3000 பிள்ளைகளின் தந்தை மரணம்

பூமிக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்பணித்து 
3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை 
சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”  அய்யா 
இன்று இயற்கை எய்தினார்.
 
ஆழ்ந்த அஞ்சலிகளை அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 
 
 
அவர் குறித்த முந்தைய இடுகைகள்
 
 

 
அவர் இந்த உலகில் விட்டுவிட்டுப்போகும் அடையாளம் 
இன்றோ நாளையோ அழிந்துவிடப் போவதில்லை. 
 

 இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி, 
இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில்
அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு 
இருந்து கொண்டுதான் இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான கிளைகளும்
கோடிக்கணக்கான இலைகளும்
அஞ்சலி செலுத்த அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

நிறைவாய் வாழ்ந்து முடித்தவருக்கு
அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்


----- 
(விபரங்களுக்கு: ஏழூர் விஜயகுமார் 98423-44399)

-0- 

51 comments:

Chitra said...

I am so sorry to hear this news.
May his soul rest in peace.

க.பாலாசி said...

மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி... நம் வாழ்நாளில் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத சாதனை அவருடையது... மூவாயிரத்து சொச்சம் பிள்ளைகளையும் நாட்டிற்காக விட்டுவிட்டு செல்லும் ஒரு தாய்.. வணங்குகிறேன் அவரை. ஆன்மா சாந்தியடையட்டும்.

பழமைபேசி said...

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:(

VELU.G said...

எனது ஆழ்ந்த இரங்கல்கள்
அன்னார் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

settaikkaran said...

வருத்தம் தரும் செய்தி! அன்னாரின் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

இளங்கோ said...

அவருக்கு எனது கண்ணீர்த் துளிகளும்.

ராமலக்ஷ்மி said...

பூமித்தாயின் புத்திரருக்கு எனது அஞ்சலிகளும்.

CS. Mohan Kumar said...

வருத்தமாக உள்ளது அவரை நினைத்து மட்டுமல்ல.. அந்த மரங்களையும் நினைத்து

கண்ணன். சி said...

மரம் வளர்க்கும் செய்தியையும் செயலையும் சொன்னவருக்கு... இரங்கல் செய்தி... மரம் வளர்ப்போம்...

பிரபாகர் said...

மனம் கனக்கிறது கதிர்... அண்ணாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

பிரபாகர்...

துளசி கோபால் said...

மனமார்ந்த அஞ்சலிகள்.

KARTHIK said...

ஆழ்ந்த அஞ்சலிகள் :-((

Unknown said...

Great work Ayya. May God bless your soul be rested in Peace. Though you were not here, every one of us can feel the efforts you have put up in your life through the breeze around us Ayya.

இராகவன் நைஜிரியா said...

ஆழ்ந்த அஞ்சலிகள். :-((

vasu balaji said...

இறக்குமுன் அவரைப் பார்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி கதிர். அவருக்கான என் ப்ரார்த்தனையும்.

சத்ரியன் said...

அய்யா மறைந்தாலும், அவர் வளர்த்த பிள்ளைகள் இன்னும் கோடி கோடி ஆண்டுகள் வாழும்.....!

அவரது ஆத்மா அமைதி கொள்ளட்டும்.

Thenammai Lakshmanan said...

என்னுடைய அஞ்சலிகளும்..

ஹேமா said...

எத்தனை பேருக்கு இப்படி ஒரு பெரிய மனசு இருக்கும்.எனது அஞ்சலியும் !

செ.சரவணக்குமார் said...

கண்ணீர் அஞ்சலிகள்.

shortfilmindia.com said...

ஈரோட்டில் லயன்ஸ் கிளப் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த கோபியிலிருந்து அவருடன் பயணித்தபடி பேசி வந்தது இன்னமும் நினைவிருக்கிறது கதிர். எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு வெள்ளந்தியாய் பேசினார். ம்ஹும்.. கடவுள் நல்லவர்களை கொஞ்சம் சீக்கிரமேத்தான் அழைத்துக் கொள்கிறார்.

ஸ்வாமி ஓம்கார் said...

மாமனிதர்களுக்கு எப்படி மரணம் நிகழும்?

அவர் தன் உடலை தவிர்த்து முவ்வாயிரம் உருவில் கரைந்துவிட்டார்.

அவர் மரணிக்க வில்லை
மரங்களின் மாணிக்கமாகிவிட்டார்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி,
இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

கண் கலங்குகிறது.. ஆனாலும் அவர்தம் பயணத்தை நல்லவிதமாக முடித்ததில் சந்தோஷமே..

Unknown said...

In our India Many are there only for Cuttingall the TREE's, It's amazing to Plant more than 3000 Trees.

Sure He will be under the FEEt of the ALMIGHTY to continue his work there in SORGAM

jothi said...

ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள். பெரிய‌வ‌ரின் ஆத்மா சாந்திய‌டைய‌ என் பிரார்த்த‌னைக‌ள்,.

ஆனந்தன் said...

Pirantha manirkku sirantha sevai seidha ayya avarkalin aathma saanthi adaya manamaara prathikiraen

நாகராஜ் said...

வணங்குகிறேன் அவரை. ஆன்மா சாந்தியடையட்டும்.

ஓலை said...

இயற்கை நேசி
இயற்கைக்கு இயன்ற
இயற்கைச் செயலைப்
போற்றுவோமாக.

அவர் இயற்கை எய்தியதற்கு
ஆழ்ந்த அஞ்சலிகள்.

Kamaraj M Radhakrishnan said...

My deep condolence

Unknown said...

பெரியவரின் ஆன்மா சந்தியடைய வேண்டுகிறேன்.

அமர பாரதி said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பாலகுமார் said...

கண்ணீர் அஞ்சலிகள். :(

Kumky said...

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Rex said...

RIP..

சுந்தரவடிவேல் said...

அவர் விதைத்துச் சென்றவை வாழும். காப்பாற்றுவது நம் கையில்.

தாராபுரத்தான் said...

மௌனம்..

ரோஸ்விக் said...

கொடுத்தது பத்தாதென்று அவரது பங்கான ஆக்ஸிசனையும் நமக்கே தந்துவிட்டுப் போய்விட்டார்...


மிகவும் வருந்தத்தக்கது.

Udthikumsuriyan said...

ஈரோட்டில் பிறந்தற்கு நான் பெருமைபடுகிறேன். ஐயா வழி நாமளும் முயற்சிக்க வேண்டும்.
அனைவரும் வருடம் ஒரு மரம் நட சபதம் செய்வோம்.

ஸ்ரீமதன் said...

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !! சுதாவின் பாடல் மிக உருக்கம்.

ஸ்ரீமதன் said...

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !! சுதாவின் பாடல் மிக உருக்கம்.

Jaisee said...

Mannin maithauku yen anjali....

Unknown said...

Wat a sad... :( All should Try to follow him..Plant trees.. Atleast, maintain a small garden in all houses, can even in upstairs also(Mottai Maadi).

அகல்விளக்கு said...

அவரின் பிள்ளைகள் இருக்கும்வரை அவர்தம் புகழ் நிலைத்திரும்....

அய்யாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

shammi's blog said...

My heart felt condolence to him may his soul rest in peace...

நிலாமதி said...

மரம் வளர்த்து சாதனை படைத்த மா மனிதருக்கு என் அஞ்சலிகள்.
காற்றோடு கலந்து இலையசைத்து விடை கொடுக்கும் மரங்கள். கவனித்துக் காப்போம்.

நிலாமதி said...

மரம் வளர்த்து சாதனை படைத்த மா மனிதருக்கு என் அஞ்சலிகள்.
காற்றோடு கலந்து இலையசைத்து விடை கொடுக்கும் மரங்கள். கவனித்துக் காப்போம்.

Indian said...

திரு அய்யாசாமி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவர் எங்கு இறந்தார்? அந்த மூவாயிரம் மரங்கள் விடும் ஆக்ஸிஜனில் அன்னாருடைய மூச்சுக் காற்றும் கலந்து விட்டது என்று தான் கொள்ள வேண்டும்!

அம்பாளடியாள் said...

பிந்திப் படித்த செய்தியாக இருந்தாலும் இந்தப் பெரியவரின் இழப்பு மனதுக்கு ஒரு புதிய வலிதந்து நிற்ப்பதால் இவருடைய
புண்ணிய ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன்...

பகிர்வுக்கு மிக்க நன்றி

Unknown said...

எனது ஆழ்ந்த இரங்கல் ஐயாவிற்கு..

sathish said...

May his soul rest in peace.