தீராத் தகிப்பு
ஏதோ ஒன்றில் இப்போது
நனைந்தாக வேண்டும்

இரவு நாலு மணிக் கனவில்
நனைக்க வரும் உச்சி வெயில்
பேரன்பின் பின்னே
மறைத்து வைத்த கடுங்கோபம்
கூடல் உச்சத்தில் சன்னலைப்
பெயர்க்க முனைந்த பேய் மழை
மலைப்பாதையில் திணறிய
அரசுப் பேருந்தின் புகை
அவசரத்தில் துடைக்க மறந்த
முத்த எச்சில் ஈரம்
வளர்த்துவிட்டவன் முதுகில்
துப்பிய துரோக எச்சில்
தயங்கி ஏறிய மேடையொன்றில்
அதிர வைத்த கை தட்டல்
முப்பது நாள் குழந்தையாய்
அம்மு சிரித்தபோது வீசிய பால் வாசம்

இந்த ஏதோ ஒன்றில் இப்போது
நனைந்தாக வேண்டும்

இல்லாவிடில்
பகிரத் துணிவின்றி
பதுக்கி வைத்திருக்கும்
பேரன்பின் தூய குமிழியொன்றை விடுவித்து
முட்டி மோதியேனும்
இப்போது நனைந்தாக வேண்டும்!

1 comment:

Tamilus said...

வாழ்த்துக்கள் ..

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US