.

வால்பையன் எழுதியது போல் சில பதிவர்களிடம் “சரக்கு” மகிழ்ச்சி கரை புரண்டோடியது, மகிழ்ச்சியில் விடுதியின் அறைக்கதவை மிக வேகமாக மூடுவதும், சத்தம் போட்டு பேசுவதுமாக இருந்தது கண்டு வால்பையன் பலமுறை அன்பாக கடிந்து கொண்டும், அவர்களாக அடங்கும் வரையில் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில் சரக்கு மனிதர்களைக் குடித்துக் கொண்டிருப்பதை கண்கூடாக அனுபவிக்க வேண்டியிருந்தது மட்டும் நெருடலாக இருந்தது.

கணேஷ்குமார், கார்த்திக், ராஜதுரை, நாமக்கல் சிபி, சக்கரை சுரேஷ், பெர்ணான்டஸ், ராஜமணாளன், செல்வேந்திரன், ஊர்சுற்றி, தமிழரசி, ரம்யா என பதிவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று.

%%%%

பதிவர் சந்திப்பு!!!???
இந்த மாதத்தில் ஒரு ஞாயிறு மாலை ஈரோட்டில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது, ஈரோடு பகுதியில் இருக்கும் பதிவர்கள், வாசிப்பாளர்கள் கருத்துக்களைச் பகிர்ந்து கொள்ளுங்கள் எப்படிச் செய்யலாம் என்று?

___________________________________________________________

26 comments:

மணிஜி said...

/வால்பையன் எழுதியது போல் சில பதிவர்களிடம் “சரக்கு” மகிழ்ச்சி கரை புரண்டோடியது, மகிழ்ச்சியில் விடுதியின் அறைக்கதவை மிக வேகமாக மூடுவதும், சத்தம் போட்டு பேசுவதுமாக இருந்தது கண்டு வால்பையன் பலமுறை அன்பாக கடிந்து கொண்டும், அவர்களாக அடங்கும் வரையில் ஒன்றும் செய்யமுடியவில்லை.//

ஹோஸ்ட் ...இல்லையா? அதான் வால் அடக்க பார்த்திருக்கிறார்

vasu balaji said...

/கேள்வி நேரத்தில் அவையில் இருப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு என்ன வேலை? இவர்கள் செய்வது நியாயமா? .............../

ஒரு நாளைக்கு ஒரு கோடின்னு எப்பவோ சொன்ன கணக்கு. போச்சா..ஆவ்வ்வ்.

/ஆச்சரியம்:
சமீபத்தில் அடிக்கடி எங்கள் பகுதியில் சில வீடுகளுக்கான மின்சாரம் ஏதோ காரணத்தால் அடிக்கடி தடை படுகிறது. அது குறித்து மின்சார அலுலகத்தில் தொலைபேசியில் அழைத்தால் ஆச்சரியமாக அவர்களிடமிருந்து இணக்கமான பதில் வருகிறது, அதோடு புகார் செய்ததற்கான புகார் எண் கொடுக்கிறார்கள்... மகிழ்ச்சியான விசயம் சில மணி நேரத்தில் சரி செய்தும் விடுகிறார்கள்.//

வெறுப்பேத்துறீங்களா? இங்க நம்ம ஏரியால ஒரு நாள் போன் பண்ணேன். ஏங்க பொழுது போவாம கட் பண்றமா? வேல நடக்குது. எப்ப முடியும்னு எப்புடி சொல்றதுன்னான்.

/அலட்சியம்:
விபத்திற்கான மிக முக்கியக் காரணம் விநாடி நேர கவனக்குறைவும், அலட்சியமுமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை./

தினம் ஒன்னாவது செல்லுல பாட்டு கேட்டுகிட்டு பேசிகிட்டு ட்ரெயின்ல சாவறாங்க.

/மகிழ்ச்சி:
முதலில் லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். /

நானும் நானும்.

/தோழர் பெரியசாமியின் கொங்குத் தமிழ் கேட்க காது குளிர்ந்தது./

எங்களையும் குளிர வைக்கலாமல்லோ.

/பதிவர் சந்திப்பு!!!???
இந்த மாதத்தில் ஒரு ஞாயிறு மாலை ஈரோட்டில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது, ஈரோடு பகுதியில் இருக்கும் பதிவர்கள், வாசிப்பாளர்கள் கருத்துக்களைச் பகிர்ந்து கொள்ளுங்கள் எப்படிச் செய்யலாம் என்று?/

போன இடுகை ஒரு வாட்டி படிச்சிக்கிங்க. யாரலையோ செய்யக்கூடிய ஒன்று. நீங்களே செய்யலாமே=)). வாழ்த்துகள்.

Ashok D said...

//ஹோஸ்ட் ...இல்லையா? அதான் வால் அடக்க பார்த்திருக்கிறார்//

ஹிஹிஹிஹி

சுவையான பதிவுங்க. கரெக்டு கும்க்கி கொஞ்சமாதான் பேசுவார்.

கலகலப்ரியா said...

நல்ல பகிர்வு...!

//வாசிப்பாளர்கள் கருத்துக்களைச் பகிர்ந்து கொள்ளுங்கள் எப்படிச் செய்யலாம் என்று?//

அண்டர் வாட்டர்..... ஆகாய விமானம்..... கொஞ்சம் ஓல்ட் ட்டிரெண்ட்டு...! கால்ப்பாக்கம் அணு மின்நிலையத்தில்... அணு உலைகளுக்குப் பக்கத்தில் சந்திப்பை நடத்திச் சாதனை புரியலாமே..! (என்னால முடிஞ்சது...)

கலகலப்ரியா said...

//D.R.Ashok said...

//ஹோஸ்ட் ...இல்லையா? அதான் வால் அடக்க பார்த்திருக்கிறார்//

ஹிஹிஹிஹி

சுவையான பதிவுங்க.//

மத்யான சாப்பாடு சாப்டுண்டே பேசுறார் போல..! நீங்க தப்பா எடுத்துக்காதீங்க கதிர்..!

க.பாலாசி said...

//கேள்வி நேரத்தில் அவையில் இருப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு என்ன வேலை?//

வேறென்ன வேலை...காசு எங்க கிடைக்கும்னு பார்க்க போயிருப்பாங்க...

//தகுதி, தரம் பார்த்தா வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்?//

தகுதியும், தரமும் வாய்த்தவர்களா தேர்தலில் நிற்கிறார்கள்?

//மகிழ்ச்சியான விசயம் சில மணி நேரத்தில் சரி செய்தும் விடுகிறார்கள்.//

கொடுத்துவைத்தவர் போலிருக்கிறது அல்லது ஆற்காட்டார் உங்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லைபோலும்.

//அதுவே நம் நெருங்கிய உறவில் அல்லது நட்பில் நிகழும் போது மிகப் பெரிய இழப்பாக அதிர்ச்சியாக, வருத்தமாக, இருக்கிறது. //

உண்மைதான். அலட்சியம்....

//இவ்வளவு பதிவர்கள் வர வால்பையனின் உற்சாகமான அழைப்பு முக்கியக் காரணம். //

கண்டிப்பாக...வால்பையனின் ஒருங்கிணைப்பே இவ்வளவு பெரிய சந்திப்பிற்கு காரணம்.

//நீண்......ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று//

மறக்கமுடியுமா?.......

மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பை ஈரோட்டில் அறங்கேற்றலாம்.

KARTHIK said...

// மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பை ஈரோட்டில் அறங்கேற்றலாம்.//

என்னாது மீண்டுமா
அப்போ இதுக்கு முன்னால எப்பங்க அறங்கேத்துனீங்க :-))

Anonymous said...

கதிர் பேசி தான் கேட்க முடியவில்லை..ஏன் கதிர் நீங்க ரொம்ப ரிசர்வ் டைப்பா? கொஞ்சமாத்தான் சிரிச்சீங்க...அப்புறம் அது சர்க்கரை சுரேஷ் இல்லைப்பா எழுதுவதெல்லாம் எழுத்தல்ல சுரேஷ் அங்க சும்மா விளையாட்டுக்கு அப்படி அறிமுகப்படுத்தினாங்க..எப்படியோ கதிரை சந்தித்திலும் மகிழ்ச்சி

கலகலப்ரியா said...

atom bomb innum vedikkalayaa..=))

நர்சிம் said...

பகிர்தலுக்கு நன்றி.

ஈரோட்ல மழைவேண்டுமா?

தமிழ் அமுதன் said...

///மக்களவையில் இருபது உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டிய கேள்வி நேரத்தில் வெறும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.///

//இவ்வளவு பதிவர்கள் வர வால்பையனின் உற்சாகமான அழைப்பு முக்கியக் காரணம். //

நம்ம வால் பையனை மக்களவைக்கு அனுப்பிடுவோமா...???

cheena (சீனா) said...

படித்தேன் ரசித்தேன் - மக்களவையில் கோரம் இல்லாதது - மின்சாரத்துறையில் புரட்சி - அலட்சியம் - லவ்டேல்மேடியின் திருமணம் - எலாமே நல்லா இருக்கு

ஆமா அடுத்த பதிவர் சந்திப்பு - ஜமாய்ங்கோ - நல்வாழ்த்துகள் - டிசம்பர் 20 / 27 ஏதாவது ஞாயிறு வைச்சா நானும் வரலாம்

பாத்துக்கங்க

பழமைபேசி said...

வணக்கம் மாப்பு!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ தண்டோரா

நன்றி @@ வானம்பாடிகள்
(//எங்களையும் குளிர வைக்கலாமல்லோ//
வாங்க ஒருநாள் சந்திப்போம்)

நன்றி @@ D.R.Ashok

நன்றி @@ கலகலப்ரியா
(//அணு உலைகளுக்குப் பக்கத்தில் சந்திப்பை நடத்திச் சாதனை புரியலாமே..!//
உங்க தலைமையில நடத்தலாம் வாங்க)


நன்றி @@ க.பாலாசி
(//ஒரு பதிவர் சந்திப்பை ஈரோட்டில் அறங்கேற்றலாம்.//
கண்டிப்பாக பாலாஜி)

நன்றி @@ கார்த்திக்
(//அப்போ இதுக்கு முன்னால எப்பங்க அறங்கேத்துனீங்க//
அட... இது வேறையா)


நன்றி @@ தமிழரசி
//எழுதுவதெல்லாம் எழுத்தல்ல சுரேஷ்//

நன்றி தமிழ்

நன்றி @@ நர்சிம்
//ஈரோட்ல மழைவேண்டுமா?//

நர்சிம் மழை பத்தலீங்க

நன்றி @@ ஜீவன்

நன்றி @@ cheena (சீனா)
(தங்கள் வருகையை எதிர்நோக்குகிறேன்)

நன்றி @@ பழமைபேசி
(மாப்பு... நலமா)

Kumky said...

நல்ல பகிர்வு அன்பரே..,

சொல்லித்தீர்வதில்லை தொடர்ந்தோடும் எண்ணங்கள்..

அதுவும் சுருங்கக்கூறின் விரிவான புரிதலுள்ள உங்களை போன்ற நட்புக்களிடம் பேசியதில் மிக்க மகிழ்வு.

தோழர் பெரியசாமி ஒரு காட்டாற்று வெள்ளம்...முங்கிவிட்டால் மீண்டெழுவது மிக கடினம்..

வா.மு. மனிதர்களை கவனிப்பதில் உச்சமானவர்..
யார் கண்டார்...இங்கிருந்தே கூட அவரின் கதைக்களம் தொடங்கியிருக்கவும் கூடும்.

சக்கரை சுரேஷ்....சக்கரை?

ப்ரியமுடன் வசந்த் said...

//கேள்வி கேட்க உறுப்பினர்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.//

இருந்தாலும் சிலபயலுவ கேள்வியா கேட்குறானுக சண்டையில போடுறானுங்க அதுக்கு இது பெட்டர்தான்...

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன என் தமிழ எல்லாரும் நல்லா லந்து பண்ணுனாங்கலாமே... ப்ச் நானும் இருந்துருந்தா அவங்களோட சேர்ந்து லந்து பண்ணி அவங்களோட அந்த வெட்கத்த பாத்திருப்பேனே... வட போச்சே...

RAMYA said...

கதிர் உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

ஆனால் பேசத்தான் நேரம் இல்லே :-)
அவசரமா கிளம்பிட்டீங்க :-)

வால்பையன் said...

//விடுதியின் அறைக்கதவை மிக வேகமாக மூடுவதும், சத்தம் போட்டு பேசுவதுமாக இருந்தது கண்டு வால்பையன் பலமுறை அன்பாக கடிந்து கொண்டும், அவர்களாக அடங்கும் வரையில் ஒன்றும் செய்யமுடியவில்லை.//


கடைசி வரைக்கும் எனக்கு துளி கூட மப்பு ஏறாதததுக்கு காரணமே அது தான் தல!

Unknown said...

மேடியின் திருமணத்திட்கு சனிக்கிழமை மதியம் வந்ததால் நிறைய நண்பர்களை சந்திக்க முடியவில்லை.. :-(
வால்பையனையும், கும்க்கியையும் மட்டுமே சந்திக்க முடிந்தது..
அடுத்த சந்திப்பில் நிச்சயம் முன்பே கலந்து விழாவை சிறப்பிக்கிறேன்.. :-)

//.. சக்கரை சுரேஷ்....சக்கரை? ..//

கும்க்கி, கடைசியா சந்திச்சமே அவரா இவரு?

சீமான்கனி said...

1,நெஜமாவே சோதனை தான் ...அண்ணே...


உங்கள் பதிவர் சந்திப்பு பகிர்வு அருமை...மகிழ்ச்சி...

தாராபுரத்தான் said...

வாசிப்பாளர்களும் வரலாமா./

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்

புலவன் புலிகேசி said...

பதிவர் சந்திப்பு நடைபெற வாழ்த்துக்கள்...

இரா. வசந்த குமார். said...

any sunday... me ready... :)

பின்னோக்கி said...

//ஒரு கட்டத்தில் சரக்கு மனிதர்களைக் குடித்துக் கொண்டிருப்பதை

உங்கள் சமூக அக்கறை பாராட்டுதற்குரியது. அருமையான வரிகள்.