Showing posts with label பதிவர்வட்டம். Show all posts
Showing posts with label பதிவர்வட்டம். Show all posts

Dec 10, 2011

சங்கமம்-2011 வர்றீங்கதானே?

சங்கமம்-2011
இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.


வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

எங்கு, எப்போது, என்ன?
சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?
ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:
முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011  நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம். 

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.
மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்

வர்றீங்கதானே!?
-0-

Jan 28, 2011

மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman

கொல்லப்படும் மீனவர்களைக் காக்க, சிங்கள இனவாதத்திற்கு எதிராக, இந்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக காலையில் இருந்து ஒட்டுமொத்த ட்விட்டர் தளம் தகிக்கிறது.

அந்தக்குரல் இன்னும் வலைப்பக்கம் உட்பட மற்ற தளங்களில் ஓங்கி ஒலிக்கவில்லையென்றே தோன்றுகிறது. கொஞ்சம் உங்கள் குரலை உயர்த்துங்கள்..... ஒரு மாற்றத்துக்கான சிறு தீ ட்விட்டர் தளத்தில் சுடர்விட்டிருக்கிறது.

உங்கள் குரல்களை ட்விட்டரில் பதிந்து #tnfisherman என இணைத்திடுங்கள். கணக்கு இல்லாதோர் ட்விட்டரில் கணக்குத் துவங்கி குரல் கொடுங்கள்.




-------------------------------------
மீனவர் பிரச்சனைக்காக தமிழ்மணம் ஜன்னல் திறந்தது போல் மற்ற தளங்களும் திறக்க வேண்டும். #tnfisherman

மீனவர்களுக்காக ட்விட்டர் மட்டும்தானா facebook/ buzz / blog எல்லாம் தூங்குகிறதே! (((: #tnfisherman

மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கவில்லை - இலங்கை. அப்போ கூட்டிவந்து குடிவெச்சிருக்கிற சீனாக்காரன் தாக்கியிருப்பானோ!!? #tnfisherman

வெளியுறவுத்துறை செயலர் நிருபமா கொழும்பு பயணம்-எஸ்.எம்.கிருஷ்ணா # இராஜபக்ஷேவை நலம் விசாரிக்கத்தானே!!!! #tnfisherman

மீனவர் கொலைகளைத் தடுக்க ரசிகர்களை பிரதமருக்கு போஸ்ட்கார்டு போடச்சொல்லிட்டாரா சுனாமியில் மீண்டு வந்த மீனவன்சுறாவிஜய்!!!! #tnfisherman

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!! இணைந்து இன்னும் பல கொலைகளை சகித்துக்கொல்வோம் #tnfisherman

நாகையில் வைகோ 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போறாராம்! ஏன் அதுவரைக்கும் நல்ல நாள் இல்லையோ #tnfisherman

இப்படி ட்வீட்-டி என்ன கிழிச்சுடப்போறீங்கன்னு கேக்குது ட்வீட் படிக்கிற ஒரு சோனியா அடிமை! # எதாவது கிழியும் வரை ட்வீட்வோம் #tnfisherman

குடிசைகளே இல்லாத கிராமங்கள்! # கருணாநிதி மீனவனே இல்லாத கடற்கரைகள் # சிங்கள ராணுவம் # நல்ல டீல்! #tnfisherman

மறைந்த போளூர் வரதன் எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு கிடாவெட்டிய காங்கிரஸார்! # கூடவே மீனவனையும் #tnfisherman

தமிழா! தமிழா!! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப்போட்டாலும், மீன் பிடிக்க மட்டும் போகமாட்டேன் # கலைஞர் டிவி # #tnfisherman

பெண்கள், வயசானவங்க - இத படிக்காதீங்க... http://tinyurl.com/458wwyu

தோழா..... வானம் தூரம் இல்லை # இளைஞன் தமிழ் மீனவா மரணம் தூரம் இல்லை # ஆளும்கட்சி #tnfisherman

ஆறுதல் கூறப்போன இடத்திலும் ஓட்டு கேட்கிறார் ஜெ: முதல்வர் புகார் # அப்படியே தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க தலைவரே

மீனவனை சிங்களன் கொல்லுமபோது அமைதிகாக்கும் இறையாண்மை, சிங்களனை அடிப்பேன் எனும்போது மட்டும் விழித்துக்கொல்வது ஏன்? #tnfisherman

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா: அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து # தமிழக மீனவர்கள் என்னா குலம்? # #tnfisherman

இனிய நண்பர் இராஜபச்ஷே-ன் நோய் குணமாக, இந்தியா சார்பில் மீனவர்களைக் காவுகொடுக்கச்சொல்லி இத்தாலிய சாமியார் சொல்லியிருப்பாரோ? #tnfisherman

புதுவை காங்கிரஸில் பதவி கொடுக்கலைனு .சி ஆட்கள் தீக்குளிக்கறாங்களாம். உப்புப்போட்ட 2 மீன்துண்டு தின்னுட்டு தீக்குளிக்கபோங்க #tnfisherman

1991-96ஜெயலலிதா ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் #நோட் திஸ் ராஜபக்ஷே!

மீனவர் ஜெயக்குமார்மறைந்தசெய்தி கேள்வியுற்றதும் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு ரூ.5 லட்சம் தந்தது #கொலையில்லையாம் #tnfisherman

மீனவர்களுக்காக சினிமாக்காரங்க கருப்புத் துணியோட இன்னும் சீன் காட்டலையே! .. அடுத்த படம் ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காதோ #tnfisherman

ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி # நாசமாப்போச்சு! ? #tnfisherman

மத்திய/மாநில ஆட்சி(!) புரியும் அரசியல்வாதிகள் யாருக்கும் இந்த ஒரு வாரமா தின்ன மீன்ல ஒரு முள்ளுகூட குத்தலையா? #tnfisherman

இணைந்து குரல் கொடுப்போம் http://www.savetnfisherman.org/

----------------------------------------------

தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. http://www.savetnfisherman.org/


பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண http://twitter.com/#!/search?q=%23tnfisherman



 -0-

Dec 21, 2010

நம்பிக்கை நகர்த்தும்….. சங்கமம்–2010

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.





வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.




பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் - 
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள் - 
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம்
எடுக்கலாம் வாங்க - 
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில்
நேர்த்தி - 
கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை -  
சிதம்பரன்.கி

மதியம்
01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் - 
ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் - 
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல்
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவு



குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சியை நடத்துவது மட்டும்தான் நாங்கள்…. இது நமக்கானதொரு பொதுக்கூடல்… இதன் வெற்றி முழுக்கமுழுக்க உங்களின் பங்கேற்பில் மட்டுமே! உங்கள் வருகை மட்டுமே இப்போதை அவசரமான அவசியம்! இது  வரை பயண ஏற்பாடு செய்யாதவர்கள் கூட இப்போது நினைத்தாலும் திட்டமிட்டு ஈரோட்டிற்குப் பயணப்பட முடியும்..

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம், நம்பிக்கைதானே எல்லாவற்றையும் நடத்திச்செல்கிறது.
 -0-

Jun 13, 2010

மீண்டு வா பிரபா – கண்ணீர் அஞ்சலி


வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக, துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன.

நேற்று காலை இனிய நண்பன் வாழ்க்கை வாழ்வதற்கே பிரபாகரோடு வெப் கேம் வழியே சிரிக்கச் சிரிக்க பேசிக்கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வானம்பாடி பாலண்ணா கேட்டார் பிரபா பேசினாரா, தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லையாம், மூளை ரத்தக் கசிவாம், இப்பவே கிளம்பி வர்றாராம்மனசு திக்கென்றது. சற்று முன் சிரிக்கச் சிரிக்கப் பேசிய பிரபா, உடனே சிங்கப்பூரில் கிளம்பி வருவதாகச் சொல்வது, ஏதோ மிகப் பெரிய விபரீதத்தை சொன்னது.

அதேசமயம் ஆத்தூரில் இருக்கும் எனது மாமாவை அழைத்து, பிரபா தம்பிக்கு உடம்பு சரியில்லையாம், எப்படி இருக்கார்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து பாலாண்ணாவோடு நள்ளிரவு வரை தொடர்பிலிருந்தேன். விமானத்தை விட்டு இறங்கி ஆட்டோ மூலம் சென்ட்ரலுக்கு வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார், சற்று நேரம் கழித்து மிக அவசரமாக வரச்சொல்றாங்களாம், அதனால அசோக் நகர்ல இறங்கி சேலம் பஸ் பிடிக்க முயற்சி செய்றாராம்என்றார். குடும்பத்தினர் அவசரமாக வரச்சொல்கிறார்கள் எனக் கேட்டபோது விபரீதம் கனக்கத் தொடங்கியது.

காலை எழுந்து பாலாண்ணாவிற்கு போன் அடிக்க, “பிரபா பஸ் எதுவும் கிடைக்காம, டேக்ஸி பிடிச்சு சென்னையிலிருந்து சேலம் வந்துட்டார், மருத்துவமனையில் காப்பாற்ற முடியாதுனு சொல்லிட்டாங்களாம்னச்சொல்ல, பிரபாவின் எண்ணைப் பெற்று தொடர்பு கொள்ள மறுமுனையில் பிரபாகர் கதறியழ,  ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்று வெறுமையாய் கிடந்தேன்.

பிரபாவின் பெரும்பாலா இடுகைகளில் அவருடை தம்பி நிறைந்திருப்பதை கவனித்திருக்கிறேன். பிரபாவோடு எப்போதும் பேசினாலும், ஊர் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் தம்பி திவாகர் என்பது கட்டாயம் வரும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற நம்பிக்கை பிரபாகரின் மனதில் நிரம்பியிருப்பதை பேசும் ஒவ்வொரு முறையும் இனம் கண்டிருக்கிறேன். பிரபாகரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் சில சிரமங்களுக்கு, தம்பி திவாகர் தனக்கு பெரிதும் துணையாக, ஆறுதலாக இருந்து வருவதையும் அறிந்திருக்கிறேன்.

திவாகர்

கடந்த வாரம் ஊருக்கு வந்துவிட்டு பத்து நாட்கள் குடும்பத்தோடு இருந்து சென்ற பிரபாகருக்கு இந்த இழப்பு மிகக் கொடியது என்பதை முழுதாக உணரமுடிகிறது.
பிரபாகரின் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஈரத்தை, கலங்கித் தவிக்கும் மனதை, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் வேதனையை, திவாகரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் வேதனையை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றட்டும்.

மனம் முழுதும் வேதனையோடு, அமரர். திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், பிரபாகரின் மனது இழப்பிலிருந்து மீண்டு வரவும், மனது முழுதும் தேங்கி நிற்கும் கண்ணீரோடு எனது வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் சமர்பிக்கிறேன்.

பிரபா.... நீ மீண்டு... வா.... நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளுக்காகவேணும்...

வாழ்க்கை வாழ்வதற்கே

_________________________________________________________




வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...