சொற்களைத் தொலைத்த துயில்

என்னைக் குறித்து நானும்
உன்னைக் குறித்து நீயும்
என்னைக் குறித்து நீயும்
உன்னைக் குறித்து நானும்...
வேண்டாம்... வேண்டாம்...
வா...
சமரசம் கொள்வோம்
நம்மைக் குறித்து நாம்!


இல்லையில்லை
பயமாயிருக்கிறது
சொற்களைத் தொலைத்து
நம்மையும் தொலைத்து
துயில்வோம் வா!

1 comment:

Unknown said...

/துயில்வோம் வா/இதெல்லாம் காதலுக்கே ஒரு படி மேல...