ஒரு பிடி கட்டிச்சோறுமுழுமதி இரவொன்றில்
ஒளிக்கயிறு பற்றி
நிலவு நோக்கி
பயணப்படுகிறான் அவன்

போகும் வழியில்
தன்னைத் தின்னவிருக்கும்
பசிக்கு உணவிட
வடை சுடும் பாட்டி
கட்டிக்கொடுத்த
கட்டிச்சோற்று மூட்டையை
முதுகில் சுமந்து போகிறான்

ஒளிக்கயிற்றிலேறுபவன்
வியர்வை ஈரம் உணர்ந்த நிலவு
கயிற்றின் வழியே
சறுக்கி வந்து கொண்டிருக்கிறது

எதாவது ஒரு முடிச்சில்
தன்னைச் சந்திக்கப்போகும் நிலவிற்கு
ஒரு பிடி கட்டிச்சோறு
மிச்சம் வைத்திருக்கிறான் அவன்

-

6 comments:

Unknown said...

நிலாவை காட்டி சோறு ஊட்டுனது போய் நிலாவுக்கே சோறு ஊட்ட கிளம்பியவனுக்கு வாழ்த்துக்கள்.

ராஜி said...

வித்தியாசமான சிந்தனை

Rathnavel Natarajan said...

அருமை சார்.

மதுரை சரவணன் said...

அருமை.ஒருபிடிச்சோறு...நிச்சயம் கிடைக்கும்.

nimmathiillathavan said...

Nalla karpanai nanraka puriyavendum innun azamaga padithal

Unknown said...

என்ன ஒரு கற்பனை....அசத்தல்