பாசி பிடித்து
வறண்டு போயிருக்கும்
உன் நினைவுக்குளத்தில்
செம்புலம்பெயல் நீராய்
நிரம்புகிறேன் நான்
கல்லெறியாமல் காத்திருக்கும்
உன் மௌனத்தில்
கட்டுண்ட தளர்வில்
நிறமிழக்கத் துவங்குகிறேன்
என்னை விட்டகலும்
செம்மை நிறம்
பாசிகளின் வேர்களில்
படிந்து கொண்டிருக்கிறது
மௌனம் தகர்த்து
கைகளால் அலம்பி
கால்கள் உதைத்து
என்னில் பரவி
முன்னோக்கி நீந்துகிறாய்
ஒளி நாடி வளரும்
பாசிகளின் நுனிகளில்
நானிழந்த செம்மண்
பூக்களாய் மொட்டு
விரிக்குமெனக் காத்திருக்கிறேன்
-
-
5 comments:
// கல்லெறியாமல் காத்திருக்கும்
உன் மௌனத்தில்
கட்டுண்ட தளர்வில்
நிறமிழக்கத் துவங்குகிறேன்// அருமை கதிர் !!
நினைவுகளை மீட்டும்
பூக்கள் மலர்ந்துவிடும்
தருணம் ..... எதிர்பார்ப்பு மிக அருமை..
அருமை கதிர் சார் !
அருமை ஈரோடு கதிர் சார்....காத்திருப்பதும் சுகம் தான்!
pppppppaaaaaaaaaaaa.......
Post a Comment