சொல்லொன்று
உயிர் தைக்கையில்
அந்தப் பார்வை
விழி தீண்டுகையில்
மூச்சுக் காற்று
நா உலர்த்துகையில்
நாண இறகு
மெல்ல உதிர்கையில்
விரற் தீண்டல்
குளிராய்ச் சூடேற்றுகையில்
உணர்வின் கதவு
தாழிடப்படுகையில்
நம்பிக்கையின்
மூடி திறக்கப்படுகையில்
ஒரு காதல்தான்
பகிரப்பட்டிருக்க
வேண்டுமென்பதில்லை
மழலையொன்று குளறியபடி
பிள்ளைப் பேறற்றவள்
தனம் பற்றியும் இருக்கலாம்!
-
1 comment:
உண்மையில் பிள்ளைபேறு அற்றவளின் அந்த வலியையும் இந்த தருணத்தையும் ஒரு சேர நினைக்கையில் மனதில் ஒரு துயரம் தாண்டிய சிலிர்ப்பை உணரமுடிகிறது... அப்பப்பா...
தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
Post a Comment