பொண்டாட்டி
புள்ள குட்டி
அப்பன் ஆத்தா
பொறந்தவ
மருமக
பேரம்பேத்தி
எவரிடமும்
சொல்லிச்செல்ல
அவகாசமற்றவனின்
மரணத் தூரிகை ஈரம்
ஒருபோதும்
உலர்ந்து விடுவதில்லை
தீரா நினைவுகளைத்
தீட்டுவதிலிருந்து
-0-
6 comments:
மரணத் தூரிகை - "த்" வேண்டுமா?
நல்லதொரு கவிதை...
வித்தியாசமான சிந்தனை ரசித்தேன்....
அன்பின் கதிர் - சிந்தனை நன்று - கவிதையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Nice
சொல்லி செல்ல அவகாசம் இல்ல என்பதை விட அனுமதி இல்லை என்பதே சரி
அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி அண்ணா....
Post a Comment