என்னிடம் மிச்சமிருப்பது அன்பு தோய்த்த ஒற்றை நன்றி மட்டுமே

வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்கள் குழும உறுப்பினர்கள் மனதிற்குள் ஏற்படுத்திய உணர்வு இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தைக் கிளப்பியது. 

சங்கமம் 2010 நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்த முடிவு செய்த போது, சென்ற ஆண்டிலிருந்து வித்தியாசப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வித்தியாசமான உணவு, பெரிய அரங்கு, வந்து போக வாகனம், பதிவர்கள் அல்லாத சிறப்பு விருந்தினர்கள், காலை ஆரம்பித்து மாலை முடிப்பது என திட்டம் தீட்டியதில் ஒன்று புரிந்தது. சென்ற ஆண்டு செய்த செலவை விட நிச்சயம் மூன்று மடங்கு ஆகும் என்று. அதே நேரம் குழும உறுப்பினர்கள் சிலர் பெருந்தொகையளித்து உற்சாகப்படுத்தியதில், சிறப்பான விருந்து அதுவும் சமையல்காரர் வைத்து விருந்து தயாரிப்பது என முடிவானது. மறுபக்கம் நிகழ்ச்சி வடிவமைப்பு மற்றும் அதற்கான ஏற்புடைய ஆட்களை தேர்ந்தெடுத்து அழைப்பது என குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் பொறுப்பைத் திரும்ப திரும்ப நினைவூட்ட வேகமாக வேலைகள் நடக்க, ஒருவழியாய் 26.12.2010 இனிதாய் விடிந்தது. முதல் நாளே மதுரைப் பதிவர்கள் கும்க்கி, கா.பா, ஸ்ரீ, சிங்கைப் பதிவர் பிரபாகர் வருகை தர, சனிக்கிழமை இரவு உணவுடன் அரங்கில் நிகழ்ச்சிகள் தொடங்க ஆரம்பித்தது.


காலை 11 மணிக்கு மிகச் சரியாக ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் தவிர்க்க இயலாத காரணங்களால் சிறப்பு விருந்தினர்கள் சற்றே தாமதமாக வர சரியாக 40 நிமிடங்கள் கழித்து 11.40க்கு நிகழ்ச்சி தொடங்கியது.

பதிவர் ஆரூரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க, பதிவர் சிங்கை பிரபாகர் தமிழ் வணக்கம் வாசித்தார். அண்ணன் தாமோதர் சந்துரு வரவேற்புரை நிகழ்த்த, இரா.வசந்த்குமார் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். “சிறுகதைகளை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் பெருமாள் முருகன் பல எடுத்துக் காட்டுகளுடன் மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
சங்கவி எழுத்தாளர் பாமரன் அவர்களை அறிமுகப்படுத்த, “உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள்” என்ற தலைப்பில் தான் இணையத்திற்கு வந்ததுமுதல் சுவாரசியமான பல விசயங்களைப் பகிர்ந்து இணையத்தை எவ்வளவு தூரம் பயனுள்ளதாக உபயோகிக்க முடியும் என்பதை நகைச்சுவையோடு பகிர்ந்தார்.

அடுத்து கார்த்திகைப் பாண்டியன் தமிழ்ஸ்டுடியோ.காம் அருண் அவர்களை அறிமுகப்படுத்த, “குறும்படம் எடுக்கலாம் வாங்க” என்ற தலைப்பில், குறும்படம் எடுக்க விருப்பமுள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், அதற்கான பயிற்சி என தங்கள் அமைப்பு மூலம் இலவசமாக தருவது குறித்துப் பேசினார்.

பதிவர் ஸ்ரீதர் வழக்குரைஞர் சிதம்பரன்.கி அவர்களை அறிமுகப்படுத்த, “உலகத்திரைப்படங்கள்” குறித்த பார்வையை சிதம்பரன்.கி.அவர்கள் எளிமையாக எடுத்து வைத்தார்.


மதிய உணவு இடைவேளைக்குக் கலையும் முன்பாக, பதிவர்களுக்கிடையேயான அறிமுகத்தை நடத்தி உணவுக்கு அனுப்பப்பட்டனர்.

மிக நேர்த்தியான சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது. கொங்கு மண்டலத்திற்கே உரிய வகையிலான அசைவ வகைகளாக கோழிக்கறி, ஆட்டுக்கறி, தலை-குடல்க் கறி, தண்ணிக்குழம்பு என வித்தியாசமாக அளிக்கப்பட்டதை அனைவரும் விரும்பி உண்டனர். இதுபோல் உணவிடலாம் என ஆலோசனை கூறிய பதிவர் நந்து, அதற்கான அத்தனை பணிகளையும் முன்னின்று செய்த அண்ணன் தாமோதர் சந்துரு, சமையல்காரர் பரமன் ஆகியோரே மிக முக்கியக் காரணம்.

நேர்த்தியான நிறைவான உணவிற்குப் பிறகு, பதிவர்களின் பங்கேற்பு எப்படி இருக்குமோ என நினைத்ததை தவிடு பொடியாக்கியது, பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு.

அகல்விளக்கு ராஜா, கருவாயன் (எ) சுரேஷ்பாபு அவர்களை அறிமுகம் செய்ய, “நேர்த்தியாக நிழற்படங்கள்” என்ற தலைப்பில் பல உதாரண படங்களுடன் எடுத்துச் சொல்லியது நிழற்படம் எடுக்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதிலும் சுரேஷ்பாபு இதுபோல் வகுப்பெடுக்க ஏறிய முதல் மேடை இது என்பது தான் ஆச்சரியமான விசயம்.

பதிவர் கணபதி ஓசை செல்லா அவர்களை அறிமுகப்படுத்த, வலைப்பதிவர்கள் இணையத்தை திறனுடன் பயன்படுத்துதல் குறித்தும், எழுத்து மட்டும் இல்லாமல் ஒலி, ஒளிப்பதிவு என எந்த ஊடகத்தையும் விட மிகவும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும் என்றதொரு மிகப் பயனுள்ள ஒரு உரையை ஓசை செல்லா நிகழ்த்தினார்.

கார்த்திகை பாண்டியன் கூழாங்கற்கள் லட்சுமணராஜாவை அறிமுகப்படுத்த, “நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்” என்ற தலைப்பில், நிழற்படங்களை வேறொரு கோணத்தில் எடுத்து, அதன் மூலம் ஒரு நிகழ்வை ஆவணப்படுத்துவது குறித்து இரண்டு வேறு விதமான ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஒரு திருமணம் மற்றும் வேதாண்தா நிறுவனம் மூலம் சிதைந்து மாறி வரும் கிராமப் பகுதி என வினோத் அவர்களின் படங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது மிகுந்த கைத்தட்டல்களைப் பெற்ற ஒரு படைப்பாக அமைந்தது.

ஏழு வித்தியாசமான தலைப்பில், ஒரு பதிவரை தன் எழுதும் இயல்பையொட்டி மிகச் சிறப்பாக பட்டைதீட்ட ஏழு சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சிந்தனையை, உழைப்பை நம் பதிவர்களுக்கா அளித்ததற்கு என்ன சொல்லி நன்றி பாராட்ட.

ஏழு நிகழ்வையும் மிகத் திருப்தியாக நடத்திய நிறைவோடு அனைவருக்கு நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்து, கலந்துரையாடலுக்காக சேர்தளம் அமைப்பிடம் மேடை ஒப்படைக்கப்பட்டது. பதிவர்கள் வெயிலான், சீனா, பரிசல், கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடலையூர் செல்வம் ஒருங்கிணைக்க அனைவரும் பங்கேற்ற கலந்துரையாடலுக்குப் பின் எல்லோரும் பிரியா விடை பெற்றனர்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கலந்து கொண்ட ஒவ்வொரு பதிவரின் பங்கேற்புமே காரணம். அடுத்து, எண்ணத்தில் எழுந்த எல்லாவற்றையும் நிஜமாய் நிகழ்த்திட நேரம் காலம் பாராது உழைத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும்தான் காரணம். இதைச் செய்யலாம் என நினைத்துத் திரும்பும் அந்த வினாடி என்ன செய்ய வேண்டும்  எனத் தயாராக இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரின் வியர்வைத்துளியும் இந்த வெற்றியில் இருக்கிறது.

அமெரிக்காவிலிருந்தாலும் இது நம் குடும்ப விழா என தொடர்ந்து பேசி உற்சாகப்படுத்தி நிதியளித்த விவசாயி-இளா, அமரபாரதி, ஆப்ரிக்காவில் இருந்து இந்த ஆண்டும் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய தன் நண்பன் கென்னடி மூலம் ஏற்பாடு செய்து, தன்னுடைய பங்களிப்பாக நிதியளித்து தொடந்து உற்சாகப்படுத்தி வரும் சண்முகராஜ், சௌதியிலிர்ந்து கலந்து கொள்ள முடியாவிட்டாலும் குழுமத்திற்காக உதவும் மருத்துவர். ரோகிணி ஆகியோரின் உற்சாகமும், ஒத்துழைப்பும் எங்களை மிக வேகமாக இயங்க வைத்தது என்றால் மிகையில்லை.

கூடிக்கூடித் திட்டம் தீட்டி, ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்து, எல்லாப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விழாவை வெற்றியடையச் செய்த அண்ணன் தாமோதர் சந்துரு, ஆரூரன், கார்த்திக், நந்து, வால்பையன், ஜாபர், பாலாசி, லவ்டேல் மேடி, சங்கவி, அகல்விளக்கு, வேலு, கணபதி, வசந்த், தாராபுரத்தான், விஸ்வநாதன் மற்றும் கலந்து கொள்ளமுடியாத சூழலிலும் தங்கள் ஆலோசனைகள் மூலம் உடனிருந்த இயற்கை ராஜி, நித்திலம் பவள சங்கரி என ஒவ்வொரு பதிவரும் எங்கள் குழுமத்திற்கு கிடைத்த மிக அரிய சொத்தே என்றே சொல்ல வேண்டும்.
நினைவுப் பரிசாக அனைவருக்கும் பதிவர் பழமைபேசியின் ஊர்ப்பழமை புத்தகம் அளிக்கப்பட்டது. அதை தங்கள் சார்பாக அன்பளிப்பாகக் கொடுத்த அருட்சுடர் பதிப்பக உரிமையாளர் பதிவர். ஆரூரன், பழமைபேசி ஆகியோருக்கு நன்றி.

சங்கமம் குறித்து இடுகை, இலச்சினை, சுட்டி என தங்கள் முகப்பில் வெளியிட்ட பதிவர்கள், தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி, சங்கமம் திரட்டிகளுக்கும் நன்றிகள்.

வாழ்க்கை முழுதும் இன்பம் துன்பமும் கலந்து வந்து கொண்டேயிருந்தாலும், அத்தனை துன்பங்களையும் போக்கும் விதமாய் அவ்வப்போது நம்மைச் சூழ்ந்து மகிழ்ச்சி சுழலில் மூழ்கடிக்கும் இன்பங்களே அத்தனை சோர்வுகளிலும் இருந்து நம்மை அடுத்த கட்டத்தை நோக்கி மிக வேகமாய், உத்வேகத்தோடு நகர்த்திப் போகின்றன. அந்த இனிய நிகழ்வுதான் இன்றைய வெற்றிகரமான சங்கமம் 2010. இந்த வெற்றிக்கு பலவகைகளில் உதவியவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை அன்பையும் தோய்த்து தருகிறேன்.
நன்றி என் இனிய நண்பர்களே, உங்களால் மிக இனிய ஒரு பொழுதை இன்று கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட பதிவுலக சொந்தங்கள் அனுபவித்துக் கடந்திருக்கின்றோம்.

-0-76 comments:

vasu balaji said...

வர முடியாமல் போனது குறையாகவே இருக்கிற்து. படங்களை பாகங்களாகவாவது அல்லது படத்திலோ அறிமுகப் படுத்துங்கள் கதிர்.வாழ்த்துகள். மீண்டும் ஓர் சாதனை:)

பழமைபேசி said...

மகிழ்ச்சியும் ஏக்கமும்!!!

நல்லதொரு நிகழ்ச்சியில கலந்து கொல்ள முடியவில்லையே எனும் போது வருத்தம் தவிர்க்க முடியவில்லை!!!

ஈரோடு அன்பர்களுக்கு வாழ்த்துகள்!!!

Unknown said...

அருமை. அருமை. அருமை.
வாழ்த்துகள். வாழ்த்துகள்.

இலையைப் போட்டு காமிக்கிரிங்களே!. எச்சல் ஊருது. என்ன மெனுங்க.

R. Gopi said...

உங்களில் பலரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை....

வாழ்த்துகள்......

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பகிர்வுக்கு நன்றி.. நடத்தியவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள் :)

நாகா said...

Missed the event very badly. Landing in Bangalore tomorrow evening only. My hearty wishes for making it grand and successful.

butterfly Surya said...

வர இயலாமல் போனது மிகவும் வருத்தமே.

புகைப்படங்கள் பார்த்ததும் இன்னும் ஏக்கம் அதிகமாயிற்று.

அருமை கதிர். அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் சிறப்பாய் நடத்தி முடித்த உங்களுக்கும் இதய பூர்வமான வாழ்த்துகள்.


Sangamam is a roll model for all of us.. Great..

கலகலப்ரியா said...

மகிழ்வும் , நெகிழ்வும்...

உண்மைத்தமிழன் said...

பாராட்டுக்கள் கதிர்..! சில வேலைகள் இருந்ததால்தான் வர முடியவில்லை..!

அபி அப்பா said...

நான் நிஜமாகவே ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் நிகழ்சியை. அது சம்மந்தமா பதிவே கூட போட்டுட்டேன். பாராட்டுகள்!!!

க ரா said...

விழா சிறப்புற நடந்ததை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.. கலந்து கொள்ள முடியாததை நினைத்து சிறு வருத்தமும் மனதினில்.. நன்றி பகிர்வுக்கு :)

நசரேயன் said...

//
பழமைபேசி said...
மகிழ்ச்சியும் ஏக்கமும்!!!

நல்லதொரு நிகழ்ச்சியில கலந்து கொல்ள முடியவில்லையே எனும் போது வருத்தம் தவிர்க்க முடியவில்லை!!!

ஈரோடு அன்பர்களுக்கு வாழ்த்துகள்!!!
//

மறுக்க சொல்லிக்கிறேன்

அமர பாரதி said...

வாழ்த்துக்கள் கதிர். சுடச் சுட பதிவும் போட்டு கலக்கி விட்டீர்கள். பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஈரோடு அன்பர்களுக்கு வாழ்த்துகள்!!!

அமர பாரதி said...

புகைப் படங்கள் அனைத்தும் அருமை கதிர். அடுத்தடுத்த வருடங்களில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

பகிர்விற்கு நன்றிங்க! மீண்டும் சாதிச்சிட்டீங்க!

வர இயலவில்லை. மும்பைலதான் இன்னும் இருக்கேன். :)

பிரதீபா said...

வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு மைல்கல். சிறு கருத்து: விழா புகைப்படங்களில் அதில் இருக்கும்/பதிவர்களது பெயரும் குறிப்பிட்டால் நிறைய பேர் இன்னவர் யார் எனத் தெரிந்து கொள்வார்கள்.

Unknown said...

நிறைவான நிகழ்வை நடத்திக் காட்டிய ஈரோடு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

குழுவினர் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

//ஏழு வித்தியாசமான தலைப்பில், ஒரு பதிவரை தன் எழுதும் இயல்பையொட்டி மிகச் சிறப்பாக பட்டைதீட்ட ஏழு சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சிந்தனையை, உழைப்பை நம் பதிவர்களுக்காக அளித்ததற்கு என்ன சொல்லி நன்றி பாராட்ட.//

நாங்களும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

பழமைபேசி said...

//என்னிடம் மிச்சமிருப்பது அன்பு தோய்த்த ஒற்றை நன்றி மட்டுமே
//

பாலாண்ணன் கேட்பாருன்னு பார்த்தேன்; கேட்கலை!

சேது அய்யா கேட்பாருன்னு பார்த்தேன்; கேட்கலை!!

சரி, நம்ம தளபதி நசரேயன் கேட்பாருன்னு பார்த்தேன்; கேட்கலை!!!

என்னாவொரு பாரபட்சம்???

என்னிடத்தில் மிச்சம் இருப்பது அன்பு தோய்த்த ஒற்றை நன்றி மட்டுமே அப்படின்னு சொல்றாரு! ஆனாப் பாருங்க, இடுகையில ஆறுவாட்டி நன்றி சொல்லி இருக்காரு; அது ஒன்னு பன்மையில வருது... எப்படி அது?

ஒரு வேளை, அதெல்லாம் போக மிச்சம் இருக்குறது ஒன்னுன்னு சொல்றாரோ? மவனே, இருங்க இனி நீங்க வாழ்க்கையில ஒருவாட்டிக்கு மேல நன்றி சொன்னீங்க, நாங்க இடுகை மேல இடுகை போட்டுக் கேள்வி கேட்போம்... இஃகி!!

ஆனா, நீங்க படு சூதானம் மாப்பு; நெகிழிக் கோப்பை வெச்சா, வெவரம் வெவகாரம் ஆயிடுமுன்னு, காகிதக் கோப்பை வெச்சித் தப்பிச்சிட்டீங்க... சவாசுங்க மாப்பு சவாசு!!

Anonymous said...

//பழமைபேசி said...

மகிழ்ச்சியும் ஏக்கமும்!!!

நல்லதொரு நிகழ்ச்சியில கலந்து கொல்ள முடியவில்லையே எனும் போது வருத்தம் தவிர்க்க முடியவில்லை!!!//

இதே உணர்வு தான் நினைவெல்லாம் இங்கு தான் இருந்தது...இந்த முயற்சியும் ஏற்பாடும் சற்று அல்ல நிறைய வியப்பையும் தருகிறது

காமராஜ் said...

வாழ்த்துக்கள் கதிர்.

மிகுந்த நெருடலும்,ஒரு பண்டிகையைத்
தவறவிட்ட இழப்பும் கூடவே வருகிறது.

மாதேவி said...

விழா சிறப்புற நடந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ரோஸ்விக் said...

கலந்துக்க முடியாமப் போனது ரொம்ப ஏக்கமா இருக்கு ஈரோடு நண்பர்களே!

சிறப்புற இந்தமுறையும் நடத்திக்காட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி!

எதிர்காலத்திலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Sindhan R said...

வாழ்த்துக்கள் ... வராதவனால் வேறென்ன சொல்ல முடியும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஏதோ எங்க வீட்டு விழாவிற்கு வரமுடியாத வருத்தம். நல்ல படியா நடிந்திருக்குன்னு மகிழ்ச்சி.

போன வருசம் போட்ட கும்பிடக் காணாம் :)

Tamil.Readandshare.in said...

கலக்கிப் போட்டிங்க மக்கா. மீண்டும் வாழ்த்துகள்.

அன்புடன்
Read and Share தமிழ்
இது ஒரு டண்டனக்கா திரட்டி

Tamil.Readandshare.in said...

உங்கள் பரபரப்புப் பதிவுகளையும் பஸ் செய்திகளையும் இங்கே பகிருங்கள்.

Tamil.Readandshare.in

அன்புடன் அருணா said...

மகிழ்ச்சியும் ஏக்கமும்!!!
எனக்கும்!
பூங்கொத்து!

Unknown said...

உங்கள் நன்றியில் அனைவரையும் நெகிழச்செய்துவிட்டீர் அய்யா....!!

ஆன்னால் இந்தப் பதிவில் ஒரு மாபெரும் குறை கண்டு என் இதயம் சற்று துடிக்காமல் ஸ்தம்பித்தது..... அது வேறொன்றும் இல்லை.... நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீங்கள்தான் பலமுறை மைக்கை பிடித்து கண்ணீர் குரலில் முழக்கமிட்டீர். ஆனால் அதில் ஒரு புகைப்படம் கூட இல்லையே என்று என்னும்போது ஆஅவ்வ்வ்வ்......!

செல்வா said...

எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா ..!
வலைஉலக நண்பர்களை சந்தித்தது , அந்த சந்திப்பிற்கு உங்களின் உழைப்பு ,
நேர்த்தியான நிகழ்ச்சிநிரல் ..! ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ..
மீண்டும் ஒரு முறை நன்றி அண்ணா .! நீங்கள் கொடுத்த நினைவுப்பரிசும் அருமை ..

செல்வா said...

எல்லாமே கலக்கல் ,, ஆனா நான் ஒரு இரண்டு மூணு போட்டோல மட்டும் அவுட் போகஸ் ல இருக்கேன் .. அதுதான் கொஞ்சம் வருத்தம் .. ஹி ஹி ஹி

Ganesan said...

அருமை கதிர்.

கொங்கு நாடு ஏற்கனவே பழகுவதற்கு அருமையான மண்டலம், அப்புறம் வந்தவர்களை கவனிக்கும் விதமே தனி தான்.

உங்கள் ஒற்றுமை வாழ்க..

r.v.saravanan said...

பதிவர்கள் சந்திப்புக்கு ஒரு அருமையான களம் ஏற்படுத்தி கொடுத்த ,உங்களுக்கும் ஈரோடு தமிழ் வலைபதிவர்கள் குழுமத்திற்கும் மிக்க நன்றி கதிர்
விழாவை சிறப்பான முறையில் வடிவமைத்த தற்கும் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து கதிர்

வாழ்த்துக்கள்

Mahi_Granny said...

நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும். தமிழ்நாட்டில் ஈரோடுஎந்த பக்கம் இருக்கு என்று வரைபடத்தில் மட்டுமே பார்த்திருந்த எனக்கு கதிர் தம்பி டிக்கெட்டும் வாங்கி த்தந்து இதில் கலந்து கொள்ள வாய்ப்பு தந்ததற்கு ஒற்றைச் சொல்லாக நன்றி சொல்லி போய் விட முடியாது. எனக்கெல்லாம் இதுஒரு வாழ்நாள் சாதனை போல். அப்பாடா என்னவொரு விருந்து. அசைவ பிரியர்கள் மிஸ் பண்ணியதற்கு வருத்தப் பட்டுக் கொள்ளலாம். தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும் ஒவ்வொருவர் கைபிடித்ததும். .ஆனாலும் சொல்லுகிறேன் நன்றி மக்களே என்று மொத்தமாக. நல்லா இருங்க மக்களே.

விக்னேஷ்வரி said...

வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

@@ வானம்பாடிகள்
மனசு வச்சிருந்தா வந்திருக்கலாம்..

ம்ம்ம்.. நன்றி

@@ பழமைபேசி
மாப்பு தங்களின் நினைவுப்பரிசுக்கும் சேர்த்து நன்றிங்க


@@ Sethu

அடடா!

@@ Gopi Ramamoorthy
மகிழ்ச்சிங்க கோபி


@@ உலவு.காம்
நன்றிங்க உலவு

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
நன்றிங்க சந்தனா!

@@ நாகா
நாகா, நீங்க வந்துடுவீங்கனு நினைச்சேன். முதல் நாள் இரவுதான் செந்தில் சொன்னார் இன்னும் துபாயில் இருக்கிறார் என்று


@@ butterfly Surya
நன்றிங்க சூர்யா

ஈரோடு கதிர் said...

@@ கலகலப்ரியா
நன்றி ப்ரியா!

@@ உண்மைத் தமிழன்
நன்றிங்க அண்ணே!

@@ அபி அப்பா
முதன் முதலில் வருவதாகச் சொன்னவர் நீங்க. வராதது வருத்தம்தான்

@@ இராமசாமி
நன்றிங்க ராமசாமி

@@ நசரேயன்
நன்றிங்க தளபதி

ஈரோடு கதிர் said...

@@ அமர பாரதி
உங்கள் உற்சாகமும், ஒத்துழைப்பும் முக்கிய உந்துசக்திங்க அமரபாரதி. நன்றிங்க

@@ T.V.ராதாகிருஷ்ணன்
நன்றிங்க TVRK

@@ அருணையடி
சிபி நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்

@@ பிரதீபா
நன்றிங்க பிரதீபா!
அவசரமாக ஏற்றப்பட்ட படங்கள். பெயர்களை சேர்க்க முயல்கிறேன்

@@ கலாநேசன்
நன்றிங்க கலாநேசன்

ஈரோடு கதிர் said...

@@ ராமலக்ஷ்மி
நன்றிங்க ராமலஷ்மி

@@ தமிழரசி
நன்றி தமிழ்

@@ காமராஜ்
வரமா ஏமத்திட்டீங்க. உங்க மேல கோபம்தான்!

@@ மாதேவி
நன்றிங்க மாதேவி

@@ ரோஸ்விக்
நன்றி விக்டர்!

@@ Sindhan R
நன்றிங்க சிந்தன்

ஈரோடு கதிர் said...

@@ ச.செந்தில்வேலன்
செந்தில், இது நம்ம வீட்டு விழாதான். சங்கமம் குறித்து அதிகம் உரையாடியதில் நீங்களும் ஒருவர். நன்றி செந்தில்

@@ Tamil.Readandshare.in
நன்றிங்க

@@ அன்புடன் அருணா
நன்றிங்க அருணா!

@@ லவ்டேல் மேடி
என்னை யாராவது மேடிகிட்டேயிருந்து காப்பாந்துங்கப்பா!

@@ கோமாளி செல்வா
நன்றி செல்வா!
பிரபாகர் மற்றும் என் கேமராவில் எடுத்த படங்கள் தான் இவை. மற்ற கேமராவில் எடுத்த படங்களில் இருப்பீர்கள் என நினைக்கிறேன்


@@ காவேரி கணேஷ்
நன்றிங்க கணேஷ்

@@ r.v.saravanan
நன்றிங்க சரவணன்


@@ Mahi_Granny
அம்மா, இடுகைகள் எழுதாமல், சென்னையிலிருந்து வர நினைத்ததே எங்களுக்குப் பெருமையான விசயம். அடுத்து டிக்கெட் இணையத்தில் எடுத்துக் கொடுத்தது மட்டும்தானே நான். உங்கள் ஆர்வமே எங்களை சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த வைத்தது. நன்றிங்கம்மா!

@@ விக்னேஷ்வரி
நன்றிங்க விக்னேஷ்வரி

'பரிவை' சே.குமார் said...

மீண்டும் ஓர் சாதனை.
வாழ்த்துகள்.

Sabarinathan Arthanari said...

சிறப்பாக நடத்திய நண்பர்கள் அணைவருக்கும் நன்றிகள்.

இரண்டு ஆண்டுகளாக கலந்து கொள்ள வேண்டும் எனும் விருப்பம் கலந்து கொள்ள முடியவில்லையே எனும் ஏக்கத்துடனே முடிகிறது.

கோவி.கண்ணன் said...

தொகுப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

Cable சங்கர் said...

சாரி தலைவரே.. ஒரு பர்சனல் வேலையால் வர முடியாமல் போய்விட்டது. வரமுடியவில்லை என்று வருத்தம் உங்கள் பதிவை படித்ததும் போய்விட்டது.

settaikkaran said...

இப்படியொரு சந்திப்புக்காக, திட்டமிட்டு, திட்டமிட்டபடியே நிகழ்த்துவதற்காக அயராது உழைத்து, மிகப்பெரிய வெற்றியாக்கிய ஈரோடு பதிவர்கள் குழுமத்தினருக்கும், குறிப்பாக உங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் கதிர்! அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக நான் இருப்பேன்! :-)

Ramesh said...

கல்ந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாய் இருக்கிறது... திருமணம் நடத்துவதைப் போல தடபுடலாக நடத்திவிட்டீர்கள் போல.. வாழ்த்துக்கள்..

ப.கந்தசாமி said...

கலந்துகொண்ட நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எல்லா நிகழ்ச்சிகளும் நன்றாக நடந்தன. விழாவைப்பற்றி எந்தக்குறையும் சொல்ல முடியாமல் போனதுதான் ஒரு பெரிய குறை.

priyamudanprabu said...

வாழ்த்துகள்!!!

ரோகிணிசிவா said...

போன வருட சங்கமம் பார்த்து தான் இந்த குழுமம் எனக்கு அறிமுகம்,இந்த சங்கமமும் இணையம் மூலம் தான் இணைய முடிந்தது, உங்க எல்லாரையும் நேர்ல பார்க்க ஜஸ்ட் கவுன்ட்ங் டேஸ்

ரோகிணிசிவா said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//DrPKandaswamyPhD said...
கலந்துகொண்ட நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எல்லா நிகழ்ச்சிகளும் நன்றாக நடந்தன. விழாவைப்பற்றி எந்தக்குறையும் சொல்ல முடியாமல் போனதுதான் ஒரு பெரிய குறை.
//

விடிய விடிய சங்கமம் பற்றின இடுகைகள் படிச்சிட்டு வேலைக்குத் தாமதமானது ஒரு குறை அல்லவா??

பெண் பதிவர்கள் ஒலிபெருக்கிய பிடிச்சா மாதிரி ஒன்னுமே காணமுங்களே?? அது ஒரு குறை அல்லவா??

(இஃகி!இஃகி!! இந்தாள் அடங்க மாட்டான் போல இருக்குன்னு மாப்பு நினைக்குலாம்....கிட்டத்தட்ட 8 வாரங்களுக்கு அப்புறம் கிடைச்ச விடுதலைங்க மாப்பு... கொஞ்சம் துள்ளல் இருக்கத்தான் செய்யும்...)

Anonymous said...

ஆனா இந்த அழகிய பெண்களின் அத்தை மகன் கணபதி போட்டோ போடாம எனோட அழக இருட்டடிப்பு செய்துட்டாங்க :) பரவால அதுனால என்ன வந்திருந்த பதிவர்கள் எல்லாம் என்னோட இதயத்தை திருடிகொண்டிர்கள் . வராமல் தூரத்தில் இருந்தது உணர்வாய் பாசத்தின் பிசுபிசுபோல் ஒட்டிக்கொண்ட இதயங்கள் . நிச்சியம் இப்படி ஒரு சர்க்கரையான சந்திப்பை ஏற்ப்பாடு செய்தது மட்டுமில்லாமல் அக்கறையாய் வழிநடத்தி எதிலும் நாங்கள் ஒரு படி முன்னே என நிற்கிறார்கள் எங்கள் ஈரோட்டு ஈரமனதுகாரர்கள் .

எல்லோரும் கைகளை கால் என நினைப்பார்கள் ஆனால் நானோ இங்கே அவர்கள் கைகளை இதயமாய் நினைத்து வணங்குகிறேன் . ( அட இதயத்தை தொட்டு கிட்டு அழுக்காகிட்டிங்கனு நினைக்காதிங்க கார்த்தி கிட்ட டகிலா இருக்கு கலுவிக்கலாம் )

விஜி said...

பெண் பதிவர்கள் ஒலிபெருக்கிய பிடிச்சா மாதிரி ஒன்னுமே காணமுங்களே?? அது ஒரு குறை அல்லவா??//

ம்ம்க்கும் மைக்கே தரலை... இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கனும்.. பழமைபேசி நீங்க ஊருக்கு வரும்போது என்னான்னு கேட்டு சொல்லுங்க :))

சிவாஜி said...

நன்றிங்க சார். சங்கமம்2010 என்னுடைய பகிர்வு
http://truthrelativism.blogspot.com/2010/12/2010_27.html

பா.ராஜாராம் said...

ஒவ்வொரு வருடமும் நம்பிக்கை தெறிக்கும் வளர்ச்சி!

வாழ்த்துகள் தோழர்களே!

அன்புடன் நான் said...

சாதனைக்கும் ... சாதனையாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

ஈரோடு கதிர் said...

@@ சே.குமார்
நன்றிங்க குமார்

@@ Sabarinathan Arthanari
நன்றிங்க சபரி

@@ கோவி.கண்ணன்
நன்றிங்க கோவி

@@ Cable Sankar
கேபிள் நீங்கள் வரமுடியாமல் போனது உண்மையிலே வருத்தம்

@@ சேட்டைக்காரன்
நன்றிங்க சேட்டை

@@ பிரியமுடன் ரமேஷ்
நன்றிங்க ரமேஷ்

ஈரோடு கதிர் said...

@@ DrPKandaswamyPhD
அய்யா மிக்க நன்றிங்க

@@ பிரியமுடன் பிரபு
நன்றி பிரபு

@@ ரோகிணிசிவா
வாங்க வாங்க! டாக்டர்

ஈரோடு கதிர் said...

@@ ithayathirudan
அடடா கணபதி!
வேற கேமரால எடுத்ததுல இதயத்திருடன் அழகா இருக்கிறத பார்த்தேன்... டொண்ட் வொர்ரி, பீ ஹேப்பி


@@ விஜி
மாப்புக்கு ஒரு டிக்கெட் போடுங்க, பஞ்சாய்த்து வச்சிருவோம்

@@ சிவாஜி
நல்ல பகிர்வுங்க கணேஷ், நன்றி

@@ பா.ராஜாராம்
நன்றிங்க பா.ரா

@@ சி. கருணாகரசு
நன்றிங்க கருணாகரசு

sakthi said...

நன்றி நாங்கள் அல்லவா கூற வேண்டும் உங்களின் உழைப்பிற்கும் கனிவான கவனிப்பிற்கும் அருமையான விருந்தோம்பலுக்கு ....

நன்றி நன்றி நன்றி

இருந்தாலும் இலையில் நிறைய சாப்பாட்டை வைச்சுட்டீங்க ....

தாரணி பிரியா said...

நன்றி நாங்கதான் சொல்லுணுமுங்க. ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தணுமுன்னு சாதிச்சு காட்டி இருக்கிங்க. நன்றி

ஹேமா said...

வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் கதிர் !

ஸ்ரீராம். said...

படங்களும் பகிர்வும் பார்த்து மகிழ்ந்தேன். கலந்துகொண்ட உணர்வு.

Kasi Arumugam said...

கல்யாணமும் கெடாவெட்டும் சேர்ந்த மாதிரி ஒரு விழா நடத்தீருக்கீங்க. ஈரோடு சங்கமம்னா இனி ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டூட்டீங்க, இந்த வருசம் தவுந்துருச்சு. அடுத்த வருசம் கட்டாயம் வருவோம்.

ரவி said...

அடுத்த ஈரோடு சங்கமத்துக்கு நிலாவுல இருந்தாலும் வந்து கலந்துக்குவேன்...!!!

Unknown said...

அனைவருக்கும் என பாராட்டுகள் ...

சத்ரியன் said...

கதிர்,

கலந்துக்கொள்ள முடியாத சூழல் மேல் கோவமும், பதிவின் உதவியால் படித்து மகிழ்ந்த திருப்தியும்...!

வாழ்த்துகள் ”சங்கமம்” குழுவினருக்கு.

Paleo God said...

அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்! :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிகழ்வு சிறப்பாய் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.

*இயற்கை ராஜி* said...

hmm..ithukum mela ethum solla i have no right:-(

Hats off to u makkals:-)

இராகவன் நைஜிரியா said...

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

வெளி நாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் இது ஒன்று.

வாழ்த்துகள் கதிரண்ணே.

அன்புடன்

பவள சங்கரி said...

என்னால் கலந்து கொள்ள முடியாது போனது பெரும் வருத்தம் தான் கதிர். ஆனால் நல்லபடியாக நடந்தது குறித்து பெருமகிழ்ச்சி....... நம்மூர் பெருமையை காப்பாற்றி விட்டீர்கள், இளஞ்சிங்கங்களே........வாழ்த்துக்கள்.

Parameswaran C said...

மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011-ல் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மனநிறைவினை அளித்தது.தங்களது குழுமத்திற்கு நன்றிங்க!PARAMESDRIVER -THALAVADY

Parameswaran C said...

மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011-ல் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மனநிறைவினை அளித்தது.தங்களது குழுமத்திற்கு நன்றிங்க!PARAMESDRIVER -THALAVADY