ஒரு தட்டானின் மரணம்



வெடுக்கெனக் நகர்கிறது ரயில்
உயிரற்ற தட்டானொன்று
சன்னல் விளிம்பில்
ஒட்டியிருக்கிறது

காற்றைக் கிழித்து
ரயில் சீறுகிறது
மினுமினு றெக்கையும்
கண்ணாடி வாலும்
ரயிலின் தடதடப்புக்கேற்ப
நடுங்குகின்றன

வால் பிடித்து
றெக்கை படபடக்க
காற்றில் விடுகிறேன்
பறக்கவிடுதலைத் தவிர
வேறெந்த வகையில்
தட்டானுக்கு
அஞ்சலி செலுத்த!

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
(இறுதி வார்த்தையில் ..வது..
விடுபட்டிருக்கிறதோ..)
வாழ்த்துக்களுடன்...