Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Dec 5, 2010

சங்கமம் 2010 – தயாராகுங்கள் !

இப்பொழுதுதான் கைகள் பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.
சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.


வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்.

இடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
நிகழ்ச்சியில்…
நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்
எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்
காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.
உங்கள் வருகையே எங்களின் வெற்றி!
இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
 
விபரங்களுக்கு….
கதிர்                                      99653-90054
பாலாசி                               90037-05598      
கார்த்திக்              97881-33555
ஆரூரன்                             98947-17185      
வால்பையன்                  99945-00540 
ராஜாஜெய்சிங்               95785-88925       
சங்கமேஸ்            98429-10707
ஜாபர்                  98658-39393
நண்டு நொரண்டு    94861-35426
erodetamizh@gmail.com


நன்றி

______________________ 

Dec 1, 2009

பகிர்தல்... (01.12.09)

சாதனை : (‘சா’விற்கு பதிலாக ‘சோ’ (அ) ‘வே’ போட்டுக்கொள்ளலாம்)
மக்களவையில் இருபது உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டிய கேள்வி நேரத்தில் வெறும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மக்களவையில் கேள்வி கேட்க உறுப்பினர்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

கேள்வி நேரத்தில் அவையில் இருப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு என்ன வேலை? இவர்கள் செய்வது நியாயமா? ............... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்ன கிழிக்க முடியும்.

தகுதி, தரம் பார்த்தா வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்? நம் மதம் அல்லது ஜாதியைச் சார்ந்தவர், அந்த கட்சியின் வேட்பாளர், வாக்குக்கு பணம் கொடுத்தார் என்ற அடிப்படையில் தானே தேர்ந்தெடுத்தோம்... சரி அனுபவிப்போம்!!!

%%%%

ஆச்சரியம்:
சமீபத்தில் அடிக்கடி எங்கள் பகுதியில் சில வீடுகளுக்கான மின்சாரம் ஏதோ காரணத்தால் அடிக்கடி தடை படுகிறது. அது குறித்து மின்சார அலுலகத்தில் தொலைபேசியில் அழைத்தால் ஆச்சரியமாக அவர்களிடமிருந்து இணக்கமான பதில் வருகிறது, அதோடு புகார் செய்ததற்கான புகார் எண் கொடுக்கிறார்கள்... மகிழ்ச்சியான விசயம் சில மணி நேரத்தில் சரி செய்தும் விடுகிறார்கள்.

%%%%

அலட்சியம்:
தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு பதிமூன்று பேர் விபத்தில் பலியாகிறார்கள். பல சமயம் இது வெறும் செய்தியாகவே நம் மனதில் படுகிறது. அதுவே நம் நெருங்கிய உறவில் அல்லது நட்பில் நிகழும் போது மிகப் பெரிய இழப்பாக அதிர்ச்சியாக, வருத்தமாக, இருக்கிறது. விபத்திற்கான மிக முக்கியக் காரணம் விநாடி நேர கவனக்குறைவும், அலட்சியமுமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

%%%%

மகிழ்ச்சி:
முதலில் லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். லவ்டேல் மேடியின் திருமணத்தை ஒட்டி ஈரோட்டில் நிறைய பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு பதிவர்கள் வர வால்பையனின் உற்சாகமான அழைப்பு முக்கியக் காரணம். வால்பையன் பதிர்வர்களின் பலம் பொருந்திய நட்பு பாலம்.

இளவல் பாலாசி அழைத்ததால் பதிவர்கள் தங்கியிருந்த சுப்ரீம் லாட்ஜ்குச் சென்றேன். அகல்விளக்கு ராஜாசிங்கை ஈரோட்டில் இருந்துகொண்டே முதல் முறை சந்திக்கிறேன். மதுரை ஸ்ரீதர் மற்றும் கார்த்திகை பாண்டியன் ஆகியோரை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறேன், வற்றாத அதே மகிழ்ச்சி, அதே புன்னகை இருவரிடமும்.

முதல் முறை சந்தித்தாலும் கும்க்கியுன் நீண்......ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று, அவருடைய வாசிப்புத்தன்மை மிகப் பெரிய அளவில் இருக்கிறது. எழுத்தாளர் வாமு.கோமு வந்திருந்தார். கும்க்கி வாமு.கோமு எழுத்து பற்றி நிறைய பகிர்ந்தார், நான் இன்னும் வாமு.கோமு எழுத்துக்களை வாசித்ததில்லை. வாமு.கோமுவுடன் வந்திருந்த தோழர் பெரியசாமியின் கொங்குத் தமிழ் கேட்க காது குளிர்ந்தது. நானும் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் என்றாலும், அவர் பேசியதில் பெரும்பாலான வார்த்தைகள் என்னிடம் உயிரோடு இல்லையென்பது வெட்ககரமான ஒன்று.

வால்பையன் எழுதியது போல் சில பதிவர்களிடம் “சரக்கு” மகிழ்ச்சி கரை புரண்டோடியது, மகிழ்ச்சியில் விடுதியின் அறைக்கதவை மிக வேகமாக மூடுவதும், சத்தம் போட்டு பேசுவதுமாக இருந்தது கண்டு வால்பையன் பலமுறை அன்பாக கடிந்து கொண்டும், அவர்களாக அடங்கும் வரையில் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில் சரக்கு மனிதர்களைக் குடித்துக் கொண்டிருப்பதை கண்கூடாக அனுபவிக்க வேண்டியிருந்தது மட்டும் நெருடலாக இருந்தது.

கணேஷ்குமார், கார்த்திக், ராஜதுரை, நாமக்கல் சிபி, சக்கரை சுரேஷ், பெர்ணான்டஸ், ராஜமணாளன், செல்வேந்திரன், ஊர்சுற்றி, தமிழரசி, ரம்யா என பதிவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று.

%%%%

பதிவர் சந்திப்பு!!!???
இந்த மாதத்தில் ஒரு ஞாயிறு மாலை ஈரோட்டில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது, ஈரோடு பகுதியில் இருக்கும் பதிவர்கள், வாசிப்பாளர்கள் கருத்துக்களைச் பகிர்ந்து கொள்ளுங்கள் எப்படிச் செய்யலாம் என்று?

___________________________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...