மீண்டும் மீண்டும்



மழலையின் எழுத்துக்களாக
சிணுங்கிய தூறல்
சட்டென மௌனங்ளை
சுக்குநூறாய் கிழித்தது மழையாய்

வழிந்தோடிய வெள்ளம்
சாலைகளில் படர்ந்து
கிடந்த அழுக்கை கரைத்து
வெளுத்துப் பார்த்தது

தேங்கிய வெள்ளம்
கெட்டித்துப் போன கரைகளை
கொஞ்சமாய் கரைத்து உடைத்து
பெருக்கெடுத்து புதிய தடம் போட்டது

நாறிப்போன சாக்கடை
அடித்துச் செல்லப்பட்டது
நலிந்து போன குளத்தின்
தாகம் தீர்க்கப்பட்டது

கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை



-

_____________________________________________________

44 comments:

கலகலப்ரியா said...

அழகான கவிதை கதிர்...! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்..!

நிகழ்காலத்தில்... said...

//கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை//

மனிதனின் மனதிற்காக...

கதிர் அற்புதம்

வாழ்த்துகள்

ஊர்சுற்றி said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் :)

Ashok D said...

நல்லாயிருக்குங்க...

அன்பரசன் said...

சூப்பர்

vasu balaji said...

/மழலையின் எழுத்துக்களாக
சிணுங்கிய தூறல்
சட்டென மௌனங்ளை
சுக்குநூறாய் கிழித்தது மழையாய்/

ஆரம்பமே வித்தியாமான கற்பனை.

/கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை/

முடிவில் கதிர் டச்.

இடையில்..?

முழுக்கரும்பு

வெற்றி பெற வாழ்த்துகள்.

விஜய் said...

வாழ்த்துக்கள்

விஜய்

பிரபாகர் said...

மழை பெய்கிறது தமிழகத்தில் மட்டுமல்ல, கதிரின் இடுகையிலும் கவிதையாய்.

எப்படி கதிர், நாங்களும்தான் மழையை பார்க்கிறோம், இது போல் எல்லாம் தோன்றுவதில்லையே!

அருமை.

பிரபாகர்.

நிலாமதி said...

கெட்டித்து போன கரை களை .....கெட்டியாய் போன கறைகளை (அழுக்குகளை) என்று வந்தால் இன்னும் நன்றாக இருக்கும என்பது என் பணிவான கருத்து.
அழகான் மழைக் கவிதை

சீமான்கனி said...

பாஸ்ட்....நான்தான்...???

சீமான்கனி said...

//கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை//

ஊரில் நல்ல மழையோ...???

மழை கவிதை அழகாய் வந்திருக்கு அண்ணே...வெற்றிக்கு வாழ்த்துகள்...

கலகலப்ரியா said...

voted... aangg... enna boni aagalai..? makkal ellaam bijiyaa..??

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான சிந்தனை

மழலையின் எழுத்துகள் - சிணுங்குதல் - சடாரென பெரு மழை - மவுனங்கள் காண வில்லை.பெருக்கெடுத்த வெள்ளம் செய்த செயல்கள் - மனித மனதினைச் சுத்தம் செய்ய மீண்டும் மீண்டும் மழை

நன்று நன்று நல்வாழ்த்துகள் நண்பா

புலவன் புலிகேசி said...

மீண்டும் மீண்டும் பிறக்கும் அந்த மழை சில நேரங்களில் பிரசவிக்க மறந்து மகிழ்ச்சியை கெடுத்து விடுகிறது...நல்ல கவிதை...

அகநாழிகை said...

வெற்றிக்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

//
கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை//

அருமை கதிர். வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்!

Gowripriya said...

அருமை.. வெற்றி பெற வாழ்த்துகள்...

V.N.Thangamani said...

நல்ல மழைங்க கதிர்
வாழ்க வளமுடன்.

thiyaa said...

//கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை//


இங்கு தமிழ் நாட்டில் உள்ள சாலைச் சீரழிவை
நன்றாகச் சொல்லியுள்ள கவிதை

பரிசுக்கு வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

//கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை//

இப்பதான் நம்ம ஊர்ல மழை ஓய்ந்தது..........

உங்க அழகான கவிதையால மீண்டும் கொட்டுகிறது......

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.........

Jerry Eshananda said...

வாழ்த்துகள்,மழையில் நனைந்தேன்

க.பாலாசி said...

சொல்லவேயில்ல....

கவிதை நன்று....

வாழ்த்துக்களுடன்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கவிதை.வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் கதிர்

உயிரோடை said...

வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு கவிதை!
வெற்றி பெற வாழ்த்துகள்!

நாடோடி இலக்கியன் said...

நல்ல கவிதை கதிர்.

Chitra said...

மழையை மழலையாய் ரசித்து அழகாய் உருவாகியுள்ள கவிதை.

தாராபுரத்தான் said...

கொஞ்சமாய் கரைத்து உடைத்துகவிதை,,

நட்புடன் ஜமால் said...

வழிந்தோடிய வெள்ளம்
சாலைகளில் படர்ந்து
கிடந்த அழுக்கை கரைத்து
வெளுத்துப் பார்த்தது]]

அட ...

--------------------

கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை

அருமை.

வெற்றி பெற வாழ்த்துகள்.

புலவன் புலிகேசி said...

அப்ப எனக்கு பரிசு கிடையாதா...? அவ்வ்வ்வ்...வாழ்த்துக்கள் நண்பரே

புலவன் புலிகேசி said...

முந்தைய கருத்துரையில் வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன்..

நாஞ்சில் நாதம் said...

வாழ்த்துகள் கதிர்.

"உழவன்" "Uzhavan" said...

அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அழகாக கவிதை.. நல்ல வாசிப்பனுபவம்..!!

priyamudanprabu said...

அழகான கவிதை

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

துபாய் ராஜா said...

மழை வர்ணனை அருமை.

வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான கவிதை. வெற்றிபெற வாழ்த்துகள்..!

Thenammai Lakshmanan said...

//கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை//

அருமை ஈரோடு கதிர்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Radhakrishnan said...

மிகவும் சிறப்பாக இருக்கிறது. மழையில் மனிதர்களின் ஏக்கம் தென்படுகிறது.

வெற்றி பெற வாழ்த்துகள்.

பத்மா said...

மனம் வெளுக்க மார்கம் உண்டோ எங்கள் முத்து மாரி?
பாரதிலிருந்து கதிர் வரை இந்த ஏக்கம் தொடகிறது
வாழ்த்துக்கள்
பத்மா

வெள்ளிநிலா said...

இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

இதை எப்படி மிஸ் பண்ணினேன். சரி பாஸ். அருமையான/அழகான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்