விவசாயிகளுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம், நூறு கிலோமஞ்சளின் பதிமூன்றாயிரத்தைக் கடந்திருக்கிறது. வரலாறு காணாத விலையேற்றம். ஓராண்டுக்கு முன் இரண்டாயிரம், மூன்றாயிரம் என விற்றுவந்த மஞ்சள் பதிமூன்றாயிரம் ரூபாய் என்பது யாருமே கற்பனை செய்ய முடியாத விலை, மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகளும், இருப்பு வைத்திருக்கும் விவசாயிகளும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெறும் அறுநூறு ரூபாய்க்கு விற்ற கரும்பு இன்று ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு தனியார் ஆலை நடத்துவோரால் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது, பருப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு வேளை இந்த ஏற்றம் நிரந்தரம் இல்லையென்றாலும், மிகப்பெரிய அளவில் விலை சரிய வாய்ப்பு இல்லை, ஏனெனில் விவசாயம் அற்றுப்போனதே இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம்.
விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார மண்டலம் என்று பட்டா போட்டுக் கொடுக்க முயன்ற அரசாங்கம், எங்காவது விவசாய நிலத்தை மேம்படுத்திட முயற்சி செய்திருக்கிறதா?
ஆட்சியாளர்களுக்கும், விவசாயத்தைப் புறந்தள்ளியவர்களுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை மணி இது. இன்னும் இந்த நாட்டை ஆள்வோர் விழித்துக் கொள்ள மறுத்து, போதுமான உணவுப் பொருள் கையிருப்பில் இருக்கிறது அல்லது இறக்குமதி செய்து சமாளித்திடுவோம் என முனங்கிக் கொண்டிருப்பது ஏமாற்றுவதின் உச்சகட்டம். இறக்குமதி செய்து நம் நாட்டு மக்களின் பசியைப் போக்கிட முடியாது, நம் மக்கள் தொகை அப்படி. நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமும் கூட. ஆளும் வரை ஏதாவது சொல்லிச் சமாளிப்போம், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், அதன்பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனத்துக்குப பழியாகப் போவது எளிய வருமானம் கொண்டவர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெறும் அறுநூறு ரூபாய்க்கு விற்ற கரும்பு இன்று ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு தனியார் ஆலை நடத்துவோரால் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது, பருப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு வேளை இந்த ஏற்றம் நிரந்தரம் இல்லையென்றாலும், மிகப்பெரிய அளவில் விலை சரிய வாய்ப்பு இல்லை, ஏனெனில் விவசாயம் அற்றுப்போனதே இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம்.
விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார மண்டலம் என்று பட்டா போட்டுக் கொடுக்க முயன்ற அரசாங்கம், எங்காவது விவசாய நிலத்தை மேம்படுத்திட முயற்சி செய்திருக்கிறதா?
ஆட்சியாளர்களுக்கும், விவசாயத்தைப் புறந்தள்ளியவர்களுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை மணி இது. இன்னும் இந்த நாட்டை ஆள்வோர் விழித்துக் கொள்ள மறுத்து, போதுமான உணவுப் பொருள் கையிருப்பில் இருக்கிறது அல்லது இறக்குமதி செய்து சமாளித்திடுவோம் என முனங்கிக் கொண்டிருப்பது ஏமாற்றுவதின் உச்சகட்டம். இறக்குமதி செய்து நம் நாட்டு மக்களின் பசியைப் போக்கிட முடியாது, நம் மக்கள் தொகை அப்படி. நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமும் கூட. ஆளும் வரை ஏதாவது சொல்லிச் சமாளிப்போம், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், அதன்பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனத்துக்குப பழியாகப் போவது எளிய வருமானம் கொண்டவர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா?

33 comments:
இன்னைக்கு கூட பேப்பரில் படித்தேன் அதாவது இனிமே
மாநில அரசுகள் விவசாய நிலங்களை தொழிற்சாலை அமைக்க கொடுக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவு
போட்டுள்ளதாம்......
இந்த முடிவை பல வருசங்கள் முன்னாடி எடுத்திருந்த நன்றாக இருந்திருக்கும்,,,,
//இந்த ஏற்றம் நிரந்தரம் இல்லையென்றாலும், மிகப்பெரிய அளவில் விலை சரிய வாய்ப்பு இல்லை, //
மிகச்சிறிய அளவில் விலை சரியவே வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் இதற்குமுன் விலையுயர்ந்த அத்யாவசிய பொருட்களின் விலை இன்னும் வீழ்ந்தபாடில்லை.
சமூக அக்கரையை எடுத்தியம்புகிறது இந்த இடுகை....
இளமை விகடனில் சமூகம் சார்ந்த பகுதியில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்.
இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா??
செவிடன் காதில் ஊதிய ச்ங்கு??
தகவல்கள் கொஞ்சம் சந்தோஷமாய் இருக்கு... இது தொடரனுமே? இது போல் எல்லா விளைபொருள்களும் நல்ல விலைக்கு விற்றால்...
நீங்க சொன்ன மாதிரி புரிஞ்சவங்களுக்கு புரிஞ்சா சரி கதிர்...
பிரபாகர்.
/இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா?/
விழூஊஊஊம். ஆஆஆஆனாஆஆஆ விழாது.
ஊதுன சங்கு கணீர்னுதான் இருக்கு.
பதினைந்து வருசமாக ஏறாத மஞ்சள் விலை இப்ப மட்டும் எப்படி ஏறிச்சு. எல்லாம் அரசியல் நாடகம் தான். கடந்த M.P எலேக்சன்லே விவசாய கடன் தள்ளுபடிலே தான் காங்கிரஸ் ஜெய்ச்சது. அந்த உண்மைய வச்சுதான்.
விவசாயிங்க ஓட்டே குறிவச்சு ஏற்றுமதி இறக்குமதி பாலிசிலே கண்ட்ரோல் பண்ணி. சர்க்கரை , மஞ்சள் , குச்சிக்கிழங்கு எல்லா விலையும் ஏத்தி இருக்காங்க.
எப்படியோ நொந்து நூலாகிப்போன விவசாயம் தலைத்தால் நல்லதுதான்
நல்ல பதிவு, நன்றி கதிர்.
விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார மண்டலம் என்று பட்டா போட்டுக் கொடுக்க முயன்ற அரசாங்கம், எங்காவது விவசாய நிலத்தை மேம்படுத்திட முயற்சி செய்திருக்கிறதா?//
அக்கறையோடு மணியடிக்கிறீங்க... எவன் காது கொடுக்கிறான்???
பொருத்திருந்து பார்ப்போம் ...கதிரண்ண.
// தண்டோரா ...... said...
இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா??
செவிடன் காதில் ஊதிய ச்ங்கு?? //
ரிப்பீட்டேய்..
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
இதை உணரவேண்டியவர்கள் படிக்க வேண்டுமே! அது தவிர
இறக்குமதி செய்வது நமக்கல்ல என்று நினைக்கிறேன்.
சாய்ங்காலமா வந்து.....
அவசியமான பதிவு. இந்த வருடம் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் கூடுதல் சூடு பிடித்துவிட்டது.
நரியும் பேயும் புழங்க பயப்படும் பொட்டக்காட்டில் ஆஞ்சநேயர் நகர் என்று பெயர்ப்பலகை தொங்குகிறது.
ஒரு ரெண்டு ஏக்கர் விவசாயம் பண்ணத்தேடினால் பத்துமடங்கு விலை கொடுத்து யாரோ வாங்கிச்சென்றதாகச் சொல்லுகிறார்கள். யார் எனத்தெரியவில்லை. ஊரான் ஊரான் தோட்டத்திலே என்று இனி பாட்டுக் கூடப் பாட முடியாது கதிர்.
அதுக்குப்பிறகு
வெள்ளரிக்காய் போடனும்,
அப்புறம் தானே விலபேசுவது
யார் என்னும் சிக்கல்.
இப்போ வேரையே அறுத்துவிட்டார்கள்.
இளமை விகடனில் படித்தேன்..உண்மை நிலை...
காலம் காலமாக விவசாயம் முக்கியம் என்று அரசியல்வாதிகள் தமிழனை தலைநிமிர விடவில்லை. உண்மையில், தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகம் விவசாயத்திற்கு ஏற்ற மாநிலம் அல்ல. வருடத்தில் பத்தே நாட்கள் பெய்யும் பருவ மழையும் அண்டை மாநிலங்களோடு ஏற்பட்டுள்ள நீர் பகிர்வு சம்பந்தமான பிரச்சினைகளும் தமிழக விவசாயிகளை கொடுமைபடுத்துகின்றன. ஒவ்வொருவருடமும் விவசாயிகள் சொல்ல முடியாத அளவில் சிரமத்தையும், நஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள். நம்மிடம் இருப்பது மிக பிரமாண்டமான மனித சக்தி. இதை சரியாக பயன்படுத்தி நாம் IT துறையில் வென்றதை போல அணைத்து துறைகளிலும் வெல்ல வேண்டும். இதற்க்கு massive industrialization அவசியம். பொருளாதாரத்தில் மிக வளர்ச்சியடைந்த சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் விவசாயத்தை நம்பி கொண்டிருக்கவில்லை. நம்மிடம் போதுமான பொருளாதாரம் இருந்தால் உணவுபொருட்கள் மிகபெரிய பிரச்சினையில்லை. ஆனால் தமிழக மக்களை ஒரு அளவிற்குமேல் வளர்ச்சியடைய விடுவதில் அரசியல் வியாபாரிகளுக்கு விருப்பமில்லை. நம் பொருளாதார வளர்ச்சி நம்மை சிந்திக்க தூண்டும். நாம் சிந்தித்தால் அவர்களுக்கு பிழைப்பு நடக்காது. விவசாயம்தான் முக்கியம் என்று மூளைசலவை செய்து அவ்வப்போது சில இலவசங்களை அள்ளிவிட்டுவிட்டால் அவர்கள் பிழைப்பு அமோகமாக நடக்கும். விவசாயத்தை பற்றியும் பசுமை தமிழகத்தை பற்றியும் வாய்கிழிய பேசும் பாமக போன்ற கட்சிகள் நடத்தும் TV சேனல்களில் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. மக்கள் தொலைகாட்சியில் அவர்கள் ஊருக்கு மிக அருகே விக்கிரவாண்டியில் விளைநிலங்களை ஆக்கிரமித்து வீடு மனைகளாக்கி விற்கும் ஒரு நிறுவனம் ஒரு முழு நேர நிகழ்ச்சியே நடத்துகிறது ஒவ்வொருநாளும். இதுதான் அரசியல்வாதிகளின் உண்மை முகம். ஆனால், விவசாயம்தான் தமிழகத்தின் உயிர்நாடி என்று நம்மை காலம்காலமாக எமாற்றிவருகிறார்கள். இனிமேலாவது இதை நாம் இதை உணர்ந்து தொழில் வளர்ச்சியில் கவனத்தை செலுத்தி நம் அடுத்த தலைமுறை மக்களுக்கு நல்ல வழி காட்டவேண்டும்.
தேவையான இடுகை கதிர்..
//இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா?//
அவங்கதான் செவுடாயிட்டாங்களே எப்பவோ...
voted... appuram padichukkaren.. sry kathir.. feeling not well..
தேவையான பதிவு.
/பாதிக்கப்படப்போவது எளிய வருமானம் கொண்டவர்கள்தான்./
இதைப்பற்றி யாருக்கென்ன கவலை!
//விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார மண்டலம் என்று பட்டா போட்டுக் கொடுக்க முயன்ற அரசாங்கம், எங்காவது விவசாய நிலத்தை மேம்படுத்திட முயற்சி செய்திருக்கிறதா?//
சரியான கேள்விங்க தோழரே....
ஜிங்குச்சா... ஜிங்குச்சா...ஜால்ரா சத்தம்...நான் விகடனிலேயே போட்டுவிட்டேன். மறுபடியும் வாழ்த்துக்கள்.
வரவர கருத்துக்கந்தசாமி வாடை வீசுவது போல் தெரிகிறது. ஸ்டையிலை கொஞ்சம் மாத்துங்க பிரதர்.
ம்ம்ம்ம் இப்படி உருப்படியா நான் என்னைக்கு எழுதப்போறேனே கதிர்...
திரும்பவும்.. தேவையான .. நல்ல பதிவு.. !
commodity trading ஆல் மஞ்சள் விலை ஏறுகிறது என்று சொல்கிறார்கள். விலை ஏறினால் மட்டும் விவசாயிக்கு மகிழ்ச்சி வருமா எனத்தெரியவில்லை ஏனென்றால் எல்லா பொருட்களின் விலையும் ஏறுகிறது.
மிகத்தேவையான பதிவு.
-ப்ரியமுடன்
சேரல்
இது கூட பத்தாது!
// பின்னோக்கி said...
commodity trading ஆல் மஞ்சள் விலை ஏறுகிறது என்று சொல்கிறார்கள்.//
எந்த கேனப்பய அப்படி சொன்னது!
இங்க கூட்டியாங்க!
ஈரோட்ல எத்தனை வியாபாரிகள் மகிழ்ச்சியா இருக்காங்கன்னு காட்டுறேன்!
Food products price increase not directly goes to farmers pocket, Mainly mediators like commission mandis cheating farmers 80% value of the food product.,for ex.10 Kg vegetable brought from farmer for Rs. 25-40 but its resale by commission mundi, reseller for Rs. 15-30/per Kg to the end user, previously there is some moral values was there, ie maximum 30% on each product, now all merchants like to become a millionaire in a day or week. so logic, moral. All these hike in prices only by the Commission Mandi,Provision, Small Merchants. Thats why Government introduce "UZHAVAR SANTHAI", Peoples not utilising it properly, because the scheme introducd by Govt.
நல்ல பதிவு அண்ணே...
இன்னும் எத்தனை மணிதான் அடிக்கணுமோ தெரியல....???:(((...
நன்றி @@ ஜெட்லி
நன்றி @@ க.பாலாசி
நன்றி @@ தண்டோரா
நன்றி @@ பிரபாகர்
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ வி.என்.தங்கமணி
நன்றி @@ சி. கருணாகரசு
நன்றி @@ இராகவன் நைஜிரியா
நன்றி @@ sasi
நன்றி @@ பழமைபேசி
நன்றி @@ காமராஜ்
நன்றி @@ புலவன் புலிகேசி
நன்றி @@ Sai
(சாய் நீங்கள் சொல்லும் கருத்துகள் மக்கள் தொகை குறைவான நாடுகளுக்குப் பொருந்தும். மக்கள் தொகை பிதுங்கி வழியும் நம் நாட்டில் இறக்குமதி எல்லாம் பப்பு வேகாது... பத்தவும் பத்தாது)
நன்றி @@ பிரியமுடன்...வசந்த்
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ velji
நன்றி @@ ஆ.ஞானசேகரன்
நன்றி @@ வாத்துக்கோழி
(வீட்ட சுத்தி பில்டிங் கட்டியாச்சு, அப்புறம் உங்க பேரன் பேத்திகள் வந்து சோறு திங்க எங்க அரிசி கிடைக்கும்...
மொக்க போட்டா.. அது கருத்துக் கந்தசாமி மாதிரி வாடை வீசாது.... ஆனா... வெறும் மொக்க மட்டுமே போட்டா பசியே எடுக்காதோ)
நன்றி @@ தமிழரசி
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ பின்னோக்கி
நன்றி @@ சேரல்
நன்றி @@ வால்பையன்
நன்றி @@ Saigokula
(உங்கள் கருத்து சரியே. உழவர் சந்தை போன்றவை பயன்படுத்தப் படவேண்டும்)
நல்ல பதிவு கதிர். பயனுள்ள தகவல்.. அடிக்கடி இது போல விவசாயத் தகவல்களைப் பகிருங்கள்...
நல்ல இடுகை, சில விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது...........
நன்றி./............
நல்ல பதிவு.. !
எச்சரிக்கை மணி சரியாக அடித்து இருக்கிறீங்க........
இது புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி...........
நல்ல தகவல், நல்ல பதிவு.
//வாத்துக்கோழி said...
வரவர கருத்துக்கந்தசாமி வாடை வீசுவது போல் தெரிகிறது. ஸ்டையிலை கொஞ்சம் மாத்துங்க பிரதர்.
//
அக்காவே சொல்ட்டாங்க... நாம என்ன சொல்லக் கிடக்கு? இஃகி!
Post a Comment