பயணம் ஒரு கோட்டில்



நேர் கோடென நீளும்
பாதையில் ஊர்கிறேன்
உயரத்தில் இறக்கை விரித்த
பருந்தொன்று
ஒத்த அலைவரிசையில்
உடன் பயணிக்கிறது

என் கோட்டில் அது பறக்கிறதா
அதன் கோட்டில் நான் நகர்கிறேனா
இருவருக்குமே தெரியவில்லை

இடதோ வலதோ
மெல்ல அசைந்து நகர்கையில்
வருடியும் வருடாமலும் செல்கிறது
விரிந்த பறவையின் நிழல்

எனக்கு கீழும் கூட
ஒரு எறும்பு
என் கோட்டிலேயே பயணிக்கலாம்

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.

***
நன்றி: அதீதம்


6 comments:

Prapavi said...

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.\\ அருமை கதிர்!

பிரபாகர் said...

நேர்க்கோட்டுப் பயணத்தை மூன்று காட்சிப் பொருள்களைக் கொண்டு விளக்கிய விதம் அருமை கதிர்...
(இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டமிட்டு எவ்ளோ நாளாச்சு!....)

நிஜமா நல்லா இருக்கு கதிர்...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அண்ணா....

தங்களைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்... நேரமிருக்கும் போது வந்து வாசியுங்கள்...

அதற்கான சுட்டி இதோ..

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_974.html

நன்றி.

Unknown said...

பறவையின் நிழல் வருடுவதை உணர பெற்றால் அங்கு நிகழ்வது அற்புதம் ..!

Veera D said...

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்//.....fine anna

-VEERA

Veera D said...

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்//.....fine anna

-VEERA