Showing posts with label பிசகின்மை. Show all posts
Showing posts with label பிசகின்மை. Show all posts

Apr 27, 2016

வலது பக்க மதுபானக் கடை





புழுதி பறக்கிறது
வெயில் தகிக்கிறது
இயலாமையை மென்றபடி விரைகையில்
உங்கள் முன் செல்பவர்
எந்த சமிஞ்சையுமின்றி
சட்டென வலப்பக்கம் திரும்பி
மதுபானக் கடை முன் நிற்கிறார்

பதறிப் பயந்து குழம்பி
வண்டியை நிறுத்தி
உமிழ வந்த சொல்லை விழுங்கி
”இந்த வெயில்லயும் கூட
குடிக்கிறாங்க பாரு” எனும் அலுப்போடு
நீங்கள் புகார் வாசிப்பதுபோல்
நேர்கோட்டில் தன் பின்னே பயணித்த
உங்களின் பிசகின்மையும் கோபமின்மையும்
குறித்த புகாரொன்று அவரிமிடந்து
சற்று நேரத்தில் உமிழப்படலாம்!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...