இதெல்லாம் தேவையா?

வழக்கமாக இந்த டிவியில உண்மை கண்டறியரோம்னு கோட்டு போட்டுக்கிட்டு வந்து செம பில்டப்போட பேசற ஆளுகளை நம்பி அவ்வளவா பார்க்கறதில்லை... ஏன்னா அதப் பாத்தோம்னா நமக்கே டெக்னிக்கலா ஏதாவது செய்யலாமோனு தோனுமோனு ஒரு பயம்தான்.

நேத்து பார்த்தீங்கன்னா எங்கெட்ட நேரம் ராத்திரி ஊட்டுக்கு போனப்ப சன் டிவியில் நிஜம் புரகிராம் ஓடிக்கிட்டிருந்ததுங்க... என்னவோ காசி, அகோரி அப்டீனு இந்த சன் டிவி செய்தியாளர் இருட்லயும், வெளிச்சத்திலும் சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருந்தார். அகோரி சிவனோட அவதாரம்னு தங்களச் சொல்லிக்கிட்டே, எரியற பொணத்தை தின்பாங்கன்னும் சொல்லிட்டிருந்தார்.

நானும் ஒருவேள அப்பிடி அவுங்க பொணத்த தின்னாலும், டிவியில அத காட்ட மாட்டாங்கன்னு கொஞ்சம் தெகிரியமா பாத்துக்கிட்டிருந்தேன். காசியில பொணமெல்லாம் எரிக்கிற எடத்த காட்டினாங்க, அங்க பார்த்தா நெறய்ய்ய பொணம் எரிஞ்சிக்கிட்டிருக்குதுங்க.

கேமரா காட்ற எடத்தப் பார்த்தா ஒரு சின்ன திட்டுமேல ஒரு பொணம் எரிஞ்சிக்கிட்டிருந்துது. பக்கத்தில ஒரு பெரிசு ஒக்காந்திருந்துச்சு, அந்த பெருச காட்டினாங்க...... பாத்தா ரொம்ப சாந்தமா சாமியார் கணக்கா ஒக்காந்திருந்துச்சு,

“சரி ஏதோ மந்தரம் சொல்லுவாரு, இல்லைனா அந்த பொணத்துக்கு ஏதாவது நெருங்குன சொந்தக்காரார இருப்பாரு”னு நான் பார்த்துக்கிட்டிருந்தேன்

இந்த செய்தியாளர், இந்த கிரிக்கெட்ல கமெண்ட்ரி சொல்ற மாதிரி அந்த பெருசு பக்கத்துல உட்கார்ந்து கிட்டு, “பாருங்க இவரு இப்போ பொணத்த சாப்பிட்டிகிட்டிருக்காருனு” சொல்ல எனக்கு விருக்குனு ஆகிப்போச்சுங்க...

அப்போவும் “அட இது நெசமா இருக்காதுனு” (திமிருதானே) பார்க்கிறேன்...

அந்த பாழப்போன கெழவன் கையில... தீயில கறுக்குன சின்ன கோழி சைஸ்ல (கோழி இல்லீங்க, பொணத்தோட ஒரு பகுதிதான்) வச்சிக்கிட்டு வாயில கடிச்சித் திங்கிறான்.

டிவிக்காரரு என்னமோ கேக்க அந்த ஆளு “மாசக்தி” அப்படிங்கிறான், கறிய மெல்லற வாயில எல்லாம் இரத்தம்.. இவரு என்னென்னமோ அந்த கெழவன் பத்திப் பேசறாரு, அந்த பெருசு ஜாலியா ரெண்டு வாட்டி ஏப்பம் விட்டுகிட்டிருக்கு...

அடப் பாவிகளா, இப்பிடியுமா பண்ணுவீங்க... அட நான் அந்தக் கெழவன சொல்லலீங்க, அந்த ஆளு வழக்கமா தின்பாரு போல இருக்குதுங்க. இந்த டிவிக்காரங்களத் தான் சொல்றேன்.

சின்ன வயசில பாட்டி அரக்கன் கதை சொல்றப்போ, மனுசன தின்பாங்கன்னு சொல்லி கேள்விப்பட்ருக்கோம்... அப்பறம் பள்ளிக்கோடம் படிக்கிறப்ப ஆப்பிரிக்காவுல மனுசன தின்பாங்கன்னு யாரோ சொல்லிக் கேள்விப்பட்ட மாதிரி இருக்கு...

அப்புறம் அரசல் புரசலா, அப்பப்போ இப்பிடி யாரவது சொல்லுவாங்க... ஆனா இது வரைக்கும் நெசம்னு நம்புனதில்லீங்க... எப்பிடியோ இந்த சன் டிவிக்காராங்க புண்ணியத்துல கண் குளிர அந்தக் கருமத்த பார்த்தாச்சு...

வெடிய வரைக்கும் தூக்கத்தில எந்தக் கனவும் வரல, அது வரைக்கும் சந்தோசம்

ஆமா டிவியில வர வர எத வேணாலும் காட்டாராங்களே, இவுங்கள யாருமே கேக்கமாட்டாங்களா?

சரி இந்த மாதிரி காமிக்கிறப்போ தினமும் பார்க்கிற டிவிதானேனு கொழந்தைங்க பார்த்தா நெலம என்ன ஆகும்?

இந்த மாதிரி காட்றதால என்ன மாதிரி நல்ல காரியம் நடந்திடப்போவுது?

கடைசியா நரமாமிசம் சாப்பிடறது சட்டப்படி தப்புனு டிவில சொன்னாங்களே, அப்பிடி சட்டப்படி தப்பான ஒன்ன எப்பிடி இப்படி காட்டலாம்?

சட்டப்படி தப்பானத சட்டத்தை காப்பாத்தறவங்கிட்ட சொன்னாங்களா?


ஏன் இவ்வளவு கேக்குறேன்னா...? இதுவரைக்கும் பொணத்த அடக்கம் பண்ற வரைக்கும் பார்த்திருக்கிறேன், அது கொஞ்சம் பழகிப்போச்சு, இனிமே நம்மூர்லகூட யாராவது சுடுகாட்டுல எரியற பொணத்த இழுத்துக்கிட்ட வந்து தின்னுக்கிட்டிருந்தாலும் கம்னுதான் போவோம் போல் இருக்குது, அதுதான் இதெல்லாம் சகசம்னு நம்ம ஊட்டுக்குள்ளேயே வந்து காட்டிட்டு போய்ட்டாங்களே...

எதையாவது போட்டு மனுசங்கள பார்க்க வைக்கறதுக்கு, வகை தொகையில்லாம எத வேணும்னாலும் காட்டறது எந்தவகைல நியாயமா இருக்க முடியும்...? அப்பிடி அவங்க காட்ற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு சகிச்சுக்கிட்டு போற நம்மள என்ன சொல்றதுங்க?

சரி வருங்காலத்தில... எங்கியாவது ஒரு கொலை செய்யறதையோ, கற்பழிப்பு நடக்கிறதையோ எடுத்து டிவியில போட்டுட்டு, கடைசியா கொலை, கற்பழிப்பு சட்டப்படி தவறான செயல்னு சொல்லிட்டுப் போயிட்டா அது போதுமா? ஏன்னா.. கொலையும், கற்பழிப்பும் நரமாமிசம் தின்கிறதவிட அதிகமா நடக்கிறதுதானே!!!???

35 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆமா டிவியில வர வர எத வேணாலும் காட்டாராங்களே, இவுங்கள யாருமே கேக்கமாட்டாங்களா?//

தொலைக்காட்சிகளுக்கென்றொரு தனி சென்சார் போர்ட் வந்தால்தான்
இதெல்லாம் நிப்பாட்டமுடியும் கதிர்

வண்க்கம்
நன்றி நன்றி நன்றி

vasu balaji said...

இந்த கண்றாவிய எல்லாம் காட்ரானா. விளங்கிரும். இதப் பார்த்து என்ன பண்ணப் போறம். இட புடிச்ச பன்னாடைங்க அங்க போலீசு புண்ணாக்குன்னு இருப்பானுங்களே அவனுங்கள எப்புடி இதுக்கு அனுமதிக்கிறான்னு கேக்க வேணாமா. பப்ளிக்ல ஒன்னுக்குட்டா தப்புன்னு சட்டம் புடிக்குது.இந்த கருமத்த எப்புடிங்க விடுறான்.

அது சரி, ஆதித்தயா,சிரிப்பொலின்னு எல்லாம் இருக்கே. அதப்பார்க்காம இந்த கருமம் புடிச்சத பார்த்தது உங்க தப்பு.ஹி ஹி

ஆரூரன் விசுவநாதன் said...

மிகவும் அவசியமான பதிவு கதிர்.

தொலைக்காட்சிகளில் தணிக்கை முறை அவசியம் என்பது தெளிவாகிறது.

ஊடகச் சுதந்திரம் என்ற வார்த்தைகளில் உண்மைகள் இருந்தாலும், அவர்களும் பொது மக்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

பதிவிற்கு வாழ்த்துக்கள்

நாஞ்சில் நாதம் said...

தல இத படிச்சுட்டு இருக்கும்போதே வாந்தி வர மாதிரி இருக்கு. நீங்க எப்படிதான் பொறுமையா அந்த நிகழ்ச்சிய பாத்தீங்களோ? உவ்வே

S.A. நவாஸுதீன் said...

திரைப்படத்திற்கு தணிக்கை இருப்பதுபோல் தொலைக்காட்சிக்கும் தணிக்கை அவசியம் எனபதை நன்கு உணர்த்துகிறது உங்களின் இந்தப் பதிவு.

நல்ல பதிவு கதிர்

பழமைபேசி said...

இங்க இருக்கிற கழிசடைக எல்லாத்தையும் அங்கயும் யாவாரம் செய்யுறாங்க மாப்பு.... ஆனா, அதுகளுக்கு இங்க பெரிய வரவேற்பு கிடையாதுங்களே? கழுதை இலத்தியானாலும் அமெரிக்க இலத்தின்னா சிறப்புதானே நம்ம ஊர்ல?

நர்சிம் said...

நானும் இதுகுறித்து நினைத்தேன்..அதையே ஆனால் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

அன்புடன் நான் said...

உங்க கட்டுரையை படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது கதிரண்னா... அத எப்படித்தான் முழுமையாய் பார்த்தீர்களோ!!! கடைசியில் உங்க கேள்வி மிக நேர்மையானது ... ஆனா புருயவேண்டியவர்களுக்கு புரியுமான்னு தெரியலையே!!!

பின்னோக்கி said...

எப்படி தைரியமா பாத்து எழுதுனீங்களோ தெரியலை..

மக்களை பார்க்க வைக்கணும். வேற எந்த ஒரு தார்மீகப் பொறுப்பையும் டி.வில எதிர்பார்க்க முடியாது.

இன்னும் தைரியமான ஆசாமின்னா.. யூ டியூப்ல அகோரின்னு தேடி பாருங்க.. இருங்க.. நான் அந்த பக்கம் போன உடனே பாருங்க.

நெத்தியடி முஹம்மத் said...

////... எங்கியாவது ஒரு கொலை செய்யறதையோ, கற்பழிப்பு நடக்கிறதையோ எடுத்து டிவியில போட்டுட்டு, கடைசியா கொலை, கற்பழிப்பு சட்டப்படி தவறான செயல்னு சொல்லிட்டுப் போயிட்டா அது போதுமா? ஏன்னா.. கொலையும், கற்பழிப்பும் நரமாமிசம் தின்கிறதவிட அதிகமா நடக்கிறதுதானே!!!???////
----அடடா...! அவங்களே அடுத்து என்ன அசிங்கத்தை அரங்கேற்றலாம், என்ன கண்றாவியை காண்பிக்கலாம்னு அலையறாணுங்க. நீங்க என்னடான்னா புதுப்புது ஐடியாவெல்லாம் எடுத்துக்கொடுக்குறீங்க. பாழாய்ப்போன அந்த டிவிக்காரனுங்க இதையெல்லாம் படிக்காம இருக்கனுமே! நான் இந்த அசிங்க தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் பார்த்து பல வருஷம் ஆச்சு. சினிமா, பாட்டு, சீரியல் எல்லாமே இப்ப இன்டெர்னெட்டிலே ரிலீசாய்டுது. அப்புறம் ஏன் இந்த கண்றாவிகளையெல்லாம் இன்னும் பார்த்துக்கொண்டு நம்மை நாமே அழித்துக்கொள்ள வேண்டும்?

கண்ணகி said...

தேவைஇல்லாத ஒளிபரப்பு. இப்பொழுதே ஆபாசக்காட்சிகள் தலைவிரித்து ஆடுகின்றன. இதில் இதுவேறா. குழ்ந்தைகளுடன் உட்கார்ந்து எதையும் பார்க்க முடியாது போல் இருக்கிறது.

Kumky said...

அடர் கருப்பில் கேட்கப்பட்ட கேள்விகள்தான் இன்னும் மனசில்....

பதில் சொல்வார் யாருமில்லையென்பதை எல்லோரும் அறிவார்தானே.....

பிரபாகர் said...

சாரி கதிர்... படிச்சிட்டு கொதிப்பாயிருக்கு... ஊடக விபச்சாரம்... வேறன்ன சொல்ல...

பிரபாகர்.

ஹேமா said...

ஊடகச் சுதந்திரம்ன்னு சொல்லிச் சொல்லியே எங்களூர் சினிமாக்களிலும் தொலைக்
காட்சிகளிலும் இந்த அக்கிரமங்கள்.
சென்ற் வாரம் என் சிநேகிதியின் 8 வயதுப் பெண்குழந்தை அடிக்கடி சின்னத்திரையில் கேட்டுக்
கொண்டிருக்கும் ஒரு சொல் விபச்சாரம்.அவள் விபச்சாரம்ன்னா என்ன அம்மா என்று கேட்க அம்மா முழி பிதுங்க சொல்லத் தெரியாமல் தவித்ததை நான் பார்த்தேன்.சரி சொல்லிக் கொடுக்கத்தான் வேணும்.சொல்லிப் புரியிற வயசில்லையே இது !

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு...அவங்க காதுக்கு எட்டினா பரவாயில்லை!!

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமா டிவியில வர வர எத வேணாலும் காட்டாராங்களே, இவுங்கள யாருமே கேக்கமாட்டாங்களா?

சரி இந்த மாதிரி காமிக்கிறப்போ தினமும் பார்க்கிற டிவிதானேனு கொழந்தைங்க பார்த்தா நெலம என்ன ஆகும்?

இந்த மாதிரி காட்றதால என்ன மாதிரி நல்ல காரியம் நடந்திடப்போவுது?

கடைசியா நரமாமிசம் சாப்பிடறது சட்டப்படி தப்புனு டிவில சொன்னாங்களே, அப்பிடி சட்டப்படி தப்பான ஒன்ன எப்பிடி இப்படி காட்டலாம்?

சட்டப்படி தப்பானத சட்டத்தை காப்பாத்தறவங்கிட்ட சொன்னாங்களா?


//
ஆம் இது எல்லாம் தேவையா ...............
பெண் கண்ணீர் அது காசு தொடர் நாடகம் .......
இறந்தாலும் புணமானாலும் காசா......

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ..! கலைஞர் tv ல கூட எதோ பேய் புடிக்க வைக்கிரதா ஒரு நிகழ்ச்சி போட்டாங்க ;;(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.. இதெல்லாம் ஏற்கனவே யூடியூப்ல காட்டியாச்சு. இப்போ டிவியிலயும் வருது.

இன்னொரு பக்கம் என்னடான்னா டேட்டிங் சொல்லித்தர்றாங்க.. ஒன்னும் சொல்றதுகில்லை :(

ஜெனோவா said...

நா மட்டும் அத பார்த்திருந்தேன் , ஒக்காலி வீட்ல ஒரு பயலையும் தூங்க விட்ருக்க மாட்டேன் ...

இதையெல்லாம் எடுத்து ஒளிபரப்புவதற்கு ஏதாவது எளவு அப்ருவல் எதனா உண்டா
இல்லையா ?

பாலா படமெடுத்தாமட்டும், கால் மேல் கால் போட்டுக்கிட்டு குழந்தைகளை பதம் பார்க்கும்ங்கர மாதிரி ஏதாவது கருத்து சொல்றானுக இந்த கருமம் புடிச்சவனுக .

நிலாமதி said...

கண்டதையெல்லாம் பார்க்காதே ...தோழா ?தணிக்கை செய்ய படவேண்டும்.

லெமூரியன்... said...

அவசியமான பதிவுங்க. கண்டிப்பா தொலைக் காட்சிக்கும் தணிக்கைச் சட்டம் கொண்டுவரனும்.

Thamira said...

அட கருமம் புடிச்சவனுங்களா.? ஏதோ நெட்லதான் எங்கியாவது இதுமாதிரி விடியோ கிடைக்கும்னா, இப்போ டிவியிலயே காட்டிட்டானுவளா.?

வாயில எதுனா வந்திரும் எனக்கு.. சை.!

ஆ.ஞானசேகரன் said...

யூ டியூப்ல இன்னும் நிறைய இருக்குது நண்பா, ஆனா அதெல்லாம் டி.வி ல காட்டுரது நல்லாயில்ல... இதுக்கு முன்னாடி டிஸ்கரி சேனல்ல காட்டினாங்கனு நினைக்கின்றேன்..

கலகலப்ரியா said...

er... padikka konjam bayammaa irukku... vote poattu appeettu.. :(

பித்தனின் வாக்கு said...

அய்யே. ஆத்தாடி இந்த மாதிரி கொடுமை எல்லாம் நடக்குதா. எல்லாம் கஞ்சா கேசுங்க. நல்லவேளை உயிருடன் இருக்கின்றவனை கடித்து திங்காம இருந்தா சரி. நன்றி கதிர்.

ஊடகன் said...

ஊடகங்கள் எல்லாம் இந்த மாதிரி கேவலமான சில செயல்களை காட்டினாள் தான் பார்பார்கள் என்று போடுகிறான்........

அவங்களுக்கு குழந்தைகள் மீது அக்கறை இல்லை.......

ரோஸ்விக் said...

நண்பர்கள் சொன்னது மாதிரி இதுவும் ஊடக விபச்சாரம். தொலைக்காட்சிகளுக்கேன்று தனி தணிக்கைகுழு கண்டிப்பாக வேண்டும்.

எவ தாலி அறுத்தா என்ன...எனக்கு டிஆர்பி ரேட்டிங் மேல இருக்கனுங்கிறது இந்த ஊடகங்களோட கொள்கை. சனியன் புடிச்சவனுக...த் தூ....

மணிஜி said...

/சாரி கதிர்... படிச்சிட்டு கொதிப்பாயிருக்கு... ஊடக விபச்சாரம்... வேறன்ன சொல்ல...//

என் கருத்தும் அதுதான்

TCTV said...

neenga en atha paakreenga ! ungala maathiri aatkalaala thaan program trp rate athigamaguthu. ohooo....intha maathiri potathan trp egirum polanu aanga ninapaanga. apram kovilpattila oru punam manusana thinguthunu solvaanga . puliyampattiyil oru kilavi uyiroda ullavangalayae thingiraanu puluguvaanuga ?
en paakreenga ????

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரியமுடன்...வசந்த்

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி @@ நாஞ்சில் நாதம்

நன்றி @@ S.A. நவாஸுதீன்

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ நர்சிம்

நன்றி @@ சி. கருணாகரசு

நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ நெத்தியடி முஹம்மத்

நன்றி @@ வாத்துக்கோழி

நன்றி @@ கும்க்கி

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ ஹேமா

நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ வெண்ணிற இரவுகள்

நன்றி @@ ஜீவன்

நன்றி @@ செந்தில்வேலன்

நன்றி @@ ஜெனோவா

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ லெமூரியன்

நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி @@ ஆ.ஞானசேகரன்

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ பித்தனின் வாக்கு

நன்றி @@ ஊடகன்

நன்றி @@ ரோஸ்விக்

நன்றி @@ தண்டோரா

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

நன்றி @@ sornavalli
(உங்க நியாயம் சரியா புரியலங்க)

Unknown said...

நம்மள யாரு கேட்கப் போறாங்க அப்படிங்கற ..... தான் இந்த தொலைக்காட்சிகாரங்களுக்கு..

saran said...

கதிர் நானும் tv program பாத்தேன் , but fulla பாக்கல . என்ன கொடுமையான செயல் . blog படுச்சுட்டு உடம்பு நடுங்கிடுச்சு .

தமயந்தி said...

நானும் இப்ப‌டி ஒரு வீடியோ பார்த்திருக்கேன்

Unknown said...

//சரி வருங்காலத்தில... எங்கியாவது ஒரு கொலை செய்யறதையோ, கற்பழிப்பு நடக்கிறதையோ எடுத்து டிவியில போட்டுட்டு, கடைசியா கொலை, கற்பழிப்பு சட்டப்படி தவறான செயல்னு சொல்லிட்டுப் போயிட்டா அது போதுமா? ஏன்னா.. கொலையும், கற்பழிப்பும் நரமாமிசம் தின்கிறதவிட அதிகமா நடக்கிறதுதானே!!!???//

நா கூட லைவ் கொல பாத்ததே இல்ல .......

கே. பி. ஜனா... said...

படிக்கவே கஷ்டமாக... பார்த்த உங்களுக்கு? --கே.பி.ஜனா