பூமிக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்பணித்து
3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை
சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி” அய்யா
இன்று இயற்கை எய்தினார்.
ஆழ்ந்த அஞ்சலிகளை அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன்.
அவர் குறித்த முந்தைய இடுகைகள்
அவர் இந்த உலகில் விட்டுவிட்டுப்போகும் அடையாளம்
இன்றோ நாளையோ அழிந்துவிடப் போவதில்லை.
இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி,
இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.
அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில்
அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
இருந்து கொண்டுதான் இருக்கும்.
பல்லாயிரக்கணக்கான கிளைகளும்
கோடிக்கணக்கான இலைகளும்
அஞ்சலி செலுத்த அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.
நிறைவாய் வாழ்ந்து முடித்தவருக்கு
அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்
-----
(விபரங்களுக்கு: ஏழூர் விஜயகுமார் 98423-44399)
-0-