யாரோ ஒருவனாக...

வளர்வதும், தேய்வதும் மாற்றமே. வாழ்க்கையில் ரசிக்கத்தக்க மாற்றம் என்பது இருக்கும் நிலையில் இருந்து ஒரு அங்குலம் அளவேனும் உயர்வதுதான். அப்படி உயர்வை நோக்கிய மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், இதுவரை செய்து கொண்டிருந்த செயல்களை, இதுவரை செய்தது போலவே தொடர்ந்து செய்தால் உயர்வு என்பது வெறும் கானல் நீரே. செய்து கொண்டிருந்த செயல்பாடுகளில் இருந்து, இயங்கிக் கொண்டிருந்த தளத்தில் இருந்து புதிய செயல்களைத் துவக்குவதும், புதிய தளத்தில் தடம் பதிப்பதும் மிக மிக முக்கியம்.

ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான். சில நேரங்களில் தடம் தீர்ந்துபோய் முட்டுச் சந்தில் நிற்பது போல் உணர்வதும் உண்டு.அதே சமயம் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது.

இது மாதிரியான நேரங்களில் மிக முக்கியத் தேவையாக இருப்பது, மிகத் தெளிவாக அலசும் குணம்.
  • செயலைத் துவங்கும் காரணம்

  • செயல் குறித்த அறிவு

  • முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

  • வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

  • எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)


இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.செயலை எந்த நேரத்தில், எந்த இடத்தில் எதன் பொருட்டு துவங்குகிறோமோ, அதை ஒருவேளை நாம் தொடங்காவிட்டால், அந்த செயல் துவங்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை அலசி ஆராய்தல் மிக முக்கியம்.


ஒரு வேளை நாம் அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விட்டால், வேறு யாரும் அதை செய்யவே மாட்டார்கள் எனில், ஒன்று அந்தக் காரியம் நிறைவேற்ற முடியாத அளவு கடினமானதாக இருக்கும் அல்லது அந்த காரியத்தால் மிகப் பெரிய பலன் ஏதும் இருக்காது.

அதே சமயம் நாம் தயங்கித் தவிர்க்கும் காரியத்தை, இன்னொருவர் நிச்சயம் துவங்க வாய்ப்புண்டு என்பது உறுதியாக தெரிந்தால் அந்த காரியத்தை தவிர்ப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.

ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”

(விகடன் முகப்பிலும், இளமை விகடனின் சமூகம் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை)

27 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”
//
உண்மையான வார்த்தைகள் கதிர் ....

tamiluthayam said...

இதை சுயபரிசோதனை என்று சொல்லலாமே. ஒரு பூவின் மலர்ச்சி போல் அழகானது, உன்னதமானது - மனிதனின் வளர்ச்சி. வளர்ச்சி, வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சொன்ன அணுகு முறை அவசியம் தேவை. சிறந்த இடுகை.

Ashok D said...

ரைய்டுங்க :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்ல‌ ப‌திவு

//கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது//

ஆனாலும் அதையெல்லாம் க‌ட‌ந்து முய‌ற்சி எடுத்த‌வ‌ர்க‌ள் தான் வாழ்க்கையில் உய‌ர்ந்த‌ நிலைக்கு செல்கிறார்க‌ள்

vasu balaji said...

சுய முன்னேற்றாத்திற்கு மிக அவசியமான கருத்துக்கள். மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்த வேண்டியவை. நன்றியும் பாராட்டுகளும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை கதிர்,வழக்கம் போலவே. :-)))))))))

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

சந்தனமுல்லை said...

மிக நேர்த்தியான அழகான சிந்தனைகள் கதிர்! வாழ்த்துகள்!

கலகலப்ரியா said...

சரியாதான் சொல்லி இருக்கீங்க...!

அகல்விளக்கு said...

//“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்...

க.பாலாசி said...

//ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான்//

உண்மையான கருத்துக்கள்.

இளைஞர்களுக்கு (அனைவருக்கும்கூட) தேவையான பயனுள்ள பதிவு.

ப்ரியமுடன் வசந்த் said...

சரியான வழிகாட்டுதல் அண்ணா

-யாரோ ஒருவன்

தேவன்மாயம் said...

ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”//


நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!

ரோஸ்விக் said...

//புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை. //

தன்னம்பிக்கையுடன் "யாரோ ஒருவனாக" நானும்...

அருமையான கட்டுரை. இன்னும் விதையுங்கள் நம்பிக்கையை....

ஹேமா said...

கதிர்,எப்பவும் போல நம்பிக்கை தரும் சிந்தனைத் தெறிப்பு.

நிகழ்காலத்தில்... said...

//“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

மாற்றம் தானாக வரும்.

நிலாமதி said...

நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!மனதில் இருத்த வேண்டியவை. நன்றியும் பாராட்டுகளும்.

Deepa said...

கட்டுரை முழுதும் அதீத positive energy தெறிக்கிறது.
great job கதிர்.

சீமான்கனி said...

//“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”//

உண்மைதான்...ஒரு புது உற்சாகம் தந்து விடீர்கள்...நன்றி...

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமை கதிர்....வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

நல்ல தன்நம்பிக்கை கொடுக்கும் இடுகை... நன்றியும் வாழ்த்துகளும்

பிரபாகர் said...

அருமை கதிர்!

கொஞ்சம் பொறுங்க, ஐயாவோட கவிதையை புத்தகமா போடற ஐடியாவில இருந்தேன். இப்போ உங்க கட்டுரைகளையும்.... நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.

தமிழ் said...

அருமையான கட்டுரை

///“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//


ந‌ச்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான ஊக்கமKஇக்கும் இடுகை. தன்னம்பிக்கையினை விதைக்கும் இடுகை. ஒரு செயல் துவங்கும் முன் எவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டும் எனக் கூறும் இடுகை

நன்று நன்று நல்வாழ்த்துகள் கதிர்

அன்புடன் நான் said...

செயலைத் துவங்கும் காரணம்

செயல் குறித்த அறிவு

முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)
இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.//

சரியா சொன்னீங்க... தன்னம்பிகை நிறைந்த வரிகள்.

பித்தனின் வாக்கு said...

நல்ல முன்னேற்றப் பாதைக்கான கட்டுரை. நான் தங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கின்றேன். பலரும் பின்னூட்டம் இட்டு பாராட்டுவதால் நான் பின்னூட்டம் இடுவதில்லை. எல்லாரும் சொல்வதை வீட நான் என்ன வித்தியாசமாக இருக்கப் போகின்றது என்பதுதான் காரணம். அதற்க்காக மன்னிக்கவும்.

நான் தங்களின் பதிவின் இரசிகன் என்ற முறையில் விருது ஒன்றை அளித்துள்ளேன். அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

நசரேயன் said...

மனசிலே போட்டுகிறேன்