சொல்ல மனம் கூசுதில்லையே...


றுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...

செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...

சுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...

தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...

க்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...

காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...

இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என


52 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நசுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...//

சொட்டான் போடுகிறது நாக்கு

ஊரில் இயற்கை கரும்புதோட்டத்தில் குடித்த சாறு இங்க டப்பால அடைச்சு விக்குறானுவ...
செயற்கையா..

இது மாதிரியே இனி வாழும் வாழ்க்கை எல்லாமே செயற்ககையா போயிடுமோன்றா பயமா இருக்கு கதிர்,..

ராகவன் said...

அன்பு கதிர்,

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒற்றைவரியாய் அழகாய் இருக்கிறது என்று சொல்வதில் ஒடுங்கி விடுமா என் சிலாகிப்புகள் என்றால் இல்லை. மேலும் ஏதாவது வரிந்து கட்டி சொல்ல ஏதுவாய் விரிகிறது இந்த கவிதை. இழப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்குமா அல்லது எல்லா இழப்புகளும் ஒன்று தானா என்பது தெரியவில்லை.
எதிலும் பங்கு தராமல், என் மகளிடம் சொல்கிறேன் எதுவானாலும் உனக்காக எப்போதும் செய்வேன் என்று” கடைசிப் பத்தியில் எல்லாவற்றையும் சொல்லும் இந்த பாங்கு வாய்க்க நிறைய பழக வேண்டும் நான்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

vasu balaji said...

/இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என/

அன்பான தகப்பனின் பாவமன்னிப்பாய்த் தெரிகிறது. நானும் இப்படி நினைத்ததுண்டு. இவ்வளவு அழகு கவிதையாக இல்லை.

அருமை கதிர்.

V.N.Thangamani said...

உண்மைதான் ஒவ்வொரு கிரமத்துக்காரர்களும் அன்பவித்த பல விஷயங்கள் இக்காலத்து குழந்தைகளுக்கு கிட்டாத எட்டா கனிதான். அதை இவ்வளவு நயம்பட உரைத்திருப்பது அழகு. அதை விட படம் அருமை. நன்றி கதிர்.

க.பாலாசி said...

//செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...//

//தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...//

அது ஒரு அழகான நேரம்.

ம்ம்ம்...ரசித்ததெல்லாம் கிராமத்து வாசமே. எப்படி பங்குதரமுடியும் உங்களது மகளுக்கு....

அனுபவக் கவிதை....அழகு....

ஆரூரன் விசுவநாதன் said...

ரசனை மிகுந்த வரிகல்.


இயலாமையின் வெளிப்பாடு அருமை கதிர்

கண்ணகி said...

எதிர்வரும் காலங்களில் இவை கன்வுதான். அன்பின் வெளிப்பாடு அழகு.

பின்னோக்கி said...

நீங்க இத எல்லாம் குடுத்தாலும் பசங்க சாப்டமாட்டாங்க.. பீட்சா, பர்கர்ன்னு அடுத்த தலைமுறை போய்டுச்சு.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு கதிர். என் குழந்தைக் காலங்களை நினைவு படுத்திய கவிதை. நன்றி.

மணிஜி said...

கோக் குடி..குதுகளி..

பாலகுமார் said...

மண் மணக்குது , கொஞ்சம் ஏக்கமும் !

புலவன் புலிகேசி said...

//நசுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...//

இது போல் குடித்து பல வருடமாயிற்று..சென்னையில் கரும்புக்கு பதில் தண்ணீர் கலந்து தான் கிடைக்கிறது..

வானம்பாடிகள் ஐயா சொன்னது போல்
//அன்பான தகப்பனின் பாவமன்னிப்பாய்த் தெரிகிறது.//

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட்டகாசம் சார்!

பால்யத்தை தொலைத்துவிட்டு சிறுவயதிலேயே பெரியமனிதத்தனம் வந்து விடுகிறது இப்போதைய குழந்தைகளுக்கு. அதற்கு இதுபோன்ற அனுபவங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறாது இருப்பதுவும் ஒரு காரணமோ?

Ashok D said...

நச்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.. இதைவிட அழகாக நாம் இழந்ததைக் கூற முடியுமா?

உங்கள் மகள் புரிந்துகொள்வாள் உங்கள் மீது தவறில்லையென்று

இராகவன் நைஜிரியா said...

அழகாக சொல்லியிருக்கீங்க..

சொல்லிய விசயம் எல்லாம் நானும் என் சிறிய வயதில் அனுபவித்ததுதான்.

இப்போது இதில் ஒன்று கூட இல்லை என்பதுதான் சோகமானது.

சத்ரியன் said...

//இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என..///

கதிர்,

தொலைத்த கணங்களை திருப்பும் வரிகள். நம் மழலைகள் வாய்ப்பை நாகரிகம் என்னும் பெயரில் புதைத்து விட்டோம்.

அருமை!

கிறுக்கல்கள்/Scribbles said...

Kathir,
You brought back the good old golden days to ponder. Feel nostalgic. We have to do something to our children so that they will remember the childhood. Good one. Appreciate

ராமலக்ஷ்மி said...

//வறுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை..//

ஆமாங்க சாப்பிட்டிருக்கேன். இப்படி எத்தனை எத்தனி. ஹூம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

காமராஜ் said...

கதிர் நீங்க பட்டியலிட்ட பண்டங்களுக்கு இணையா நகரில் ஏதும் இல்லை.
இப்படிக்கவிதையும் கூட. அட அந்த மாட்டுவண்டி மோனோ கலர் படு அசத்தல்.
ராகவன் சொன்னதுபோல முடிக்கிற இடத்தில் அடி நச்சுன்னு விழுகிறது.

வால்பையன் said...

இதெல்லாம் இன்னும் கிடைக்குதா!?

thiyaa said...

அழகாக சொல்லியிருக்கீங்க..

சிவாஜி சங்கர் said...

Supper Sir..

இளங்கோ said...

இன்றும் கிராமங்களில் கிடைக்கலாம்..
ஆனால், நகரத்தில் (நரகத்தில் :) ) குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை..
போகோ சானலும், டைரி மில்க் சாக்லேட்டும் அவர்களுக்கு நாம் வழி காட்டியவைகள்....
கிராமத்தை விட்டு தொலை தூரம் வந்த நாம்தான் திரும்பி பார்ப்பதில்லை...
நம் பிள்ளைகள் கேட்கும் சானலும், பானங்களும் அங்கே கிடைக்காது..
விடுமுறை காலங்களில் கிராமங்களை அவர்களுக்கு காட்ட வேண்டும்.. நிச்சயம் அவர்களுக்கும் பங்கு கிடைக்கும்...
வாழ்த்துக்கள்....

ஹேமா said...

கதிர் இழந்தவைகளித் தோண்டி எடுத்த வரிகள்.ஆனால் இன்றைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கைதான் சிறந்தது என்கிறார்கள்.எங்கள் வாழ்வை ஊத்தை என்கிறார்களே !

பாபு said...

//வறுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை..//

நல்ல பதிவு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super.

தமிழ் அமுதன் said...

அருமை..!

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
velji said...

சூழியல் அழிவைச்சொல்லும் உலகம்யாவுக்குமான கவிதை.
நன்றி!

வால்பையன் said...

//கடைசி நான்கு வரிகளில் நின்னுட்டீங்க கதிர்.//

இல்லையே, உட்கார்ந்து தானே டைப் அடித்தார்!

தேவன் said...

கவிதை அருமை !!!

நிலாமதி said...

களங்கமில்லாத கிராமத்து வாழ்க்கை ......நினைத்து பார்க்கிறேன் நெஞ்சம் இனிக்கிறது. மண் வாசனையுடன் , ஒரு இனிய பதிவுக்கு நன்றி..

கலகலப்ரியா said...

:((((...! ஏங்கிப் போயிற்று மனசு..! கவிதை அழகு!

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை கதிர்

Anonymous said...

இவையெல்லாம் இது போல் படித்து அறிந்தால் அன்றி நிகழ்வுகள் இனி அறிதே...

ஜோதிஜி said...

தொடக்கத்திலேயே படித்து விட்டு எப்படி உள்வாங்குவது என்று தெரியாமல் நகர்ந்து விட்டேன். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் உள்ளே உழல வைத்து இந்த சிந்தனைகள் நாகா வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் "படைப்பாளிக்கு வாசிப்பாளனின் அனுபவம் கிடைப்பது இல்லை". ஒவ்வொரு முறையும் தேன் கலந்து மருந்தை கொடுத்துக்கொண்டுருக்கும் வித்தையை உங்கள் மூலம் கண்டு உள் வாங்கிக்கொள்கிறேன்.

முடிவான கடைசி நான்கு வரிகள் முற்றிலும் பொருத்தம் என்றாலும் அதற்கு முந்திய அத்தனை வரிகளும் தான் இந்த நேர தாமதத்தை தடுமாற்றத்தை எனக்கு தந்தது கதிர். ஓளி வீசி பறப்பதன் அர்த்தமும் இது தான்.

பழூர் கார்த்தி said...

அருமையாக எல்லோருடைய மனதிலும் பழைய கிராமத்து வாழ்க்கையை கொண்டு வந்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றி, வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி கதிர்

குறைந்த பட்சம்
இதையெல்லாம் வாசிச்சு
ரசிக்கிற அனுபவமாவது
கிடைச்சது.......

சுந்தரா said...

ம்ம்ம்...மிஞ்சுவது பெருமூச்சுதான்.

கவிதை அற்புதம்!

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு.

ஆனா முடிவில் எனக்கு சற்றே உடன்பாடில்லை. சிறு வயதில் உடன் இருந்தவர்க்கு எதுவும் தராமல் உண்டாலோ அல்லது இப்போது சேகரிக்கும் எதுவும் அவர்களுக்கு தராமல் உண்டாலோ தானே கூச வேண்டும்.

ம்ம் ஒரு விதத்தில் நமக்கு கிடைத்தது எதுவும் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கமிருக்கலாம் ஆனால் அவர்களுக்கு இப்போது தரும் பலது நம்மால் உணரப்படாதது அல்லவா?

Every advantage have its own disadvange. :)

Chitra said...

அனுபவித்ததை ரசித்து சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த generation அருமையான பல விஷயங்களை அனுபவிக்க கொடுத்து வைக்காமல் தான் போகிறது.

Bama Ramesh said...

kathir.. i dont have words to reply.. as a father me always feeling the same.. but what to do.. searching for money life and compromise with life it takes our life from us .. thanks kathir.. i like to give atleast something to my dougter.. keep post.

ஆ.ஞானசேகரன் said...

//இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என///


அருமை... அருமை

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

இந்த சுக அனுபவம் எல்லாம் இங்கே நகரத்தில் கிடைப்பது இல்லை. கிராம வாழ்க்கையில் தொலைத்த சந்தோஷங்கள் இவை. நினைவு படுத்திவிட்டீர்கள் நிறைய. அடுத்த முறை ஊருக்கு போகும்போது அப்பத்தா வீட்டுக்கு மறக்காமல் போக வேண்டும்..!!

உழவன் said...

தொட்டுட்டீங்க கதிர். அப்படியே 80களில் சிவகிரிக்குப் போய் வந்த உணர்வு. அதே சமயம், நாங்கள் (அக்கா, தம்பி மற்றூம் நான்) அனுபவித்த, இணையற்ற காலத்தில் ஒரு துளி கூட என் குழந்தைகளுக்குக் காட்ட முடியவில்லை என்ற வருத்தமும் வருகிறது.

--உழவன்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நாம் வாழுவதில்லை பிழைத்துக் கொண்டிருக்கிறோம்

வண்டிக்காரன் said...

மனசுல போதஞ்சு இருக்கிறதையெல்லாம் கிண்டி விட்ட்டுறீங்க .."கிண்டல்" கவிஞன் அப்பிடின்னு பட்டமே கொடுக்கலாம் போல இருக்கு.

CS. Mohan Kumar said...

நல்ல கவிதை என் இளம் வயதை நினைவூட்டியது

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

பித்தனின் வாக்கு said...

ithu kavithai illai..

naan anupavitha, ippothu ilanthu vitta sorkkamaya mana valkkai.

good

தீபா நாகராணி said...

ஆக சிறந்தது என்று மகள் எதிர் பார்ப்பதை செய்தாலே போதும் தானே!?