காரிருள் கவ்விய
நிலவற்ற பொட்டலில்
துணையிருந்து
இருள் தின்ற
ஒற்றை விளக்கின்
திரியை
போதுமென
நசுக்கி விட்டேன்
இடைவிடாது
துளைக்கும் காற்றில்
சுரந்து குவியும் இருளை
சுரந்து குவியும் இருளை
இனி
நான் தின்ன வேண்டும்
இல்லையெனில்
இருள்
என்னைத் தின்ன
அனுமதிக்க வேண்டும்!-
8 comments:
இருளுக்கும் ஆசை வரும் உன்னை தின்ன .. மாறி மாறி பரிமாறி கொள்ளுங்கள் ..!
உங்கள் ஒளிவட்டத்தை எப்படி நசுக்க? :) இருள் தின்று வளருமது.
கனவைத்தானே தின்ன வேண்டும் என்று சொன்னீர்கள் ??? இப்போது இருளையுமா?
அடடா! :-)
அன்பின் கதிர் - இருளைப் போக்கி ஒளி வரச் செய்ய வேண்டும். இருளைத் தின்றாலும் சரி - தவறில்லை- இருள் தின்பதற்கு அனுமதிக்க வேண்டாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்ல கவிதை..
ரசிக்க வைத்தது தீராப்பசி...
வாழ்த்துக்கள் அண்ணா...
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment