உலகில் அதிகமாக பயமுறுத்துறது யார்னா.. நாம ஃபுல் மீல்ஸ் வாங்கி செம கட்டுகட்டும்போது, டயட்னு சொல்லி எதிர்ல 2 சப்பாத்தி மட்டும் சாப்பிடுறவங்க
-
முகவரிகள் தேடிக்களைத்த பொழுதொன்றில் மிஞ்சியிருக்கும் கடிதங்களைப் பார்க்கிறேன் அவற்றில் சில முகவரியற்றவை!
-
சிக்னல்ல பச்சை விழுந்தா எங்கியோ கடைசில நிக்கிறவங்களுக்கு பளிச்சுனு தெரியுது, ஏன் மொத வரிசையில நிக்கிறவங்களுக்கு தெரியவே மாட்டேங்குது?
பெரிதாகக் குறையொன்றுமில்லை... மனது விரும்புவதைச் செய்ய மனதே தடை போடுவதைத் தவிர!
-
புதுப்படங்கள் குறித்துச்சொல்கையில் சில படங்களை, ’தியேட்டர்ல பாரு’னு சொல்றாங்க. தியேட்டரா, திருட்டு DVDயானு மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க!
-
எல்லாச் சொற்களையும் அவசரமாய் அதன் நேரடிப்பொருள் கொண்டு அணுகவேண்டும் என்பதில்லை. சில சொற்களைப் புத்தியால் அலசுவதைவிட மனதால் அலசலாம்!
காமம் நோயெனின்... காமமே மருந்து!
-
இன்னும் கொஞ்சநாள்ல எல்லா ஊர்லயும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களைவிட நகைக்கடையும், அடகுக்கடையும் அதிகமாயிடும்னு தோணுது!
பறக்க.. இறக்கை விரித்த குருவிக்கு பெரிதாய் என்ன புகார் இருந்துவிடப்போகிறது வானத்தின் மேல்..?
-
பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க, இப்ப உப்பு, எலுமிச்சை இருக்கானு கேக்குறாங்க. அடுத்து அரிசி இருக்கானு கேட்டு சமையல் குறிப்பு சொல்வாங்களோ?
-
குருவை சிஷ்யன் தீர்மானிப்பதில்லை உண்மையில்.... குரு தான் சிஷ்யனைத் தீர்மானிக்கிறார்.
-
ரோட்ல ஓடுற பொண்ண ’சட்டை’யை வீசி இழுத்துட்டு ”ப்பூமெக்ஸ் ப்பூமெக்ஸ்”னு பனியனுக்கு விளம்பரம் பண்ணுறது உங்களுக்கே அநியாயமாப் படலையா?
விமர்சகர்களைவிட அடிப்பொடிகளிடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!
-
நேற்றுகள் கடந்தன இன்று கடக்கிறது! பிறகென்ன..... நாளையும் தான்!
-
"இந்தா... உங்களுக்கு இவ்ளோ நேரம் தான்” என மழையை விற்பனைப் பொருளாக்கும் வரை மனிதன் அமைதி கொள்ளமாட்டான்.
-
தன்னம்பிக்கையின் உச்ச கட்டம் எதுவென்றால், கொஞ்ச நாளா IRCTC தளத்திற்குள்ளே போனால் ’Shopping’ எதும் பண்றீங்களானு நம்மகிட்டே கேட்பதுதான்!
புல்லாங்குழல் விற்பவனுக்கு எல்லா ராகங்களும் தெரிய வேண்டியதில்லை!
-
ஏசியாநெட்ல மோகன்லால், சுரேஷ்கோபி, சரத்குமார் நடிச்ச படம் ஓடுது. ரொம்ப நேரம் MCR வேட்டி விளம்பரம்னு நினைச்சேன்.
-
சமீப ஆண்டுகளில் அதிகமாக விலை உயர்ந்தது..... 'பெட்ரோலா?' அல்லது 'பரோட்டாவா?' ஆனாலும் என்ன்னா கூட்டம்!!!?
-
வாழ்க்கையை ஆளத் தெரியாதவன், வாழ்க்கையை எளிதாகக் கையாள்பவன் மேல் முதலில் கொள்வது ’பொறாமை’!
-
’புறங்கூறுதல்’ மட்டும், ஏன் எப்போதும் சர்க்கரையாய் இனித்துத் தொலைக்கிறது.
கொதிநிலையில் குளிர்விக்கத் தேவை ஒரு சொட்டுக் கண்ணீர் அல்லது ஒரு முன்னுச்சி முத்தமேனும்...
-
மழை வந்திருப்பதாக காற்று சொல்லிவிட்டுப் போனது.
தான் வந்துவிட்டேனென மழை சொல்லாதவரை அது மழையில்லை!
-
காத்தால 5 மணிக்கு, கோபிநாத் மாதிரி கோட் போட்டுட்டுக்கூட வாக்கிங் வாங்க,
ஆனா ஃபாடி ஸ்பிரே போட்டுட்டு மட்டும் வராதீங்க, தும்மல் தும்மலா வருது
-
யாரையாச்சும் ’டென்சன்’ பண்ணனுமா ”இதுக்கு டென்சன் ஆகாதே”னு கொஞ்சம் டென்சனோட சொல்லுங்க, அவரு ’லெவன்சன்’ ரேஞ்சுக்கு டென்சனாயிடுவார்!
இன்னும் காட்டாமல் பதுக்கிவைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடலாம்
-
கண்ணாலம் காட்சிக்கு இளசுங்க, யூனிபார்மா துணி போட்டுக்கிட்டு வந்தா, எதோ துணிக்கடைல வேலை செய்றவங்களாட்டருக்குதுனே தோணுது! :)
-
2 மணிக்கு கொளுத்தின வெயிலையும், 4 மணிக்கு கொட்டுற மழையையும் பார்க்கும்போது அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலும் ’எதுவும் நடக்கலாம்’னு புரியுது.
-
இளமை வரை வயது கூட தைரியம் கூடுகிறது. இளமைக்குப் பின் வயது கூட தைரியம் குறைகிறது.
-
காலை 9-10.30 முகூர்த்தத்துக்கு, 8 மணிக்கே வந்து சாப்பிட்டு 9 மணிக்கு ஆபிஸ் போற உறவுகளும்-சுற்றமும்-நட்பும் கொண்டதும்தான் நம்ம ஊர் கல்யாணம்!
ஏதுமற்ற இரவில் துணைக்கு கொஞ்சம் இருள் மட்டும் இருக்கட்டுமே!
-
”கூடங்குளத்தின் மின் உற்பத்தியாகும்வரை கடன் கிடையாது”னு பொட்டிக் கடையில எழுதி வைக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவரு... சொல்லிப்புட்டேன்... ஆமா!
-
5 comments:
கீச் கீச் .. ஒலிக்கிறது இனிமையாக ...!
வணக்கம்
பதிவு பற்றிய திறனாய்வு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கீச்சுக்கள் அருமை அண்ணா.
நேற்றுகள் கடந்தன இன்று கடக்கிறது! பிறகென்ன..... நாளையும் தான்!
...
வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு ஈசியா சொல்லிட்டு போக முடியுது
வரிக்கு வரி வித்தியாசம் கலந்த சுவாரஸ்யம். காலைபொழுதைக் கலகலப்பாக்கியமைக்கு நன்றி.
Post a Comment