விதையிட வேண்டாம்
நீரூற்ற வேண்டாம்
காபந்து செய்ய வேண்டாம்
பெரிதாய் ஒன்றும்
மெனக்கெடவும் வேண்டாம்
முன் மதியப் பொழுதொன்றில்
பெருநகரத்தின்
கூட்டம் கசகசக்கும்
பிரபல மருத்துவமனையின்
காத்திருப்பு வராந்தாவில்
சிறிது நேரம்
கைபேசியை அணைத்துவிட்டு
மனதைத் திறந்தபடி
அமர்ந்திருங்கள்
உங்கள் தலைக்கு மேல்
புதிதாய்
போதிமரமொன்று
கிளை பரப்பியிருக்கும்
மனப்பூவில்ஞான
மகரந்தமொன்று
சூல் கொண்டிருக்கும்.
மகரந்தமொன்று
சூல் கொண்டிருக்கும்.
6 comments:
" மனப்பூவில்ஞான மகரந்தமொன்று
சூல் கொண்டிருக்கும்." என்ன ஒரு வெளிப்பாடு. அருமை
காத்திருப்பு வராந்தா....எப்போதும் கலையாகத்தான் இருக்கும்!அப்போது மனப்பூவில்ஞான மகரந்தமொன்று
சூல் கொண்டிருக்கும் தான்!அருமை!
அருமை..
காய்ச்சலுடன் வருபவரை குளிர் அறையில் காத்திருக்க வைக்கும் நிலை தான் அங்கே ....
அன்பின் கதிர் - போதி மரக்கிளை நிச்சயம் மனதில் முளைக்கும் - தவிர்க்க இய்லாது இச்சூழ்நிலையில் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
செம அழகு....என்ன சொல்லி கவிதையை பாராட்ட? வார்த்தை தெரியவில்லை
Post a Comment