புழுதி
பறக்கிறது
வெயில்
தகிக்கிறது
இயலாமையை
மென்றபடி விரைகையில்
உங்கள்
முன் செல்பவர்
எந்த சமிஞ்சையுமின்றி
சட்டென
வலப்பக்கம் திரும்பி
மதுபானக்
கடை முன் நிற்கிறார்
பதறிப்
பயந்து குழம்பி
வண்டியை
நிறுத்தி
உமிழ வந்த
சொல்லை விழுங்கி
”இந்த
வெயில்லயும் கூட
குடிக்கிறாங்க
பாரு” எனும் அலுப்போடு
நீங்கள்
புகார் வாசிப்பதுபோல்
நேர்கோட்டில்
தன் பின்னே பயணித்த
உங்களின்
பிசகின்மையும் கோபமின்மையும்
குறித்த
புகாரொன்று அவரிமிடந்து
சற்று
நேரத்தில் உமிழப்படலாம்!
1 comment:
அருமை அண்ணா.
Post a Comment