தீர்க்க முடியாத தூரத்தில்


காற்றுகூட கசியாத இறுக்கத்தில்
மனங்கள் முயங்கிக்கிடந்தாலும்
வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்
கூடவே விதியும் பிரித்துப்போட்ட
பூளோகத்தின் பிடியில் நீயும் நானும்
தீர்க்க முடியாத தூரத்தில்...

சப்தங்கள் அமிழ்ந்துகிடக்கும்
பின்னிரவில் சப்தம் போட்டு
எழுப்பிவிடும் மனதோடு தேடுகிறேன்
இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை...

மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்
கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...

35 comments:

நட்புடன் ஜமால் said...

கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...]]


அருமை.

நாடோடி இலக்கியன் said...

//மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்
கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே//

அருமை.

//காற்றுகூட கசியாத இறுக்கத்தில்//

காற்று கசியிதோ இல்லையோ காதல் கசிஞ்சு ஆறா ஓடுது.


//காற்றுகூட கசியாத இறுக்கத்தில்//

காற்று ஏற்கனவே அரெஸ்ட் ஆகியிருக்கா?

அகல்விளக்கு said...

//காற்றுகூட கசியாத இறுக்கத்தில்//

காதல் கசிந்து ஓடுகிறது கவிதையில்...

Unknown said...

நல்ல கற்பனை வளம். அடி பின்றீங்கலேப்பா
அருமை

vasu balaji said...

அல்லாவ். என்னா இது!!!அட எஞ்சாமி அசத்தல் அபாரம்!

/இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை.../

ஆஹா!ஆஹா!

/மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்/

ரைட்டு.

/உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே.../

ம்ம்ம். சூப்பர்ப்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))

பின்னோக்கி said...

அருமையான கவிதை

Anonymous said...

முத்தம் அனாதையாகும் அபாயம் ஐய்யகோ கொடுமை...

க.பாலாசி said...

//இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை...//

அட...அட... அழகான வார்த்தைப்பின்னல்கள்.

//மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்//

ம்ம்ம்..நடக்கட்டும்..நடக்கட்டும்...

Anonymous said...

காற்றில் கலந்த முத்தங்களே அவள் கன்னத்தையாவது சற்று வருடுங்கள்..அவளுக்குள் சபலம் வராது போனாலும் சலனமாவது பிறக்கட்டும்...

Anonymous said...

காதல் சொட்டும் காதல் கவிதை...ம்ம்ம்ம்ம் நானுந்தான் எழுதறேன் என்னதுக்கு என்று இப்படி எழுதப்போகிறேன்...

Anonymous said...

கதிர் அருமை என்ற வார்த்தையும் பத்து கமெண்டும் கண்டிப்பா போதாது இந்த மோகம் கொண்ட காதல் கவிதைக்கு...

நிகழ்காலத்தில்... said...

சரி... சரி

கவித அருமை

கவிதை எழுதும்போது உங்களின் மனநிலை :))

கலக்கறீங்க மாப்பு

அன்புடன் நான் said...

கவிதையின் ஓட்டம் அழகானது.

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு கதிர்... (நீங்க நிறுத்திட்டாலும் நாம போடுவோம் ஓட்டு... =))

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு கதிர்!

பழமைபேசி said...

Class!amaipesi

V. R said...

The concept of the lyric is so deep rooted and the words are touchy. In the process of fast rolling life, we look back our evocative past some day and such nostalgic lines are coming from the heart. This lyric made me to read several times that is refreshing the compassion in me.

Thank you!

(sorry for the English comment as i do not know how to type in Tamil)

தேவன் மாயம் said...

உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...]]//

ரசனை மிகு வரிகள்!

ஆரூரன் விசுவநாதன் said...

//வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்
கூடவே விதியும் பிரித்துப்போட்ட
பூளோகத்தின் பிடியில் நீயும் நானும்
தீர்க்க முடியாத தூரத்தில்...//


ம்ம்ம்ம்ம்.....ரச்னையான கவிதை வரிகள்

க.பாலாசி said...

காலையில் போட்ட பின்னூட்டம் இன்னும் திரைக்கு வரவில்லை. இது வந்துவிட்டதா வரவில்லையா என்று எத்தனைமுறை பார்ப்பது? இப்படிசெய்யவிட்டு ஹிட்ஸை எகிரவைக்கும் டெக்னிக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதை வழிமொழிய வானம்பாடிகளையும் அழைக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

காதலாகி கசிந்துருகி..:-))))

தமிழ் உதயம் said...

அவளை தேடி அலைவதிலும் ஒரு சுகம் உள்ளது தானே. தீர்க்க முடியாத தூரம்... மோகம் பிசைந்த காதல் முத்தம்... இவையெல்லாம் இருப்பதால் தானே கவிதை வருகிறது. கவிதை வெகு அழகு.

சீமான்கனி said...

//மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்
கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//

....ரசித்த வரிகள் ...மிக அருமை அண்ணே...புதுவருட வாழ்த்துகள்...

vasu balaji said...

க.பாலாசி said...

/ இதை வழிமொழிய வானம்பாடிகளையும் அழைக்கிறேன்.//

ஈரோடு பதிவர் சந்த்திப்பில் கலந்துரையாடலில், இது ஒரு உத்தியாக திரு அப்துல்லாவால் கூறப்பட்டதால் (டமாசுக்குன்னாலும்), நான் வழிமொழிய இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.:))

புலவன் புலிகேசி said...

//உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//

சே..பின்னிட்டீங்க தல...நல்ல கவிதை..

கமலேஷ் said...

அழகாயிருக்கிறது...
வாழ்த்துக்கள்..

முருக.கவி said...

கவிதை நன்றாக இருக்கிறது

நிலாமதி said...

காதலான கவிதை அழகு........

இளைய கவி said...

ரொம்ப அழகு தல‌

அன்பரசன் said...

சூப்பரா இருக்கு. அசத்திட்டீங்க

Thamira said...

அழகான கவிதை. ரசித்தேன்.

நசரேயன் said...

//மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்
கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//

சரிங்க

பித்தனின் வாக்கு said...

அருமையான வரிகள். காதல் சிந்தும் கவிதை. நன்றி.

Anonymous said...

fantastic lines...