மீனும் கொக்கும் பின்னே ஒரு தவளையும்

நீர் வற்றும் அந்த குளத்தில்
சேற்றில் புரளும் மீனையும்
காய்ந்த மரத்திலிருக்கும் கொக்கையும்
பார்த்தபடியே போன மீனுக்குட்டி
நீர் தளும்பும் குளமொன்றில்
மீனைத் துள்ளி விளையாடவிட்டு
மழைத்தோரணத்தில் நனைந்து
பறக்கும் கொக்கின் வாயில்
ஒரு தவளையை வைத்து
ஓவியத்தை முடிக்கிறாள்
அவள் காலோரம் தவளையொன்று
தாவிக்குதிக்கிறது*

அந்த நீர் இருந்த குளத்தில்
காத்திருக்கும் கொக்கு ஏரியொன்றையும்
சேற்றுக்குள் புதையும் மீன்
அலையடிக்கும் கடலொன்றையும்
கற்பனை செய்த கணத்தில்
பறந்துவந்த கவண் கல்லொன்று
கொக்கின் தலையைக் கொய்து
மீனருகே படையலிடுகிறது

-

நன்றி : கல்கி

No comments: