துயர்மிகு பொழுதில்
நீளும் மௌனத்தைக் கிழிக்கும்
ஒரு சொல்லையும்
நோக்கும் கூரிய சொற்களை
உறையிலிட்டுத் தைக்க
ஒரு மௌன நூலையும்
நாடித்திரிகையில்
சிவப்பு பச்சை மஞ்சள் கறுப்பென
கடை விரிக்கப்பட்டிருக்கின்றன
ஈரம் காயச் சொற்கள்
நூலில் முடிபோட்டு
பொறுக்கியெடுக்கும்
சொற்களிலிருந்து
ஈரமாய் வழிவது
பாவத்தின் வியர்வையாகவோ
துரோகத்தின் ரத்தமாகவோ
இருக்க வேண்டுமென்பதில்லை
ஒரு பிசகின்
கண்ணீராகவும்கூட இருக்கலாம்
3 comments:
சில நேரத்துப் பிசகுப் பெரும் சாபமாகவும் சில நேரத்துப் பிசகுப் பெரும் வரமாகவும்!
அருமை
சூப்பர....
வாழ்க்கையின் வழித்தடங்கள்...
கவிதை அருமை அண்ணா...
வாழ்த்துக்கள்.
Post a Comment