சட்டெனத் தொலைந்திடும் தொடர்புகள்

வெளியே மழை சினுங்கி கொண்டிருக்கிறது. அலைபேசிகள்கும் மிகப் பிரபலமான, நவீனப் படுத்தப்பட்ட என் நண்பனின் கடை. மழையில் வாடிக்கையாளர் யாரும் வராமல் சோம்பிக் கிடந்தது. ஒரு நடுத்தர வயது மனிதர் வந்தார். மழையில் தொப்பலாக நனைந்திருந்தார். முகத்தில் இருள் அப்பிக் கிடந்தது. கையில் கொஞ்சம் விலையுயர்ந்த மாடல் போன் வைத்திருந்தார்.

கடையை நிர்வகிக்கும் வகிக்கும் நபர் வந்தவரிடம் “என்னங்கண்ணா திரும்பவும் பிரச்சனையா என்றார்” அப்படிக் கேட்டபோதே புரிந்தது சமீபத்தில் தான் ஏதோ பிரச்சனைக்காக வந்துள்ளார் என்பது.

“போன்ல இருந்த எல்லா நெம்பரும் அழிஞ்சுபோயிடுச்சுங்க, பைத்தியமே புடிச்சிரும் போலயிருக்குதே”

“ஏங்க என்ன பிரச்சனை, அன்னைக்குத் தானே உங்க போன்ல இருந்த எல்லாக் கான்ட்க்ட்சையும் சி.டில போட்டுக் கொடுத்தொம்”

“அந்தக் கருமத்த தெரியாத்தனமா, ஒடைச்சி தொலைச்சிட்னேனுங்களே”

“சரி இப்ப என்னாச்சு”

“நம்ம பையன் எடுத்து, பக்கத்தூட்டுக்காரரு போன்லயிருந்து பாட்டு ரெக்கார்ட் பண்டீருக்கான், அதுக்கப்புறம் வேலை செய்லீங்க, அங்க ஒரு நாயிகிட்ட குடுத்துப் பார்த்தேன், அவன் என்னுமோ நோண்டிப்போட்டு, எல்லா நெம்பரும் போயிருச்சுனு சொல்லிட்டான், அதுதான் இங்கியே கொண்ட்டு வந்தேன்... சாமிசாமிய இருப்பீங்க, எப்பிடியாச்சும் எல்லா நெம்பரையும் எடுத்துக்குடுத்ருங்க”

கையில் போனை வாங்கும்போதே இவர் சொன்னார், “அண்ணா, முடிஞ்சா கண்டிப்பா எடுத்துத்தர்றோம், அதுல எதுவும் இல்லீனா, எங்களாலும் ஒன்னும் பண்ண முடியாது”

“அய்யோ, சாமி அப்பிடிச் சொல்லீறாதீங்க, என்ன பண்ணுவீங்களோ, எடுத்துக் குடுத்துறுங்கண்ணா, அது இல்லீனா, எம் பொழப்பே அவ்வளவுதானுங்க”

“யாவாரம் பண்றதில முக்காவாசிப்பேர் மூஞ்சிகூட பாத்ததில்லீங்க, எல்லா அவுங்க செல்போன் நெம்பர வெச்சித்தானுங்க, வண்டி டிரைவருங்கெல்லாம் நின்னுக்கிட்டாங்க, இந்த நெம்பரு இல்லீனா, எப்பிடிபோய் வசூல் பண்ணுவேன்னு தெரியலியே”

அதற்குள் போனை கம்ப்யூட்டருடன் இணைத்துப் பார்த்த நபர் சொன்னார்
“சார், சிம் கார்டுல இருக்கிற நெம்பர் மட்டுந்தான் இருக்கும், போன் மெமரில ஒன்னுமே இல்லீங்க”

“கடவுளே...!!! அதுல எல்லா நெம்பரும் இருக்குதுங்களா”

“மொத்தம் 125 நெம்பர் இருக்குதுங்க”

“அய்யோ, 600 நெம்பருக்கும் பக்கமா அதுல இருந்துச்சுங்களே, அய்யா சாமி, எப்பிடியாவுது கஷ்டப்பட்டு எடுக்கிறக்கு பாருங்களேன், என்னங்க சோறாக்கிறத தவர எல்லா கம்பியூட்டர்ல பண்ணலாங்றாங்க, எப்பிடியாது எடுத்துக்குடுத்திருங்க, இல்லீனா அவ்வளவுதான் எம் பொழப்பே”

“ஏங்க, அதுதான் போனதடவ வந்தப்பவே சி.டில போட்டுக்குடுத்தோம், அதும் இல்லீங்றீங்க, போன்ல எடுக்க முடியாதுங்களே”

“அய்யா சாமி, காலுலகோட உழுந்தர்ரேன், எப்பிடியாவுது பண்ணிக் குடுத்துறுங்களேன்”

என் பக்கம் திரும்பி “நான் பாருங்களேன், அதுல எந்த நெம்பரையும் எழுதிவெக்கமா உட்டுட்டேன்... ... அது நம்ம புத்தி அப்டீங்க, நம்மள மீறி என்னாயிரப் போவுதுன்னு எகத்தாள இருந்திட்னுங்க, இப்பப் பார்த்த எப்படி பொழப்பு பண்றதுன்னே தெரிலீங்க, அத்தனையும் போன நம்பிப் பண்ற தொழிலாப் போச்சுங்க”தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

என்ன தொழில் செய்கிறார் என்ற போது, ஐந்து, சிறிய நான்கு சக்கர சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு விடுவதாக சொன்னார்.

த்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு போன் என்பது அதிசயமான பொருள், புதிதாக ஒரு போன் இணைப்பு பெறுவதற்கு, அத்தனை அலைச்சல் அலைய வேண்டும். அப்பொழுது வீட்டுக்கே ஒரு போன் தான் இருக்கும், தூக்கத்தில் கேட்டால் கூட நெருங்கிய உறவு, நட்பு, தொழில் வட்டத்திலிருப்போரின் எண்கள் மனப்பாடமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20, 30 எண்களாவது எளிதில் நினைவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் போனுக்கு அருகில் கட்டாயம் போன் எண்கள் எழுதிவைக்கும் ஒரு டைரி இருக்கும். நம் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர் எண்களும் அதில் குறிக்கப்பட்டிருக்கும். வேறு வழியில்லாமல் எண்களை ஒவ்வொன்றாக அழுத்தி அழுத்தி அழைக்க வேண்டியிருந்ததால் எண்களை பெரும்பாலும் மனதில் பதிந்திருக்கும்.

அதுவும் செல்போன் அறிமுகமான காலத்தில் பயன் படுத்திய சிலரின் எண்கள் மட்டும் நினைவில் இருக்கின்றன, அதன்பின் புற்றீசலாய் முளைத்த புதிய புதிய எண்கள், நெருக்கமானவர்களாய் இருந்தால் ஒன்று முதல் 10 எண்ணுக்குள் ஸ்பீடு டயலில் இருக்கிறது, மற்றவர்களின் எண்கள் செல் போனுக்குள் இருக்கும் புத்தகத்தில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து பெரும்பாலனவர்கள் அனைத்து தொடர்பு எண்களையும் ஒரு கையேட்டில் குறித்து வைப்பதோ, புதிதாக இணைக்கும் எண்களை தொடர்ந்து எழுதிவைப்பதோ கிடையாது. அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

போன் தொலைந்து போனாலோ, இயங்காமல் போனாலோ, பேட்டரி முழுதும் தீர்ந்து போனாலோ தவிக்கும் தவிப்பு மிகக் கொடுமையானது. நானும் இப்படித் தவித்துப் போயிருக்கிறேன் பல சமயங்களில்... ஆனாலும் ஒருபோதும் புத்தி வந்ததேயில்லை. ஆனால் அவரைப் பார்த்த பின் முதல் வேலையாக நேற்று, என் போனில் உள்ள தொடர்பு எண்களை நகலெடுத்தேன். சந்திக்கும் நபர்களிடமும் சொல்கிறேன்.

சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், பல சமயம் நம் தவறுகளிலிருந்து கூட கற்றுக்கொள்ளாத பாடத்தை...

41 comments:

நாகா said...

சரியான சமயத்தில் தேவையான பதிவு கதிர். நானும் பல சமயங்களில் மொபைலை தொலைத்துவிட்டு நண்பர்களின் எண்களுக்காக அலைந்திருக்கிறேன். ஆனால் எப்பொழுதும் முக்கியமான எண்கள் மட்டும் நினைவிலேயே இருக்கும்.

கலகலப்ரியா said...

ஆஹா... எச்சரித்துக்கு நன்றி கதிர்... மிகவும் அவசியமான பதிவு...

vasu balaji said...

முக்கியமான மேட்ருங். நம்மளுக்கு சமயத்துல நம்ம நம்பரே மறந்து போய்டுதுங்க.

/ஆனால் அவரைப் பார்த்த பின் முதல் வேலையாக நேற்று, என் போனில் உள்ள தொடர்பு எண்களை நகலெடுத்தேன்./

அவரு சிடி ஒடச்சா மாதிரி இது தொலைச்சிராம நாலஞ்சி காபி எடுத்து வைங்க.

ஊரு பாசை கேட்டு நாளாச்சுதுங்களா? காது குளு குளூங்குது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு கதிர். உண்மை தான். அலைபேசி எண்கள் தொலைந்து விட்டால் வருத்தம் தான்.

உங்கள் அலைபேசியின் தொலைபேசி எண்கள் sync செய்யும் வசதியை வைத்து கணினியில் ஏற்றிக்கொள்ளலாம். அதை ஒரு பிரதி எடுத்துக்கொண்டால் போதுமே!! நோக்கியா செல்போன் என்றால் ஓவி www.ovi.com என்ற இணைய தளத்தில் உங்கள் எண்களை சேமிக்க முடியும்.

பிரபாகர் said...

பழச மறக்கக்கூடாதுங்கறதுக்கு இந்த இடுகை ஒரு நல்ல உதாரணம்...

அருமை கதிர்....

பிரபாகர்.

அன்புடன் நான் said...

பயனுள்ள‌ எச்சரிக்கை பாடம்...கற்போம். நன்றிங்க கதிரண்ணா.

க.பாலாசி said...

//போன் தொலைந்து போனாலோ, இயங்காமல் போனாலோ, பேட்டரி முழுதும் தீர்ந்து போனாலோ தவிக்கும் தவிப்பு மிகக் கொடுமையானது//

நல்லா சொன்னீங்க போங்க. நானும் அனுபவப்பட்டுட்டேன். ஆனாலும் புத்தி வரல. இப்பவும் எனக்கு பத்து நெருங்கிய நம்பர்கள்மட்டும்தான் ஞாபகம் இருக்கு. ஆனாலும் இன்னும் மற்ற நம்பர்களை டைரியில எழுதிவைக்க தோணல. முதல்ல அத செய்யணும்.

சந்தனமுல்லை said...

பயனுள்ள இடுகை..
மொபைல் வந்ததிலிருந்து தொலைபேசி எண்கள் குறித்துக்கொள்ளும் டைரி வழக்கொழிந்து விட்டது.

Rajasurian said...

நண்பர் செந்தில்வேலன் கூறியது போல் synchronisation மூலம் அவ்வப்போது தொடர்பு விபரங்களை எக்ஸ்செல் file-ஆக மாற்றி CD மட்டுமின்றி மெயிலிலும் பேக்அப் செய்து வையுங்கள். வெளியூர் பயணங்களில் போன் மிஸ் ஆனால் உதவிகரமாய் இருக்கும்.

பின்னோக்கி said...

சொன்ன நம்ப மாட்டீங்க. என் மனைவியின் நம்பர் கூட அடிக்கடி மறந்து போய்டுது. ஸ்பீட் டையல் பண்ணி பண்ணி நம்பர் நியாபகமே இருக்குறதில்லை. முதல்ல எல்லா நம்பரையும் பேக் அப் எடுக்கணும். இன்னைக்கு இன்னொருத்தர் கிரிடிட்கார்டு எல்லாம் பத்திரமா இருக்க சொல்லி பதிவு போடுறாரு. இப்ப நீங்க மொபைல் நம்பர் பத்தி சொல்றீங்க. கேர்புல்லா இருக்கனும் போல

அன்புடன் அருணா said...

ஆஹா.....பூங்கொத்து!

நேசமித்ரன் said...

பயனுள்ள இடுகை

தமிழ் அமுதன் said...

தேவையான பதிவு நன்றி ..!

நிகழ்காலத்தில்... said...

என்னுடைய போன் மாடல் HTC p3400

பல முறை முயன்றும் கணினியில் போன்புக்கை ஏற்றவே முடியவில்லை:((

windows mobile centerநிறுவி இருக்கிறேன்,

நம் தொழில்நுட்ப பதிவர்களின் பார்வையில் ஒரு இடுகையாக கிடைத்தால் அனைவருக்கும் பலனாக இருக்கும்

நன்றி கதிர் உணர்வுகளைப் பகிர்ந்தமைக்கு..

ப்ரியமுடன் வசந்த் said...

//உங்கள் அலைபேசியின் தொலைபேசி எண்கள் sync செய்யும் வசதியை வைத்து கணினியில் ஏற்றிக்கொள்ளலாம். அதை ஒரு பிரதி எடுத்துக்கொண்டால் போதுமே!! நோக்கியா செல்போன் என்றால் ஓவி www.ovi.com என்ற இணைய தளத்தில் உங்கள் எண்களை சேமிக்க முடியும்.
//

ஒஹோ இதுமாதிரியெல்லாம் கூட ஸ்டோர் பண்ணலாமா?
நன்றி செந்தில் அண்ணா
நன்றி கதிர் அண்ணா

Unknown said...

நல்ல, தேவையான பதிவு....
தொலைத்தவிட்டு அவஸ்தைப்படுவோர் நிறையப்பேர் தான்....

Anonymous said...

நோக்கியா பி சி சூட்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு அத டவுன்லோட் பண்ணி வச்சுக்கிட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

நல்ல; தேவையான பதிவு கதிர்.

Unknown said...

நான் செல்போன் வாங்குவதகு முன்பு உள்ள அனைத்து தொடர்பு எண்களும் ஞாபகத்தில் உள்ளன.. அதன்பிறகு :-(

நான் என்னோட தொடர்பு எண்ணையெல்லாம் அடிக்கடி இணையத்தில் ஏற்றி வைத்து விடுவேன். மேலும் ஒரு பாக்கெட் டைரி வைத்துள்ளேன்.. :-)

ஈரோடு கதிர் said...

@@ நாகா

@@ கலகலப்ரியா

@@ வானம்பாடிகள்

@@ ச.செந்தில்வேலன்

@@ பிரபாகர்

@@ சி. கருணாகரசு

@@ க.பாலாசி

@@ சந்தனமுல்லை

@@ Rajasurian

@@ பின்னோக்கி
@@ அன்புடன் அருணா

@@ நேசமித்ரன்

@@ ஜீவன்

@@ நிகழ்காலத்தில்

@@ பிரியமுடன்...வசந்த்

@@ கனககோபி

@@ வடகரை வேலன்

@@ பட்டிக்காட்டான்

எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி...

செந்தில், ராஜசூரியன், வடகரைவேலன் ஆகியோர் சொன்ன கருத்துகள் பயனுள்ளவை.

அதே சமயம் கனினி வசதியில்லாமல் செல்போன் உபயோகிப்பவர்கள் குறைந்த பட்சம் அவ்வப்போது ஒரு கையேட்டில் குறித்துவைத்துக் கொள்வது நலம்.

சிவா கேட்டது போல், யாராவது தொழில்நுட்ப இடுகை எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

எல்லோராலும் சந்திக்கப்படும் ஒரு பிரச்னை - அனைவரும் அறிந்ததே - இருப்பினும் படும் பொழுதுதான் புத்தி வருகிற்து -என்ன செய்வது - ம்ம்ம்ம்

நகல் எடுக்க எளிதான முறை ஏதும் இருப்பின் - விளக்கமாக யாராவது இடுகை இட்டால் நலமாக இருக்கும்.

நல்வாழ்த்துகள் கதிர்

ரோஸ்விக் said...

எங்க வீட்டுல முந்தி நான் தான் போன் புக். அவ்வளவு நம்பர் மனப்பாடமாத் தெரியும். ஆனா இப்போ....????

நல்ல பதிவு.

bluetooth வசதி உள்ள மொபைல் மற்றும் கணினி இருந்தால், bluetooth மூலம் கணினியில் ஒரு நகல் எடுத்துவைக்க முடியும். sony ericson என்றால் மிக எளிது.

மாதேவி said...

மிகவும் பயனுள்ள இடுகை நன்றி.

உயிரோடை said...

அட‌ இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் நான் கூட‌ நினைத்தேன். இந்த‌ மைபைல் வ‌ந்த‌லிருந்து நினைவாற்ற‌லும் போச்சு மேலும் முன்பெல்லாம் தொலைபேசி எண்க‌ளை டைரியில் எழுதி வைப்போம் இப்போது அதுவும் இல்லை. க‌ண‌வ‌ர் மைப‌லில் இருக்கும் சில‌ எண்க‌ள் என்னிட‌ம் இருப்ப‌து இல்லை. அவ‌ர‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் அந்த‌ எண்க‌ள் அவ‌ச‌ர‌த்துக்கு கைவ‌ச‌மாவ‌தில்லை. தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ர்வ‌து சில‌ ச‌ம‌ய‌ம் இடையூராக‌த் தான் இருக்கின்ற‌து. விரைவில் எண்க‌ளை எழுதி வைக்க‌ வேண்டும்.

வெண்ணிற இரவுகள்....! said...

நானும் அனுபவித்திருக்கிறேன் கதிர் நல்ல இடுகை

Rekha raghavan said...

நல்ல பதிவு. இப்போதே நம்பர்களை என் டைரியில் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
.
ரேகா ராகவன்

கண்ணகி said...

தவறு நடக்கும் பட்சத்தில் விளைவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும். தம்பி. தொடர்புகளையும். நல்ல உறவுக்ளையும் கவனமாக பராமரிக்கவேண்டும். நல்ல இடுகை.

ஹேமா said...

இன்றைய காலத்திற்கேற்ற மாதிரித் தேவையான பதிவும்.நான் மொபைல் பாவிப்பது குறைவு.என்றாலும் அத்தனை தொலைபேசி இலக்கங்களும் அதற்குள்தான்.

V.N.Thangamani said...

நல்ல பதிவு, தொடர்பு எண்கள் இருக்கும் போது அது சாதாரண விஷயம். இல்லாத போது அது விலை மதிக்கமுடியாத பொக்கிஷம். நன்றி கதிர்

Rajasurian said...

//யாராவது தொழில்நுட்ப இடுகை எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்//

இடுகை இடும் அளவு இதில் சிரமம் இல்லை அண்ணா.

http://mobical.net இணையதளம் சென்று அக்கௌன்ட் ஒன்றை உருவாக்கிகொள்ளவும். (நம் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டி இருக்கும்)

நம் அக்கௌன்ட்-ல் நுழைந்த பின் "Help" சென்று "Configure my device" பட்டனை சொடுக்கவும்.

நம் மொபைல் மாடலை தேர்தெடுத்து, மொபைல் எண்ணை சரிபார்த்துவிட்டு "send me the settings" பட்டனை சொடுக்கவும்.

நம் மொபைல்-க்கு செட்டிங்க்ஸ் ஒன்றை அனுப்புவார்கள். அதை சேவ் செய்யவும். மேற்கொண்டு நம் மொபைலிலிருந்து "synchronise" செய்யும் வழிமுறையும் அதே இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.(இது மொபைல்-ஐ பொறுத்து மாறுபடலாம்)

அக்கௌன்ட் உருவாக்கும்போது verification code கொடுப்பது மட்டும் சற்றே சிரமப்படுத்தலாம். CAPS-ல் கொடுக்க வேண்டி இருக்கும்.

மத்தபடி ரொம்ப சுலபம்தான்.

(மொபைல்-ஐ கணினியுடன் இணைக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே Datacable bluetooth tongle எதுவும் தேவைப்படாது)

ஆ.ஞானசேகரன் said...

//சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், பல சமயம் நம் தவறுகளிலிருந்து கூட கற்றுக்கொள்ளாத பாடத்தை...//

உண்மைதான் கதிர்... சரியான பகிர்வு

ஈரோடு கதிர் said...

@@ cheena (சீனா)

@@ ரோஸ்விக்

@@ மாதேவி

@@ உயிரோடை

@@ வெண்ணிற இரவுகள்

@@ KALYANARAMAN RAGHAVAN

@@ anaani

@@ ஹேமா

@@ வி.என்.தங்கமணி

@@ Rajasurian
(நல்ல தகவல் ராஜ சூரியன்)

@@ ஆ.ஞானசேகரன்

எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி...

ஆரூரன் விசுவநாதன் said...

நான் கூட நினைத்ததுண்டு...... மிக அருமையான பதிவு.......

ஷண்முகப்ரியன் said...

அருமையான தேவையான நினைவூட்டல்,கதிர்.

கண்ணகி said...

அனானியின் கருத்தே என் கருத்தும். வாழ்த்துக்கள் விகடன் குட் பிளாக்.

Unknown said...

70 களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்...எங்கள் கிராமத்து வீடு...தெருவின் ஒருபுறம் முன் வாசல் வழியே நுழைந்து பின்வாசல் வழியே அடுத்த தெருவில் வெளியேறும் வண்ணம் அமைக்கப்பட்ட பழைய வீடு. மொத்த கிராமத்தில் எங்கள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இணைப்பும் மணி பார்க்க சுவர்க் கடிகாரமும் இருந்த காலம் அது. கிராமத்தில் கல்யாணம் என்றாலோ, இழவு என்றாலோ, அந்த மாதம் தொலை பேசி கட்டணம் எகிறிவிடும். ஆனாலும் அதற்காக சிறிதும் முகம் சுளித்ததில்லை. அதே போல் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பதினைந்து பேராவது வீட்டின் ஒரு வாசல் வழியே நுழைந்து வீட்டின் நாடு ஹாலில் உள்ள சுவர்க் கடிகாரத்தில் மணி பாத்து விட்டு அடுத்த வாசல் வழியே வெளியேறிக் கொண்டிருப்பார்கள். எந்த தடையும் கிடையாது. இப்போது நான் சென்னையில் எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...இப்போது எங்கள் கிராமத்தில் செல்பேசி இல்லாத வீடு கிடையாது...ஆனால் எல்லோரும் அதில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...மனிதர்களுக்குள் பேசுவது அரிதாகி விட்டது. வாழ்க்கையை தொலைத்துவிட்டு பணத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்.....

உழவன் said...

தொலைபேசி எண்களை உடனுக்குடன் பிரதியெடுக்க, கூகுள் தொடர்புகள் (http://www.google.com/contacts) ஒரு அருமையான வழி. --உழவன்

N.SENAPATHY said...

Dear kathir,
well. good posting. Isuffered a lot when i lost my phone. Imagine the consequences for l lawyer who had saved all his contacts in phone and lost it . kindly post the ways of saving numbers from mobile to computer in detail ;

NSenapathy
advocate
erode-11

விஜய் said...

நல்ல அவசிய பதிவு

பழைய காலத்து எழுதி வைக்கும் முறையே சிறந்தது.

நமது ஞாபக சக்தி மெருகேற்றும் நியூரோன்கள் பயனற்று போகிறது மெமரியில் சேமித்து வைப்பதால்

ஜோதிஜி said...

1650 எண்கள், 600 வெளிநாட்டு எண்கள் போனது போனது தான். தண்டணை மூன்று மாதம் முடிந்து விட்டது.

Unknown said...

நான் கணினியில் பிசி சூட் மூலம் சேமித்துக்கொள்வேன். என் பெற்றோரிடம் இப்பொழுதும் எல்லா எண்களையும் சிறு டைரியில் எழுதி வைக்கும் பழக்கம் இருக்கிறது. முன்பு பல நண்பர்களின் எண்கள் கூட மனப்பாடமாக இருந்தது, இப்பொழுது அவசரத்திற்கு அழைக்க சில எண்கள் மட்டும் நினைவில்.

சேக்காளி said...

//அங்க ஒரு நாயிகிட்ட குடுத்துப் பார்த்தேன்//
நாயெல்லாமா மொபைல் ரிப்பேர சரியாக்குது.